Latest Updates
-
தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்! -
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கணுமா? அப்ப அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது! -
செஃப் ஷான்ஜித் ஸ்பெஷல் தக்காளி தம்புலியை எப்படி செய்யணும் தெரியுமா? -
கண் ஆரோக்கியத்திற்கான சிறந்த தென்னிந்திய உணவுகளை பட்டியலிட்ட டாக்டர் ஆதித்ரேய வர்மன்! -
பங்குனி உத்திரம் ஏன் கொண்டாடப்படுகிறது? முருகன் அருள் பெற ராசிப்படி செய்ய வேண்டிய தானங்கள்! -
ஏப்ரல் 1-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சந்திரன்: இன்று இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கும்... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 டம்ளர் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் கட்டுப்படும்... -
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினை அதிகரிக்குமாம்...! -
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
இந்த 8 மண்டை ஓட்டுல ஒன்னு செலக்ட் பண்ணுங்க... நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு தெரியும்...
நாம் எந்தப் பொருளை தெரிவு செய்கிறோமோ அதை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்ல முடியுமாம். மனதின் விருப்பத்தின் அடிப்படையில், மனதின் குணநலன்களை கூற முடியும்
'உன் நண்பனை சொல்; நீ யார் என்று நான் சொல்லுகிறேன்' என்று ஒரு கூற்று உண்டு. அதைப் போன்று நாம் எந்தப் பொருளை தெரிவு செய்கிறோமோ அதை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்ல முடியுமாம். மனதின் விருப்பத்தின் அடிப்படையில், மனதின் குணநலன்களை கூற முடியும் என்று சொல்கிறார்கள். உங்கள் தெரிவைக் கொண்டே உங்கள் ஆளுமையை அறிந்து கொள்ள முடியும்.

எந்த மண்டை ஓட்டை, ஸ்கல்லை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

கடற்கொள்ளையன் (பக்கனீர்)
image courtesy
நீங்கள் கடற்கொள்ளையனின் மண்டை ஓட்டை தேர்ந்தெடுத்துள்ளீர்களா? அப்படியானால், உலகையே உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சுதந்திரமான எண்ணம் கொண்டவராய் இருப்பீர்கள். இதுவரை அறியப்படாதவற்றை அறிந்து கொள்ளும் ஆவல் கொண்டது உங்கள் மனம். எட்டப்படாத தூரங்களை ஒரு நடை போய் பார்த்து வரும் காட்டுத்தனமான தைரியம் உங்கள் இயல்பு. அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சம் எப்போதும் உங்களுக்குள் எழும்பாது. சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் உங்களை உந்திக்கொண்டே இருக்கும். பயம் அறியாத இளங்கன்று நீங்கள்.

பிசாசு (டெவில்)
image courtesy
பிசாசு மண்டை உங்கள் தெரிவா? நீங்கள் துடிப்பானவர், தந்திரம் மிக்கவர், புதிய சூழல்களுக்கு அனுசரித்துப் போகக்கூடியவர். விதியையும் மதியால் வெல்லக்கூடியவர். சூழலுக்கேற்ப பச்சோந்திபோல் மாறிக்கொள்ளக்கூடிய திறன் படைத்தவர்.
யாரை வேண்டுமானாலும் உங்களை நம்ப வைக்கக்கூடிய திறமை உங்களுக்கு உண்டு. அதுவே உங்கள் பலம். இரகசிய உபாயம் செய்யக்கூடிய புத்திசாலி. உங்களுக்கு இணையாக யாரையும் சொல்லமுடியாத அளவுக்கு புகுந்து விளையாடக்கூடிய நீங்கள், விவேகமான மனம் கொண்டவர்.

கோமாளி
image courtesy
கோமாளி தலை உங்கள் விருப்பமா? வாழ்வின் மகிழ்ச்சியான, பிரகாசமான பக்கத்தை விரும்புவர் நீங்கள். நாவன்மையும், கூரிய மனமும் கொண்ட நீங்கள், கேலி, கிண்டல் பேசக்கூடியவர். 'நான் சிரித்துக்கொண்டே இருப்பேன்' என்னும் கேட்டகரி நீங்கள்.
துக்கமுகமும், வெறுப்பும் உங்களுக்கு விருப்பமில்லாதவை. அன்பும் சிரிப்பும் கலந்த வாழ்வை விரும்பவர் நீங்கள். சுயநலத்துக்காக மற்றவரை காயப்படுத்தும் பண்பு இல்லாதவர். மற்றவர் முகத்தில் புன்னகையை வரவழைத்து மகிழும் நபர் நீங்கள். மொத்தத்தில் சுயநலமில்லாத ஆத்மா!

தி மெஷின்
image courtesy
இயந்திர மண்டை ஓடு உங்கள் சாய்ஸா? அப்படியானால் நீங்கள் திறமைசாலையாக, துடிப்பானவராக, ஓர் இயந்திரம்போன்று இரக்கமற்ற மனமுடையவராக இருப்பீர்கள். குறிக்கோளை அடையும் வரை தளராது முயற்சிக்கும் மனமுடையவர். செய்யும் வேலையில் அர்ப்பணிப்பு மிக்கவர்.
இலட்சியங்களை அடைய இயந்திரம் போன்று ஓய்வறியாமல் உழைக்கக்கூடியவர். உங்களுக்குள் எப்போதும் ஒரு அக்கினி எரிந்து கொண்டே இருக்கும். நட்சத்திரங்களை எட்டிப்பிடிக்கும் உற்சாகமாக மனம் உங்களுடையது.

'தி கிளியர் டேஞ்சர்'
'தி கிளியர் டேஞ்சர்' ஸ்கல் உங்கள் தெரிவாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் நேர் பாதையில் செல்லக்கூடியவராக இருப்பீர்கள். கருத்துகளை, விமர்சனங்களை மறைத்து வைக்கும் பழக்கம் உங்களுக்குக் கிடையாது. எதையும் முகத்திற்கு நேரே சொல்லி விடும் இயல்பு கொண்டவர். தயவு தாட்சண்யம் பார்க்காமல் நேரடியாக எதையும் உடைத்துப் பேசக்கூடியவர்.
உங்கள் அளவுக்கு ஸ்டிரைட்பார்வேர்டாக, நேர்மையாக யாராலும் இருக்க இயலாது. மனதில் இருப்பதை நாசூக்காக அல்லாமல், அப்படியே தெரிவிக்கக்கூடியவர். பொய் பேசக்கூடியவர்களுக்கு நீங்கள் சிம்ம சொப்பணம்.

அக்கினி தேவதை (தி ஃபயரி ஏஞ்சல்)
image courtesy
தி ஃபயரி ஏஞ்சல் ஸ்கல் உங்களுக்குப் பிடிக்கிறதா? நண்பனுக்கு நண்பன்; பகைவனுக்கு பகைவன் - இதுதான் உங்கள் பாலிசி. எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய் என்ற கொள்கை கொண்டவர். உங்களுக்கு யார் என்ன செய்கிறார்களோ, அவர்களுக்கு அதை அப்படியே திரும்ப செய்யக்கூடியவர். அதாவது, நல்லவனுக்கு நல்லவன்; வல்லவனுக்கு வல்லவன்.
நீங்கள் நேசிக்கக்கூடியவர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கக்கூடியவர். அதற்காக அளவுக்கு மீறிய பொசஸிவ்னஸ் என்னும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் அல்ல. அன்பானோருக்கு பாதுகாவல் தேவதை நீங்கள். நண்பன், தத்துவவாதி, வழிகாட்டியாக விளங்குவதோடு, பகையை அழிக்கும் பாதுகாவலனாகவும் திகழ்வீர்கள்.

இரக்கமற்ற ஆன்மா (தி ரூத்லெஸ் சோல்)
image courtesy
தி ரூத்லெஸ் சோல் என்னும் ஸ்கல்லை தேர்ந்தெடுத்திருக்கும் நீங்கள், இலட்சியத்தை எட்டுவதற்கு சலிப்பில்லாமல் தொடர்ந்து முயற்சிக்கக்கூடியவர். மனந்தளராதவர். முன் வைத்த காலை பின் வைக்காதவர். ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று, எதைச் செய்தாலும் அதை எக்ஸலண்ட்டாக செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவல் நிறைந்தவர்.
கனவுகளை துரத்தும் இலட்சியவாதியாகிய நீங்கள், அவற்றை அடையும் வரை அடங்க மாட்டீர்கள். வேட்டைக்காரனின் கண்கள்போல உங்கள் கண்களும் குறிக்கோளையே நோக்கிக் கொண்டிருக்கும். இலட்சிய பயணத்தின்போது, உங்கள் கவனம் வேறு எங்கும் திரும்பாது.

தி வாரியர்
வீரனின் தலையே உங்கள் தெரிவா? 'உள்ளத்தில் வீரன்; ஆன்மாவில் முனிவன்' - இதுதான் உங்கள் நிலை. அடங்க மறுக்கும் இலட்சிய வீரன் நீங்கள். போராட்டம் உங்கள் பாதை. எதை செய்தால் சிறப்பான இடத்தை அடையலாம் என்ற தெளிவு உங்களுக்கு உண்டு.
'ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை; இல்லை போராட்டமே வாழ்க்கை' என்ற பாடல் வரியே உங்கள் மனதின் விருப்பம். உங்களுடையதை பாதுகாத்துக் கொள்ள எதையும் செய்ய துணிந்தவர். எத்தனை முறை விழுந்தாலும், எத்தனை அடிகள் பட்டாலும் எழுந்து நிற்கும் மன உரம் கொண்டவர் நீங்கள். மொத்தத்தில் மனுஷன்னா இப்படி போராடணும்டா என்று மற்றவர்கள் வியக்குமளவுக்கு தளராத மனம் கொண்டவர்.



Click it and Unblock the Notifications











