பணம் சம்பாதிக்க இப்படியெல்லாமா செய்வார்கள்?

Posted By:
Subscribe to Boldsky
குறைவான வேலை இருபதாயிரம் சம்பளம் அதிர்ச்சியாக இருக்கிறதா?- வீடியோ

ஒரு மணி நேரம் அதற்கும் குறைவான வேலை, ஆனால் ஐநூறு ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைத்திடும். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா? 2011 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குஹர்னா மற்றும் அனு கப்பூர் நடித்த விக்கி டோனர் என்ற திரைப்படம் வெளியாகிறது.

அந்த திரைப்பட வருகைக்குப் பின்னரே ஆண்களின் விந்தணுவை தானமாக வழங்குவதன் மூலமாக அதிகப்படியாக சம்பாதிக்க முடியும் என்று தெரியவருகிறது. அதைப் பார்த்து பலரும் விந்தணுவை தானமாக வழங்க முன் வருகிறார்கள். மிக குறுகிய காலத்தில் இந்த விந்தணு தானம் எவ்வளவு பெரிய வளர்ச்சியை சந்தித்திருக்கிறது. இதற்குள் நடக்கிற வியாபார யுக்திகள், அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் எல்லாம் என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுமதிக் கடிதம் :

அனுமதிக் கடிதம் :

உங்களுடைய விந்தணு, ரத்த மாதிரி, உங்களுடைய இரண்டு புகைப்படங்கள் மற்றும் உங்களைப் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் அடங்கியவற்றை கொடுக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு பிறகு மருத்துவமனையிலிருந்து விந்தணு கொடுக்கலாம் என்று அனுமதி கொடுப்பார்கள். அப்படி அனுமதி கிடைத்தால் மருத்துவமனைக்குச் சென்று விந்தணுவை கொடுக்க வேண்டும்.

கட்டணம் :

கட்டணம் :

ஒரு முறை கொடுப்பதற்கு சாதரணமாக ஐநூறு ரூபாய் வரை கிடைக்கும். இதே உங்களது படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை அதிகரிக்கவும் செய்திடும்.சில நேரங்களில் அவர்களது உருவத்திற்கும் நிறத்திற்கும் கூட விலை அதிகரிக்குமாம்.

ஒரு மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வரை தானமாக கொடுக்கலாம்.

விந்தணு தானம் :

விந்தணு தானம் :

ஒரு ஆண் தன்னுடைய விந்தணுவை தானமாக வழங்குகிறான், அவனிடமிருந்து பெறப்பட்ட விந்தணுவை பெண்ணின் வயிற்றில் செலுத்தப்படும், இதனால் அவர் கருத்தடைந்து குழந்தை பெற்றுக் கொள்வார். அதாவது ஒரு பெண்ணும் ஆணும் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் இல்லாமலேயே குழந்தை பெற்றுக் கொள்ள முடிவதைத் தான் விந்தணு தானம் என்கிறார்கள். இதற்கென்றே.... இப்படி தானமாக வாங்கப்படுகிற விந்தணுக்களை சேமித்து வைக்கவென்று விந்தணு வங்கிகள் செயல்படுகிறது.

இவையெல்லாம் ஃபெர்டிலிட்டி க்ளீனிக்களுடன் சேர்ந்திருக்கும்.

இது சாத்தியமா? :

இது சாத்தியமா? :

இப்படி தானமாக பெறப்பட்ட விந்தணுக்களை பெண்களின் வயிற்றில் செலுத்தியவுடன் அவர்கள் கருத்தடைவதில்லை. அவர்களுடைய வயது, உடல்நலம்,வாழ்க்கை முறை என பல காரணங்கள் இருப்பதால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை விந்தணுவை செலுத்த வேண்டி வரலாம்.

நான்கு குழந்தைகள் :

நான்கு குழந்தைகள் :

கர்ப்பமடைய ஸ்பர்ம் கவுண்ட் முக்கியம் என்பதால் அதனை ஒவ்வொரு முறையும் பரிசோதிப்பார்கள். 23-34 வயது வரை ஆண்கள் விந்தணு தானம் வழங்குவது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. சட்டப்படி ஒருவர் நான்கு குழந்தைகள் உருவாவதற்கு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் நடைமுறையில் அதனை ட்ராக் செய்ய முடியாது என்பதனால் ஒருவரே நிறைய குழந்தைகளுக்கு மருத்துவரீதியாக தந்தையாவது தொடர்கிறது.

தேர்ந்தெடுக்கும் முறை :

தேர்ந்தெடுக்கும் முறை :

மருத்துவ காரணங்களைத் தாண்டி விந்தணு தேவைப்படுவோரும் தங்களுக்கான விந்தணுவை வாங்குவதில் பல கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். விந்தணு கொடையாளரைத் தேர்ந்தெடுப்பதில் பல விதிமுறைகள் விதிக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் பொருந்திப்போபவர்களிடமிருந்து தான் விந்தணுவைப் பெறுகிறார்கள்.

அதிர்ச்சிப் பக்கங்கள் :

அதிர்ச்சிப் பக்கங்கள் :

அவர்கள் விதித்திருக்கும் சில விதிமுறைகள் அதிர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கின்றன. முதலாவது கல்வி, ஒவ்வொருவருக்கும் கல்வி கட்டாயம் தேவை தான், அதற்காக இதிலும் கல்வியை முன்னிலைப்படுத்தினால்? அதோடு சும்மாயிருந்தார்களா நாட்டின் உயரிய கல்வி கூடங்களில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களது விந்தணு வேண்டும் என்று விளம்பரப்படுத்தி கேட்கும் அளவிற்கு கொடுமை நடக்கிறது.

ஒரு முறை விந்தணு வழங்கினால் இருபதாயிரம் ரூபாய் தருவதற்கும் தயாராய் இருக்கிறார்கள்.

சாதியும் மதமும் :

சாதியும் மதமும் :

அவருடைய எடை, உயரம், நிறம் ஆகியவை பார்க்கப்படும். இதைத் தாண்டி சிலர் குறிப்பிட்டு இந்த மதத்தினர், இந்த சாதியில் , இந்த உட்பிரிவில் என்று கேட்பதும் உண்டு. நாற்பது வயதுக்கு மேல் இருப்பவர்களிடமிருந்து விந்தணு பெறுவதை யாரும் விரும்புவதில்லை. 35 வயதினை தாண்டினாலே யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Shocking Facts About Sperm Donor

Shocking Facts About Sperm Donor
Story first published: Tuesday, March 27, 2018, 15:05 [IST]