Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்..
Mutton Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் மட்டன் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்களா? எப்போதும் மட்டனை ஒரே மாதிரி குழம்பு, கிரேவி, குருமா என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை மட்டனை வாங்கினால், மசாலா செய்யுங்கள். இந்த மட்டன் மசாலா சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த மட்டன் மசாலா சப்பாத்தி, பரோட்டா, பூரி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

சட்டென்று ஒரு வித்தியாசமான மட்டன் ரெசிபியை செய்ய நினைத்தால், இதை செய்யுங்கள். இதனால் நிச்சயம் உங்களுக்கு வீட்டில் உள்ளோரின் பாராட்டு கிடைக்கும். முக்கியமாக இந்த மட்டன் மசாலா பேச்சுலர்களும் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு இந்த மட்டன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* உப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* வரமிளகாய் - 5
* பிரியாணி இலை - 2
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1/2
* கல்பாசி - 2 துண்டு
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தண்ணீர் - 1 கப்
மசாலா பொடிகள்..
* கிச்சன் கிங் மசாலா - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய மட்டனை குக்கரில் சேர்த்து, அத்துடன் உப்பு, எண்ணெய்,
இஞ்சி பூண்டு பேஸ்ட், வரமிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,
அன்னாசிப்பூ, கல்பாசி, மிளகு, சீரகம் மற்றும் தயிரை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கிச்சன் கிங் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள்,
மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 1 கப் நீரை ஊற்றி கலந்து, குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கலந்து விட வேண்டும்.
* பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, நீர் வற்றும் ஓரளவு நீரை
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* கடைசியாக அதில் வேக வைத்துள்ள மட்டனை அப்படியே சேர்த்து கிளறி, நீர்
வற்றும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவி
இறக்கினால், சுவையான மட்டன் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications