For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?

2018 ஜூன் மாதத்திற்கான ராசி பலன்களை எங்கள் ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். விருச்சிக ராசிக்குரிய மாதப் பலன்களை இங்கே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

By Kripa Saravanan
|

2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம்.

ராசிகள்

இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுகூலம் நிறைந்த விருச்சிக ராசி!

அனுகூலம் நிறைந்த விருச்சிக ராசி!

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2018ம் ஆண்டு ஜூன் மாதம் அனுகூலமான ஒரு மாதமாக உள்ளது. சின்ன சின்ன தடங்கல்கள் இந்த மாதம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அவற்றை எளிதாக கடந்து வரலாம். இதற்காக கவலைப்படத் தேவையில்லை. இந்த மாதத்தின் மற்றொரு நேர்மறையான விளைவு, உங்கள் கவனம் கணிசமாக அதிகரிக்கும், இது வாழ்க்கையின் உள் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவும். உங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் கடினமான தருணங்களை எளிமையாக கையாளுவீர்கள். உங்களின் பரந்த மனப்பான்மை பலருக்கும் இந்த மாதத்தில் புரியும்.

எதாவது ஒரு வேலை பல நாட்களாக கிடப்பில் இருந்தால் இப்போது உங்கள் பேச்சுத் திறன் மூலமாக அந்த செயல் முடிக்கப்படும். எல்லாவற்றிலும் ஒரு நேர்மறை விளைவுகள் உண்டாகும். இதனால் உங்கள் தகுதி அதிகரிக்கும். தொழிலில் உங்கள் மேலதிகாரி மற்றும் உங்களுக்கு கீழே வேலை பார்ப்பவர் என்று அனைவரிடமும் நல்ல உறவில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பும் திறமையும் இந்த மாதம் சரியான அங்கீகாரம் பெறும். உற்சாகமான மனிதர்களுடன் இந்த மாதம் உங்களுக்கு தொடர்பு ஏற்படும். சமூக வாழ்க்கையில் உங்களுக்கு பெரிய மதிப்பு கிடைக்கும். இதனால் நீங்கள் சந்தோஷமாக உணர்வீர்கள். இந்த ஜூன் மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

உங்கள் ஆரோக்கியம், அதிர்ஷ்டம், தொழில், பொருளாதாரம் மற்றும் காதல் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

உடல்நலம்

உடல்நலம்

உங்கள் தொழில் மற்றும் காதல் வாழ்க்கை பிரகாசிக்கக் கூடிய இந்த மாதத்தில், உங்கள் ஆரோக்கியத்தில் ஒரு சிறு இடையூறு தோன்றலாம். இதனால் உங்களுக்கு சிறிது வருத்தம் தோன்றலாம். உங்கள் துணைவர் மற்றும் குழந்தைகளுக்கு வழக்கமான சுகாதார பரிசோதனைகள் தேவைப்படலாம். உங்களுடைய பிசியான கால அட்டவணையில், பிரயாணங்கள் பொதுவாக தொலை தூர பிரயாணங்கள் , அலுவலக மீட்டிங் போன்றவை அடுத்தடுத்து இருந்தாலும் உடலுக்கு ஓய்வு அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன்னுரிமை கொடுங்கள். நாட்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மாதம் அதில் இருந்து விடுபடக்கூடும். உங்களைப் பற்றி நீங்களே பெருமை பேசாமல் இருப்பது உங்கள் மேல் மற்றவர்கள் அக்கறை படுவதற்கு வழி வகுக்கும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தினசரி கடமைகளை வகுத்துக் கொண்டு அதன்படி செயலாற்றுவதால் மனதளவிலும் உடலளவிலும் உங்கள் சக்தியை வீணாக்காமல் இருக்கலாம்.

தொழில்

தொழில்

உங்களை வேலை பார்க்க வைக்க பல அறிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை உங்கள் தொழில் சார்ந்த வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் பார்க்காமல் இருந்தவர் நீங்கள். ஆனால் இந்த மாதம் உங்கள் தொழிலில் வளர்ச்சியும் மேம்பாடும் நிச்சயம் உங்களைத் தேடி வரும். இந்த மாதம் உங்களுக்கான இனிய செய்தி, என்னவென்றால், நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் அதிக வேலை பளு உங்களுக்கு இருக்காது. அதே சமயம், நீங்கள் எந்த ஒரு வேலையில் உங்கள் கடின உழைப்பை செலுத்துகிறீர்களோ, அது அந்த அளவிற்கு பலன் அளிக்காது.

இந்த மாதம் உங்கள் தொழில் சார்ந்த வாழ்க்கையில், சவால்களை சந்திக்க நேரலாம். நீங்கள் நிபுணத்துவம் பெறாத தொழிலில் புதிய முயற்சியைத் தொடங்க உங்கள் மனம் நினைக்கலாம். ஆனால் கிரக நிலவரம் உங்களுக்கு சாதகமாக இல்லாத இந்த சூழ்நிலையில் அந்த உந்துதலை தள்ளிப் போடுவது நல்லது. இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் அலுவலக சூழ்நிலையில் மந்தம் ஏற்படலாம். ஆகவே அத்தகைய பிரச்சனைக்குரிய காலத்தை கடந்து வர உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த தொழிலில் கூட, சாதக பாதகங்களை சரியாக உணர்ந்து புதிய திட்டங்களை தொடங்கிடுங்கள். வேலையைத் தொண்டங்குவதற்கு முன் உங்கள் மேலதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்டு பின் தொடங்குங்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

ஜூன் மாதத்தில் உங்கள் நிதி நிலவரம் சொல்லும்படியாக இல்லை. ஆனால் முந்தைய மாதங்களை விட சற்று நன்றாகவே உள்ளது. நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட நிதி நோக்கத்தில் இருந்து தற்போது பெரிய வேறுபாடு இருக்கும். வியாபார நோக்கத்திற்காக மற்றும் பண வரவிற்காக பயணங்கள் செய்வதாக நீங்கள் திட்டமிட்டது, இப்போது எந்த பலனும் தராது என்ற கருதி அதனை நிராகரிக்கலாம். வெளிநாட்டு நிறுவனங்களுடன் வியாபாரம் செய்வதை தவிர்த்திடுங்கள், குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் ஒரு மிகப் பெரிய இழப்பை சந்திக்கலாம்.

உங்களுக்கு செலவழிப்பது மிகவும் பிடித்தமான விஷயம் என்பது தெரியும். ஆனால் உங்கள் செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் அவற்றில் கவனமாகவும் இருக்க வேண்டும். பண சம்பந்தமான எந்த ஒரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து திட்டமிடுங்கள். நிதி நிறுவனங்கள் வழங்கும் திட்டமிட்ட முதலீடுகளில் உங்கள் கவனத்தை செலுத்தலாம். எதிர்பாராத ஆதாரங்களில் இருந்து எதிர்பாராத லாபத்தை பெற்று இந்த மாதம் உங்கள் கடனை அடைப்பீர்கள். இது உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல செய்தி தான்.

காதல் வாழ்க்கை :

காதல் வாழ்க்கை :

வாக்குறுதிகளை மாற்றிக் கொண்டே இருப்பது இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். ராகு மற்றும் கேது போன்ற கிரகங்கள் உங்கள் சூழ்நிலைகளை மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றனர். உங்கள் துணைவரின் போக்கு உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கலாம் . இதனால் உங்களுக்குள் கசப்புணர்ச்சி தோன்றலாம். மேலும் உங்களின் நடவடிக்கை உங்கள் உறவில் பாதிப்பை உண்டாக்கலாம். ஆனால் நிலைமை மோசாமாக மாறுவதற்கு முன், அதனை நிர்வகிக்கும் திறன் உங்களுக்கு இருப்பது அதிர்ஷ்டம். இதனை உறுதிப்படுத்துவது கேதுவின் நிலை ஆகும். உங்கள் உணர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். உங்கள் அன்புக்குரியவரிடம் பிரச்சனை ஏற்படும்போது எல்லா கோணத்திலும் இருந்து பார்ப்பது அவசியம். உங்கள் துணையின் கோபத்தை நீங்கள் தூண்டி விட வேண்டாம். இது வீண் விவாதங்களுக்கு வழி வகுக்கும். எப்படி இருந்தாலும் இந்த மாதம் முழுவதும் உங்கள் மன நிலையில் ஒரு வித சோகம் இருக்கும்.

இந்த மாத அதிர்ஷ்டம்

இந்த மாத அதிர்ஷ்டம்

உங்கள் அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு மற்றும் ஸ்கார்லெட்

உங்கள் அதிர்ஷ்ட எண்கள் - 9, 10, 11

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

monthly predicitions of Scorpio at june 2018

as a person, you are determined and also seem to have strong willpower, which are the positive aspects of your zodiac
Story first published: Thursday, May 31, 2018, 18:32 [IST]
Desktop Bottom Promotion