For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  காதலித்து ஏமாற்றிய பெண்ணை இப்படியெல்லாமா பழிவாங்குவார்கள்?

  |

  காதல் என்ன தான் வலி நிரம்பியது என்று இறுதியில் சொல்லிப்பட்டாலும் சரி ஆரம்பத்திலேயே நமக்கு தெரிந்தாலும் சரி அந்த வலி நமக்கு வேண்டும்.... அதிலிருந்து மீண்டு அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து செல்ல சில பல காலங்கள் ஆனாலும் பரவாயில்லை என்று நினைக்கும் நம்முடைய மனம் மட்டுமே தான் காதலை இன்னமும் உயிர்ப்புடன் வைப்பதற்கு காரணமாய் இருக்கிறது.

  அந்த நொடி... காதலிக்கிறோம் காதலிக்கப்படுகிறோம் என்பதே நமக்கு ஓர் மமதையை கொடுக்கும். ஒருவரால் நேசிக்கப்படுகிறோம் என்பது பெரும் கொடுப்பினை தான். அதே கொடுப்பினை காதலித்த நபர் விட்டுச் சென்றுவிட்டார் அல்லது நம்மை ஏமாற்றிவிட்டார் எனும் போது எப்படியெல்லாம் ரிவெஞ்ச் எடுக்கும் என்பதெல்லாம் நமக்கே தெரியாத சாப்டர்கள்....

  நம்ம ஊரில் காதலித்து ஏமாற்றியதால் கத்தியால் குத்தி கொலை செய்த கதைகளை செய்திகளில் கடந்து வந்திருப்போம் இதைவிட மிகக் கொடூரமான பலிவாங்கும் நடவடிக்கைகளும் அரங்கேறியிருக்கிறது. நம்மூரில் மட்டும் தான் இப்படியா என்று தேடிய போது.... காதலித்து ஏமாற்றினால் அல்லது பிரிந்து சென்றால் ரிவெஞ்ச் எடுப்பது எல்லா ஊர்களிலும் இருக்கிறது ஆனால் நம்மூரைப் போல அல்லாமல் சற்றே வித்யாசமாகத்தான் இருக்கிறது.

  ரிவெஞ்ச் எடுத்த காதலர்கள் பற்றிய சில சுவாரஸ்ய சம்பவங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  ஷனான் கேஸ்பில்லா என்ற பெண்மணி இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கக்கூடிய கனெக்டிகட் என்ற மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய காதலர் தன்னை காதலிக்கும் போதே இன்னொரு பெண்ணை விரும்புகிறார் என்பதை அறிந்து கொண்டார்.

  இதையடுத்து தன் காதலருக்கு தெரியாமல் அவரைத் பின் தொடர்ந்து சென்றவர் ஒரு ஷாப்பிங் மாலுக்குச் சென்றனர். அங்கே நினைத்தது போல காதலரின் புதுக்காதலியும் காரில் வந்திருக்கிறார். இருவரும் இறங்கி மாலுக்குள்ளே சென்றதும் இருவரது காரையும் உடைத்து துவம்சம் செய்தார் ஷனான்.

  அதோடு இரண்டு கார்களையும் பன்ச்சர் செய்துவிட்டார். இதைப் பார்த்தவர்கள் போலீசில் புகார் அளிக்க கைது செய்யப்பட்ட ஷானான் பத்தாயிரம் டாலர் அபராதம் கட்டி வெளியே வந்தார்.

  Image Courtesy

  #2

  #2

  சீனாவைச் சேர்ந்தவர் டோங் அனோனன். ஒரு பெண்ணின் மீது நீண்ட காலமாக காதல் அதை எப்படியாவது சொல்ல வேண்டும் அதுவும் ஸ்பெஷலாக வித்யாசமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர் பல நாட்கள் உட்கார்ந்து யோசித்து இந்த ஐடியாவை பிடித்தார்.

  அதாவது, குழந்தைகள் வைத்து விளையாடுவார்களே க்யூப் பாக்ஸ் நிறம் மாற்றி புதிர் விளையாடுவார்களே அதே போன்றதொரு விளையாட்டினை மீளுருவாக்கம் செய்தார். 840 க்யூப்களை கொண்டு பிரம்மாண்டமான போட்ரைட் அளவில் தன் காதலியின் முகத்தை க்யூப்களை கொண்டே உருவாக்கினார்.

  4 அடி உயரம் கொண்ட அந்த போட்ரைட்டினை பார்த்து அசந்த காதலி, அதைத் தனக்கான பரிசாக ஏற்றுக் கொண்டார் ஆனால் டோங்கின் காதலை நிராகரித்துவிட்டார்.

  Image Courtesy

  #3

  #3

  ஜமைக்காவைச் சேர்ந்த 29 வயது நிரம்பிய டெரியன் ஹார்வே என்பவரை போலீசார் கைது செய்தார்கள். தன்னை ஏமாற்றிச் சென்ற முன்னால் காதலியின் வீட்டிற்கு கோழி அடைக்கும் இடத்தை ஃபிக்ஸ் செய்து தருகிறேன் என்ற பெயரில் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். நுழைந்தவர் தன் முன்னால் காதலியை தன்னுடன் உறவு கொள்ளுமாறு வர்புறுத்தியிருக்கிறார்.

  அதற்கு அவர் தொடர்ந்து மறுக்கவே பல மணி நேரங்கள் வர்புறுத்தியிருக்கிறார் ஆனாலும் தன் முன்னால் காதலி மசியாததால் அந்தப் பெண்ணின் கையில் பலமாக கடித்துவிட்டாராம். அவர் போலீசுக்கு தகவல் கொடுக்க போலீசார் வந்து அந்தப் பெண்ணை மீட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஏழு தையல் போடப்பட்டிருக்கிறது.

  Image Courtesy

  #4

  #4

  2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு போன் வருகிறது. எதிர்முனையில் பேசிய பெண் குரல் பாரிஸுக்கு கிளம்பிச் செல்லும் விமானத்தில் ஒரு தீவிரவாதி இருக்கிறான் என்று சொல்லிவிட்டு வைத்துவிடுகிறார். கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானம் தரையிரக்கப்பட்டது.

  போலீசார்,விமானநிலைய அதிகாரிகள் ரவுண்ட் கட்டி விசாரிக்கிறார்கள். அதோடு போனில் பேசிய பெண் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இறுதியில் அந்த விமானத்தில் பயணித்த தன்னுடைய முன்னால் காதலனை சிக்க வைப்பதற்காகவே இந்த நாடகம் ஆடியதாக போனில் பேசிய பெண் ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தார்கள்.

  #5

  #5

  காரை பார்க் செய்துவிட்டு கடைக்குள்ளே சென்றுவிட்டு வெளியே வந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி அவர் கார் நிற்கும் இடத்தினைச் சுற்றி கூட்டம் மொய்க்கிறது. கூட்டத்தை விளக்கிக் கொண்டு காருக்கு அருகில் வந்தார். விலையுயர்ந்த ரேங் ரோவர் காரில் சிகப்பு நிற ஸ்ப்ரே பெயிண்ட் கொண்டு தன்னுடைய முன்னால் காதலியின் கைங்கரியத்தை தான் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  அதில் சீட்டர், எல்லாம் முடிந்தது. இந்த வார்த்தைக்கு நீ தகுதியானவன் தான் என்று வெள்ளை நிற காரில் எழுதப்பட்டிருந்தது. அங்கிருந்தவர்கள் வளைத்து வளைத்து போட்டோ பிடித்து அப்போதே சமூக ஊடகங்களில் பகிர பயங்கர வைரலனாது. கூட்டம் குறையட்டும் காரை எடுக்கலாம் என்று சொல்லி இறுதி வரை காத்திருந்து தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தப்பித்துவிட்டார் ஹீரோ!

  Image Courtesy

  #6

  #6

  எலியாட் ரோட்ஜர் என்பவர் 2014 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள இஸ்லா விஸ்டா என்னும் பகுதியில் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின் துப்பாகியால் சுட்ட நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இந்த சம்பவத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள் பதினான்கு பேர் வரையிலும் காயமடைந்தார்கள். இந்த சம்பவத்திற்கு முன்னதாக எலியாட் தான் பேசுவது போல ஒரு வீடியோவை பதிவு செய்து வைத்திருந்தார். முதலில் ஏதேனும் தீவிரவாத கும்பலின் செயலாக இருக்கும் என்று கருதிய போலீசார் இந்த வீடியோ பதிவை பார்த்ததும் அதிர்ந்து விட்டார்களாம். அதில் அவர் சொன்ன காரணம் என் காதலி என்னை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள் என்பது.

  Image Courtesy

  #7

  #7

  சிமன் ரெய்ட் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இவருக்கும் ஆண்டி நாஷ் என்ற பெண்மணிக்கும் திடீரென்று நட்பு தொடர்ந்து காதலாய் மாறியது. பலமுறை சந்தித்தும் டேட்டிங் சென்றும் காதலை வளர்த்துக் கொண்டார்கள். இரண்டு மாதங்கள் காதலில் திளைத்தார்கள். ஒரு நாள் ரெய்டிடமிருந்து போன் ,மெசேஜ் வருவது குறைந்தது. பல முயற்சிகள் எடுத்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

  நாஷ் இன்னமும் ரெயிட் மீது அதீத காதலில் தான் இருந்திருக்கிறார். நான் ஏதேனும் தவறு செய்தால் மன்னித்துவிடு திரும்ப என்னிடமே வந்துவிடு என்று புலம்பித் தள்ளுகிறார். ஒரு கட்டத்தில் ரெயிட் உடனான காதல், இந்தப் பிரிவு இதிலிருந்து மீள முடியாமல் அவர் படுகிற சிரமங்கள் ஒவ்வொன்றையும் தன்னுடைய ப்ளாக்கில் எழுத ஆரம்பித்தார். நாளடைவில் நாஷ் சிறிதும் எதிர்ப்பார்க்காத ஒன்று நடந்தது.

  பெண்கள் ஒவ்வொருவராக ரெயிட் என்னுடைய காதலன் என்று சொல்லி கமெண்ட்டில் வந்தார்கள். அவர்களுக்குள் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது. பின் ஒரு வழியாக எல்லாருமாய் பேசி சந்தித்துக் கொண்ட போது தான் ரெயிட் அத்தனை பேரையும் ஏமாற்றியது தெரியவந்திருக்கிறது. இதையெடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட ரெயிட் 30 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

  Image Courtesy

  #8

  #8

  இந்தியாவில் நடந்த சம்பவம் இது. 21 வயது இளைஞன் ஒரு பெண்ணை தொடர்ந்து தன்னை காதலிக்குமாறும், திருமணம் செய்து கொள்ளுமாறும் வர்புறுத்திக் கொண்டேயிருந்திருக்கிறார். வர்புறுத்தல் நாளடைவில் டார்ச்சராய் மாறியது.

  தினமும் அந்தப் பெண் செல்லும் இடங்கள், பயணிக்கும் இடங்களுக்கு பின் தொடர்ந்து செல்வது என தொடர்ந்திருக்கிறது. இனியும் பொறுத்திருக்க முடியாது என்ற நினைத்தவன் நீ என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை என்றால் உன் படங்களை மார்பிங் செய்து நிர்வாணமாக இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறான். உடனே அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த நபரை கைது செய்த போது, அவள் என்னுடைய காதலி திருமணம் செய்யச் சொல்லித் தான் கேட்கிறேன் என்றிருக்கிறான்.

  காதலியிடம் கேட்ட போது அதனை மறுத்துவர்,ஒரு நாளைக்கு 200க்கும் மேற்பட்ட முறை கால் செய்கிறான். மிகவும் கேவலமான மெஸேஜ்களை அனுப்புகிறான் இவனை திருமணம் செய்யவே முடியாது என்றிருக்கிறார்.

  Image Courtesy

  #9

  #9

  தன்னை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் காதல் கொண்டிருந்த கணவரைப் பற்றி தெரு முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார் இந்தப் பெண். இதில் ஹைலைட்டே போஸ்ட்டரில் இருக்கும் வாசகங்கள் தான்.

  படுக்கையில் என்னைவிட அவள் பெட்டர் என்று நினைத்தால் நீ அங்கேயே இருக்கலாம். வீட்டின் லாக் மாற்றிவிட்டேன்,கார்டில் மேக்ஸிமம் எடுத்தாகிவிட்டது. இதை பலரும் போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தார்கள்.

  Image Courtesy

  #10

  #10

  இதெல்லாம் பங்கம் மை லார்ட்.... காதலன் மிகவும் நேசிக்கும் அணி மைதானத்தில் விளையாடும் போது அங்கே சென்ற காதலி ஏமாற்றிச் சென்ற காதலன் குறித்து போஸ்ட்டரை உயர்த்திப் பிடித்து கேமராவிற்கு போஸ் கொடுத்திருக்கிறார். டிவியில் பார்த்த காதலனுக்கு ஒரே ஷாக்!

  இதைத் தவிர காதலன் குடிக்கும் டீயில் உப்பு,பேதி மாத்திரை கலந்து கொடுப்பது, டாய்லெட் பேப்பரை ஒளித்து வைப்பது என சில சில்லறைத்தனமான ரிவெஞ்கள் எக்கச்சக்கமானது நிறைந்து கிடக்கிறது.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: love insync pulse
  English summary

  Shocking Revenge After Love Failure

  Shocking Revenge After Love Failure
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more