குடிக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க இவர்கள் செய்த பலே ஐடியா!

Subscribe to Boldsky

சமீபத்தில் வெளியான செய்தி கேரள மக்கள் மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

பள்ளி சேர்க்கை விண்ணப்பத்தில் தங்களுக்கு சாதி, மதம் இல்லை என சுமார் 1.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கேரள மாநில கல்வித்துறை மந்திரி சி. ரவீந்திரநாத் சமீபத்தில் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார். இதே போல சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி பல முன்னோடித் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி எடுத்துக்காட்டாக இருக்கிறது. நமக்கெல்லாம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொல்லி தொடர் போராட்டங்கள், மறியல்கள் எல்லாம் நடத்தி எக்கச்சக்க பிரச்சனைகளை சந்திக்கிறோம்.

Inspiring Story Of Kerala Village Which Eradicate liquor Drinking

Image Courtesy

ஆனால் சத்தமேயில்லாமல் அதனையும் மாற்றி காண்பித்திருக்கிறார்கள் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புத்தூர் பஞ்சாயத்தின் கீழ் இருக்கிற மரோடிச்சல் என்ற கிராமம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உன்னி கிருஷ்ணன் :

உன்னி கிருஷ்ணன் :

மரோடிச்சல் கிராமத்திற்கு சென்று உன்னிகிருஷ்ணன் என்று பெயரைக் கேட்டால் சிறிது நேரம் யோசிக்கிறார்கள். எந்த உன்னிகிருஷ்ணன் என்ற சந்தேகத்தில் பதிலே சொல்லாமல் தவிர்க்கிறார்கள். ஆனால் செஸ் உன்னிகிருஷ்ணன் என்று சொன்னால் உடனேயே உற்சாகம் பொங்க அவர் இருக்கும் இடத்திற்கு அடையாளம் சொல்லி அனுப்புகிறார்கள்.

இன்னும் சிலரோ கூடவே வந்து அவரிடம் அறிமுகப்படுத்தி விட்டும் செல்கிறார்கள்.

Image Courtesy

அடையாளம் :

அடையாளம் :

பின்ன... இந்த கிராமத்திற்கே புது அடையாளம் தந்தவராயிற்றே, மக்களுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? எல்லாரும் அவரை உரிமையாக மாமன் என்று தான் அழைக்கிறார்கள்.

எந்த நேரத்திற்கு அவரைப் பார்க்க சென்றாலும் உங்களை சாப்பிட விடாமல் அனுப்ப மாட்டார் அந்த அளவிற்கு பாசம். அதே நேரத்தில் இன்னொரு கேள்வியையும் கேட்டுவிடுவார்.

Image Courtesy

செஸ் :

செஸ் :

செஸ் விளையாட்டில் ஆர்வம் உண்டா ? என்பது தான். செஸ் விளையாட்டு கற்றுக் கொடுக்க சொல்லியோ அல்லது விளையாட்டில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் செஸ் உன்னி கிருஷ்ணனை நீங்கள் அணுகலாம்.

அந்த கிராமத்திலிருந்து முதன் முதலில் செஸ் கற்றுக் கொண்டது, விளையாடியது இந்த உன்னி கிருஷ்ணன் தான்.

Image Courtesy

 பாபி ஃபிஷ்சர் :

பாபி ஃபிஷ்சர் :

அப்போது உன்னிகிருஷ்ணனுக்கு பதினாறு வயதிருக்கும் போது செய்திகளில் பரபரப்பாக பாபி ஃபிஷ்சர் பெயர் அடிபடிகிறது. தொடர்ந்து தேடும் போது அவர் செஸ் போட்டியின் கிராண்ட் மாஸ்டர் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.

தொடர்ந்து அந்த விளையாட்டின் மீது உன்னிக்கு ஆர்வம் மேலோங்குகிறது. தொடர்ந்து தானும் செஸ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்.

Image Courtesy

சதுரங்கம் :

சதுரங்கம் :

தன் ஊரிலிருந்து பக்கத்தில் இருக்கும் டவுன் பகுதிக்குச் சென்று இதனை கற்றுக் கொள்கிறார். தீடிரென்று எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்கையில், பள்ளிக்காலத்திலிருந்து மற்ற சிறுவர்களைப் போல எனக்கும் ஓடியாடி விளையாட தான் விருப்பம். ஆனால் நாங்கள் வசிப்பது மிகச்சிறிய கிராமம். இங்கே குழந்தைகள் விளையாட பெரிய மைதானம் எல்லாம் ஒன்றுமே இருக்காது.

Image Courtesy

இது தான் என் மைதானம் :

இது தான் என் மைதானம் :

அதோடு எல்லா இடங்களிலும் ரப்பர் மரங்களே நிறைந்திருக்கும். மரத்திற்குள் புகுந்து புகுந்து தான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டியதாய் இருக்கும் . இந்த சூழ்நிலையில் எப்படி விளையாடுவது. அந்த எரிச்சலோ என்னவோ செஸ் விளையாட்டை தேர்ந்தெடுக்க வைத்தது. இதை விளையாட மிகப்பெரிய இடமோ அல்லது பெரிய பட்டாளமோ தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் நீங்கள் உட்கார்ந்து விளையாடலாம்.

நீங்களும் உங்களுக்கு போட்டியாக விளையாட இன்னொருவரும் இருந்தால் போதுமானது. அதுவே உங்கள் மைதானமாக மாறிடும்.

Image Courtesy

போதை :

போதை :

1970 மற்றும் 80களில் இந்த கிராமத்து ஆண்களின் பிரதான தொழிலே சாராயம் காய்ச்சுவது தான். அதனாலேயே பலரும் குடிக்கு அடிமையாகி இருந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக குடி போதைக்கு அடிமையானவர்களினால் கிராமத்தில், குடும்பத்தில் பல இடைஞ்சல்கள் வர ஆரம்பித்தன.

Image Courtesy

முடிவு :

முடிவு :

அப்போது நானும் என்னுடன் சேர்ந்து சில நண்பர்களும் ஒரு முடிவுக்கு வந்தோம். எங்கள் கிராமத்தை காப்பாற்ற வேண்டுமென்று சொன்னால் முதலில் இவர்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும். பின்னர் மொத்தமாக இந்த மதுவை ஒழிக்க வேண்டும் என்று சபதமெடுத்தோம்.

என்ன செய்யலாம்.... என்று எல்லாரும் சேர்ந்து விவாதித்தோம்.

Image Courtesy

அமைப்பு :

அமைப்பு :

நாங்கள் மத்ய நிரோதனா சமிதி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி பல குடும்பங்களை சீரழித்து வரும் சாராயம் காய்ச்சுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தோம்.

பெண்களிடமிருந்து பயங்கர வரவேற்பு. பெண்கள் இதனை முழு மனதாக வரவேற்றார்கள்.

Image Courtesy

 அரசாங்கத்தில் புகார் :

அரசாங்கத்தில் புகார் :

அந்த நேரத்தில் அரசாங்கமும் அதை தடை செய்திருந்தது. ஆனாலும் ஆண்கள் சிலர் சட்டத்திற்கு புறம்பாக சாராயம் காய்ச்சினார்கள். பெண்கள் எங்களிடம் வந்து தங்கள் வீட்டு ஆண் யாருக்கும் தெரியாமல் இப்படி சாராயம் காய்ச்சுகிறார் என்று சொல்வார்கள்.

நாங்கள் அதிகாரிகள் துணையுடன் மீட்டு வருவோம்.

Image Courtesy

செஸ் அறிமுகம் :

செஸ் அறிமுகம் :

விசாரணைக்கு காத்திருக்கும் போது அதிகாரிகளின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்திலும், வேறு தொழிலுக்கும் செல்லாமல் தொடர்ந்து குடித்து குடி போதைக்கு அடிமையான நபர்களிடம் யதார்த்தமாக தனக்குத் தெரிந்த செஸ் விளையாட்டினை கற்றுக் கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் குருட்டாம் போக்காக விளையாடியவர்கள் மெல்ல மெல்ல இந்த விளையாட்டினை கற்றுக் கொண்டார்கள்.

Image Courtesy

கவனம் :

கவனம் :

பார்க்க எளிமையாக தோன்றினாலும் இந்த விளையாட்டில் கவனம் மிகவும் அவசியம். கவனத்தை சிதறவிடாமல் ஒவ்வொரு காய்களின் குணாதிசயங்களை கணக்கிட்டு காய்களை நகர்த்த வேண்டும். அதோடு எதிர் தரப்பிலிருந்து எப்படி காய் நகர்த்தல்கள் வருகிற என்பதையும் அவதனாதித்து அதற்கேற்ப நம் வெற்றிப் பாதையை மேம்படுத்த வேண்டும்.

Image Courtesy

எங்கும் செஸ் :

எங்கும் செஸ் :

மெல்ல மெல்ல இந்த விளையாட்டு பரவ ஆரம்பிக்கிறது. நாலாபுறங்களில் கூட்டாக உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மாறி நாலாபுறத்தில் உட்கார்ந்து செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பகல் இரவு தெரியாமல் விடிய விடிய விளையாட ஆரம்பித்தார்கள்.

Image Courtesy

மது அழிப்பு :

மது அழிப்பு :

கிராமத்தில் மது குடிக்கும் பழக்கம் குறையத் துவங்கியது, மக்கள் கூறுகையில் நாங்கள் யாருமே மதுவை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அல்லது மதுவை மறக்க செஸ் என்று அதை நாடவில்லை. இது யதார்த்தமாக நடந்து. எங்கள் கவனம் முழுவதும் செஸ் பக்கம் செல்ல மது மீதான ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கியது.

எங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த மதுவை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம் என்கிறார்கள்.

Image Courtesy

கணக்கெடுப்பு :

கணக்கெடுப்பு :

கடந்த வருடம் அங்கே ஓர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மரோட்டிசல் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலிருந்து ஒரு செஸ் ப்ளேயர் இருக்கிறார்களாம்.

2016 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரேயிடத்தில் கூடி செஸ் போட்டி நடத்தி ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை படைத்தனர்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Inspiring Story Of Kerala Village Which Eradicate liquor Drinking

  Inspiring Story Of Kerala Village Which Eradicate liquor Drinking
  Story first published: Saturday, March 31, 2018, 15:50 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more