ஜப்பான் பள்ளிக்கூடங்களில் கடைபிடிக்கப்படும் விசித்திர விதிமுறைகள் !

Posted By:
Subscribe to Boldsky

இந்த உலகில் எல்லாமே விசித்திரமானது. உலகம் முழுவதும் பல்வேறு காலச்சூழல்களில் வாழும் மக்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு ஏற்ப பல்வேறு நம்பிக்கைகளை, தன்னகத்தே வைத்திருக்கிறார்கள். அதைச் சுற்றியே அவர்களது பழக்க வழக்கங்களும் இருக்கிறது.

இந்தியா, தமிழகம் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் இருக்கும் நமக்கு வெளிநாடுகள் குறித்த எந்த தகவல்களாக இருந்தாலுமே சுவாரஸ்யமாக படிப்போம். அங்கே இருக்கிற மக்கள், அங்கே கடைபிடிக்கிற நடைமுறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் ஓர் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது.

எல்லாருக்கும் தங்கள் வாழ்க்கையின் பசுமையான நினைவுகள் என்று சொன்னால் பள்ளிக்கால நினைவுகள் தான். இதுவரை நம்மூர் பள்ளிக்கூடங்கள் பற்றியே பார்த்தும் கேட்டும் வந்த நீங்கள் இப்போது வெளிநாட்டு பள்ளிக்கூடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக ஜப்பான் பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் புதுமையான விதிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆசிரியர் :

ஆசிரியர் :

நம் பள்ளியில் ஒரு ஆசிரியர் விடுமுறை அல்லது அவரால் அன்றைக்கு பாடம் நடத்த வர முடியவில்லை என்றால் உடனேயே இன்னொரு ஆசிரியர் வருவார் அல்லது அந்த நேரத்தை வேறு ஆசிரியர்கள் தங்கள் பாடத்தை எடுக்க பயன்படுத்திக் கொள்வார்கள் தானே. ஆனால் ஜப்பானில் அதெல்லாம் நடக்காது.

அந்த வகுப்பிற்குரிய ஆசிரியர் வரவில்லையெனில் மாணவர்கள் தாங்களாகவே அந்தப் பாடத்தை படிக்க வேண்டும்.

Image Courtesy

காலை வணக்கம் :

காலை வணக்கம் :

ஜப்பான் பள்ளியில் தினமும் காலையில் தங்களுடன் படிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் காலை வணக்கம் சொல்வதை கட்டாயமாக கடைபிடிக்கிறார்கள். சில பள்ளிகளில் தினமும் மெடிடேசன் கூட நடக்கிறது.

Image Courtesy

வீட்டு உணவு :

வீட்டு உணவு :

ஜப்பான் பள்ளிகளில் வீட்டு உணவுக்கும் தடை! பள்ளி நிர்வாகமே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும். இங்கே சத்துணவு என்பதை எதோ தரக்குறைவு என்று பார்த்து பலரும் சாப்பிட மறுக்கும் அதே வேலையில் அங்கே ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் அளிக்கும் உணவையே சாப்பிட்டாக வேண்டும்.

எல்லாருக்கும் சமமான சத்தான ஆகாரங்கள் வழங்கப்படும். இவற்றை வீணாக்கினால் தண்டனையும் வழங்கப்படுகிறது.

Image Courtesy

விடுமுறை :

விடுமுறை :

இங்கே நமக்கு இருப்பது போல காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை என்றெல்லாம் கிடையாது. ஒரு வருடத்தில் நடுவில் ஐந்து வாரங்கள் மட்டுமே சம்மர் பிரேக் என்று விடுமுறை அளிக்கிறார்கள் ஜப்பானில்

Image Courtesy

தாமதம் :

தாமதம் :

ஜப்பான் பள்ளிகளில் நேரத்தை கணக்கச்சிதமாக கடைபிடிக்கிறார்கள். தாமதாமக வருகிறவர்களுக்கு கண்டிப்பாக பள்ளியில் அனுமதி கிடையாது. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பள்ளியில் இருக்குமாறு தான் மாணவர்களை பழக்கியிருக்கிறார்கள். ஐந்து முறைக்கும் மேல் தாமதமாக வந்தால் தண்டனை வழங்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக முதலில் வரும் போது பயங்கரமாக எச்சரிக்கப்படுகிறார்கள்.

Image Courtesy

க்ளீனிங் :

க்ளீனிங் :

ஜப்பான் பள்ளிகளில் பள்ளியை சுத்தமாக்க என்று தனியாக எந்த பணியாட்களையும் வைத்திருப்பதில்லை. தங்களையும் தங்களின் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பதே அவர்களின் முதன்மைப் பாடமாக இருக்கிறது.

வகுப்பறை, கழிப்பறை,க்ரவுண்ட் என எல்லாப் பகுதிகளையும் மாணவர்களே பராமரிக்கிறார்கள்.

Image Courtesy

உணவுப் பழக்கம் :

உணவுப் பழக்கம் :

பள்ளியில் கொடுக்கப்படுகிற உணவை வாங்கிக் கொண்டு கிரவுண்டில் எங்கேனும் ஹாயாக உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட முடியாது. எல்லாரும் தங்களுடைய உணுவுடன் வகுப்பறையிலேயே உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.

Image Courtesy

நீச்சல் :

நீச்சல் :

பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி என்பது அவர்களின் பாடத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் முறையாக பராமரிக்கப்படும் நீச்சல் குளங்கள் இருக்கின்றன.

Image Courtesy

ஹேர் ஸ்டைல் :

ஹேர் ஸ்டைல் :

ஜப்பான் பள்ளிகளில் மாணவ மாணவிகள் புதுமையாகவோ அல்லது விசித்திரமாகவோ ஹேர்கட் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளக்கூடாது. ஆண்களுக்கு சிம்பிளான ஹேர் கட்டுக்கு மட்டுமே அனுமதி. பெண்கள் ஹேர் லாக் செய்ய வேண்டும் மற்றபடி எந்த ஸ்டைலிங்கிற்கும் அனுமதியில்லை.

Image Courtesy

மேக்கப் மற்றும் ஃபேன்சி :

மேக்கப் மற்றும் ஃபேன்சி :

பள்ளி மாணவர்களுக்கு படிப்பிலும் இன்னபிற அக்கெடெமிக்ஸில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும் என்பதால் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இவை யாவும் அவர்களின் கவனத்தைச் சிதறவிடாமல் செய்கிறது.

ஜப்பானில் பள்ளி மாணவிகளுக்கு மேக்கப் மற்றும் பேன்சி அலங்காரங்களுக்கு பள்ளியில் அனுமதி கிடையாது. இன்னும் சில பள்ளிகளில் த்ரெட்டிங் கூட தடை.

Image Courtesy

வீக் எண்ட் :

வீக் எண்ட் :

இங்கே வீக் எண்ட் என்றால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை தானே நினைப்போம் ஆனால் ஜப்பானில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் வார விடுமுறை. எல்லா மாணவர்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

Image Courtesy

குழந்தைகளுக்கு மட்டும் :

குழந்தைகளுக்கு மட்டும் :

ஜப்பானில் பல இடங்களில் குழந்தைகளுக்கு ஊரடங்கு உத்தரவு இருக்கிறது. அங்கே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த நேரத்தில் மட்டும் மாற்றம் இருக்கிறது.

டோக்கியோ மற்றும் யோகோஹாமா ஆகிய ஊரில் இரவு பத்து மணிக்கு மேல் மால் தியேட்டர் ஆகிய பொது இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு அனுமதியில்லை.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

12 Japanese School rules that will Shock You

12 Japanese School rules that will Shock You
Story first published: Tuesday, January 2, 2018, 12:00 [IST]