Latest Updates
-
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
பில்லி சூன்யத்தில் பயன்படுத்தப்படும் வசிய மருந்து எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
பில்லி சூன்யம் போன்ற விஷயங்களில் பயன்படுத்தப்படும் வசிய மை எப்படி தயாரிப்பது என்பது பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.
வசியம் என்பது பல வகைப்படும். முக வசியம், பில்லி சூன்யம், மருந்து வசியம், சாப்பிடுகின்ற சாப்பாட்டில் வசிய மை வைத்துக் கொடுப்பதுஎன வகைகள் உண்டு.

இந்த வசியத்துடைய மிக முக்கியமான விஷயமே இதில் பயன்படுத்தப்படுகிற மை தான். இந்த மைக்கு தான் அதிக வலிமை இருப்பதாக நம்பப்படுகிறது.

சித்தர்கள்
இந்த வசிய மருந்தை எப்படித் தயாரிப்பது என்பது பற்றி நம்முடைய சித்தர்கள் பலரும் தங்களுடைய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். முற்காலத்தில் வசிய மை என்பது கொல்லிமலையில் கிடைக்கும் சில அரிய வகை மூலிகைகள் மற்றும் அரச மர, ஆல மர ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி, செய்து வந்தனர். இந்த இலை, தழைகளை வைத்து சில மந்திரங்களைச் சொல்லி, வசிய மை செய்து வந்தனர். அந்த முறையைப் பற்றி இங்கே காணலாம்.

வசிய மை செய்வது எப்படி
தேவையான பொருள்கள்
வெள்ளை காக்கரட்டை வேர்
வெள்ளெருக்கன் வேர்
வெண் குன்றிவேர்
வெள்ளை விஷ்ணு
காந்திவேர்
வெண்கொழிஞ்சி வேர்
ஆனைவணங்கி வேர்

செய்முறை
மேற்கண்ட பொருள்களை வெள்ளை காட்டன் துணியில் காப்பு கட்டி சாபம் போக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வேர்கள் அனைத்தும் எடுப்பது முக்கியமல்ல. இவற்றில் ஆணிவேர் அந்து போகாமல் வெட்டி எடுக்க வேண்டும்.
இந்த வேர்களை தீயில் கறுக்கி எடுத்துக் கொண்டு, பச்சைக் கற்பூரம், புனுகு, கொரோசனம், குங்குமப்பூ மற்றும் கஸ்தூரி ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் ஒரு குன்றிமணி எடை வீதம் எடுத்துக் கொண்டு, கறுக்கிய வேர்களுடன் சேர்த்து, காரம்பசு நெய் சேர்த்து, இரண்டு ஜாமங்கள் வரை விடாமல் நன்கு அரைத்தெடுக்க வேண்டும். அப்படி அரைத்த மையை கொம்பு சிமிழிக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம்
அரைத்து வைத்த மைக்கு முழு சக்தியும் வர வைப்பது என்பது தான் மிக முக்கியமான கட்டம். அது அவ்வளவு எளிதான காரியமெல்லாம் இல்லை. அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன.
"ஓம் க்லீம் ஸௌம் ஹீம் நமோ பகவதி
ராஜமோகினி க்லீம் க்லீம் சகல
ஸ்தாவார ஜங்கமம் மமவசம்
ஆக்ரஷ்ய ஆக்ரஷ்ய ஸ்வாஹா"
என்னும் மந்திரத்தை 19 நாட்களுக்குத் தொடந்து பாராயணம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 1008 முறை வீதம் இதை பாராயணம் செய்ய வேண்டும். அப்போது தான் இந்த மைக்கு சக்தி உண்டாகும்.

நன்மைகள்
இப்படி மைக்கு சக்தி ஏற்றிய பின்பு, இதிலிருநு்து கொஞ்சம் எடுத்து நெற்றியில் பொட்டு போல வைத்துக் கொண்டால், உங்களுக்கு பகைவர் என்று யாருமே இருக்க மாட்டார்கள். உங்களுடைய எதிரிகளுக்கும் உங்கள் மீது மரியாதை அதிகமாகி கையெடுத்து கும்பிட ஆரம்பித்து விடுவார்கள். எதிரிகள் கூட நண்பர்குளாக மாறிவிடுவார்கள். பெண்களும் இந்த மையை நெற்றியில் அணியலாம். அதே சக்தி அவர்களுக்கும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications