For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  குண்டடி பட்ட விளையாட்டு வீரர் இந்திய அணிக்கு சேர்த்த பெருமை!

  |

  நேற்றைய தினம் சூர்மா என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது, ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் இந்திய ஹாக்கி வீரரான சந்தீப் சிங்கைப் பற்றிய படம்!

  இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக 2012 ஒலிம்பிக்கிற்கு அழைத்துச் சென்ற சந்தீப்பின் வாழ்க்கை ரோலர் கோஸ்டர் என்பதற்கு சரியான உதாரணம் என்று தான் சொல்ல வேண்டும். 2004 ஆம் ஆண்டு சர்வதேச ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கிறார். ஹாக்கியின் முடிசூடா மன்னனாக உச்சத்தில் இருந்தார் சந்தீப் . எதிரிணியினரை போக்கு காட்டி நொடிப்பொழுதில் பந்தை திசைத் திருப்புவதில் வல்லவர் சந்தீப். அந்த வேகத்தை ஹாக்கியில் ட்ராக் ஃப்ளிக் என்பார்கள். அந்த வேகம் சந்தீப்பிற்கு மணிக்கு 145கி.மீ என்று கணக்கிட்டார்கள். உலகிலேயே அதி வேகமான ஃப்ளிக் ஸ்பீடு இது தான்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   #1

  #1

  2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி சப்தபதி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார் சந்தீப் சிங். தேசிய ஹாக்கி அணியினருடன் சேர்ந்து ஜெர்மனியில் நடக்கிற உலககோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார்.

  அப்போது துப்பாக்கியால் சுடப்படுகிறது இதில் சந்தீப்பின் உடலிலும் குண்டு பாய்ந்து விடுகிறது.

  Image Courtesy

  #2

  #2

  உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சந்தீப். விதி விளையாடியது சந்தீப்பால் இனி விளையாட முடியாது ஏன் நிற்க கூட முடியாது. முழு உடலும் பக்கவாதம் ஏற்பட்டு உணர்ச்சியின்றி மாறிவிட்டது.

  படுக்கையில் வீழ்ந்தார் சந்தீப். உலகமே சந்தீப்பை நினைத்து வருந்தியது இனி அவ்வளவு தான் சந்தீப்பின் ஹாக்கி கனவு எல்லாம் தகர்ந்தது என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக எல்லாரும் சந்தீப்பை மறக்க ஆரம்பித்திருந்தார்கள்.

   #3

  #3

  விபத்து ஏற்பட்டதிலிருந்து சரியாக இரண்டு வருடம்.... மீண்டும் வந்தார். சந்தீப்பால் நடக்க முடியாமா? மைதானத்திற்கு எல்லாம் வருகிறாரா.... வீல் சேரில் வந்திருப்பார்.... என்று பல பேச்சுக்களுடன் நீண்ட நாள் கழித்து புயல் வேக ஹாக்கி வீரரைப் பார்க்க ரசிகர்கள் கூடினார்கள். ஆனால் சந்தீப் கிரவுண்டுக்கு வேடிக்கை பார்க்க வரவில்லை

  ஹாக்கி ஸ்டிக்குடன் வீரர்களுடன் ஒருவராய் களமிறங்கியிருந்தார்.

  #4

  #4

  இனி நிற்கவே முடியாது என்று சொல்லப்பட்ட ஒருவர் மீண்டும் ஹாக்கி விளையாட வந்திருக்கிறார் என்றால் அதற்கு சந்தீப் சந்தித்த வலியும் வேதனையும் கொஞ்ச நஞ்சமல்ல... ஹாக்கி ஸ்டிக்கை மீண்டும் பிடிக்கவேண்டும் நான் மறுபடியும் கிரவுண்டில் விளையாட வேண்டும் என்ற ஒரேயொரு எண்ணத்தை மட்டும் மனதில் நிறுத்தி கடுமையாக போராடியிருக்கிறார்.

  அந்த போராட்டத்தின் முடிவாக ஹாக்கி விளையாட வந்துவிட்டார். மீண்டும் நான் விளையாட வந்துவிட்டேன் என்பதோடு நில்லாமல் கடுமையாக பயிற்சி எடுத்தார் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பினார் சந்தீப்.

  #5

  #5

  இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். எட்டு வருடங்கள் கழித்து 2012 ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தகுதிப் பெற்று சந்தீப் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி உள்ளே நுழைந்தது.

  ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சந்தீப் சிங். விடாமுயற்சியுடனான போராட்டம் கண்டிப்பாக நமக்கு வெற்றியைத் தரும் என்பதற்கு மேலும் சில உதாரணங்கள்.

  Image Courtesy

  #6

  #6

  பள்ளியில் நடந்த ஒரு தீவிபத்தில் அந்தச் சிறுவனுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்படுகிறது. இடுப்புக்கு கீழே மோசமான காயங்களுடன் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஒரு வழியாக உயிர் பிழைத்தாலும் இவனால் நடக்க முடியாது. கடுமையாக பாதிக்கப்பட்ட கால் இருந்தும் எந்த பயனும் இல்லை அதில் உணர்ச்சியிருக்காது என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

  வீல்சேரிலேயே அவனின் வாழ்க்கை முடங்கிப் போகும் என்று நினைத்தவர்கள் மத்தியில் ஓட்டப்பந்தய வீரனாக மாறிக்காட்டினான் அந்த சிறுவன்.

  Image Courtesy

   #7

  #7

  வீல் சேரில் உட்கார்ந்திருப்பான், திடீரென்று அவனாகவே வேண்டுமென்று தரையில் விழுந்து உடலை தேய்த்து தேய்த்து நகர்ந்து செல்வான், எதையாவது பிடித்து நிற்க முயற்சிப்பான், குதிப்பான், நடுங்கும் காலோடு சுவற்றைப் பிடித்துக் கொண்டு இரண்டு அடி எடுத்து வைப்பான் கீழே விழுவான் மீண்டும் எழுந்து இரண்டு அடி எட்டு வைப்பான்.

  ஒரு கட்டத்தில் என்னால் நடக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது, சில மாத பயிற்சிக்குப் பின்னர் இரண்டடியில் விழுந்தவன் சுவற்றை பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் நிற்க முடிந்தது. அதோடு சில அடி தூரம் நடக்க முடிந்தது...

  Image Courtesy

  #8

  #8

  சில வருடங்களில் எந்த பிடிமானமும் இன்றி தானாகவே நடக்க ஆரம்பித்தான் அந்த சிறுவன், பின் வழக்கமான பிற சிறுவர்களைப் போல பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான்.

  காலுக்கு தொடர்ந்து அவன் கொடுத்த பயிற்சி அவனை சும்மா உட்காரவிடவில்லை. அதனால் பள்ளியில் ஓட்டப்பந்தய வீரனாக பயிற்சி எடுத்தான். கல்லூரியில் ஒரு ட்ராக் டீமையே உருவாக்கினான் அந்த சிறுவன்.

  இந்த சிறுவன் தான் அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் க்ளென் குன்னிங்ஹாம்.

  Image Courtesy

  #9

  #9

  2009 ஆம் ஆண்டு மத்தியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்த அந்த நபரை யாரும் வேலை எடுத்துக் கொள்ளவில்லை. பல்வேறு நிறுவங்களில் நேர்காணலுக்கு அழைத்தும் திறமையில்லை என்று சொல்லி நிராகரித்தார்கள்.

  ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன அந்த நபர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்கிறார். அதன்படி க்ளவுட் பேஸ்டு மெசேஜிங்காக அல்லாது உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் தொடர்பு கொள்ள வசதியானதாக ஒரு தளத்தை கட்டமைக்க நினைக்கிறார். உழைப்பின் பலனாய் வந்து நின்றது வாட்சப். இதனை உருவாக்கியவரும் திறமையில்லை என்று நிராகரிக்கப்பட்டவருமான பிரயன் ஆக்டன் தன்னுடைய ப்ராஜெக்ட்டினை 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக்கிடம் 19 பில்லியன் டாலர்களுக்கு கொடுத்து விட்டார்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Inspiring Real Life Story Of Sandeep Singh

  Inspiring Real Life Story Of Sandeep Singh
  Story first published: Thursday, June 14, 2018, 14:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more