மனித எலும்புகளால் உருவான கட்டிடங்கள்! திகைக்க வைக்கும் கல்லறைகள்

Posted By:
Subscribe to Boldsky

மரணம் குறித்து அச்சம் எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு உயிர் இந்த உலகத்தில் பிறந்து விட்டது என்றாலே அதற்கான மரணமும் நிச்சயமாக ஒரு நாள் இருக்கும். அந்த ஒரு நாள், மரணம் வரப்போகிற அந்த நாள் தெரியாத வரையில் அந்த சுவாரஸ்யத்திலேயே வாழ்க்கை நகரத்துவங்கும்.

சில நேரங்களில் மரணித்தவர்கள் உலாவுகிறார்கள். அவர்கள் தான் பேய், பிசாசு என்று அடையாளப்படுத்துகிறோம். பேய் உண்மையில் இருக்கிறதா என்ன? இந்த க்யூரியாசிட்டி நம்மில் பலருக்குமே இருக்கிறது. நம் கற்பனைகளுக்கு தீனி போடும் விதமாக சினிமாவில் வரிசையாக பேய்ப்படங்களையே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் உங்களுக்காக 25 கல்லறைகளை காட்டப்போகிறோம். இந்த இருபத்தைந்து இடங்களிலும் என்ன சிறப்பு தெரியுமா? இந்த இடங்களும், அதனைச் சுற்றியிருக்கும் மர்மங்களும் ஒரு கணம் உங்களையே திகைக்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெவிஷ் கல்லறை :

ஜெவிஷ் கல்லறை :

பதினைந்தாம் நூற்றாண்டில் பராகுவேவில் வாழ்ந்த மக்கள் இந்த கல்லறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். இங்கே எத்தனை பேர் வாழ்ந்தார்கள், எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள் என்ற விவரமே கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பிணம் புதைக்கப்பட்ட இடத்திற்கு மேலும் மேலும் பல லேயர்கள் பிணங்களை புதைத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட இந்த இடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

Image Courtesy

கேட்டகோம்ப்ஸ் :

கேட்டகோம்ப்ஸ் :

பாரிசில் வாழ்ந்த மக்கள் முந்தைய காலங்களில் பயன்படுத்திய ஓர் கல்லறை வழக்கம் இது. ரோம் நாட்டில் வாழ்ந்த மூதாதையர்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

Image Courtesy

செயிண்ட் லூயிஸ் :

செயிண்ட் லூயிஸ் :

செயிண்ட் லூயிஸ் 1 என்று அழைக்கப்படும் இந்த கல்லறை வூடூ மகாராணியான மேரி லேவ்யூவினடையது. இங்கே உறங்கிக் கொண்டிருக்கும் மகாராணியை எழுப்பினாள் அல்லது அவரை தொந்தரவு செய்தால் பேய் பிடிக்கும் என்று அந்த மக்கள் நம்புகிறார்கள்.

Image Courtesy

வேலி ஆஃப் கிங்க்ஸ் :

வேலி ஆஃப் கிங்க்ஸ் :

எகிப்து நாட்டில் வாழ்ந்த அரசர் ஒருவரின் கல்லறையாக இது இருந்திருக்கிறது. மேற்சொன்ன மகாராணியின் கதையை விட இது பயங்கரமானதாக இருக்கிறது. ஒரு முறை ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக கல்லறையிலிருந்து ஒரு கல்லை நகர்த்தியிருக்கிறார்கள்.

நகர்த்திய சிறிது நேரத்திலேயே அவர்களின் உயிர் பிரிந்து விட்டதாம். அதனால் உள்ளே மக்கள் அப்பகுதியையே சற்று அச்சத்துடன் தான் கடக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உள்ளே சென்று புகைப்படம் எடுத்து வந்தது பயங்கரமாய் பேசப்பட்டது.

Image Courtesy

கேப்ச்சின் க்ரிப்ட் :

கேப்ச்சின் க்ரிப்ட் :

ஐந்து அறைகள் கொண்ட கட்டிடம் இது. ஆராய்சியாளர்களின் தீர்வுப்படி 1732லிருந்து 75 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருக்கலாம். கிட்டத்தட்ட தரையிலிருந்து மேற்சுவர் வரை முழுவதும் எலும்புக்கூடுகளாலேயே கட்டியிருக்கிறார்கள்.

சில பிணங்கள் பதப்படுத்தியும் வைத்திருக்கிறார்கள். அறைகள் முழுவதும் பிணங்களின் எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இங்கே பல்வேறு சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்வையிட்டு வருகிறார்கள். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லையாம்.

Image Courtesy

பேச்சிலர் க்ரோவ் :

பேச்சிலர் க்ரோவ் :

அமெரிக்காவில் மிகவும் சர்ச்சைக்குரிய கல்லறை இது. இங்கே 82 கல்லறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றிண்டு இடங்கள் பயன்படுத்தப்படாமல் காலியாக இருக்கிறது. இப்படி ஒரு இடம் இருக்கிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டில் தான் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இங்கே பெரும்பாலும் திருமணமாகாதவர்களை தான் புதைத்திருப்பதாகவும் அதனால் இந்தப் பகுதியில் பேய்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்றும் நம்பப்பட்டு வந்திருக்கிறது.

இங்கே சில காலங்களுக்கு முன் பெண் பேயின் நடமாட்டம் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியானது. அவள் அந்த ஆண்களின் மடோனா என்றும் வர்ணிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த பேய் முழு நிலவு நாளன்று வருகிறாள், கையில் குழந்தை வைத்திருக்கிறாள் என்று பல்வேறு கதைகளும் கிளம்பின.

Image Courtesy

சிமிட்ரியோ டி சான் மிச்சேல் :

சிமிட்ரியோ டி சான் மிச்சேல் :

இந்த இடம் இத்தாலியை ஒட்டியிருக்கும் ஒரு தீவு. பதினெட்டாம் நூற்றாண்டில் பிணங்களை இங்கே புதைக்க கூடாது, அது இங்கே வாழும் மனிதர்களுக்கு நன்மை கிடையாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனால் பிணங்களை புதைப்பதற்கென்றே ஒரு தனித் தீவு கண்டுபிடிக்கப்பட்டு அங்கே 1807 ஆம் ஆண்டு முதல் பிணங்களை புதைத்து வந்திருக்கிறார்கள். அந்த தீவைச் சுற்றிலும் எப்போதும் பேய் மற்றும் மர்மக் கதைகள் சுற்றிக் கொண்டிருக்கும்.

Image Courtesy

கங்கை நதி :

கங்கை நதி :

இந்தியர்களை பொறுத்தவரையில் கங்கை புனித நதி, அதில் நீராடினால் தன் சகல பாவங்களும் போகும் என்று நம்புகிறார்கள். அதோடு கங்கை நதிக்கரையில் மரணம் நிகழ்ந்தால் அது நேரடியாக சொர்கத்திற்கே சென்று விடுவதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் பெரும்பாலும் வயதான முதியவர்களை இங்கே கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். அதோடு கங்கை நதியில் பாதியில் எரிந்த கொண்டிருக்கும் பிணங்களை தள்ளிவிடுவதும், அவர்கள் பயன்படுத்திய உடைகளை கங்கை நதியில் போடுவதால் கங்கை நதி மிகவும் அசுத்தமானதாகி வருகிறது.

Image Courtesy

ஹை கேட் சிமிண்ட்ரி :

ஹை கேட் சிமிண்ட்ரி :

ட்ராகுலா என்ற புத்தகத்தை எழுதியவரான ப்ராம் ஸ்டோக்கர் இந்த ஹை கேட் சிமிண்ட்ரி பார்த்து அதில் ஏற்பட்டுள்ள ஈர்ப்பினாலேயே எழுதியிருக்கிறார். இந்த 37 ஏக்கர் கொண்டுள்ளது. இங்கே கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை புதைத்திருக்கிறார்கள். ஐம்பத்திமூன்றாயிரம் கல்லறைகள் இருக்கின்றன.

Image Courtesy

க்ரேஃப்ரியர்ஸ் :

க்ரேஃப்ரியர்ஸ் :

ஸ்காட்லாந்தில் இருக்கும் கல்லறை இது. இங்கே 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு செல்கிறவர்களுக்கு பேய்களின் நடமாட்டம் அதிகமிருப்பதாகவும், பெரும் சத்தமும், திடீர் ஓசைகளும் பயமுறுத்துவதாக சொல்கிறார்கள். அதே போல சில நேரங்களில் காயங்கள் கூட ஏற்படுவதுண்டாம்.

Image Courtesy

களாஸ்நெவின் சிமெண்ட்ரி :

களாஸ்நெவின் சிமெண்ட்ரி :

இங்கே 1.5 மில்லியன் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறது,சுமார் 120 ஏக்கரில் இந்த இடம் அமைந்திருக்கிறது. இங்கே ஜான் எம்சி நைல் என்பவரின் நாய்க்குட்டி தன் முதலாளி இறந்த துக்கத்திலேயே தானும் உணவு உண்ணாமல் இறந்து விட்டது.

Image Courtesy

 சேப்பல் ஆஃப் போன்ஸ் :

சேப்பல் ஆஃப் போன்ஸ் :

இந்த இடம் போர்ச்சுகலில் இருக்கிறது. இங்கே பெரிய முழுதான இரண்டு எலும்புக்கூடு இருக்கிறது. அத்துடன் அவற்றைச் சுற்றிலும் எலும்புக்கூடுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இங்கே உள்ளே செல்வதற்கே மக்கள் பயப்படுகிறார்கள். ஏன் தெரியுமா இங்கே எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஓர் வாசகம் தான். இங்கே எலும்புக்கூடுகள் நாங்கள் உறங்கிக் கொண்டிருக்கிறோம்,அடுத்ததாக உன் எலும்புகளுக்காக காத்திருக்கிறோம் என்கிறது அந்த வாசகம்.

Image Courtesy

லா நோரியா :

லா நோரியா :

சிலியில் இருக்கக்கூடிய இந்த இடம் ஆரம்பத்தில் மைனிங் டவுனாக இருந்திருக்கிறது. இங்கே அடிமைகளாக பிடிக்கப்பட்டு வந்தவர்கள் மிகவும் கொடூரமாக வேலை வாங்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு இறந்திருக்கிறார்கள்.

சில இடங்களில் கல்லறை பெயர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஆங்காங்கே எலும்புக்கூடுகளும் கிடக்கின்றன. இந்தப் பகுதியில் தற்போது வசிக்கும் சிலர் கூறுகையில், சூரியன் மறைவுக்குப் பிறகு தான் இங்கே மர்ம வேலைகளே ஆரம்பமாகும். விதவிதமான சத்தங்களும், ஆட்களின் நடமாட்டமும் நம்மை அச்சம் கொள்ள வைக்கும் என்கிறார்கள்.

Image Courtesy

சீட்ல ஒசூரி :

சீட்ல ஒசூரி :

சீட்லக் என்னும் இடத்தில் இருக்ககூடிய கல்லறை தான் இது. சிறிய ரோமன் கத்தோலிக் சர்ச் தான். இங்கே நாற்பதாயிரத்திலிருந்து எழுபதாயிரம் எலும்புக்கூடுகள் வரை இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

முதன்மையானதாக இரண்டுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடு இருக்கிறது. அதைத் தாண்டி வரிசையாக ஏராளமான எலும்புக்கூடுகளால் அந்த அரை நிரம்பியிருக்கிறது.

Image Courtesy

சிமெண்ட்ரி கஃபே :

சிமெண்ட்ரி கஃபே :

கல்லறை இருந்த பக்கமே செல்வதற்கு பயப்படும் மக்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள் என்றால் இன்னும் சிலரோ கல்லறையை தங்கள் வாழ்விடமாக மாற்றி வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.

கல்லறையில் வாழ்விடமா என்ற நம் பயத்தை காசக்கவும் செய்கிறார்கள். அகமதாபாதில் உள்ள ஓர் கடையில் கல்லறையைச் சுற்றி ஓர் ஹோட்டலை திறந்திருக்கிறார்கள். ஆங்காங்கே கல்லறையைச் சுற்றி மக்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடம் சமைக்கும் இடம் இருக்கிறது. அங்கே இருக்கும் யாருக்குமே பயமேயில்லையாம்.

இந்த கல்லறை அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று நம்புகிறார்கள் .

Image Courtesy

ஒகுனா :

ஒகுனா :

ஒகுனா என்பது ஜப்பானில் இருக்கும் ஒரு கிராமம். இங்கே அருகில் நூறுக்கும் மேற்பட்ட புத்தக் கோவில்கள் இருக்கின்றன. சிங்கன் புத்த மதத்தை தோற்றுவித்த கோபோ டைஷி என்பவர் தன் சீடர்களுடன் இங்கே தான் புதைக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிர்தெழுந்து வருவார் என்று நம்பப்படுகிறது.

இங்கே குழந்தைகளை புதைத்திருப்பவர்கள் தங்கள் குழந்தைக்கும் புத்த மத துறவியைப் போன்றே அலங்கரித்த பொம்மையை அருகில் வைக்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Shocking Cemeteries around the world

Shocking Cemeteries around the world
Story first published: Tuesday, January 9, 2018, 13:30 [IST]