Latest Updates
-
மேஷ ராசியில் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
ராகு-கேதுவால் உருவாகும் கால சர்ப்ப யோகம்: மே 11 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமா இருக்கணும்! -
1 கப் சுண்டலும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா இந்த குருமாவை பண்ணுங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தள்ளுவண்டி ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
கர்ப்பிணி என்றும் பாராமல் நடந்த கொடூரம்! வரதட்சணை கொடுமை வழக்கில் பதோஹி போலீஸின் அதிரடி நடவடிக்கை! -
இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிக கஷ்டப்படுவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காரசாரமான.. ஆம்லெட் சாப்ஸ் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தவெக மாநாடு வெற்றிக்கு பின் விஜய் - த்ரிஷா பற்றி பரவும் வதந்தி: ரசிகர்கள் ஏன் இப்படி முடிச்சுப் போடுறாங்க? -
உங்க இதயம் ஆபத்திலிருப்பதை வீட்டிலேயே கண்டறியும் 5 நொடி சோதனை - செஞ்சு பார்த்து உயிரை காப்பதிக்கோங்க
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?
2018 ஜூன் மாதத்திற்கான ராசி பலன்களை எங்கள் ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். கும்ப ராசிக்குரிய மாதப் பலன்களை இங்கே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம்.

இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

ஊக்கத்துடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே
இந்த ஜூன் மாதத்தில் சில நாட்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படும். வேலை, தொழில் இவற்றை கற்றுக் கொள்ள வேண்டிய நிலை தான் இருக்கும். தொழிலில் கவனம் தேவை. இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் ஊக்கமான வேலைக்கு பாராட்டையும் வெகுமதியையும் பெறுவீர்கள். உங்களின் இந்த மாற்றமே உங்களை வழிநடத்திச் செல்லும். உதவிகள் நாடி வரும். இந்த மாதத்தை பொருத்த வரை கும்ப ராசிக்காரர்களுக்கு சாதமாக அமைகிறது. அவர்களின் உடல் நலம், தொழில், பொருளாதாரம் மற்றும் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் இப்பொழுது பார்க்கலாம்.

உடல் நலம்
இந்த மாதம் முழுவதும் சூரியனின் சக்தி உங்களுக்கு கவசமாக விளங்குகிறது. உங்கள் உடல் வலிமை அதிகரித்து அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள். சலதோஷம் மற்றும் சின்ன சின்ன உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். எனவே சரியான முறையில் உடலை பராமரித்தாலே போதும் வந்த நோய்கள் காணாமல் போய்விடும். உடற்பயிற்சி செய்து வருவது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். சிறிய உடல் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இது பிரச்சினைகள் தீவரமாவதை தடுக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தசைகளுக்கு உடற்பயிற்சி கொடுப்பது காயங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஆரோக்கியமான உணவுகள் , உடற்பயிற்சி போன்றவை உடல் நலத்தை மேம்படுத்தும்.

தொழில்
தொழிலை பொருத்த வரை இந்த மாதம் சாதகமான சூழ்நிலை நிலவவில்லை. இந்த மாதம் முழுவதும் பணி சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த முன்னேற்றமும் பயனளிக்காமல் இருக்கும். நண்பர்கள், உறவினர்கள், மேலாளர்கள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு மிகவும் குறைந்து ஊக்கமின்மையை உண்டாக்கும்.
உங்கள் கடின உழைப்பும், தைரியம் மட்டுமே உங்களை முன்னோக்கி வழி நடத்தும். வர வேண்டிய லாபம் வந்து சேராமல் வருத்தத்தை கொடுக்கும். எனவே பிரச்சினையின் வடிவத்தை நன்கு அறிந்து கொண்டு தீர்வு காண முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும்.

பொருளாதாரம்
இந்த மாதம் பொருளாதாரம் கொஞ்சம் சுமாராகவே காணப்படும். அரசாங்க நிறுவனங்கள் அல்லது அது போன்று நிறுவனங்களுடான வியாபாரம் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே இந்த மாதிரியான ஒப்பந்தங்களை தள்ளிப் போடுதல் நல்லது. எனவே வரப் போகும் பிரச்சினைகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. உங்களுக்கு எதிரான பல சர்ச்சைகள் மற்றும் வழக்குகள் எதிரான முடிவுகளை ஏற்படுத்தும். பயணங்களால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிட்டாது. கவனமுடன் செயல்பட்டால் பாதகமில்லாமல் வாழலாம்.

காதல் வாழ்க்கை
இந்த மாதம் காதல் வாழ்க்கைக்கு கடினமான மாதமாக உள்ளது. உறவில் பொறுமையுடன் வலிமையை அதிகரிக்க வேண்டிய நிலை இருக்கும். இது உங்கள் இருவருக்கிடையே உள்ள உறவின் ஒரு சோதனை காலம் என்றே கூறலாம். மன வருத்தம் மற்றும் சிறு சிறு பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். இந்த சிறிய விவாதங்கள் பூதாகரமாக வளர்ந்து நிற்கும். எனவே நீங்கள் பொறுமையுடன் செயல்பட்டாலோ அல்லது பிரச்சினையை தவிர்த்தாலோ நல்லது இதுவரை காதல் கைகூடாதவர்களுக்கு காதல் கைகூடும். உறவில் கலகலப்பை ஏற்படுத்தி உங்களை ஈடுபடுத்துவது குதூகலத்தை உண்டாக்கும். இந்த மாதம் 17 ஆம் தேதிக்கு பிறகு உறவில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இந்த மாதம் 21 ஆம் தேதிக்கு பிறகு உங்கள் துணையுடன் இன்ப சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் பொறுமையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் காதலும் அன்பும் கலந்து இருக்கும்.

இந்த மாத அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான நிறங்கள் :சில்வர் நிறம் மற்றும் வெளிர் நீல நிறம்.
அதிர்ஷ்டமான எண்கள் :4,7,11,22 மற்றும் 29



Click it and Unblock the Notifications