For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

04.12.1945ல் கருணாநிதி எழுதிய ஒரு விசித்திரமான கடிதம் - கலைஞரின் தமிழும், ஆளுமையும்!

04.12.1945ல் கருணாநிதி எழுதிய ஒரு விசித்திரமான கடிதம் - கலைஞரின் தமிழும், ஆளுமையும்!

|

கையால் எழுதி விற்கும் பத்திரிகையில் துவங்கி, டிஜிட்டல் ஊடகம் வரை தமிழ் இவ்வுலகுடன், உலக தொழில்நுட்ப வளர்ச்சியுடன் பல வடிவங்களில் கண்டது. தமிழ் எத்தனை ஊடக வகைகளில் வளர்ந்து வந்த போதும், அந்த அத்தனையிலும் தனது பங்களிப்பைக் அளித்துத் தொண்டாற்றியாவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

Karunanidhi and his Tamil Erudition

மாணவர் நேசன் என்ற கையால் எழுதி விற்கும் பத்திரிக்கையில் துவக்கிய தனது தமிழ் எழுத்தாளுமையை, அச்சு பத்திரிக்கை, வானொலி, நாடகம், தொலைக்காட்சி, திரைப்படம், முகநூல் வரையிலும் தன் பங்கினை சோர்வடையாமல் செலுத்தியவர் கருணாநிதி.

கருணாநிதி மேடைப் பேச்சு, கவிதை, புதினம், சிறுகதை என பெரும்பாலான தமிழ் இலக்கிய வகைகளில் தனது எழுத்தாளுமையை நிரூபித்தவர் கலைஞர். தனக்கான தனித்துவத்தை உலகறிய செய்தவரும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விசித்திரமான கடிதம்!

விசித்திரமான கடிதம்!

கலைஞர் தனது எழுத்து, பேச்சு, வசனம், கதை, நாடகத்தில் தமிழை திறம்பட கையாண்டிருக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கடிதம் எழுதுவதிலும் கூட ஒரு தனிதன்மையை கையாண்டிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.

04.12.1945ல் கருணாநிதி அவர்கள், திருவாரூரை சேர்ந்த தனது தோழர் திருவாரூர் கு. தென்னன் என்பவருக்கு எழுதிய கடிதத்தை சங்குசக்கரம் போன்ற வடிவத்தில் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தின் முடிவு அதன் நடுவே, கலைஞரின் மு.க எனும் கையொப்பத்துடன் முடிகிறது.

Image Source: Facebook / Google / இனிய உதயம் பிரசுரம்

நாடகங்கள்!

நாடகங்கள்!

பழனியப்பன்

சிலப்பதிகாரம்

மணிமகுடம்

ஒரே ரத்தம்

தூக்கு மேடை

"பரப்பிரம்மம்"

காகிதப்பூ

நானே அறிவாளி

வெள்ளிக்கிழமை

உதயசூரியன்

நச்சுக் கோப்பை

இலக்கிய படைப்புகள்!

இலக்கிய படைப்புகள்!

குறளோவியம்

சங்கத் தமிழ்

தாய்

தொல்காப்பியப்பூங்கா

வரலாற்று புனைவுகள்!

வரலாற்று புனைவுகள்!

ரோமாபுரி பாண்டியன்

தென்பாண்டி சிங்கம்

‎பாயும் புலி பண்டாரக வன்னியன்

பொன்னர் சங்கர்

கலைப் படைப்பாளி!

கலைப் படைப்பாளி!

கடந்த 2009ம் ஆண்டு அகில இந்திய திரைப்பட தொழிலார்கள் (fefsi) மாநாட்டில் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு உலகக் கலைப் படைப்பாளி என்ற விருது அவரது எழுத்திற்கும், கலை உலகிற்கு அவர் அளித்த பங்களிப்பையும் போற்றும் வகையில் அளிக்கப்பட்டது.

கௌரவங்கள்!

கௌரவங்கள்!

கடந்த 1970ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் உயர் கௌரவ பதவியாளராக இருந்தார் கருணாநிதி அவர்கள்.

கடந்த 1987ம் ஆண்டு மலேசியாவில் நடந்த உலக தமிழ் மாநாட்டை துவைக்கி வைத்த பெருமை கலைஞர் கருணாநிதி அவர்களையே சேரும்.

செம்மொழி பாடல்!

செம்மொழி பாடல்!

கடந்த 2010ம் ஆண்டில் தான் முதல்வராக இருந்த போது, கோவையில் உலக செந்தமிழ் மாநாட்டை பெருமளவில் சிறப்பாக நடத்தினார் கலைஞர். அவ்விழாவில் பாடலை தானே எழுதினார். அதற்கு பின்னணி இசை அமைத்தார் ஏ.ஆர். ரகுமான். இப்பாடலில் தமிழின் சிறப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி தன் எழுத்தாளுமையை மீண்டுமொரு முறை நிரூபித்திருந்தார் கலைஞர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Karunanidhi and his Tamil Erudition

Here we have listed out the tamil books and novels that written by late tamilnadu former chief minister Karunanidhi and his tamil erudition.
Desktop Bottom Promotion