For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விருந்துக்கு அழைத்த இளைஞனின் அருவருக்கத்தக்க உணவுப்பட்டியல்!

பணத்தை வாங்கிக் கொண்டு விருந்தினர்களுக்கு தன்னுடைய பிறப்புறுப்பை சமைத்து கொடுத்த ஜப்பான் இளைஞர்

|

ஒரு கொண்டாட்டத்தின் விளைவு ஓர் இளைஞனை சிறையில் தள்ளியிருக்கிறது. கொண்டாட்டமோ மகிழ்ச்சியோ எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்கும் வரையில் தான் அந்த மகிழ்ச்சி எல்லாம் ஒரு அளவுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் எடுத்துக் காட்டாய் விளங்கும்.

புதுமையாக செய்கிறேன், என்று சொல்லிக் கொண்டு ஜப்பான் நாட்டையச் சேர்ந்த ஓர் இளைஞர் செய்த வினோத செயலால் அக்கம்பக்கத்தினர் போலீஸுக்கு புகார் கொடுத்திருக்கிறார்கள்.புகார் புரளியாக இருக்கும் என்றே நினைத்து விசாரணையை துவக்கியிருக்கிறார்கள். இறுதியில் அது உண்மை என்று தெரியவர பிறந்த நாள் பார்ட்டி வைத்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்த சம்பவம் நடந்தது 2012 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரைச் சேர்ந்த மாவோ சுகியாமா என்பவர் மார்ச் 31 ஆம் தேதி தன்னுடைய 22வது பிறந்த நாளை கொண்டாட நினைத்திருக்கிறார்.

அதற்கு முன்னதாக தன்னுடைய பிறப்புறப்பினை அறுவை சிகிச்சை மூலமாக நீக்கியுள்ளார். அப்படி நீக்கப்பட்ட பிறப்புறுப்பினை ஃப்ரீஸ் செய்து ப்ளாஸ்டிக் பேகில் வைத்து கொடுத்திருக்கிறார்கள்.

Image Courtesy

 #2

#2

ஏப்ரல் எட்டாம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்விட் போடுகிறார். என்னுடைய ஆண் குறியை முழுவதுமாகவும் விதைப்பையுடன் சமைத்து விருந்தளிக்க தயாராக இருக்கிறேன். வேண்டுமென்றால் இதற்கு ஒரு லட்சம் யென் வரை நீங்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

வேண்டுபவர்கள் சொல்லும் இடத்திற்கே வந்து அவர்களின் விருப்பப்படி சமைத்து கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்று ட்விட் செய்திருக்கிறார். அதோடு இதனை ரீட்விட் செய்து பலரும் அறியச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

Image Courtesy

#3

#3

இணையத்தில் பிரபலமாகவேண்டும் என்பதற்காக எதையாவது உளறிக் கொண்டிருப்பான் என்று நினைத்தார்கள். தொடர்ந்து இது குறித்த ட்விட் அப்டேட்களை தட்டி விட்டுக் கொண்டேயிருந்தார் மாவோ.

ஒரு வழியாக பொது விருந்துக்கு ஏற்பாடு செய்து தன்னிடம் அவ்வளவு தொகை கொடுத்து வாங்குவதாய் சொன்ன ஐந்து பேரையும் அழைத்திருந்தார்.

Image Courtesy

#4

#4

மக்கள் நினைத்துக் கொண்டிருந்தது போல இது ஒன்றும் புரளி அல்ல. உண்மை என்பதை நிரூபிக்க ஏப்ரல் பதிமூன்றாம் தேதி வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

அந்த நாளில் எல்லாருக்கும் சாதரண விருந்தும். பணம் கொடுத்த குறிப்பிட்ட ஐந்து பேருக்கு தன்னுடைய பிறப்புறுப்பினை சமைத்து காட்சிக்கு வைத்திருந்தார்.

Image Courtesy

#5

#5

இதை நீங்கள் சாப்பிடுவதற்கு முன்னதாக இந்த பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று பணம் கொடுத்த ஐந்து பேரிடமும் நீட்டுகிறார். அதில் இதை சாப்பிட்ட பிறகு உடல்நலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டால் மாவோ மீது புகார் அளிக்க மாட்டோம். அவரிடம் நஷ்டஈடு கேட்க மாட்டோம் என்று உறுதியளிப்பதாக எழுதியிருந்தது.

ஐந்து பேருமே உறுதியளித்து கையெழுத்திட்டார்கள்.

Image Courtesy

#6

#6

போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. சமைக்கப்பட்ட பிறப்புறுப்பினை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தார்கள்.பட்டன் காளான் மற்றும் இத்தாலியன் பார்ஸ்லியைக் கொண்டு அலங்கரித்திருந்தார்கள்.

விருந்தில் கலந்து கொள்ள வந்தவர்களை விட இதனை பார்க்க கூடிய கூட்டம் தான் அதிகமாக இருந்தது.

Image Courtesy

#7

#7

ஒரு பக்கம் வந்திருந்த பிறருக்கு விருந்து இன்னொரு பக்கம் இந்த ஐந்து பேர் மட்டும் தனியாக உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். ஐந்து பேருக்கும் சமைத்து வைத்திருந்த பிறப்புறுப்பு பறிமாறப்பட்டது.

அவர்கள் சாப்பிடுவது சாப்பிடுவதற்கு முன்னால் எதனால் சாப்பிட ஒப்புக் கொண்டேன் என்ன எதிர்ப்பார்ப்பு இருக்கிறது போன்றவை எல்லாமே வீடியோ பதிவு செய்யப்பட்டது.

Image Courtesy

#8

#8

முதல் வாயை எடுத்து வைக்கும் போது அத்தனை ஃப்ளாஸ்களும் அவர்கள் மீது தான். சுற்றியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாப்பிட்டு முடித்ததும் அதன் சுவை எப்படியிருந்தது என்பதைக் குறித்து ஐந்து பேருமே கருத்து தெரிவித்தார்கள்.

ரப்பரைப் போன்றும் சற்றே கடினமாகவும் இருந்ததாக சொன்னார்கள். விதைப்பை வெளியில் கடினமாகவும் உள்ளே சாஃப்டாக இருந்ததாகவும் சொல்லியிருந்தார்கள்.

Image Courtesy

#9

#9

தான் பால் வேறுபாடற்ற சமூகத்தை விரும்புவதாக சொன்ன மாவோ அதற்கு இந்த பிறப்புறுப்பு அவசியமில்லை என்று நினைத்திருக்கிறார். இதனை மக்களுக்கும் எடுத்துச் சொல்வதற்காகத்தான் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இவை நாகரிகமற்ற செயல் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தார்கள். விருந்து நடைப்பெற்ற இடமான சுகினாமி என்ற பகுதியில் வாழும் மக்கள் இதனை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

Image Courtesy

#10

#10

மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து சுகினாமி பகுதியின் மேயர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தார். மாவோ செய்த இந்த செயலால் இப்பகுதி மக்கள் எல்லாரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனாலேயே மாவோ மீது நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று சொல்லி மாவோ குறித்து போலீஸில் புகார் அளித்தார். புரளி என்று நினைத்தவர்கள் புகார் கொடுத்திருப்பது மேயர் என்பதால் விசாரணையை துவக்கினார்கள். எல்லா கதையும் வெளிவந்தது. உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Image Courtesy

#11

#11

சட்டத்திற்கு புறம்பாக நான் எதுவும் செய்யவில்லை மனிதக் கறியை சாப்பிடுவது ஜப்பானில் சாதரண விஷயம். இதை சாப்பிடக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை

இந்த நிகழ்விற்கு வந்தவர்களுக்கு எல்லாம் சாதரண உணவு தான் பரிமாறப்பட்டது. விருப்பம் தெரிவித்த ஐந்து பேருக்கு மட்டுமே பிறப்புறுப்பு சமைத்து கொடுக்கப்பட்டது. அவர்களும் தங்களின் முழு விருப்பத்துடனே வந்தார்கள்.

வந்தவர்கள் எல்லாருக்கும் இது என்ன நிகழ்வு எதற்காக இந்த கூட்டம் போன்ற எல்லா தகவல்களும் தெரியும் நான் மறைத்து எதுவும் செய்யவில்லை என்று வாதிட்டார்.

2013 ஆம் ஆண்டு பாதியிலேயே விடுதலை செய்யப்பட்டார் மாவோ.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Japan Man Cook and Serve His Body Part

Japan Man Cook and Serve His Body Part
Desktop Bottom Promotion