For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏழு பெண் சிலைகளுடன் வாழும் விசித்திர மனிதன்! எதற்காக இத்தனை சிலைகள் தெரியுமா?

ஏழு சிலிக்கான் சிலைகளுடன் வாழும் விசித்திரமான ஓர் நபரைப் பற்றிய செய்தி.

|

எப்போதுமே நம்மைச் சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்களா என்ன? இன்றைக்கு நண்பர்கள்... அலுவலகம்,வீடு,உறவினர்கள் என்று வெவ்வேறு பெயர்களைச் சொல்லிக் கொண்டு ஒரு படையே நம்மோடு இருந்தாலும் ஒரு நாள் எல்லாரும் இருந்துமே அல்லது எல்லரும் விலகிச் செல்ல தனியாய் நிற்க வேண்டிய சூழல் வரலாம்.

அந்த தனிமையில் அப்படியே கிடக்காமல் அதிலிருந்து உங்களை மீட்டெடுக்க ஆவன செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி தனிமையில் இருக்கும் போது தான் உங்கள் மனம் தேவையில்லாததைப் பற்றியெல்லாம் சிந்தித்து வாழ்வில் அவசியமற்ற வேலைகளை எல்லாம் செய்யத் தூண்டிடும். இங்கே அப்படி தனிமையில் இருந்த போது ஒரு நபர் செய்த விசித்திரமான செயலைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சீனாவைச் சேர்ந்த குய்ஹோசு என்ற மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹுய்ஷுய். 59 வயதான இவர் ஏழு செக்ஸ் பொம்மைகளுடன் வாழ்ந்து வருகிறார். அந்த ஏழு பேரும் தான் தனக்கு துணையாக இருக்கிறார்களாம்.

முழு பெண் வடிவத்தில் இருக்கும் இந்த சிலிக்கான் சிலைகள் தான் என்னுடைய மகள்கள் என்று குறிப்பிடுகிறார் இந்த சீனா மனிதர்.

#2

#2

ஹூய் மேலும் கூறுகையில், எல்லாரும் இதைப் பார்த்து பாலியல் இச்சைக்காக பயன்படுத்துவதாய் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு நாளும் இவர்களை அந்த நோக்கத்தில் நான் வாங்கிவரவில்லை. இந்த ஏழு பேருமே என்னுடைய மகள்கள் என்கிறார்.

தந்தை ஸ்தானத்தில் இருந்து மகள்களை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டுமோ அது போல பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். அதோடு அந்த பொம்மைகளுக்கு தினமும் புது உடை உடுத்தி தலை சீவி அலங்கரிக்கிறார். வண்டியில் உட்கார வைத்து அவுட்டிங் அழைத்துச் செல்கிறார். அவர்களுக்கு இளம் தலைமுறையினர் கேட்கும் பாடல்களை ஒளிக்கவிட்டு அவர்கள் ரசிப்பதாய் உணர்கிறார்.

#3

#3

ஏழு பொம்மைகளுக்கு சுமார் 100க்கும் மேற்பட்ட உடைகள் இருக்கின்றன, அவற்றுக்கு உடை மட்டுமல்லாது விக், ஷூ,பேக் போன்ற இதர பொருட்களையும் வாங்கி குவித்திருக்கிறார். அதோடு பொம்மைகளுக்கான புதிய அலங்கார உடையை தயாரிக்கும் பிஸ்னஸ் ஒன்றினை துவங்கப்போகிறாராம்.

என்னுடைய மகள்களுக்கு மட்டுமல்லாது எல்லா பொம்மைகளுக்கும் விதவிதமான உடைகளை வாங்கிப் போடலாம் என்பது இவரது விருப்பமாக இருக்கிறது.

#4

#4

பொம்மைகளின் மீது இவ்வளவு பற்றுடன் இருப்பது அவற்றை வெளியில் எடுத்துச் செல்வது, நிறைய செலவழிப்பது ஆகியவற்றைப் பார்த்து பலரும் நான் நடத்தை கெட்டவன் என்ற ரீதியில் என்னைத் தாக்கி பேசுவார்கள் ஆனால் அவை எதுவும் நான் கண்டு கொள்வதில்லை. எனக்கு பிறரிடம் என்னை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை

எனக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அது போதும். எல்லா அழகும் ஒருங்கே கிடைக்கப்பெற்ற இந்த பொம்மைகளை வெளியில் எல்லாரும் தங்களை கிளர்ச்சியூட்டும் போகப்பொருளாக பார்க்கிறார்கள் ஆனால் இவற்றை நான் குடும்ப உறுப்பினராக என் அங்கத்தில் ஒருவராக பார்க்கிறேன்.

#5

#5

ஹூய்க்கு பதினெட்டு வயதில் மகன் இருக்கிறார். மகனின் பதினெட்டாவது வயது பிறந்த நாளின் போது இதே போன்றொதொரு சிலிக்கான் பொம்மையைத் தான் பரிசாக கொடுத்திருக்கிறார்.

மகன் சிலிக்கான் சிலையை தன்னுடைய பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள சம்மதிக்கிறார். இது குறித்து கூறுகையில் என்னுடைய மகனுக்கு நான் பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கும் போது அவனுக்கு நான் அறிவுறித்தி சொன்னது பாதுகாப்பு, நீ வெளியில் சென்று உறவு வைத்துக் கொள்கிறாய் என்றால் உடல் சார்ந்த பாதுகாப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.

#6

#6

ஹூய் மற்றும் அவரது மகன் தங்கியிருக்கும் வீட்டில் தற்போது ஏழு பொம்மைகள் வரை இருக்கிறது. இவற்றில் ஐந்து ஹூய் வாங்கியது கடைசி இரண்டு மட்டும் நண்பர்கள் ஹூய்க்கு பரிசாய் கொடுத்தார்கள். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கிறார் ஹூய், இவரின் குடும்ப நண்பர் ஒருவர் வெளிநாடு செல்ல இருக்கிறாராம்.

வெளிநாடு செல்வதால் தன்னிடம் இருந்த சிலிக்கான் பொம்மையை ஹூயிடம் ஒப்படைப்பதாக சொல்லியிருக்கிறார்.

#7

#7

இதன் ஆரம்ப விதையைப் பற்றி கூறுகையில், உள்ளூரில் உள்ள நோய்தடுப்பு பிரிவு அலுவலராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தான் நோய்த்தொற்று குறித்தும் அவை பரப்புகிற ஆபத்தான நோய் குறித்தும் தெரியவந்தது.

நான் என் மனைவி மகனுடன் சந்தோசமாகத்தான் வாழ்ந்து வந்தேன் 2004 ஆம் ஆண்டு என் மகனுக்கு ஐந்து வயதான போது மனைவி என்னிடம் விவாகரத்து கேட்டுபிரிந்து சென்றுவிட்டார்.

#8

#8

மகனை நான் தான் வளர்த்தேன், அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு பீஜிங் சுற்றுலா சென்ற போது அங்கே கடையில் ஜப்பான் சிலிக்கான் பொம்மைகள் விற்கப்பட்டது. அதைப் பார்த்து அதன் அழகில் மயங்கி வாங்க வேண்டும் அவற்றை என்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

தனிமையில் இருந்த எனக்கு அவை நல்ல துணையாய் இருந்தது. அவற்றிடம் உட்கார்ந்து நான் நிறைய பேசுவேன் அன்றைய நாளில் நடந்த விஷயங்களை எல்லாம் மனம் விட்டு பேசுவேன்.

#9

#9

முதலில் வாங்கி பொம்மைக்கு எக்சியோ எக்‌ஷூ என்று பெயர் வைத்தேன் இதன் அர்த்தம் மெல்லிய பனி என்பதாகும். அதன் பிறகு எக்‌ஷூவுக்கு துணையாக என்று சொல்லி வரிசையாக அடுத்தடுத்து சிலைகளை வாங்கினேன். ஆரம்பத்தில் என்னை கேலி பேசியவர்கள் கிண்டல் செய்தவர்கள் எல்லாம் மெல்ல மெல்ல தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள்.

இந்த செக்ஸ் பொம்மை வைத்திருப்பதால் நாங்கள் ஏதோ வினோதமான பிறவிகளைப் போல பார்க்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை உங்களைப்போலவே மிகச் சாதரண மனிதர்கள் தான் நாங்கள்.

All Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Man Lives With Seven Silicon Dolls

Man Lives With Seven Silicon Dolls
Story first published: Thursday, June 28, 2018, 17:25 [IST]
Desktop Bottom Promotion