அவளுக்கும் எயிட்ஸ் பரப்பு! நரக வேதனைய அனுபவிச்சு சாகட்டும்!

Posted By:
Subscribe to Boldsky

இந்த நூற்றாண்டில் நடக்கிற ஓர் இனப்படுகொலை என்றால் சிரியாவில் நடப்பதைச் சொல்லலாம். பல்வேறு பெயர்களைச் சொல்லி சிரிய மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள். சிரியா நகரமே சுக்கு நூறாகி வருகிறது.

இதே போல 1994 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஓர் இனப்படுகொலையில் சுமார் எட்டு லட்சம் மக்கள் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாளடைவில் அந்த விஷயத்தை நாம் மறந்துவிட்ட துயரச் சம்பவத்தின் சில சுவடுகளை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ருவாண்டா :

ருவாண்டா :

ஆப்ரிகாவின் மத்தியில் கிழக்கப்பக்கம் அமைந்திருக்கும் நாடு தான் ருவாண்டா. அதன் எல்லையில் உகாண்டா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

இந்த ருவாண்டா இனப்படுகொலை ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை மாதம் மத்தி வரை நடந்திருக்கிறது கிட்டத்தட்ட 100 நாட்கள் நடைப்பெற்ற இந்த இனப்படுகொலை சம்பவதில் ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சம் மக்கள் வரையிலும் கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

Image Courtesy

பிரிவினை :

பிரிவினை :

ரூவாண்டாவில் ஹூட்டு என்ற இன மக்கள் தான் பெரும்பான்மையாக இருந்திருக்கிறார்கள் கிட்டத்தட்ட 85 சதவீதம் அவர்கள் தான். அதற்கடுத்த பெரும்பான்மையாக டுஸ்டி இன மகள் இவர்கள் 14 சதவீதம் பேர். மிக குறைந்த அளவாக டுவா இனமக்கள் ஒரு சதவீதம் பேர் வரை இருந்திருக்கிறார்கள்.

இங்கே போட்டி ஹுட்டு மற்றும் டுஸ்டி இன மக்களுக்கு இடையில் தான் இருந்திருக்கிறது.

Image Courtesy

வேறுபாடுகள் :

வேறுபாடுகள் :

இந்த இரண்டும் மக்களும் ஒரே மொழியைத் தான் பேசியிருக்கிறார்கள். ஒரே பகுதியில் தான் வசித்திருக்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் ஒரே மாதிரியான கலாச்சார நடைமுறைகளை பின்பற்றியிருக்கிறார்கள்.

டுஸ்டி மக்களின் பூர்வீகம் எத்தியோபியா. அங்கிருந்து இங்கே வந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

உருவம் :

உருவம் :

டுஸ்டி இன மக்கள் ஹூட்டு மக்களை விட வலிமையானவரக்ளாக இருந்திருக்கிறார்கள். பெரும்பான்மையான எங்களை சிறுபான்மையினர் எதிர்ப்பதா என்ற பிரச்சனை தான் முதல்படியாக இருந்திருக்கிறது.

சிறுபான்மை டுஸ்டி இன மக்கள் தான் பெரும்பான்மையான ஹூஸ்டு இன மக்களின் மூதாதையர்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.மெல்ல மெல்ல அதிகாரத்தின் பக்கமும் டுஸ்டி மக்கள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்தார்கள்.

Image Courtesy

பெல்ஜியன் :

பெல்ஜியன் :

ருவாண்டாவை 1916 ஆம் ஆண்டு பெல்ஜியத்தினர் கைப்பற்றி ஆட்சி செய்தனர். அப்போது அவர்கள் சிறுபான்மை மக்களான டுஸ்டி இன மக்களுக்கு அதிக ஆதரவு தெரிவித்ததால் ஹூஸ்டு மக்களுக்கு டுஸ்டி இன மக்களுக்கும் இடையில் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது. எல்லாருக்கும் ஐடி கார்டு வழங்கப்படுகிறது நீ ஹுஸ்டுவா டுஸ்டியா என்பதற்கான ஒரே அத்தாட்சி அந்த ஐடி கார்டு தான்.

சண்டை பெரிதாகவே டுஸ்டி இன மக்கள் பலரும் ப்ருண்டி,தன்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.

Image Courtesy

கொன்று குவிப்பு :

கொன்று குவிப்பு :

1962 ஆம் ஆண்டு பெல்ஜியத்திடமிருந்து ருவாண்டாவிற்கு சுதந்திரம் கிடைத்தது, ஹூஸ்டு இன மக்களே ஆட்சியில் அமர்ந்தார்கள். இப்போது வெட்ட வெளிச்சமாகவே காரணம் ஏதுமின்றியே டுஸ்டி இன மக்களை வேட்டையாட ஆரம்பித்தார்கள்.

சில நேரங்களில் இப்படி கொன்று குவிக்கிற மக்களைக் கூட ருவாண்டாவில் புதைக்கவிடாமல் ஆற்றில் வீசிவிடுவார்களாம் உங்களது பூர்வீகம் எத்தியோப்பியா தானே அங்கேயே சென்று புதைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்களாம்.

1962 முதல் 1967 கால இடைவேளியில் பத்து முறை படுகொலை சம்பவம் நடந்திருக்கிறது. 1980களின் இறுதில் சுமார் 4,80,000 டுஸ்டி மக்கள் வரையில் அகதிகளாக ருவாண்டாவை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

Image Courtesy

 புரட்சி :

புரட்சி :

1988 ஆம் ஆண்டு பல்வேறு ஊர்களில் அகதிகளாக வாழ்பவர்களும் உள்ளூரில் இன்னும் இருக்கக்கூடிய டுஸ்டி இன மக்களும் ருவாண்டாவின் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சியில் ஈடுப்பட்டார்கள். பல தலைமுறைகளாக இங்கே வாழ்ந்து வரும் எங்களுக்கும் ஆட்சியில் உரிமையிருக்கிறது என்று உரிமை கோரினார்கள்.

1990 ஆம் ஆண்டு புரட்சிப் படையினர் ஏழாயிரம் பேர் வரை சேர்ந்து ருவாண்டா அரசாங்கத்தினை தாக்குகிறார்கள்

Image Courtesy

விமான விபத்து :

விமான விபத்து :

1994 ஆம் ஆண்டு ஹூட்டு இனத்தைச் சார்ந்தவரும் அதிபருமான ஜுவானல் ஹபயரிமானா விமான விபத்தில் உயிரிழக்கிறார். இதற்கு யார் காரணம்? இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்று பல கோணங்களில் விசாரனை நடத்தப்படுகிறது.

புதிய அதிபராக அகதே உவிலிங்கியிமனா பொறுப்பேற்றுக் கொள்கிறார். தொடர்ந்து ராணுவத் தளபதியான நிடிண்டிலியமானா மற்றும் கர்னல் தியோனெஸ்டே பகோஸோரா ஆகியோர் அதிபரை பதவியிலிருந்து இறக்கி ராணுவ ஆட்சியை கொண்டு வருகிறார்கள்.

Image Courtesy

குத்திக் கொல் :

குத்திக் கொல் :

ருவாண்டாவில் இருக்கும் கைகாலி என்ற ஊரிலிருந்து இந்த நடைமுறை ஆரம்பித்தது. ஆங்காங்கே சாலைகளில் நின்று ராணுவத்தினர் மக்களின் ஐடி கார்டினை பரிசோதித்தனர். அவன் ஹூஸ்டு என்றால் விட்டு விடு டுஸ்டி என்று தெரிந்தால் அங்கே குத்திக் கொல். அவன் பெண்ணா,குழந்தையா,ஊனமுற்றவனா,வயது முதிர்ந்தவனா என்று எதுவும் பார்க்காதே என்று கட்டளையிட்டிருந்தார் ராணுவத் தளபதி.

இதற்காகவேண்டியே 1993 ஆம் ஆண்டு 75 ஆயிரம் டாலர் மதிப்பிலான கத்தியை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தது ருவாண்டா.

Image Courtesy

ஹிட்லரை விட கொடூரம் :

ஹிட்லரை விட கொடூரம் :

ஹிட்லரை விட மிக கொடூரமாக இந்த மக்கள் கொல்லப்பட்டார்கள். ஜெர்மனியில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை விட ருவாண்டாவில் நடந்தது ஐந்து மடங்கு தீவிரமானது என்று சொல்லப்படுகிறது .இதில் இன்னும் கொடுமையான விஷயமாக இந்த இனப்படுகொலையின் போது டுஸ்டி இனப் பெண்கள் எல்லாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

Image Courtesy

எயிட்ஸ் :

எயிட்ஸ் :

கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பெண்கள் வரையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு எயிட்ஸ் நோய் பரவியிருக்கிறது. ஹூட்டு ராணுவ வீரர்களில் எயிட்ஸ் பாதித்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்க்ளைக் கொண்டு இந்த நோயை பரப்பிடும் நோக்கத்தில் வேண்டுமென்றே டுஸ்டி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்திருக்கிறார்கள்.

Image Courtesy

 சர்ச்சில் படுகொலை :

சர்ச்சில் படுகொலை :

டுஸ்டி இன மக்கள் சிலர் அங்கிருந்த நயருபுயே ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். ஒரேயிடத்தில் இவ்வளவு டுஸ்டி இன மக்கள் குவிந்திருப்பதை அறிந்தவர்கள் அங்கே குண்டுகளை வீசியும் தூப்பாக்கியால் சுட்டும் அங்கு இருந்த அத்தனை பேரையும் கொன்று குவித்தார்கள்.

அனைவரையும் கொல்ல இரண்டு நாட்கள் ஆனதாம். ராணுவ வீரர்கள் ஷிஃப்ட் முறையில் இந்த படுகொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

Image Courtesy

முடிவு :

முடிவு :

1994 ஆம் ஆண்டு ஜூலையில் புரட்சிப் படை ருவாண்டாவில் ஆட்சியை கைப்பற்றியது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த இனப்படுகொலை முற்றிலுமாக நின்று போனது. ஆரம்பத்தில் இது உள்நாட்டுப் பிரச்சனை என்றே நினைத்திருந்தார்கள்.

கிட்டத்தட்ட முடியும் தருணத்தில் தான் இது போர் அல்ல. ஓர் இனத்தையே அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான இனப்படுகொலை என்று தெரிந்திருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Shocking Facts About Rwanda Genocide

Shocking Facts About Rwanda Genocide
Story first published: Thursday, April 5, 2018, 12:40 [IST]