Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
பண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்!
பண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்!
உலகின் அதிசயங்களாக கருதப்படும் உலகின் பிரபலமான பிரமிடுகளை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் நிலம். பண்டையக் காலத்திலேயே நவீன முறையில் வாழ்ந்தவர்கள் என்று கூறப்படும் மக்கள். அன்றில் இருந்து இன்று வரை பல விடை கண்டறியப்படாத புதிர் மற்றும் மர்மங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் பகுதி... எகிப்து.

Cover Image Source: Google
எகிப்தியர்கள் எறும்புகளை போன்றவர்கள். உழைக்காமல் இருக்கவே முடியாது. அப்படியான கடுமையான உழைப்பின் காரணமாகவும், உதாரணமாகவும் தான் இன்றும் நம் பூமியில் நிலைத்து நின்றுக் கொண்டிருக்கின்றன பல பிரமிடுகள்.
பிரமிடுகள் என்பதை தாண்டி.. இன்று நாம் நமது அன்றாட வாழ்வில் மிக சாதாரணமாக பயன்படுத்தி வரும் பொருட்களை எல்லாம் பண்டையக் காலத்தில் முதல் முறையாக உலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் என்ற பெருமை கொண்டிருக்கிறார்கள் எகிப்தியர்கள்...

டூத் பேஸ்ட்!
டூத் பேஸ்டை முதன் முதலில் தயாரித்து பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள் என்று அறியப்படுகிறது. இவர்கள் உண்டு வந்த பெரும்பாலான உணவுகள் மண் கலந்திருந்த காரணத்தால். இவர்கள் பற்களின் ஆரோக்கியம் சீர்கெடாமல் இருப்பதற்காக சாம்பல் மற்றும் முட்டையினை கலந்து பேஸ்ட் தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
Image Source: Google

போலி முடி!
விக் என்று கூறப்படும் சவுரி போலி முடியை கண்டுபிடித்தவர்களும் எகிப்தியர்கள் தான். பண்டையக் காலத்திலும் சரி, இப்போதும் சரி எகிப்து பகுதியில் வெப்பம் மிகவும் அதிகம். ஆகையால், எகிப்திய மக்கள் தங்கள் தலை முடியை முற்றிலும் ஷேவ் செய்து விடுவார்கள். ஆகையால், வேண்டும் என்ற தருணத்தில் சவுரி முடியை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இதில், செல்வந்தர்களுக்கான போலி முடி மனிதர்களின் முடிகளில் இருந்தும், ஏழை மக்களுக்கான போலி முடி செம்மறியாட்டு முடியில் இருந்தும் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.
Image Source: Google

நாட்காட்டி!
எகிப்தியர்கள் நாள், நேரத்தில் மிகவும் கவனமாக இருந்தனர். எந்த ஒரு நாளையும் வீணடிக்க முயலாத அவர்கள். நாள் காண்பிக்கும் காலண்டர்களை உருவாக்கினார்கள். இவர்களது காலண்டரில் வருடத்திற்கு மூன்று காலங்கள், ஒவ்வொரு காலத்திற்கும் நான்கு மாதங்கள். ஒவ்வொரு மாதமும் முப்பது நாட்கள் கொண்டிருக்கும். மீத ஐந்து நாட்கள் இவர்கள் அறுவடை விடுமுறை நாளாக கருதியுள்ளனர்.
Image Source: about-history

பீர்!
முதன் முதலில் பீர் தயாரித்தவர்களும் எகிப்தியர்கள் என்று கூறப்படுகிறது. பிரமிடு கட்டுமானத்தில் வேலை செய்து வந்த வேலையாட்கள் ஒரு நாளுக்கு நான்கில் இருந்து ஐந்து லிட்டர் பீர் வரை குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதில், சந்தேகம் கொள்ள தேவையில்லை... அவர்கள் நிஜமாகவே நாளுக்கு நாலைந்து லிட்டர் பீர் குடித்தனர் என்று கூறுகிறார்கள்.
Image Source: Google

மொழி வடிவம்!
பேசும் மொழிக்கான வடிவமும் அளித்துள்ளனர் எகிப்தியர்கள். எகிப்தியர்கள் தாங்கள் பேசும் மொழியை மற்றவர்களுடன் தொடர்புக் கொள்ள வடிவங்கள் மற்றும் குறியீடுகள் கொண்டிருந்தனர். பிரமிடு எப்படி கட்ட வேண்டும் என்பதில் இருந்து வாழ்க்கை முறை குறித்து பல விஷயங்களை இவர்கள் குயீட்டு மொழியாக வரைந்து சென்றுள்ளனர்.
Image Source: Google

பூட்டு, சாவி!
வீட்டினை பூட்டும் பூட்டு மற்றும் சாவிகளை முதன் முதலில் தயாரித்தவர்கள் எகிப்தியர்கள் தான் என்று அறியப்படுகிறது. எகிப்தியர்கள் பண்டையக் காலத்திலேயே தங்கள் இருப்பிடத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பூட்டும், சாவியும் கண்டுபிடித்துள்ளனர். வரலாற்றில் பூட்டு, சாவி முறையை பயன்படுத்தியவர்கள் என்று எகிப்தியர்கள் மற்றும் சீனர்கள் அறியப்படுகிறார்கள்.
Image Source: Google

கண் மருத்துவம்!
எகிப்தியர்கள் மத்தியில் கண் இன்பெக்ஷன் பொதுவான ஒன்றாக இருந்துள்ளது. கண்ணில் ஏற்பட்ட தொற்றினை சரிசெய்ய எகிப்தியர்கள் மனித மூளையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மனித மூளையில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருளை நோய் தொற்றை, பாக்டீரியாவை எதிர்த்து போராடும் மருந்தாக பயன்படுத்தியுள்ளனர்.
மனித மூளையை இரண்டு பாகங்களாக பிரித்து அதனுடன் தேனை சேர்த்து குலைத்து மாலை நேரத்தில் அதை கண்களில் தடவி, மறுநாள் காலை வரை காயவைத்து வைத்தியம் செய்து வந்ததாக அறியப்படுகிறது.
Image Source: Pinterest

அலங்காரம்!
பெரும்பாலும் நீங்கள் எகிப்தியர்கள் படங்கள், ஓவியங்கள் அல்லது எகிப்திய மக்கள் குறித்த படங்கள் என எதை கண்டாலும், அவர்கள் அனைவரும் கண்களுக்கு அடர்த்தியான மை இட்டிருப்பதை காண இயலும். அலங்காரம் மீது அதீத ஆர்வம் கொண்ட எகிப்தியர்கள் இதை வெறும் அலங்கார பொருளாக மட்டும் பின்பற்றவில்லை. தங்கள் கண்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படாமல் இருக்கவும் அவர்கள் மையிட்டு வந்துள்ளனர்.
Image Source: Google

நாற்காலி, மேசைகள்!
எகிப்தியர்களுக்கு முன்னர் எந்த பகுதியை சேர்ந்த மக்களும் மேசை பயன்பாட்டில் வைத்திருந்தாக தகவல் இல்லை. உலகின் பல நாடுகளில் உணவு உண்ணும் போது கீழே அமர்ந்து பரிமாறும் வழக்கம் தான் இருந்துள்ளது. ஆனால், எகிப்தியர்கள் மட்டுமே மேசையை தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இத்தகைய மேசைகள் தான் எதிர்காலத்தில் போர்டு கேம்ஸ் எனும் விளையாட்டுகள் கண்டுபிடிக்க காரணமாக இருந்தன என்றும் அறியப்படுகிறது.
Image Source: Google



Click it and Unblock the Notifications