For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அதிபர் ட்ரம்ப் குறித்து இதுவரை வெளிவராத சுவாரஸ்யங்கள்!

  |

  அமெரிக்க அதிபராக தேர்தலில் போட்டியிட்டதிலிருந்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ஆனதிலிருந்து உலக மக்களால் தொடர்ந்து கவனிக்கப்படுகிறவராக மாறியிருக்கும் ட்ரம்ப் குறித்து தினமும் பல்வேறு கருத்துக்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன.

  இந்நிலையில் அமெரிக்க அதிபர் குறித்து இதுவரை நீங்கள் கேள்விப்படாத சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  ட்ரம்ப் மெலானியாவை 1998 ஆம் ஆண்டு முதன் முதலாக சந்தித்திருக்கிறார். அப்போதே ட்ரம்ப் முதல் இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்திருந்தார். நியூயார்க் ஃபேஷன் வீக் பார்ட்டியில் ட்ரம்பை முதன் முதலாக சந்தித்த போது மெலானியாவிற்கு 28 வயது.

  அந்த நிகழ்வை ஒருங்கிணைத்தவர் ட்ரம்பிற்கு மெலானியாவை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அப்போது ட்ரம்ப் மெலானியாவிடம் போன் நம்பர் கேட்டாராம்... அதற்கு மெலானியா நான் யாரிடமும் என் போன் நம்பர் கொடுப்பதில்லை வேண்டுமானால் உங்கள் போன் நம்பர் கொடுங்கள் நானே போன் செய்கிறேன் என்றாராம்.

  Image Courtesy

  #2

  #2

  மெலானியா கருத்தரிந்திருந்த போது குழந்தை பிறப்பிற்கு பின்னால் மீண்டும் சிக்கென்ற உடலை கொண்டு வந்து விடுவாய் என்றால் மட்டும் நீ குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றாராம் ட்ரம்ப். கண்டிப்பாக பழையபடி நான் உடலை கொண்டு வந்து விடுவேன் என்று உறுதியளித்த பின்னர் தான் கர்ப்பத்தை தொடர ஒப்புக் கொண்டாராம். கர்பத்தின் போது எந்த உதவியும் ட்ரம்ப் மெலானியாவிற்கு செய்யவில்லையாம்.

  Image Courtesy

  #3

  #3

  அதிபர் ட்ரம்ப் தன்னுடைய பெயரில் ட்ரம்ப் யுனிவர்சிட்டி என்ற பல்கலைக்கழகத்தை நடத்துகிறார். யுனிவர்சிட்டி என்ற பெயர் இருப்பதினால் இது கல்வி கற்றுக் கொடுக்கும் பல்கலைக்கழகம் என்று நினைத்துவிட வேண்டாம். இங்கே நிறைய செமினார்கள் எடுக்கப்படுகிறது எதைப்பற்றி தெரியுமா? ட்ரம்பை போல நீங்களும் எப்படி பணக்காரர் ஆகலாம் என்பதைப் பற்றி!

  ஆனால் நீங்கள் அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமிகுதியில் உள்ளே நுழைந்து விட்டால் பல்வேறு பேக்கேஜுகளைச் சொல்லி பணத்தை கறந்து விடுகிறார்கள். ஒரு செமினாரில் பங்கேற்க குறைந்தளவு கட்டணம் 35000 டாலர்.

  Image Courtesy

  #4

  #4

  2016 அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி க்ளிண்டனை தொடர்ந்து மெயில் ஊழல் குறித்து பேசினார். ஆனால் ட்ரம்ப் மற்றும் அவரது நிறுவனங்கள் எல்லாமே தானாகவே மெயில்களை எல்லாம் அழிக்கும் வண்ணம் உருவாக்கியிருக்கிறார்கள். எந்த வழக்குகளும் தனக்கு எதிராக நிற்கக்கூடாது என்பதற்காக இப்படி செய்திருக்கிறார். இதனால் வழக்கறிஞர்கள் ட்ரம்ப் குறித்த சாட்சிகளை திரட்ட மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள்.

  இதனை70களின் துவக்கத்திலேயே செய்ய ஆரம்பித்துவிட்டார் ட்ரம்ப்!

  Image Courtesy

  #5

  #5

  அதிபர் ட்ரம்புக்கு வழுக்கைத் தலை. அதை மறைப்பதற்காகத் தான் நீளமான முடியை வளர்த்து பின்னால் கவர் செய்திருக்கிறார். Fire and Fury: Inside Trump's White House என்ற புத்தகத்தில் அதிபர் ட்ரம்ப் முழுவதும் வழுக்கத்தைத் தலை கொண்டவர் என்றும் அதனை குறைக்க ஸ்க்ல்ப் ரிடக்‌ஷன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

  இந்த அறுவை சிகிச்சையின் விளைவாகத்தான் நீளமாக முடியை வளர்த்து பாதியை கவர் செய்யும் வண்ணம் ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்கிறார்கள். இதற்கு முன்னதாக முடி கொட்டாமல் இருக்க "finasteride" என்ற மருந்தை ட்ரம்ப் எடுத்திருக்கிறார்.

  இது நிறைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றாலும் முடியைக் காப்பாற்ற தொடர்ந்து எடுத்திருக்கிறார் ட்ரம்ப்

  Image Courtesy

  #6

  #6

  மகளைப் பற்றி அடிக்கடி தாறுமாறாக பேசி சிக்கிக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப் . மகள் இவான்காவிற்கு 1997 ஆம் ஆண்டு பதினாறு வயதான போது, என் மகள் பார்க்க ஹாட்டாக இருக்கிறாளா? அவள் ஹாட் தானே என்று கேட்டாராம்..... அதன் பிறகு இவான்கா voluptuous என்று சொல்லியிருக்கிறார். இதன் அர்த்தம் பெரிய மார்புகளும், இடுப்புப்பகுதியும் கொண்டவள் உடல் ரீதியாக உங்களை ஈர்க்கக்கூடியவள் என்று அர்த்தம்.

  இன்னொரு முறை பேசும் போது இவான்கா மட்டும் என் மகளாக இல்லையென்றால் நான் அவளை டேட் செய்திருப்பேன் என்றாராம்.

  Image Courtesy

  #7

  #7

  ட்ரம்ப் என்று சொன்னாலே எல்லாரும் அவர் மிகவும் பணக்காரர், கோடிஸ்வரர் என்ற பிம்பம் இருக்கிறது. இப்போது எப்படியோ ஆனால் 1980களில் அப்படியில்லை,ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வருடா வருடம் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும்.

  பணக்காரர்கள், பிஸ்னஸ்மேன்களுக்கு அந்த பட்டியலில் இடம்பெற பல்வேறு போட்டியே நிலவுகிறது இந்நிலையில் அந்த பட்டியலில் தானும் இடம் பெற வேண்டும் என்று நினைத்த ட்ரம்ப் போர்ப்ஸ் பத்திரிக்கை நிருபரிடம் தன் சொத்து மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல் என்று சொல்லியிருக்கிறார். அதை நம்பி ட்ரம்பின் பெயரை அந்த லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்கள். ஆனால் உண்மையில் அப்போது ட்ரம்பிடம் இருந்தது வெறும் 5 மில்லியன் டாலர் தானாம்!

  Image Courtesy

  #8

  #8

  எல்லாரும் தன்னுடைய மூன்று குழந்தைகளின் வளர்ச்சியிலும் ட்ரம்ப் முக்கியப் பங்காற்றியிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் ட்ரம்பின் முன்னால் மனைவி இவானா கூறுகையில் குழந்தை வளர்ப்பில் அவர் எந்த பங்கையும் வகிக்கவில்லை முழுவதும் நான் தான் குழந்தைகளை கவனித்துக்கொண்டேன். ட்ரம்பிற்கு குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும் என்று கூட தெரியாது.

  குழந்தைகள் கல்லூரி முடித்த பிறகு தான் தந்தையிடம் அதிகமாக ஒட்டிக் கொண்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

  Image Courtesy

  #9

  #9

  ட்ரம்ப் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். 1980 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் இருக்கக்கூடிய சென்ட்ரல் பார்க்கை பார்த்த படி பதினான்கு மாடி கட்டிடம் ஒன்றை வாங்க நினைத்தார் ட்ரம்ப். ஆனால் அந்த கட்டிடத்தில் வசித்த சில மக்கள் வீட்டை விட்டு வெளியேற மட்டோம் என்றும் தங்கள் சொத்தை ட்ரம்புக்கு எழுதித்தரமாட்டோம் என்றும் இழுத்தடித்தனர். இந்நிலையில் அவர்களை காலி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த கட்டிடத்திற்கு மட்டும் சுடுநீர் செல்வதை தடை செய்தார். அதோடு எலித்தொற்று ஏற்படுத்தவும் செய்தார்.

  Image Courtesy

  #10

  #10

  அதிபர் ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானது மெக்ஸிகோவிலிருந்து அகதிகளாக அதிகளவு மக்கள் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் நடுவில் சுவர் எழுப்புவேன் என்றார். அகதி மக்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசினார், மேலும் அகதிகள் எல்லாம் க்ரிமினல்கள் என்ற ரீதியிலும் பேசியிருக்கிறார்.

  அகதிகள் குறித்து இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்களை வைத்திருக்கும் ட்ரம்ப் 1980 ஆம் ஆண்டு தன்னுடைய ட்ரம்ப் டவரில் பாலிஷ் அகதிகளை வேலைக்கு அமர்த்தினார். அவர்களுக்கு பன்னிரெண்டு மணி நேர வேலை குறைவான சம்பளம் ஏன் சில மாதங்கள் சம்பளம் கூட இல்லாது வேலை வாங்கியிருக்கிறார்.

  Image Courtesy

  #11

  #11

  இவர் ஒரு தன்னார்வல தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் . ட்ரம்ப் பவுண்டேஷன் என்ற பெயரில் செயல்படும் அந்த அமைப்பைப் பற்றி கேள்விப்பட்டதும் எல்லாரும் பொதுக்காரியங்களுக்காக, ஏழை மக்களுக்காக தன்னுடைய வருமானத்திலிருந்து குறிப்பிட்ட சதவீதத்தை ட்ரம்ப் இதற்கு செலவிடுகிறார் என்று நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் ட்ரம்ப் இதற்காக எதுவும் செலவழிப்பதில்லை.

  ட்ரம்ப் ஃபவுண்டேசன் என்ற பெயரில் பிற மக்களிடம் பணத்தை வசூலித்து அதைத் தான் பிரித்து கொடுக்கிறார்கள்.

  Image Courtesy

  #12

  #12

  70களின் ஆரம்பப் பகுதியில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ட்ரம்ப் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. 2005 ஆம் ஆண்டு இது குறித்து ஒரு வீடியோவே வெளியானது. அதில் ட்ரம்ப் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டுவது அம்பலமானது. இவரின் முன்னால் மனைவி இவானா ஒரு முறை ட்ரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். ஆனால் சில காலங்களுக்குப் பிறகு தன்னுடைய புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார்.

  அலங்கார அணிவகுப்பு நடத்தும் ஜில் ஹராத் என்பவர் ட்ரம்ப்புக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுத்தார். டீன் பெண்களுக்கான அலங்கார அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு அழகி ட்ரம்ப் அரைகுறை ஆடையுடனோ அல்லது நிர்வாணமாகவோ தான் நடப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

  Image Courtesy

   #13

  #13

  ட்ரம்பின் நிறுவனங்கள் பல முறை திவாலாகியிருக்கின்றன 1991, 1992,2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ட்ரம்பின் நிறுவனங்கள் திவாலாகின. அப்படி கடைசியாக திவாலான போது தன்னுடைய பிஸ்னஸிலிருந்து அனைத்து விதமான உரிமைகளையும் இழந்தார். இருந்தும், திவாலான நிறுவனங்கள், பிறரிடம் விற்ற நிறுவனங்கள் எல்லாம் ட்ரம்ப் பெயரையே தொடர்ந்து பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் ட்ரம்ப் வெற்றிகரமான பிஸ்னஸ் மேனாக காட்சித் தருகிறார்.

  Image Courtesy

  #14

  #14

  தேர்தலில் எதிர் எதிர் அணியிலிருந்து போட்டியிட்டதால் ஹிலாரியும் ட்ரம்பும் எலியும் பூனையுமாக இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டால் அது தவறு. இருவருமே நெருங்கிய நண்பர்கள். ட்ரம்ப் மெலானியா திருமணத்திற்கு ஹிலாரி மற்றும் அவரது கணவர் க்ளிண்டனையும் அழைத்திருந்தார் ட்ரம்ப்.

  இவருடைய பிஸ்னஸ் எல்லாம் திவாலாகிவிட்ட நிலையில் அமெரிக்க வங்கிகள் எதுவுமே ட்ரம்பிற்கு கடன் கொடுக்க முன்வரவில்லை இந்நிலையில் தன்னுடைய பிஸ்னஸை மீண்டும் நிமிர்த்த ரஸ்யாவின் உதவியை நாடினார். அதைப் பயன்படுத்திக் கொண்ட ரஸ்ய அதிபர் அரசியல் ரீதியாகவும் பல சலுகைகளை பெற்றிருக்கலாம் என்று எண்ணப்பட்டு அது குறித்த விசாரணை நடைப்பெற்று வருகிறது.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Interesting Facts About American President Trump

  Interesting Facts About American President Trump
  Story first published: Wednesday, June 27, 2018, 16:39 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more