Latest Updates
-
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
வாங்க சார் வாங்க... வெறும் ரூ.10 தான்... எந்த கேர்ள் பிரெண்ட் வேணுமோ சூஸ் பண்ணிக்கிங்க!
வாங்க சார் வாங்க... வெறும் ரூ.10 தான்... எந்த கேர்ள் பிரெண்ட் வேணுமோ சூஸ் பண்ணிக்கிங்க!
என்ன தான் சிங்கிள் தான் கெத்து மாமா... என்று ஃபேஸ்புக்கில் கூவினாலும்.. வாட்ஸ்-அப்பில் பேச ஒரு லவ்வர் இல்லையே என்று வருந்தும் சிங்கிள் மச்சான்ஸ் நம்ம ஊரில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர்.
அதிலும், நண்பர்கள் யாரேனும் பெண்களோடு செல்ஃபீ எடுத்துப் போட்டுவிட்டால்... வருமே பாருங்கள் வயிற்றில் ஒரு எரிச்சல்... அட இவனுக்கு எங்கயோ மச்சம் டா... வாழுறான் என பெருந்தன்மையாக எண்ணும் ஜீவன்கள் சிலர், இவனுக்கு மட்டும் எப்படி டா அமையுது என்று காண்டாகும் சிலர் என நண்பர்களிலும் இரண்டு வகையினர் உள்ளனர்.
நாம பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் மால் போனா அதிகபட்சம் ஒன்னு, ரெண்டு மணி நேரம் தான் இருப்போம், அவ்வளோ தான் இருக்க முடியும். இதே லவ்வர் கூட போறவங்க... நாள் முழுக்க அங்கேயே தான் இருப்பாங்க. அதுலயும் இந்த ஹாட் சம்மர்ல சொல்லவே வேண்டாம். ஏசி காத்துக்காகவே அங்கேயே குடியிருப்பாங்க.
சும்மா ஊர் சுத்துறதுக்கு மட்டுமில்ல பல சமயங்கள்ல நாம சரியான முடிவு எடுக்க ஒரு பெண்ணோட துணை வேணும். அவங்க நம்மளவிட கொஞ்சம் முதிர்ச்சியா யோசிச்சு முடிவு எடுப்பாங்க.
சரி! என்னவோங்க... எனக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் வேணும் அவ்வளோ தான் டாட். சிங்கிளா இனி மேலும் என்னால ஒத்தையில நிக்க முடியாது. நான் ஒன்னும் வேங்கை மவன் இல்லன்னு வருத்தப்படுற வாலிபர்களுக்கு ஒரு இன்ப செய்தி.
வெறும் ரூ.10க்கு கேர்ள் பிரெண்ட் அதுவும் உங்க சாய்ஸ்ல.... குஷியா இருக்கா... சரி வாங்க எங்க? எப்படி?ன்னு கொஞ்சம் விபரமா பார்க்கலாம்....

ஹெயுவான்!
தென் சீனாவின் குவாங்டோங் மாகணத்தில் இருக்கும் ஹெயுவான் நகரில் இருக்கிறது வைட்டலிட்டி சிட்டி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். இங்கே தங்கள் நுழைவாயில் பகுதியிலேயே அழகழகான பெண்களை வரிசைக்கட்டி ஒரு மேடையில் நிற்க வைத்துள்ளனர்.
இந்த ஷாப்பிங் மாலுக்கு வரும் ஆண்கள் ஒரு ஆர்.எம்.பி எனப்படும் சீன பணத்தை கொடுத்து (இந்திய மதிப்பில் பத்து ரூபாய்) 20 நிமிடங்களுக்கு அந்த பெண்ணை தங்கள் காதலி ஆக்கிக் கொள்ளலாம். எந்த பெண் வேண்டும் என்பதை அந்த ஆண்மகனே தேர்வு செய்துக் கொள்ளலாம்.

டெக்னாலஜி!
இங்கே சும்மா பத்து ரூபாய் கொடுத்து ஒரு பெண்ணை எங்கேனும் அதிக நேரம் கூட்டி செல்லலாம் என்றெல்லாம் தப்புக் கணக்கு போட்டுடாதிங்க. அவங்க ரொம்ப உஷாரா இருக்காங்க.
ஆமா! ஒவ்வொரு பொண்ணு கையிலயும் ஒரு மொபைல் இருக்கும். அதுல ஒரு கியு.ஆர். கோட் இருக்கும். பத்து ரூபாய் கொடுத்து அந்த பெண்ணின் மொபைலில் இருக்கும் கோடினை ஸ்கேன் செய்துக் கொள்ள வேண்டும்.

நேரம்!
கியு.ஆர். ஸ்கேன் செய்த பிறகு உங்களுடன் எத்தனை நேரத்திற்கு காதலியாக இருக்க வேண்டும் என்பது பதிவாகிவிடும். அதற்கு மேல் ஒரு நொடி கூட அந்த பெண் உங்களுடன் காதலியாக இருக்க மாட்டார்.
இங்கே ஒரு நிபந்தனை என்னவெனில், நீங்கள் எத்தனை பணம் வேண்டுமானாலும் கட்டி அந்த பெண்ணை எத்தனை நேரம் வேண்டுமானாலும் காதலியாக ஆக்கிக் கொள்ள இயலும்.
ஆனால், முழுக்க, முழுக்க அந்த ஷாப்பிங் மாலில் மட்டுமே இருக்க வேண்டும். வெளியே எங்கேயும் செல்ல இயலாது.

நோ டச், டச்...
இங்கே ஒரு பெண்ணை தனது காதலியாக்கி கொள்ள, அதாவது வாடகைக்கு காதலி ஆக்கிக் கொள்ள நீங்கள் பணம் செலுத்துவது அந்த ஷாப்பின் மாலில் உள்ள குறிப்பிட்ட இடங்களில் சுற்றிப் பார்க்க மட்டுமே.
அது தவிர நீங்கள் ஆசைப்பட்டால் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமே தவிர, அவரை தொடுவது முத்தமிடுவது எல்லாம் நோ சான்ஸ் என்கிறது வைட்டலிட்டி சிட்டி காம்ப்ளக்ஸ் நிர்வாகம்.

எப்போ போறீக....
கடந்த ஓரிரு நாட்களாக இந்த செய்து உலகெங்கிலும் வைரலாக பரவி வருகிறது. சீன மக்கள் இந்த செய்திக் கேட்டு வைட்டலிட்டி சிட்டி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சென்று வருகிறார்கள்.
பின்ன, பத்து ரூபாய்க்கு காதலி வேற எங்க கிடைக்கும் பாஸ். நம்ம ஊர்ல எல்லாம் இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா.. கூட நின்னு நூறு செல்ஃபீ எடுத்துக்க மட்டுமே நம்ம பயலுக பல நூற ஆயிரம் செலவு பண்ணுவாங்க. நம்ம ஊர் மட்டுமில்ல, எந்த ஊரா இருந்தாலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா விடுவாங்களா பின்ன?
சீனா காரங்களுக்கு மட்டும் எங்கிருந்து இப்படி எல்லாம் யோசனை வருதுன்னே தெரியல பாஸ்!
All Image Source: youtube



Click it and Unblock the Notifications