TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா?
உலகளவில் பிரபலமான சிலைகளில் முதன்மையானதாக இருக்கிறது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை. இந்த சிலைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். 133 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திர தேவி சிலை ஃபிரான்ஸிலிருந்து அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இரு நாட்டு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இது நிறுவப்பட்டிருக்கிறது.
ஜூன் 17 ஆம் தேதி 1885 ஆம் ஆண்டு சுதந்திர தேவி சிலை நியூயார்க் வந்தடைந்தது. கடலில் வந்த இந்த சிலையை கரைக்கு ஏற்ற நூறுக்கும் மேற்பட்ட படகுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
#1
இந்த சுதந்திர தேவி சிலை திட்டமிட்டதை விட பத்து வருடங்கள் கழித்து தான் கைக்கு வந்திருக்கிறது. அதாவது அமெரிக்கா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகிவிட்டதை கௌரவிக்கும் விதமாக ஃபிரான்ஸ் இந்த சிலையை கொடுக்க முடிவு செய்த ஆண்டு 1876 .
ஆனால் பல கட்ட பணிகள்,போக்குவரத்து எல்லாம் கடந்து அமெரிக்காவின் கைகளில் வந்து சேர்ந்த ஆண்டு 1885.
#2
திட்டமிட்டபடியே 1876 ஆம் ஆண்டு சுதந்திர தேவி சிலையின் கைப்பகுதி மற்றும் விளக்கு ஆகியவை மட்டும் முதலில் அனுப்பப்பட்டிருக்கிறது. முழு சிலையும் அப்போது தயாராகவில்லை. அப்போது அந்த கைப்பகுதியை மியூசியத்தில் வைத்து மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டார்கள்.
அதன் பிறகு தான் முழு சிலையையும் வைக்க இடம் முடிவெடுக்கப்பட்டு அதற்கான கட்டுமானத்திற்காக நிதி திரட்டப்பட்டது.
#3
பல துண்டுகளாக இந்த முழு சிலை இணைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துண்டின் முடிவிலும் சிறிய துளை இருக்கிறது. அந்த துளைகள் சரியாக பொருந்திப் போகும் வண்ணம் இணைக்க வேண்டியதாய் இருந்தது.
இதனை முதலில் ஆக்ஸ்டி பர்தோல்டி என்பவரது ஸ்டுடியோவில் தான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த டிசைன் செய்வதற்காக மொத்தம் 350 மரத்துண்டுகளைக் கொண்டு உருவாக்கியிருந்தார்கள். அதோடு பிரான்ஸிலிருந்து நியூயார்க் கொண்டு செல்லும் வழியில் சில துண்டுகள் உடைந்து டேமேஜ் ஆக அது நியூயார்க் சென்று சேர்ந்ததும் மாற்றப்பட்டிருக்கிறது.
#4
முதலில் மரத்துண்டுகளாக இருந்தவை எல்லாம் இரும்பு ஃப்ரேம் வொர்க் செய்யப்பட்டது. அவை மரத்தினால் செய்யப்பட்ட பீம் துணையுடன் நிற்க வைக்கப்பட்டது. எல்லா வேலையும் முடிந்த பிறகு 1886 ஆம் ஆண்டு செப்டமர் மாதம் சிலை திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தாமதமாகி அக்டோபர் மாதம் விழா நடந்தது.
#5
இது சுதந்திரத்திற்கான ஓர் அடையாளமாக பார்க்கப்படுகிறது, இந்த சிலை அப்பர் நியூயார் பே என்னும் இடத்தில் இருக்கிறது. இதனை லிபர்டி தீவு என்றே அழைக்கிறார்கள்.
ஃபிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் வசிக்கிற மக்களின் நட்புணர்வை பாராட்டும் விதமாக இந்த சிலை முதலில் இருந்தது.
#6
சுதந்திர தேவி சிலை அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த வந்தவர்களின் நம்பிக்கைக்காகவும் அமெரிக்காவில் உங்களுக்கான அமைதியான வாழ்வு கிடைக்கும் என்பதை சொல்லும் விதமாக இந்த சிலை இருந்தது.
உலகில் உள்ள அனைத்து மக்களின் சுதந்திரத்திற்காகன அடையாளமாக போற்றப்படுகிறது.
#7
சிலையின் தலையில் உள்ள க்ரீடத்தில் ஏழு கோடுகள் இருக்கும். அவை ஏழு கண்டங்களையும் ஏழு கடலையும் குறிக்கிறது. தரையிலிருந்து சுதந்திர தேவி சிலை கையிலிருக்கும் விளக்கு வரையில் சுமார் 93 மீட்டர்கள் இருக்கின்றன. இதன் எடை சுமார் 204 மெட்ரிக் டன்.
இந்த சிலை இரும்பினாலும் வெளிப்புறத்தில் செம்பினால் மேற்பூச்சு பூசப்பட்டிருக்கிறது. அவை இரண்டும் சேர்ந்து செயல்புரிந்ததினால் தான் சிலை பச்சை நிறத்தில் தெரிகிறது.
#8
சுதந்திர தேவி சிலை வைக்க அந்த இடத்தை தேர்வு செய்ததற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. 1892 முதல் 1924 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தவர்கள் நுழையும் இடமாக இந்த எலீஸ் தீவு இருந்திருக்கிறது.
கிட்டத்தட்ட பன்னிரெண்டு மில்லியன் மக்கள் வரை வருகை தந்திருக்கிறார்கள். இமிகிரேஷன் நடைமுறை மட்டும் மூன்று முதல் ஏழு மணி நேரம் வரை நடைபெறும். முதலில் இந்த தீவினை நம்பிக்கை தீவு என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல கண்ணீர் தீவு என்று சொல்லும் அளவிற்கு அங்கே நிலைமை மாறியது.
#9
அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போர் 1865 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த போரின் போது அமெரிக்காவிற்கு ஃபிரென்ச்சும் ஆதரவு அளித்திருந்தது. ஃபிரான்சை சேர்ந்த எட்வட் டி லெபோல்யா என்பவர் முதன் முதலாக அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு அடையளமாக எதாவது செய்ய வேண்டும் என்று முதல் விதையை தூவியிருக்கிறார்.
ஃபிரான்ஸ் சிற்பக் கலைஞர் ஆகஸ்டி பர்தோல்டி என்பவரும் இதனை ஆமோதித்து இந்த சுதந்திர தேவி சிலையை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.
#10
முதலில் கை, தலை, என உடலின் தனித்தனிப் பாகமாக உருவாக்கப்பட்டு பின்னர் தான் முழு சிலை வடிவம் பெற்றிருக்கிறது. 46 மீட்டர் உயரம் கொண்ட இந்த சுதந்திர தேவி சிலை செய்ய பிரான்ஸில் இருந்த லட்சக்கணக்கான மக்கள் பண உதவி செய்திருக்கிறார்கள்.
அதே போல அமெரிக்கர்களும் அந்த சிலையை வைக்க 65 அடி மேடை அமைக்க பண உதவி செய்திருக்கிறார்கள்.
#11
இதனை ரோமன் மக்களின் பெண் தெய்வம் தான் லிபர்டாஸ். லிபர்டாஸ் என்ற வார்த்தைக்கு லேட்டின் மொழியில் சுதந்திரம் என்று அர்த்தம். இதனை வடிவமைத்த பரத்தோல்டி முதலில் டிசைன் செய்த சிலை சூஸ் கெனால் சிலையை ஒத்ததாகவே இருந்திருக்கிறது.
எகிப்தில் பெண் அடிமைத்தனம் அதிகமாக இருந்திருக்கிறது. பெருவாரியான மக்கள் இஸ்லாமிய மக்களாகவே இருந்திருக்கிறார்கள். அதனால் ஒர் இஸ்லாமிய பெண்ணின் சிலையை வடிவமைக்க முதலில் திட்டமிட்டிருந்தார். பின்னர் ரோமானியர்களின் லிபர்டாஸ் என்ற பெண் கடவுள், புலம் பெயர்ந்தவர்கள்,சுதந்திரம் ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இப்போதிருக்கிற சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.