சண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண்!

Subscribe to Boldsky

சண்டை இல்லாத இடமே இல்லை, யுகமே இல்லை. மகாபாரதம், இராமாயணத்தில் இருந்து இன்றைய அரசியல் களம் முதல் நம் அனைவரின் வீடு, அலுவலகம் வரை தனி நபர் வாழ்க்கை, சமூகம் என எங்கிலும் சண்டை, சச்சரவு நிறைந்திருக்கிறது.

எப்போது, யார் மத்தியில், எப்படி சண்டை விளையும் என்றே கூற இயலாது. சண்டை எப்படி வேண்டுமானாலும் உண்டாகலாம்.. ஆனால், அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது தான் முக்கியம்.

Man mixes semen in female colleagues drink after he had a fight with her

சிலர் சண்டையை தனக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் வகையில் மாற்றிக் கொள்வார்கள். சிலர் தவறு தன்னிடம் இல்லை என்றாலும், சண்டையின் போது மோசமாக நடந்து கொண்டு, தன் தரத்தை தானே குறைத்துக் கொள்வார்.

என்ன தான் சண்டையாக இருந்தாலும்... செய்யக் கூடாத ஒரு செயலை செய்து தன் வேலையை இழந்துள்ளார் ஒரு ஆண்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருத்துவேறுபாடு!

கருத்துவேறுபாடு!

அலுவலகங்களில் உருவாகும் சண்டைகள் பெரும்பாலும் கருத்துவேறுபாடு காரணமாக தான் உருவாகும். அதிலும், சிலர் தங்கள் மேலதிகாரிகளுடனே சண்டைக் கட்டுவார்கள். சண்டையின் போது வாதங்கள் ஏற்படுவது இயல்பு தான்.

ஆனால், அதை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், எடுத்து செல்ல வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். சிலர் எல்லை கடந்து விவாதங்களை எடுத்து சென்று, தவறான செயலில் ஈடுபடுவார்கள்.

ராபர்ட்!

ராபர்ட்!

ஃப்ளோரிடா மாகாணத்தின் தோல் நோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்து வந்த 62 வயது மிக்க ராபர்ட் என்பவருக்கும், அதே நிறுவனத்தில் மேலாண்மை அதிகாரியாக பணிபுரிந்து வந்த 37 வயது பெண்மணிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக ஏற்பட்ட விவாதம் சண்டையில் போய் முடிந்தது.

எல்லை மீறல்!

எல்லை மீறல்!

வயதானால் சில சமயம் மூளை மந்தமாகி விடும் என்பார்கள். அப்படி தான் 62 வயதுமிக்க ராபர்ட்டும் நடந்துக் கொண்டார். 37 வயதுமிக்க அந்த பாஸ் பெண்மணியுடன் சண்டை ஏற்பட.. தன்னைவிட வயதில் குறைவான பெண் இப்படி நடந்துக் கொள்வதா என்று கருதினாரோ என்னவோ... சண்டையை பேச்சுடன் நிறுத்திக் கொள்ளாமல், அந்த பெண்மணி ட்ரிங்க்ஸ் பருகும் கோப்பையில் தனது விந்தினை கலந்து வைத்துவிட்டார்.

சந்தேகம்!

சந்தேகம்!

தனது கோப்பையில் ட்ரிங்க்ஸ் பருகும் போது வினோதமான ஒரு வாடை வருவதை அறிந்த அந்த பெண்மணி, ஏதோ அதில் கலக்கப்பட்டுள்ளதைஅறிந்துக் கொண்டார். பிறகு, தான் வெளியே சென்ற போது தான் யாரோ, எதையோ தன் கோப்பையில் கலந்திருக்க கூடும் என்று சந்தேகித்தார். இதே போன்ற சம்பவம் இதற்கு முன்னும் நடந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் அந்த பெண்மணி!

சிசிடிவி!

சிசிடிவி!

பிறகு, தான் தனது அறையில் இருந்து வெளியேறி திரும்பும் இடைவேளையில் யார் தன் அறைக்குள் வந்து சென்றது என்று சிசிடிவி மூலம் பரிசோதனை செய்த போது, அதில், ராபர்ட் டைசன் ஏதோ பொருளை சிறு டப்பாவில் கொண்டு வந்து கோப்பையில் கலந்து செல்வது அறிய வந்தது.

விசாரணை!

விசாரணை!

ராபர்ட் டைசனை அழைத்து எச்.ஆர். விசாரித்த போது, அவர் அந்த பெண்மணியின் ட்ரிங்க்ஸ் கோப்பையில் தன் விந்தை கலந்த தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால், ராபர்ட் டைசன் தனது வேலையை இழந்தது மட்டுமின்றி, வரும் செப்டம்பர் மாதத்தில் நீதிமன்றத்தில் இவர் மீதுஇதுகுறித்து பதியப்பட்டிருக்கும் வழக்கில் ஆஜராக வேண்டிய நிலையம் ஏற்பட்டுள்ளது.

கோபத்தை கொஞ்சம் அடக்கி இருந்தால்... இந்நிலையை ராபர்ட் தவிர்த்திருக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Man mixes semen in female colleague's drink after he had a fight with her

    Man mixes semen in female colleague's drink after he had a fight with her
    Story first published: Monday, August 13, 2018, 16:20 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more