மிரள வைக்கும் ராணுவ வீரர்களுக்கான பயிற்சிகள்!

Posted By:
Subscribe to Boldsky

நாட்டை பாதுகாக்கிற வேலை என்பது சாதரணமானது கிடையாது. ஒவ்வொரு நொடியும் தன்னுயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் விழிப்புடன் இருக்க வேண்டும், எந்த காரணத்திற்காகவும் ஒரு நொடி தாமதித்தால் கூட நாடே பெரும் பாதிப்பிற்குள்ளாவது சாத்தியம்.

இதனால் ராணுவ வீரர்கள் மீது நமக்கெல்லாம் எப்போதுமே மிகுந்த மரியாதையுண்டு, நம்மால் செய்ய முடியாத விஷயத்தை அவர்கள் எளிதாக செய்து விடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதற்காக எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பது நமக்கு தெரியாமலேயே இருக்கிறது.

போர்ச்சூழலில் ஒரு போதும் பின் வாங்காமல் இருக்க மிகக் கடுமையான பயிற்சிகள் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, கடுமையான பயிற்சிகளை கடந்து தான் எல்லையில் நாட்டை காக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.வீரர்களை உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாகவும் தயாரிக்கிறாரக்ள். அப்படி ராணுவ வீரர்களுக்கு என்ன தான் பயிற்சி வழங்குகிறார்கள்.... என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குண்டு :

குண்டு :

இதனை ஓர் விளையாட்டாகவே விளையாடுகிறார்கள். குண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னை இழுத்து வீசினால் குண்டு வெடித்துச் சிதறும். இங்கே அந்த பின்னை இழுத்து விட்டு தான் விளையாட்டையே ஆரம்பிக்கிறார்கள்.

பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் வரை வரிசையாக நின்று கொள்கிறார்கள் முதலில் நிற்கிற வீரர் கையில் அந்த பின் இழுக்கப்பட்ட நிலையில் குண்டு வழங்கப்படுகிறது.

Image Courtesy

2

2

குண்டின் வழியே புகை கசிய எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறும் என்ற நிலையில் வரிசையாக குண்டை பாஸ் செய்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கடைசியில் நிற்கும் வீரரிடம் வந்து விடுகிறது அவர் சில அடி தூரம் ஓடிச் சென்று வீசுகிறார். பெரும்பாலும் கடைசி வீரர் இருந்த இடத்திலிருந்து வீசவே நேரம் சரியாக இருக்கிறது.

Image Courtesy

தப்பித்துக் கொள் :

தப்பித்துக் கொள் :

இதே போல நடுவில் பெரிய குழியொன்றினை தோண்டிக் கொள்கிறார்கள். சுற்றிலும் ஆறே ஏழு வீரர்கள் நின்று கொண்டு வேகமாக குண்டை பாஸ் செய்கிறார்கள். அது வெடிக்கப்போகிறது என்றதுமே, கையிலிருக்கும் குண்டை குழிக்குள் போட்டுவிட்டு இவர்கள் திரும்பி தரையில் படுத்துக் கொள்கிறார்கள். வெடித்து மண் எல்லாம் பொங்கி அடங்கும் வரை அப்படியே விழுந்து கிடக்கிறார்கள்.

இவையெல்லாம் இருபது வினாடிக்குள் நடந்து முடித்தாக வேண்டும்.

Image Courtesy

வெறுங்காலில் :

வெறுங்காலில் :

ஐரோப்பிய நாட்டின் பெலாரஸ் ராணுவப் படை வீரர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இரும்புக் கம்பியில் நடக்க வேண்டும். அந்த இரும்புக் கம்பு நெருப்பில் காட்டப்பட்டு சூடாக இருக்கும் அல்லது நெருப்பு பற்ற வைக்கப்பட்டிருக்கும். இதில் இன்னொரு முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம், வெறுங்காலில் நடக்க வேண்டும்.

போரின் போது ஏதாவது கருவியின் உடைந்த பாகங்களோ அல்லது குண்டு துகளோ கீழே கடந்து அதனை மிதித்தாலும் உடனேயே வலியால் துடித்து போகக்கூடாது எளிதாக கடந்து விட வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பயிற்சி.

Image Courtesy

 குளிர்ந்த நீரில் :

குளிர்ந்த நீரில் :

அமெரிக்க ராணுவத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ள பயிற்சி இது. வீரர்கள் கைகளை கோர்த்தபடி கடற்கரையில் படுத்திருக்க வேண்டும், உறைவைத்திடும் குளிரில் வீரர்கள் படுத்திருக்க அலை அவர்களின் முகத்தை மூழ்கச் செய்து செல்லும். அலையின் வேகத்தில் உள்ளிழுத்து செல்லாமல் முடிந்த வரையில் ஒரேயிடத்தில் ஒருவரையொருவர் கை பிடித்துக் கொண்டு படுத்திருக்க வேண்டும்.

குறைந்தது எட்டு நிமிடங்கள் வரை இப்படியிருக்க உயர் அலுவலர் சமிக்கை கொடுத்ததும் அடுத்த நொடி எழுந்து ஓடிச் சென்று மண்ணில் புரண்டு அடுத்த பயிற்சிக்கு தயாராக வேண்டும்.

Image Courtesy

தந்திரம் :

தந்திரம் :

போர் தந்திரங்களை கற்று போரிட உடற்தகுதியுடன் இருந்தால் மட்டும் போதாது தொடர்ந்து எந்த சூழ்நிலையிலும் நம்மை தற்காத்து கொள்ளவும், உயிர் வாழ்ந்திடவும் வேண்டும், அதிலும் போரிடும் காலங்களில் எல்லாம் நமக்கு சத்தான உணவுகள் வேலா வேலைக்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அங்கிருக்கும் பொருட்களை கொண்டு உயிர் வாழ்வது நமது சாமர்த்தியம்.

இதற்காக ராணுவ வீரர்களுக்கு தாய்லாந்து காடுகளில் பதினோறு நாள் பயிற்சியளிக்கப்படுகிறது. அங்கிருக்கும் விலங்குகள், பிற தாவரங்களை கொண்டு எப்படி உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வது என்பது கற்றுக் கொடுக்கப்படுகிறது.

Image Courtesy

இறுதிப் பயிற்சி :

இறுதிப் பயிற்சி :

கிட்டத்தட்ட இறுதிக்கட்ட பயிற்சியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. சொர்கத்திற்கான சாலை என்று வர்ணிக்கப்படும் இந்த பயிற்சியில் வீரர்கள் வெறும் உடலுடன் தான் பங்கேற்க வேண்டும்.

கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரத்திற்கு கருங்கற்களால் ஒரு சாலையை அமைத்திருக்கிறார்கள். கூர்மையான கற்கள் நிரம்பிய அந்த பாதையில் வெறுங்காலுடன் நடந்தாலே குத்தி ரத்தம் வழிவது உறுதி, ஆனால் வீரர்கள் இந்த பாதையை ஊர்ந்து கடக்க வேண்டும்.

Image Courtesy

தோட்டா :

தோட்டா :

ரஷ்யாவில் இருக்கிற சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் அணிந்த படி வீரர்கள் நிற்க அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடப்படும். என்ன தான் புல்லட் ஃப்ரூப் அணிந்திருந்தாலும் சில நிமிடங்களுக்கு தடுமாற்றம், வலி ஏற்படவே செய்யும். அதனை குறைக்கவும், சுதாரித்து திருப்பித் தாக்கவும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

Image Courtesy

விஷப்புகை :

விஷப்புகை :

மிகவும் கொடூரமான பயிற்சி என்று வர்ணிக்கப்படுகிறது. இருப்பதிலேயே மிகவும் கடினமான சற்று கவனம் பிசகினாலும் உயிரைப் பறிக்கிற பயிற்சி இது. விஷப்புகை அடங்கிய அறையில் வீரர்களை அடைத்து, அதிலிருந்து தப்பிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

இருட்டறையில் அடைத்து விஷப்புகை பரவுவதை எப்படி உணர்வது, அப்போது என்ன செய்ய வேண்டும். எப்படி மூச்சை இழுத்து பிடிப்பது போன்ற பயிற்சி வழங்கப்படுகிறது.

Image Courtesy

ஆபத்து :

ஆபத்து :

குறைந்த நிமிடங்களே விஷப்புகை இருக்கிற அறையில் இருக்கிறார்கள்.... அதோடு போதிய பாதுகாப்பு கருவிகளும் அளிக்கப்படுகிறது. அந்த பயிற்சி முடிந்த பின்பு தன்னுடைய முகமுடியை கழற்றி சத்தமாக பெயரையும் எண்ணையும் சொல்ல வேண்டும்.

ஆக, எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் பத்துநொடிகளாவது தாக்கு பிடிக்க இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. விஷப்புகை கொண்ட அறையிலிருந்து வெளியேறியவுடன் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது ஆகியவை கற்றுத் தரப்படுகிறது.

Image Courtesy

உறையும் குளிரில் :

உறையும் குளிரில் :

தென்கொரிய சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. ராணுவத்தை சேர்ந்த 200 வீரர்களை தேர்ந்தெடுத்து பியோங்சாங்க் என்ற பகுதிக்கு அனுப்பப்படுகிறார்கள் .

அது மிகவும் குளிர் பிரதேசமாகும். மைனஸ் 30 டிகிரி குளிர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி மட்டுமே தெரியும். அங்கே சட்டையின்றி ஓடுவது,ஜிம்னாஸ்டிக் பயிற்சி மேற்கொள்வது ஆகியவை செய்ய வேண்டும்.

Image Courtesy

கைகள் பத்திரம் :

கைகள் பத்திரம் :

வடகொரிய ராணுவத்தில் இந்த பயிற்சி தீவிரமாக பின்பற்றுகிறார்கள். ராணுவ வீரரின் கை மிகவும் கடினமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்காக வீரர்களுக்கு மிகக்கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

20 சிமெண்ட் தகடுகள் அடுக்கி வைக்க அதனை கையாலேயே உடைக்கிறார்கள்.

Image Courtesy

குத்து :

குத்து :

மரத்தை சுற்றி நின்று கொண்டு வெறும் கையால் கடுமையாக மரத்தினை குத்துகிறார்கள். ஒரு நாளைக்கு ஆயிரம் பன்சஸ் வீதம் ஒரு மாதம் வரை இப்படி குத்த வேண்டும். அப்போது கை வலுவடையும் என்று சொல்லப்படுகிறது.

இரும்புக் கேனை வெறும் கையால் உடைக்க வேண்டும். அதிலிருக்கும் கூரிய பகுதி கையில் குத்தி ரத்தம் வலிந்தாலும் தொடர்ந்து உடைக்க வேண்டும், அதோடு ரத்தம் வரும் இடத்தில் உப்பு போட்டு தேய்க்கச் சொல்கிறார்கள். இத்தனை கடுமையான பயிற்சிகளுக்கு பிறகு கை மிகவும் வலுவடைய ஒரே குத்தில் எதிர் படை வீரர் சுருண்டு விழ வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருக்கிறது.

Image Courtesy

 தூக்கமின்றி :

தூக்கமின்றி :

பில்லிப்பைன்ஸ் ராணுவ வீரர்களுக்கு இந்த பயிற்சி கிடைக்கிறது. ராணுவ வீரர்களிலேயே வெகுசிலரை தேர்ந்தெடுத்து இதற்கு தயார்படுத்துகிறார்கள். எந்த சூழலிலும் உயிர் பிழைக்க, கடுமையான சூழலில் கூட உயிர் பிழைத்து தகவல்களை சொல்லவோ அல்லது எதிர்த்து போராடவோ கடுமையான பயிற்சி வழங்கப்படுகிறது.

அவற்றில் ஒன்று தான் தூக்கம். எந்த மனிதனுக்கும் தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். தூக்கம் குறைந்துவிட்டால் மொத்த உடலின் இயக்கமே கொலாப்ஸ் ஆகிடும். ஆனால் இவர்களுக்கு முடிந்தளவு தூக்கமின்றி இருக்க பயிற்சி வழங்கப்படுகிறது.

Image Courtesy

தற்கொலைப்படை :

தற்கொலைப்படை :

தீவிரவாத கும்பலில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. என்ன தான் கடுமையான பயிற்சி உயிர் பிழைக்க பயிற்சி என்று பயிற்சி பெற்றாலும் எதிர்பாராத சூழலில் எதிரிப்படையினரிடம் சிக்கினாலோ அல்லது, எதிரிப் படையை நிலைகுலையச் செய்யவும் தற்கொலைப் படையினர் பயன்படுகிறார்கள்.

குறிப்பிட்ட வீரர்களுக்கு தற்கொலை செய்து கொள்ள சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, எந்த சூழலிலும் தன்னுயிரை பற்றி கவலைப்படாமல் போரிடவும் வீரர்களுக்கு இந்த பயிற்சி உதவிடுகிறது.

Image Courtesy

மூழ்கும் பயிற்சி :

மூழ்கும் பயிற்சி :

கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் நீச்சல் குளத்திற்குள் தூக்கிப் போடுவார்கள். தரையில் கால் படக்கூடாது. எக்கி எக்கி மேலே வர முயற்சிக்க வேண்டும். இருபது முறை இப்படி மேலே வந்து பயிற்சி எடுக்க வேண்டும். அதன் பின்னர் முழு உடலை அசைத்தபடியே எந்தப் பக்கம் குளத்தின் முடிவு இருக்கிறது என்பதை அறிந்து அந்த திசை நோக்கி செல்ல வேண்டும்.

ஆரம்பத்தில் குளத்தில் பயிற்சி எடுத்த பிறகு மிகப்பெரிய ஆற்றில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கை கால்கள் கட்டி வீரர்களை தண்ணீரில் வீசினாலும் உயிர் பிசைத்து தப்பிக்க இந்த பயிற்சி பயன்படுகிறது.

Image Courtesy

விலங்குகள் :

விலங்குகள் :

வீரர்கள் மட்டுமல்ல வீரர்களுடன் இணைந்து உதவக்கூடிய விலங்குகளுக்கும் வீரர்களின் சமிக்கையை புரிந்து செயலாற்றக்கூடிய வேகம் இருக்க வேண்டும். அதற்காக விலங்குகளைக் கொண்டும் கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இதே நேரத்தில் தலை,கால்,கை என வீரர்களின் ஒவ்வொரு உறுப்புகள் வலுவாக இருப்பதற்கான பிரத்யோக பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Military Training Exercise around the world

Military Training Exercise around the world