Latest Updates
-
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க..
வகுப்பறையில் நடந்த பாலியல் அத்துமீறல்...மூடி மறைக்க நினைத்த பள்ளி நிர்வாகம்!
பள்ளியில் பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமி தனக்கு கொடுமை நடந்த விதமும் அதைவிட ஆசிரியர்களிடையே நடந்த வாக்குவாதம் குறித்து பகிர்வு
ஆணாதிக்கம் நிரம்பிய இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எல்லாம் சர்வ சாதரணம். தினமும் கடந்து வருகிற விஷயமாகிவிட்டதால் அவற்றை எல்லாம் நாம் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. நம்மைச் சுற்றி எல்லா வயதிற்குட்பட்ட பெண்களை எல்லாம் கடந்து வந்திருப்போம்.
வயது வித்யாசமின்றி எந்த இடமென்று வித்யாசமும் இல்லாமல் தொடர்ந்து பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அங்கே என்ன நடந்தது?என்று தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே அந்த பெண்ணின் மீது தான் தவறு என்று தீர்மானித்து.... நீ இப்படி நடந்து கொண்டாய்? உன்னுடைய உடை என்று நிறைய காரணங்களை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட பெண்ணையே பழிப்பது தான் இங்கே வழக்கம்.
அதோடு இந்த சமூகத்தின் பார்வையும் அந்த பெண்ணையே தவறாக பார்ப்பதினால் தான் பாதிக்கப்பட்டோம் என்பதையே வெளியில் சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள். எல்லாவற்றையும் மீறி புகார் கொடுத்த ஒரு பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற உண்மை கதை...

#1
இந்த சம்பவம் ஒரு பள்ளியில் நடந்திருக்கிறது. மாணவர்கள் பாடத்தை உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருக்க ஆசிரியர் முன்னால் நின்று பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
வகுப்பறையின் கடைசி பகுதியில் திடீரென்று சலசலப்பு. தான் கையில் ஏந்திக் கொண்டிருந்த புத்தகத்தை மேஜையின் மீது வைத்து விட்டு அவ்விடத்திற்கு நடந்து சென்றார்.

#2
சென்ற ஆசிரியருக்கு அதிர்ச்சி அங்கே ஒரு மாணவனுக்கு வாயிலிருந்தும் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.... உடனடியாக அவனை அங்கிருந்து வெளியில் அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்தார்.
பின் மீண்டும் வகுப்பறைக்கு வந்தவர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்திருக்கிறோம். இப்போது அவன் கொஞ்சம் பராவாயில்லை. என்ன நடந்தது? எப்படி அவனுக்கு ரத்தம் கொட்டியது என்று கேட்டார் மாணவர்களியே அமைதி.

#3
ஒரேயொரு பெண் எழுந்தாள்.... சார் ஐ எம் என்று தலைகுனிந்து நின்றாள். என்ன செய்தாய் நீ? என்று கேட்டார். அவன் என் பின்னால் உட்கார்ந்திருந்தான் வகுப்பு நடத்த ஆரம்பித்திலிருந்து என் உள்ளாடையை பிடித்து இழுத்தான்.
ப்ரா ஸ்ட்ராப்பை பிடித்து அவன் இழுப்பது எனக்கு பிடிக்கவில்லை அசௌகரியமாக இருந்தது. முதலில் விலகி உட்கார்ந்தேன்.முறைத்தேன், பிடிக்கவில்லை செய்யாதே என்றேன், ஆசிரியரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினேன், எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் மிகுந்த கோபமாகி இன்னொரு முறை கைவைத்தால் உன்னை அடித்துவிடுவேன் என்றேன்.
அதையும் மீறி என் ப்ரா ஸ்ட்ராப்பை பிடித்து இழுத்தான் அதனால் பின்னால் திரும்ப்பி முகத்திலேயே குத்தினேன்.

#4
அமைதியாக கேட்ட ஆசிரியர் உடனேயே வகுப்பறையை விட்டு வெளியில் சென்றார். பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தவர் அந்த மாணவியை மட்டும் அழைத்துச் சென்றார். உன் பெற்றோரை வரச் சொல் என்று சொல்லி ஸ்டாஃப் ரூமிலிருந்து போனை காட்டினார்.
அவள் தன் அம்மாவிற்கு போன் செய்தாள். சிறிது நேரத்தில் அந்த மாணவியின் தாயும் வந்துவிட்டார்.

#5
வந்தவுடன் ஆசிரியர் கோபமாக உங்கள் மகள் என்ன செய்திருக்கிறாள் என்று பாருங்க? இப்படித்தான் பெண்ணை வளர்ப்பீர்களா?? என்று வரிசையாக திட்டித் தீர்த்தார். அந்த தாய்க்கு ஒன்றுமே புரியவில்லை மகள் எங்கே அவளை நான் பார்க்க வேண்டும் என்று கேட்கிறார்.
முதலில் நீங்கள் ஒரு மன்னிப்பு கடிதம் கொடுங்கள்... பெற்றோர் வகுப்பறைக்கு செல்ல எல்லாம் அனுமதிக்க முடியாது என்கிறார் ஆசிரியர்.

#6
என்னவென்று கடிதம் கொடுப்பது? முதலில் என் மகளை பார்க்க வேண்டும் என்று கேட்கிறார். உங்கள் மகள் சக மாணவனை ரத்தம் வரும் வரை அடித்திருக்கிறாள்... இப்போது மாணவரின் பெற்றோரும் வகுப்பாசிரியரும் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
என் மகள் செய்தது தவறு தான் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் இனிமேல் இப்படி நடக்காது என்று உறுதியளிக்கிறேன் என்று எழுதி கையெழுத்து போட்டுக் கொடுங்கள் என்கிறார்கள்.

#7
ரத்தம் வரும் வரை அடித்திருக்கிறாளா? அப்படி எல்லாம் செய்யமாட்டாளே.... என்ன நடந்திருக்கிறது என்றே புரியாமல் இல்லை முதலில் என் மகளை பார்க்க வேண்டும்... பார்த்த பின்னர் தான் எழுதிக் கொடுப்பேன் என்று உறுதியாக சொன்னார்.
நீண்ட விவாதம் நடந்த போதும் மகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்ததால் ஆசிரியர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

#8
மகளை அழைத்து வந்தார்கள். அழுது அழுது கண்கள் வீங்கியிருந்தது.... என்னாச்சு ஏன் அழற என்று கேட்கிறார் தாய். மகள் நடந்த அத்தனையும் விவரிக்கிறாள். மற்ற தாயைப் போல அட்ஜஸ்ட் செய்து கொண்டு இல்லாமல் ஏன் இப்படி செய்தாய் இப்போது பார் என்று கேட்காமல் தவறு மகள் மீது இல்லை என்பதை உறுதியாக தெரிந்து கொண்ட பின் என்ன நடந்தாலும் சரி மகளுக்கு ஆதரவாய் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
பின் உள்ளே சென்றவர் மகளை பார்த்துவிட்டேன் பேப்பர் பேனா கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.

#9
வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது வகுப்பறையில் இருந்த ஒரு மாணவன் என் மகளுக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டிருக்கிறான். பல முறை எச்சரித்தும் அவன் கேட்கவில்லை இதனால் கோபமடைந்த என் மகள் தன் மீது அத்துமீறலை ஈடுபட்டவனை தாக்கியிருக்கிறாள். தனக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமையிலிருந்து தப்பிக்க நடத்திய அந்த தாக்குதலில் அந்த மாணவனுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டிருக்கிறது.
வகுப்பறையில் அனைத்து மாணவர்கள் இருக்கும் போது, அதுவும் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது என் மகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட கடிதத்தை எழுதி மாணவியின் பெயர், வகுப்பு பிரிவு எல்லாவற்றையும் எழுதி மாணவியின் பெற்றோர் என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தார்.

#10
வாங்கிப் படித்துப் பார்த்த ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி. என்ன இப்படி எழுதி கொடுத்திருக்கிறீர்கள்.... உங்களை மன்னிப்பு கேட்டுதானே எழுதித் தரச் சொன்னேன் என்று சண்டையிட்டார்கள். ஆசிரியருக்கும் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய்க்கும் வாக்குவாதம் முற்றியது.
அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று சொன்னார் அந்த தாய்.

#11
விஷயம் தலைமையாசிரியரிடம் சென்றது... ஏன் மேடம் இந்த விஷயத்த பெருசு பண்றீங்க வெளிய தெரிஞ்சா உங்க பொண்ணுக்கு தான அசிங்கம். வெறும் ஒரு லெட்டர் தான என் பொண்ணு பண்ணது தப்புதான்னு சொல்லி எழுதி கொடுத்துட்டு போங்க என்று அவரிடமும் இப்பிடி சின்ன சின்ன பிரச்சனைக்கு எல்லாம் இங்க வரக்கூடாது என்று ஆசிரியரிடமும் மிரட்டும் தொனியில் சொல்கிறார் தலைமையாசிரியர்.
தலைமையாசிரியரின் இந்த பதில் தாயை இன்னும் கோபமூட்டியது.

#12
உங்கள் பள்ளி வகுப்பறையில் ஒரு பெண்ணை பாலியல் சீண்டல் செய்திருக்கிறான். அது உங்களுக்கு பெரிய பிரச்சனையாக தெரியவில்லையா? இதில் அசிங்கப்பட வேண்டியது, வருத்தப்பட வேண்டியது அந்த மாணவன் தான்.
இப்போது அந்த மாணவன் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் இப்போதே போலீஸ் நிலையத்திற்கு சென்று மாணவன் மீது மட்டுமல்ல இந்த பள்ளியின் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் புகார் அளிப்பேன் என்று சொல்லிக் கொண்டே மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

#13
உண்மையிலேயே அவர் சென்று விடப்போகிறார் என்று தெரிந்ததும் மேடம் .... ஏன் இப்போ டென்ஷன் ஆகுறீங்க இப்ப என்ன நடந்து போச்சு என்று மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்.
மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் இடம் இது... ஆசிரியராக இருக்கும் நீங்கள் தான் குட் டச் பேட் டச் குறித்தெல்லாம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள், சிறப்பு வகுப்பெல்லாம் எடுக்கிறீர்கள் ஆனால் பிரச்சனை என்று வந்து விட்டால் நீங்களே பெண்ணின் மீது தான் தவறு என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்டார்.

#14
ஒரு கட்டத்தில் தங்கள் தவறை உணர்ந்த ஆசிரியர்கள் மாணவன் மீது நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்தார்கள். மருத்துவமனைக்கு சென்றவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நடந்தவை எல்லாம் தெரிவிக்கப்பட்டது. இப்போது நாங்கள் உங்கள் மகன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இவர் நிச்சயமாக போலீசில் புகார் அளிப்பேன் என்று உறுதியாக இருக்கிறார்.
போலீசுக்கு சென்றால் உங்கள் மகன் பெயர் மட்டுமல்ல எங்கள் பள்ளியின் பெயரும் கெடும். அதனால் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுங்கள் என்று மாணவனின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி மன்னிப்பு கடிதம் அவர்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications











