For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வளர்ச்சி என்ற பெயரில் மக்களுக்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட அநீதிகள்!

ஜார்கண்ட்டில் வாழ்கிற பழங்குடியின மக்களின் நிலங்களை வளர்ச்சியின் பெயரைச் சொல்லி அரசாங்கம் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

|

இங்கே தமிழகத்தில் காவிரிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக என தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து ஜார்கண்டில் வசிக்கிற பழங்குடியின மக்களை அடியோடு கிளப்புகிற வேலையை முடித்திருக்கிறது ஜார்கண்ட் அரசாங்கம்.

பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்த போது கூட இவ்வளவு அடக்குமுறைகளை நாங்கள் சந்தித்திருக்கவில்லை என்கிறார்கள் மக்கள். 1908 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சோட்டா நாக்பூர் ஆணை மற்றும் 1949 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சந்தல் பர்கனா ஒப்பந்த ஆணையில் தான் மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.
அதன் படி பழங்குடியினர் வாழுகின்ற நிலப்பகுதியை விவசாயம் அல்லாத பணிகளுக்காகவும் நிலத்தை கையகப்படுத்தலாம் என்கிறது மாற்றப்படிருக்கும் புதிய சட்டம். இதற்கு முன்னால் மக்கள் நலப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கடந்த மே மாதமே இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்போவதாக அறிவிப்பு வெளியானவுடனேயே பல்வேறு எதிர்ப்புகள் பல கட்டங்களாக மக்கள் போராடத்துவங்கினர்.ராம்கரா,ஹஜரிபாக்,குந்தி ஆகிய மாவட்டங்களில் நடந்த போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எட்டு பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள் 20 பேர் வரையிலும் காயமடைந்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எங்கே செல்வோம் :

எங்கே செல்வோம் :

மூன்று பக்கமும் மலை சூழ முறையான சாலை வசதி கூட இல்லாத ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறார் கங்கியா தேவி என்ற முதாட்டி. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது இங்கிருந்தும் போகச் சொன்னால் நாங்கள் எங்கே போவது என்று கண் கலங்குகிறார். எங்கள் கிராமம் அத்துடன் மேலும் 20 கிராமங்களை இணைத்து தான் மிகப்பெரிய தொழிற்சாலையை கட்டவிருக்கிறார்கள்.

தேசிய பவர் தெர்மல் கார்ப்பரேசன் நிறுவனம் நார்த் கரன்புரா தெர்மல் பவர் ப்ராஜெக்ட் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதன் மூலமாக 1980 மெகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்காக பதினைந்தாயிரம் கோடி வரையிலும் செலவிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

Image Courtesy

55 வருடங்கள் :

55 வருடங்கள் :

இந்த மூதாட்டியுடன் மேலும் பத்து பதினைந்து குடும்பங்கள் இருக்கின்றன. இவர்கள் ஓரோவன் இன பழங்குடியினர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கடந்த ஐம்பத்தைந்து வருடங்களாக இதே இடத்தில் வசிப்பதாக சொல்கிறார்கள். இதற்கு முன்பாக நகர் வளர்ச்சி என்று காரணம் சொல்லி இரண்டு முறை தங்கள் வாழ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தியதாகவும். இப்போது வசிக்கும் இந்த கிராமம் மூன்றாவது இடம் இங்கிருந்தும் கிளம்பச் சொன்னால் எங்கே செல்வது என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை வசிப்பிடங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் போது அரசாங்கம் ஒரு உதவியும்செய்திடவில்லை. புது இடத்தில் மீண்டும் முதலிருந்து எங்கள் வேலையை வீட்டை எல்லாம் கட்டமைக்க வேண்டியிருக்கிறது.

Image Courtesy

முதல் இடமாற்றம் :

முதல் இடமாற்றம் :

இதற்கு முன்பாக 1959 ஆம் ஆண்டு நாங்கள் வசித்த ராஞ்சி பகுதியை விட்டு வெளியேறச் சொன்னார்கள். அந்த இடத்தில் ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேசன் வரவிருந்தது. அதற்காக ராஞ்சியிலிருந்து 40 கி.மீ., மேற்பக்கம் இருக்கிற பட்ராட்டு என்ற ஊருக்கு மாற்றப்பட்டோம்.

பின்னர் அங்கிருந்து 1970 ஆம் ஆண்டு மீண்டும் வெளியேறச் சொன்னார்கள். இம்முறை பட்ராட்டு அணை கட்டவிருப்பதாக சொன்னார்கள். அங்கிருந்து தான் இப்போது நாங்கள் வசிக்கிற இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறோம்.

Image Courtesy

பத்து குடும்பங்கள் :

பத்து குடும்பங்கள் :

ஒவ்வொரு முறை இடம் மாறும் போதும் பலரும் தங்களது வாழ்விடங்களைத் தேடி பிரிந்து சென்று விடுகிறார்கள். எங்கள் பழங்குடி இனத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு கிராமங்களுக்கு பிரிந்து சென்றுவிட்டார்கள் இப்போது இங்கே பத்து குடும்பங்கள் மட்டுமே வசிக்கிறது மீண்டும் இங்கிருந்து இடம் மாறச் சொல்லியிருப்பதால் இருக்கிற சொற்ப ஜனங்களும் பிரிந்து சென்றுவிட வாய்ப்புண்டு.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வீட்டுமனைப் பட்டா மற்றும் வருமான வரிச் சான்று கேட்டு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம் ஆனால் இன்று வரையிலும் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. அரசாங்க கணக்குப் படி எப்போதோ நாங்கள் நிலமற்றவர் ஆகிவிட்டோம். இவ்வளவு போராட்டங்கள் நடத்தியும் எங்களுக்கு ஏன் பட்டா வழங்கப்படவில்லை என்பது இப்போது தான் புரிகிறது.

Image Courtesy

ஆரம்பம் :

ஆரம்பம் :

எங்களை இந்த இடத்தை விட்டு வெளியேற்றவதற்கான வேலைகள் 2004 ஆம் ஆண்டே துவங்கிவிட்டிருக்கிறது. அதனால் தான் எங்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதி வாய்ப்புகளை கூட ஏற்படுத்தித் தரவில்லை. ஜார்கண்ட் மாநிலம் அரசியலமைப்பு சட்டத்தின் ஐந்தாவது பிரிவின் கீழ் வருகிறது.

இதன்படி பழங்குடியினர் மற்றும் அவர்கள் வாழும் பகுதியை கையகப்படுத்துவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கான சட்டத்தளர்வைத் தான் ஜனாதிபதி ஏற்படுத்தப் போகிறார்.

Image Courtesy

சட்டம் :

சட்டம் :

சந்தல் பர்கனா டென்டன்சி ஆணையின் படி நிலத்தை கையகப்படுத்த முடியாது. சோட்டா நாக்பூர் டெண்டன்சி ஆக்ட் முன்னதைவிட சற்று தளர்ந்திருக்கும். இதன் படி நிலத்தை ஒரே சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு அல்லது ஒரே பகுதியில் வசிக்கிற மக்களுக்கு இடையில் பிரித்துக் கொடுக்கலாம். இதற்கு அந்த ஊர் மாவட்ட ஆட்சியர் அனுமதியளிக்க வேண்டும் . இந்த விதியைத் தான் தற்போது தளர்த்தவிருக்கிறார்கள்.

முதலில் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனப்பட்டது 2016 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டதிருத்தத்தின் படி விவசாயம் அல்லாத பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என்று மாற்றி தொழிற்சாலைகளுக்கு ஏதுவாக மாற்றியிருக்கிறார்கள்.

Image Courtesy

வளர்ச்சி :

வளர்ச்சி :

இது ஜார்கண்ட் மாநிலத்திற்கான வளர்ச்சிப் பணிகள் என்கிறது அரசாங்கம். கிட்டத்தட்ட 334,207 ஹெக்டர் நிலம் இருக்கிறது பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தொழிற்சாலைகளை அழைக்கிறது. இது ஜார்கண்ட் மாநிலத்தின் கிட்டத்தட்ட பத்து மாவட்டங்களிலிருந்து கொடுக்கப்படுகிற நிலம். மொத்த மாநிலத்தில் ஐந்து சதவீத நிலத்தை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறதாம்.

இந்த ஐந்து சதவீத நிலத்தில் அரசாங்க நிலம், காடு, நகரங்களான ஆதித்யாபூர்,போகரோ மற்றும் ராஞ்சி ஆகியவை அடக்கம். இந்த தகவலை அரசாங்க வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.

Image Courtesy

பயணங்கள் :

பயணங்கள் :

மாநிலத்தின் பொறுப்புகளில் இருப்பவர்கள் 45 வெளிநாட்டு தூதரகங்களை தொடர்பு கொண்டும், பல்வேறு நாடுகளுக்கு பயணித்தும் தங்கள் மாநிலத்தில் வந்து முதலீடு செய்யுமாறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். முதல் கட்டமாக இரண்டு லட்சம் கோடி முதலீடு பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.

Image Courtesy

புள்ளிவிவரம் :

புள்ளிவிவரம் :

சில வருடங்களுக்கு முன்னர் கிராமம் கிராமமாக பஞ்சாயத்து அளவில் ஒவ்வொரு இடம், வீடு, வசிப்பவர்கள் அவர்களின் விவரங்கள் என கிராம மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கிராம வளம் குறித்து துல்லியமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இங்கு கொண்டு வரப்போகிற வளர்ச்சிப்பணிகளுக்காகத்தான் என்று முதலில் சொல்லப்பட்டிருக்கிறது.

பின்னர் தான் நிலத்தை கணக்கிட்டு அது தொழில்நிறுவனங்களுக்கு தாரைவார்க்க என்று தெரிந்திருக்கிறது.

Image Courtesy

மகிழ்ச்சி :

மகிழ்ச்சி :

இதுவரை போராடிய போராட்டத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டது. இனி குடிநீருக்காக வெகு தொலைவு நடக்கவேண்டாம், சாலை வசதி கிடைத்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்த மக்கள் அந்த வளர்ச்சி தங்களுக்கானது அல்ல இந்த கணக்கு தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக என்பதை விரைவில் உணர்ந்தனர்.

குராபுரி கிராமத்தை சேர்ந்தவர் கூறுகையில் இங்கே இருக்கும் மக்களுக்காக மருத்துவமனையை கட்டித் தரச் சொல்லி எங்களுடைய நிலத்தை கொடுத்தோம் ஆனால் இன்று வரை ஒரு பணியும் மேற்கொள்ளவில்லை . ஆரம்ப காலத்திலிருந்து சுதந்திரத்திற்கு பிறகிலிருந்து இப்போது வரையில் கிட்டத்தட்ட 20 சதவீத நிலத்தை அரசாங்கம் சுரங்கம், அணை கட்ட என கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிவிட்டிருக்கிறது.

Image Courtesy

மக்கள் :

மக்கள் :

மொத்தமிருக்கும் 8 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 1.6 மில்லியன் ஹெக்டேர் வரை இப்படி கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் வரையிலும் தங்களது வாழ்விடங்களை இழந்து இடம்பெயர்ந்து சென்றிருக்கிறார்கள்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தளர்வை ஏற்படுத்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் இதே நேரத்தில் பழங்குடி மக்களின் நிலத்தை கையகப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டுவருவது என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிதைப்பது போலாகும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

People of No Land in Jharkand

People of No Land in Jharkand
Story first published: Friday, April 27, 2018, 14:23 [IST]
Desktop Bottom Promotion