Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் கையில் இந்த விதி ரேகை எப்படி இருக்கிறது? உடைந்திருந்தால் என்ன அர்த்தம்?
உங்களுடைய கையில் விதி ரேகை எப்படி இருக்கிறது. அது உடைந்திருந்தாலோ அல்லது மெலிதாக இருந்தாலோ என்ன மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் என்று இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்கள் எதிர்காலத்தை கணித்து சொல்லும் விதி ரேகை என்ன சொல்லப் போகிறது, வாங்க பார்க்கலாம். நம்முடைய கையில் உள்ள விதி ரேகை தான் நம்முடைய தலையெழுத்தையே கணிக்கக் கூடிய முக்கியமான ரேகை ஆகும்.

இந்த ரேகையை கொண்டு நமது ஆரோக்கியம், எண்ணம் மற்றும் பொருளாதார நிலை போன்றவற்றை கணிக்கலாம். இதைத் தான் கைரேகை ஜோதிடம் நமக்கு தெளிவாக கூறுகிறது.

விதி ரேகை
நமது உள்ளங்கையின் நடுப்பகுதியில் இருந்து ஒரு செங்குத்தான கோடு ஆரம்பித்து சனி மேட்டை நோக்கி சென்று உள்ளங்கையை இரண்டு பகுதிகளாக பிரித்து காணப்படும் ரேகை தான் இந்த விதி ரேகை.
கைரேகை ஜோதிடத்தை பொருத்த வரை 3-6 வகையான விதி ரேகை இருக்கின்றன என்று சொல்லுகின்றனர். சரி வாங்க இந்த விதி ரேகையை கொண்டு உங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

விதி ரேகை தெரியாமல் இருப்பது
சிலருக்கு மற்ற ரேகைகளை ஒப்பிடும் போது இந்த விதி ரேகை தெளிவாக தெரியாமல் இருக்கும். இந்த நபர்கள் சுயமாக எதையும் சாதிக்க கூடிய நபராக விளங்குவார்கள்.

விதி ரேகை உடைந்து காணப்பட்டால்
உங்கள் விதி ரேகை தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு காணப்பட்டால் இது அபாயத்தின் அறிகுறியாகும். இந்த நபர்கள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது விபத்தை சந்திப்பார்கள் என்று கூறுகிறது. எனவே நீங்கள் எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படுவது நல்லது.

ஷிக் ஷேக் பாதை
இதுவே உங்கள் விதி ரேகை பார்ப்பதற்கு ஷிக் ஷேக் பாதையில் அமைந்து இருந்தால் நீங்கள் வாழ்வில் ஏற்ற இறக்கங்களை சந்திப்பீர்கள். பிரச்சினைகளை கடந்து தான் உங்களால் வெற்றி காற்றை சுவாசிக்க முடியும்.

துண்டாக்கப்பட்ட விதி ரேகை
உங்கள் விதி ரேகை இரண்டாக பிளவுபட்டு காணப்பட்டால் மற்றும் y வடிவத்தில் தென்பட்டால் நீங்கள் குழப்பவாதிகளாகவும், முரண்பாடு உள்ள ஆளாகவும் இருப்பீர்கள். இதனால் உங்கள் வாழ்வில் ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள்.

லேசாக விதி ரேகை இருப்பது
உங்கள் கையில் விதி ரேகை லேசாக தென்பட்டால் நிறைய கஷ்டங்களையும் தோல்விகளையும் சந்திக்க நேரிடும். அதே நேரத்தில் நம்பிக்கை இல்லாதவராகவும் எல்லாவற்றையும் எதிர்த்து போராடும் பலத்துடன் காணப்படுவீர்கள்.

ஆழமான விதி ரேகை
உங்கள் உள்ளங்கைகளில் ஆழமான விதி ரேகை அமைந்ு இருந்தால் உங்கள் தந்தை வழி சொத்துக்கள், செல்வங்கள் எல்லாம் உங்களை வந்தடையும். பணத்தை பெறுவதில் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் வெற்றிக்கும் உங்கள் மூத்த குடும்ப நபர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications
