சீனாவில் பெண்களுக்கு வழங்கப்பட்ட வினோத தண்டனைகள் - புகைப்படத் தொகுப்பு!

Posted By:
Subscribe to Boldsky

இப்போது என்ன தான் விஞ்ஞானம் புதுமை என்று சொல்லிக் கொண்டு நவீன உலகத்தில் மிதந்தாலும் பழைய நினைவுகள் எப்போதும் நமக்கு ஆச்சரியம் கொடுக்கக்கூடியதாகவே அமைந்திருக்கிறது.

இன்றைய வளர்ச்சியை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பழைய வாழ்க்கையை முன்னோர்கள் அனுபவதித்தவற்றை ஓரளவுக்கேணும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது. நேரத்தை யாருலும் பிடித்து வைத்திருக்க முடியாது என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் எல்லாம் வரலாற்றுச் சான்றுகளாகவே இருக்கின்றன.

மனிதனின் நாகரிகத்தை வளர்ச்சியைப் பற்றி நீங்கள் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கு அந்த வரலாற்றுப் புகைப்படங்களை சற்று பார்க்கலாம் வாருங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூனைகள் :

பூனைகள் :

எகிப்திய மக்கள் பூனைகளை அதிகம் நேசிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனோடு இல்லாமல் பூனையை வணங்கவும் செய்திருக்கிறார்கள். அவர்கள் வணங்கக்கூடிய பெண் தெய்வம் பூனையின் வடிவத்தை ஒத்தே இருந்திருக்கிறது.

இந்த கடவுள் அதிர்ச்டத்திற்கும் குழந்தை பேருக்கும் வணங்கியிருக்கிறார்கள். பூனை வீட்டிற்கு வந்தால் தங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் என்றே நினைத்திருந்திருக்கிறார்கள்.

Image Courtesy

ஐ ப்ரோ :

ஐ ப்ரோ :

பூனை எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் அதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எல்லாரும் தங்களின் புருவ முடிகளை நீக்கிக் கொள்கிறார்கள். பூனை கொல்லப்பட்டால் அது தெய்வகுற்றமாக கருதி கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. சில நேரத்தில் மரண தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

கலரிங் :

கலரிங் :

இன்று ஹேர் கலரிங் செய்வது, டை எல்லாம் சர்வ சாதரணமாகிவிட்டது. ஆனால் 1600 காலங்களிலேயே ரோமானியர்கள் மற்றும் கிரேக்கர்கள் தங்கள் முடியில் சாயம் பூசிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அப்போது அதீத கெமிக்கல் தன்மை கொண்ட சல்ஃபர் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதன் பின்னர் 1700களில் வந்த ஐரோப்பியர்கள் சல்ஃபருடன் லெட் கலந்து அதில் வண்ணங்களை சேர்த்துக் கொண்டனர்.

Image Courtesy

அழகு :

அழகு :

அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் பண்டைய காலங்களிலிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிரது. 1895 ஆம் ஆண்டு வின்சென்ஸ் சிசர்னி என்ற மருத்துவர் முதன் முதலாக மார்பை பெரிதாக்கி காட்டும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்.

பெண்களின் மார்பகத்தில் பராஃபின் என்ற ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது. முதலில் எந்த பாதிப்பும் இல்லையென்றலும் அதன் பின்னர் மார்பகம் பெரிதாகவும் கடினமானதாகவும் மாறியிருக்கிறது. அதோடு நோய்த் தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் 1920 ஆம் ஆண்டு இந்த முறை பின்பற்றக்கூடாது என்று கடுமையாக விதிகள் விதிக்கப்பட்டன. அதன்பின்னர் 1961 ஆம் ஆண்டு காஸ்மட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ப்ரோஸ்தட்டிக் சிலிக்கான் மார்பகத்தை உருவாக்கினர். ரப்பரில் செய்யப்பட்டிருக்கும் இந்த செயற்கை மார்பகத்தில் விஸ்கஸ் சிலிக்கான் ஜெல் நிரப்பப்பட்டிருக்கும்.

கழிப்பறை :

கழிப்பறை :

ரோம் மக்கள் பெரும்பாலும் இப்படியான கழிப்பறைகளை தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். மிகவும் பணக்காரார்களாக இருந்தவர்களுக்கு மட்டுமே தனிப்பட்ட கழிப்பறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றபடி எல்லாருக்கும் இது தான் ஒரே வழி.

Image Courtesy

விலங்குகளின் கழிவுகள் :

விலங்குகளின் கழிவுகள் :

விலங்குகளின் கழிவுகளை மருந்துகளாக பயன்படுத்தியிருக்கிறார்கள். உதராணத்திற்கு முதலையின் கழிவினை கர்ப்பத்தடைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஸ்காட்லாந்தில் ஆட்டின் கழிவினை சின்னம்மைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சில மிருகங்களின் கழிவுகள் போர்வீரர்களின் காயங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக பன்றிகளின் கழிவினை மூக்கில் ரத்தம் வழிந்தால் அதனை தடுக்க பயன்படுத்துவார்களாம்.

Image Courtesy

 உலகின் முதல் புகைப்படம் :

உலகின் முதல் புகைப்படம் :

கேமரா கண்டுபிடிக்கவுடன் எடுக்கப்பட்ட முதல் புகைபடம் இது தான். உலகிலேயே முதல் புகைப்படம் என்ற பெருமைக்குரிய இந்த படத்தை ஜோசப் நிசிபோர் நிய்பீஸ் எடுத்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் புகைப்படக் கலைஞர்களுக்கு எல்லாம் முன்னோடி.

Image Courtesy

 எக்ஸ் ரே :

எக்ஸ் ரே :

நெதர்லாந்தைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1896 ஆம் ஆண்டு எக்ஸ்ரே மெஷின் கண்டுபிடித்திருக்கிறார்கள்.இது ஜெர்மன் நாட்டைச் சார்ந்த இயற்பியலாலளர் வில்ஹெல்ம் கோன்ரட் ரோண்ட்கன் எக்ஸ் ரேஸ் என்ற கதீர்வீச்சினை கண்டுபிடித்த பிறகு இது தான் இந்த கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருக்கிறது. இந்த கதீர்வீச்சினை கண்டுபிடித்தற்காக வில்ஹெம்முக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல் துறைக்கு வழங்கப்பட்ட முதல் நோபல் பரிசு இது தான்.

Image Courtesy

பேட்டரி :

பேட்டரி :

1800களில் உலகிலேயே முதல் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டது. வோல்ட்டா என்பவர் இதனை கண்டுபிடித்திருக்கிறார். இதனை வோல்டிக் பைல் என்று அழைத்திருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு முன்னேற்றங்களை சந்தித்து தான் நவீன ரக பேட்டரிகள் வந்திருக்கின்றன.

Image Courtesy

வைரஸ் :

வைரஸ் :

கணினி கண்டுபிடித்தது தான் மிகப்பெரிய சாதனையென்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது கணினியில் நாம் பதிந்திருக்கும் தகவல்களை திருடுகிற வைரஸ்.

உலகின் முதல் கம்ப்யூட்டர் வைரஸ் வைல்ட் கணினியில் கண்டுபிடித்தாரக்ள். இதனை உருவாக்கியவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபரூக் அல்வி சகோதரர்கள். இதனை 1986 ஆம் ஆண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

Image Courtesy

 இணையம் :

இணையம் :

கூகுள்ள தேடினா எல்லா தகவலும் கிடைக்கும், என்ன வேணாலும் தேடலம் என்று சொல்லி இன்றைக்கு பலருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கும் இணையத்தின் முதல் வெப்சைட் எது தெரியுமா ?

http://info.cern.ch/hypertext/WWW/TheProject.htmlவெப்சைட் உருவாக்கும் முயற்சி 1991 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ப்ராஜெட்டாக செய்து கொண்டிருந்த டிம்பெர்னர் லீ என்பவர் உலகின் முதல் வெப்சைட்டினை ஆரம்பித்தார்.

Image Courtesy

உயரம் :

உயரம் :

இன்றைக்கு உடல் எடை அதிகமாக இருப்பது தானே பெரிய பிரச்சனையாக பார்க்கிறோம் ஆனால் அன்றைக்கு உயரமாக இருப்பதைத் தான் பெரிய பிரச்சனையாக பார்த்திருக்கிறார்கள். ஏன் அதனை ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதியிருக்கிறார்கள்.

சீனாவைச் சேர்ந்த அடிமைப் பெண்கள் உயரமாக இருந்த ஒரே காரணத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் தண்டனை!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Rare Photos From The History

Rare Photos From The History