For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்!

உபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள் கூறும் அதிர்ச்சியளிக்கும் பகீர் அனுபவங்கள்!

By Staff
|

இன்று ஆட்டோவை காட்டிலும் வாடகை காரில் பயணிக்க பலரும் விரும்புகிறார்கள். ஒன்று சொகுசாக போகலாம். மற்றொன்று குறைந்த பட்சம் நான்கில் இருந்து ஐந்து பேர் பேர் கொண்ட குடும்பமாக இருந்தாலும் ஆட்டோவை காட்டிலும் கார் வசதியாக இருக்கும்.

மேலும், இப்போது வாடகை கார்களில் பல ஆபர்கள் வேறு கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆட்டோவை காட்டிலும் காரில் சென்று இறங்குவதை நாம் கொஞ்சம் பந்தாவாக தான் காண்கிறோம்.

Secret Confession: Uber Drivers And Passengers Reveal Shocking Experience!

சரி! நீங்கள் என்றாவது வாடகை காரில் பயணிக்கும் போது ஏதேனும் ஏடாகூடமான சம்பவத்தில் சிக்கி உள்ளீர்களா? அல்லது உங்கள் நண்பர்கள் அப்படியான நிகழ்வில் சிக்கிக் கொண்டதாக கேள்விப்பட்டது உண்டா.

இதோ! வாடகை கார் ஓட்டுனர் மற்றும் பயணிகள் தங்கள் வாழ்வில் நடந்ததாக கூறும் சில அதிர்ச்சியான அனுபவங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அன்று இரவு ஒரு அவசர பர்சனல் வேலையாக நான் கார் புக் செய்து பயணித்துக் கொண்டிருந்தேன். ட்ராபிக் கொஞ்சம் மோசமாக தான் இருந்தது. திடீரென ஒரு சிக்னலை கடக்கும் போது, நான் பயணித்து வந்த வாடகை கார் ஓட்டுனரும், அருகே வந்து கொண்டிருந்த மற்றொரு கார் ஓட்டுனரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, காரை விட்டு இறங்கி இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர். இதில், நான் பயணித்த வாடகை கார் ஓட்டுனருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த தேவையில்லாத சண்டையில் எனது வேலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

#2

#2

நான் ஒரு வாடகை கார் ஓட்டுனர். அன்று என் காரில் ஒரு இளம் ஜோடி பயணித்தார்கள். காரில் ஏறியதில் இருந்தே அவர்களுக்குள் வாக்குவாதம். இருவரும் ஏதோ பிரச்சனை குறித்து பேசி சத்தமிட்டு கொண்டே வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த ஆண், தனது காதலியை அடிக்க துவங்கினான்.

அப்போது தான் நான் குறிக்கிட்டு... அவளை அடிக்காதே. இது தவறு என்று கூறினேன். நான் சொல்வதையும் கேளாமல் அவன் மீண்டும், மீண்டும் அந்த பெண்ணை அடிக்க முயற்சிக்கவே... இனி ஒரு அடி அந்த பெண் மீது விழுந்தால்... உன் உயிர் உடம்பில் இருக்காது என்று மிரட்டி அந்த என்னை காப்பாற்றினேன்.

#3

#3

அன்று எதிர்பாராத விதமாக திடீர் மழை. வேறு போக்குவரத்து கிடைக்காத காரணத்தால் வாடகை கார் புக் செய்து பயணிக்க முடிவு செய்தோம். நானும், என் காதலியும் அப்போது தான் திரைப்படம் பார்த்து முடித்து... காருக்காக காத்திருந்தோம். கார் வந்தது. மழையில் நனைந்த காரணத்தால் கொஞ்சம் அசௌகரியமாக தான் இருந்தது.

அந்த கார் ஓட்டுனர், தொடர்ந்து என் காதலியை முன் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து பார்த்துக் கொண்டே இருந்தான். ஆரம்பத்தில் அமைதி காத்த நான், மீண்டும், மீண்டும் அவன் அதே செயலில் ஈடுபட... காரை நிறுத்த சொல்லி, அவனை அடித்துவிட்டேன்.

#4

#4

அது ஒரு எதிர்பாராத தருணம்... என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் என்று கூட கூறலாம். இதுவரை என் காரில் எத்தனையோ பேர் பயணித்திருக்கிறார்கள். ஆனால், யாருமே அப்படி ஒரு செயலில் ஈடுபட்டதில்லை. அன்று என் காரில் இருவர் பயணித்தனர். அது ஷேர் செய்து வந்த பயணம். இருவரும் ஒருவரை அறிந்தவர்கள் அல்ல.

முதலில் ஏறிய நபர் உடல் முழுக்க வாசனை திரவியம் அடித்திருந்தார். பிறகு சற்று நேரத்தில் மற்றொரு நபர் ஏறினார். அவர் வண்டியில் ஏறிய நொடியில் இருந்து அந்த வாசனை திரவத்தின் வாசனை குறைந்து துர்நாற்றம் வீச துவங்கியது. அந்த அளவுக்கு இரண்டாம் நபரின் உடலில் துர்நாற்றம். சரி எப்படியும் இறங்கிவிடுவார் தானே என்று பொறுத்துக் கொண்டேன்.

ஆனால், வண்டி, நகர, நகர துர்நாற்றம் அதிகரித்தது. வண்டி திரும்பும் போதெல்லாம், இரண்டாம் பயணி அவர் மீது சாய்ந்து விழுந்தார். இதில், முதலில் ஏறிய நபரால் துர்நாற்றம் தாங்கிக் கொள்ள முடியாமல், அவரை பிடித்து தள்ளிவிட்டார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சவாரியின் பணம் கிடைக்காமல் போகட்டும் என்று கருதி, இரண்டாம் நபரை இறக்கிவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

#5

#5

அன்று என் நண்பன் பார்ட்டி முடிந்து வீடு திரும்பினான். நான் தான் அவனுக்கு வாடகை கார் புக் செய்து அனுப்பி வைத்தேன். அவன் வீடு சென்றதும் என்னை அழைத்து கூறும்படி கூறி அனுப்பினேன்.

ஒரு மணி நேரத்தில் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது. எதிர்முனையில் இருந்து ஒரு காவல் அதிகாரி பேசினார். வாடகை கார் ஓட்டுனரை தாக்கிய விவகாரத்தில் என் நண்பனை காவல் நிலையத்தில் பிடித்து வைத்திருப்பதாக கூறினார்.

#6

#6

அன்று நான் எனது வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தேன். நான் எப்போதுமே வாடகை காரில் தான் வேலைக்கு சென்று திரும்புவேன். நான் எப்போதும் முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்பது வழக்கம். அன்று அதே போல தான் பயணித்துக் கொண்டிருந்தேன்.

அந்த வாடகைக் கார் ஓட்டுனருடன் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் பேச்சு திசை மாறியது. அவர் பெண்களை இகழ்ந்து பொதுவாக பேசிக் கொண்டே வந்தார். அப்படி பேசாதீர் என்று நான் எதிர்த்து வாதம் செய்ய, திடீரென்று என்னை அடித்துவிட்டார். அதன் பிறகு சில மாதம் அவர் சிறையில் இருக்க வேண்டிய கதி உண்டானது.

#7

#7

நான் ஒரு முஸ்லிம் வாடகை கார் ஓட்டுனர். மற்ற மதத்தினருக்கும், எங்களுக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம், எங்கள் முக தோற்றம் வைத்தே நான் ஒரு இஸ்லாமியர் என்பதை கண்டறிந்து விடுவார்கள். சிலர் வேண்டுமென்றே மதம் சார்ந்து பேசி தொந்தரவு செய்வார்கள்.

அன்று என் காரில் ஏறியவர் வேறு மதத்தை பின்பற்றும் நபர். வேன்றுமென்றே அவர் மத கருத்துக்களை சொல்லி, எங்கள் மதத்தை எதிர்மறையாக பேச, ஒரு தருணத்தில் அது சண்டையில் முடிந்து, என் பெயரில் நிறுவனத்தில் புகார் அளிக்கும் படியாக முடிந்தது.

#8

#8

நான் அந்த பயணிகளை ஏற்றியதே ஒரு பார்ட்டி ஹாலுக்கு வெளியே தான். புக் செய்ததை வைத்து எந்த ஏரியாவுக்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால், காரில் ஏறிய கொஞ்ச நேரத்தில் அவர்கள் உறங்கி விட்டனர். அதாவது போதை மயக்கத்தில்.

புக்கிங்கில் காட்டிய இடத்திற்கு சென்று எங்கே இறக்கிவிட வேண்டும் என்று கேட்டால் இருவருமே கண் விழிக்கவில்லை. பிறகு, தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்து எழுப்பி... அவர்கள் இருவரை வீட்டினுள் சென்று விட்டு திரும்பினேன்.

#9

#9

இதை வேடிக்கை என்பதா... எதிர்பாராமல் நடந்ததா என்று கூற முடியவில்லை. நான் பெங்களூருவில் வாடகை கார் ஓட்டி வருகிறேன். மழை காரணமாக ஒருவர் என் காரை ஆன்லைனில் புக் செய்திருந்தார். பெங்களூருவில் சும்மாவே ட்ராபிக் கொல்லும்.

இதில் மழையும் சேர்ந்துக் கொண்டால் வண்டி ஒரு இன்சு கூட நகராது. ஆகையால், மாற்று வழியில் அவரை அழைத்து சென்றேன். எனக்கும் அவருக்கும் இடையே பாஷை தகராறு இருந்ததால்... நான் சொல்வதை புரிந்துக் கொள்ள முடியாத அவர் கார் ஓடிக் கொண்டிருக்க வெளியே குதித்துவிட்டார்.

பிறகு வழியில் சென்ற ஒருவரை பிடித்து, அவருக்கு புரியும் பாஷையில் கூறி மீண்டும் அழைத்து சென்றேன்.

#10

#10

நானும் என் தோழியும் வாடகை கார் புக் செய்து பயணித்துக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்கும் இந்தி தெரியாது என்று கருதிய அந்த ஓட்டுனர், தனது நண்பர் ஒருவருடன் காலில் பேசிக் கொண்டிருந்த போது, என் தோழியை பற்றி கொச்சையாக வர்ணித்து பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு இடத்தில் காரை நிறுத்த சொல்லி, பளார் என்று முகத்தில் அறைந்து... கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confession: Uber Drivers And Passengers Reveal Shocking Experience!

Secret Confession: Uber Drivers And Passengers Reveal Shocking Experience!
Desktop Bottom Promotion