For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உப்புச் சத்தியாகிரகத்தின் போது நடந்த சில சுவாரஸ்யத் தகவல்கள்!

  |

  இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரிய மைல் கல்லாக பார்க்கப்படுவது காந்தி ஆரம்பித்து உப்புச் சத்தியா கிரகம் போராட்டம் தான். 1930 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஆரம்பித்த இந்த போராட்டம் 24 நாட்கள் கடந்து இதே நாள் 1930 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 240 மைல் தொலைவு சுமார் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக சென்றார்கள்.

  அஹமதாபாத்தில் இருக்கக்கூடிய சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டியில் இருக்கக்கூடிய அரபிக் கடல் வரை ஊர்வலம் நடைப்பெற்றது. ஏப்ரல் ஆறாம் தேதி அதிகாலை தண்டியை வந்தடைந்த காந்தி அங்கிருந்த உப்பை எடுத்து உயர்த்திப் பிடித்தார்.

  உப்புச் சத்தியாகிரகம் போராட்டத்தின் போது நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றி பார்க்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  உப்பு உற்பத்தி :

  உப்பு உற்பத்தி :

  1882 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கமே உப்பு தயாரித்து விற்க ஆரம்பித்தது. உப்பு தனிநபர்கள் விற்கக்கூடாது, அதை அரசாங்கத்திடமிருந்து தான் வாங்க வேண்டும் என்று கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

  உப்பு வீட்டில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி குற்றம் என்றும் தண்டனைகள் வழங்கப்பட்டன.

  Image Courtesy

   முக்கியமான சத்து :

  முக்கியமான சத்து :

  இந்தியர்களைப் பொருத்தவரையில் அப்போது அவர்களுக்கு கிடைத்த ஒரே சோடியம் க்ளோரைடு உப்பு தான். பணக்காரர்கள் முதல் ஏழை வரை அன்றாட உணவில் உப்பு மிகவும் அத்தியாவசியமாக இருந்தது.

  இந்த உப்புச் சத்து இயற்கையாக வேறு எந்த உணவுப்பொருட்களிலும் இருக்காது என்பதாலும் அதே நேரத்தில் அதிக தேவை இருந்ததாலும் உப்பு அப்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.

  இதைத் தவிர வேண்டுதலுக்கு, மருத்துவத்திற்கு,உணவைப் பதப்படுத்த என பல வகையில் அவசியமாக இருந்திருக்கிறது.

  Image Courtesy

  வரி :

  வரி :

  மக்களிடம் தேவை இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஆங்கில அரசாங்கம் உப்பிற்கும் வரி விதித்தது. அப்போது மதுவிற்கும் உப்பிற்கும் ஒரே வரி விதிக்கப்பட்டிருந்தது. உப்பு உணவில் அடிப்படியாக சேர்க்கக்கூடிய ஒரு விஷயம் அதற்கு எப்படி வரி விதிக்கலாம்? அதுவும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிற மதுவிற்கும் உப்பிற்கும் எப்படி ஒரே வரியை விதிக்க முடியும் என்று மக்கள் கிளிர்ந்தெழ ஆரம்பித்தார்கள்.

  Image Courtesy

  எச்சரிக்கை கடிதம் :

  எச்சரிக்கை கடிதம் :

  மார்ச் 2,1930 ஆம் ஆண்டு காந்தி அப்போது வைசிராயாக இருந்த இர்வின் பிரபுவுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார். அன்புள்ள நண்பரே என்று ஆரம்பித்திருந்த அந்த கடிதத்தில் உப்பு தங்களுக்கு எந்த அளவிற்கு அவசியம். இதுவரை ஆங்கிலேயே அரசு செய்த கொடுமைகளை பொறுத்தக் கொண்டது போல இதனை ஏன் பொறுத்துக் கொள்ள முடியாது என்று நீண்ட விளக்கத்தினை எழுதுகிறார்.

  இந்த வரி விதிப்பை திரும்ப பெறவில்லையானால் மிகப்பெரிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம் என்றும் இறுதியில் சொல்லுகிறார்.

  Image Courtesy

  பதில் கடிதம் :

  பதில் கடிதம் :

  காந்திக்கு இர்வின் பிரபுவிடமிருந்து பதில் கடிதம் வருகிறது ஆனால் உப்பு வரியை குறைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அதாவது வரி விதிப்பை குறைக்க முடியாது என்று சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

  காந்தி போராட்டம் நடத்த தயாரானார்.

  Image Courtesy

  வழித்தடம் :

  வழித்தடம் :

  சபர்மதியில் ஆரம்பித்து எதுவரையில் இந்த போராட்டம் கொண்டு செல்வது என்பதில் விவாதங்கள் நடந்தது. என்ன நடந்தாலும் இந்தப் போராட்டத்தை அஹிம்சை வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றே காந்தி விரும்பினார். இந்த ஊர்வலம் செல்லும் ஊர்கள் குறித்தும் வழியில் இருக்கக்கூடிய கிராமங்கள் குறித்தும் திட்டமிடப்படுகிறது.

  Image Courtesy

   நீர்த்துப் போகும் :

  நீர்த்துப் போகும் :

  செல்லக்கூடிய கிராமங்களில் எல்லாம் தீண்டாமை,குழந்தை திருமணம், சுகாதாரம்,மது ஒழிப்பு ஆகியவை குறித்தெல்லாம் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்படுகிறது.

  இது குறித்து ஆங்கிலேய அரிசின் கவனித்திற்கு வருகிறது. காந்தியும் அவரது ஆதரவாளர்கள் ஒரு நூறு பேரும் இணைந்து கிராமம் கிராமமாக ஊர்வலம் செல்லவிருக்கிறார்கள் என்று மிகச் சாதரணமாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.மேலும் இந்த போராட்டம் நீர்த்துப் போய்விடும் என்றும் நினைத்தார்கள்.

  Image Courtesy

  உப்புச் சத்தியாகிரகம் :

  உப்புச் சத்தியாகிரகம் :

  1930 ஆம் ஆண்டு மார்ச் 30 அதிகாலை 6.30 மணிக்கு சபர்மதி ஆசிரமத்திலிருந்து 61வயது காந்தி வெளியேறுகிறார். அவருடன் சுமார் எழுபதுக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள்.

  உப்பு வரியை திரும்ப பெறும் வரை போராடுவோம். வீடுகளுக்கு திரும்ப மாட்டோம் என்று சபதமேற்கிறார்கள்.

  Image Courtesy

  பயணத்திட்டங்கள் :

  பயணத்திட்டங்கள் :

  எல்லாரிடமும் ஒரு பை இருந்தது. அதில் மாற்றுத் துணியும்,ஒரு பத்திரிகையும்,தண்ணீர் குடுவை நூல் கோர்க்க உதவுகிற ஒரு ஊசியும் இருந்தது. காந்தி ஊன்றி நடக்க மூங்கில் குச்சி ஒன்றை வைத்திருந்தார்.

  இவர்கள் வருவதற்கு முன்னதாக வழியமைப்பது அவர்கள் தங்க,சாப்பிட ஏற்பாடுகளைச் செய்ய என ஒரு கூட்டம் முன்னால் சென்று ஏற்பாடுகளை செய்தது. ஒரு நாளைக்கு பதினைந்து கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்று திட்டமிட்டு பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

  Image Courtesy

  மாணவர்களே! :

  மாணவர்களே! :

  நடக்க ஆரம்பித்தார்கள். 70 பேராக இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் துவங்கியது. கிளம்பிய வேகத்தில் நீர்த்துப் போகும் என்று நினைத்திருந்த ஆங்கிலேய அரசுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக விடிந்தது.

  காந்தியை கைது செய்யலாம் என்று திட்டமிட்டார்கள் ஆனால் அது இந்திய அளவில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும் என்பதால் விட்டுவிட்டார்கள்.

  ஆங்கிலேய அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கும் விதமாக.... காந்தி அனைவரையும் இந்த போராட்டத்தில் பங்கேற்க அழைத்தார்.

  Image Courtesy

  பதவிகளை தூக்கியெறியுங்கள் :

  பதவிகளை தூக்கியெறியுங்கள் :

  குறிப்பாக மாணவர்கள், கல்வி கூடங்களுக்குச் செல்லாமல் வீதிக்கு வாருங்கள் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று அழைத்தார் அங்கே ஆங்கிலேயே அரசாங்கத்திடம் பணியாற்றிய இந்தியர்களை எல்லாம் எதிர்ப்பு காட்டும் விதமாக உங்கள் பதவிகளை ராஜினாமா செய்திடுங்கள் என்றார்.

  ஒரு பக்கம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் பத்திரிகைகளில் எழுதுவது, கிராமங்கள் தோறும் தகவல்களை சேகரிப்பது என பணியாற்றிக் கொண்டிருந்தார் காந்தி. போராட்டம் குறித்த தகவல்களை நாளாபுறமும் பரவச் செய்தார்.

  ஏப்ரல் 6ஆம் தேதி அதிகாலை தண்டியை வந்தடைந்தார்கள். அரபிய கடல் அருகே மணலில் இருந்த உப்பை ஒரு கைப்பிடி எடுத்து வெற்றி என்று கூக்குரலிட்டார்கள்.

  Image Courtesy

   புறக்கணிப்பு :

  புறக்கணிப்பு :

  இதோடு நம் போராட்டம் முடியவில்லை அரசாங்கத்தின் உப்பு வரியை புறக்கணிக்க வேண்டும். நாமே உப்பு காய்ச்சலாம் என்று சொன்னார். இந்தியா முழுவதும் 100 இடங்களில் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறி உப்பு காய்ச்சினார்கள்.

  பிற மக்களும் அவர்களிடம் வாங்கினார்கள்.கூடவே பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராகவும் கதர் ஆடைகளை அணிய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆங்காங்கே மக்கள் வன்முறையிலும் ஈடுபட்டார்கள். சட்டதை மீறியதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார்கள்.

  Image Courtesy

  தர்ஷனா :

  தர்ஷனா :

  மே 4 , 1930ல் போரட்டம் தீவிரமடைந்திருந்த நேரத்தில் வைசிராய் இர்வின் பிரபுக்கு இன்னொரு கடிதம் அனுப்புகிறார் காந்தி. அதில் தர்ஷனாவில் உற்பத்தி செய்து வைத்திருக்கக்கூடிய உப்பை தன்னுடைய ஆதரவாளர்கள் கைப்பற்றப்போகிறார்கள் என்று சொல்கிறார்.

  மறுநாள் அதிகாலையே காந்தி கைது செய்யப்படுகிறார்.

  Image Courtesy

  தாக்குதல் :

  தாக்குதல் :

  காந்தி இல்லையென்றாலும் மே21 ஆம் தேதி திட்டமிட்டபடி சுமார் 2500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தர்ஷனாவில் நுழைந்தார்கள். ஏற்கனவே தகவல் தெரிந்திருந்ததால் அங்கு குவிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் போலீசார் உப்பு கைப்பற்ற வந்தவர்களை கடுமையாக தாக்கினர்.

  ஆங்கிலேய அரசின் இந்த கொடூர அராஜகம் மிகப்பெரிய தலைப்புச் செய்தி ஆகியது.

  Image Courtesy

  1000 பேர் பலி :

  1000 பேர் பலி :

  ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். மிகத் தீவிரமாக உப்புச் சத்தியாகிரகத்தை நடத்தினர்.

  ஆங்கிலேய அரசு கைது செய்தாலும் அடித்து துன்புறுத்தினாலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை பின்வாங்குவதில்லை என்ற முடிவில் இருந்தார்கள்.

  1930 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் 90,000 பேர் வரையில் கைது செய்யப்பட்டிருந்தார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

  Image Courtesy

   இறங்கி வந்த இர்வின் :

  இறங்கி வந்த இர்வின் :

  விவகாரம் பெரிதாகிக் கொண்டே சென்றது தவிர நிறுத்தும் வழியில்லை. வரி விதிப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்த ஆங்கிலேய அரசு காந்தியிடம் அமைதிப் பேச்சு வார்த்தைக்குச் சென்றது.

  இர்வின் பிரபு சிறையிலிருந்த காந்தியை விடுதலை செய்து போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். காந்தி சில கோரிக்கைகளை முன் வைத்தார். அதை இர்வின் பிரபு ஒப்புக் கொள்ள ஜனவரி 26,1931 ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரகம் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  History of Salt March

  History of Salt March
  Story first published: Friday, April 6, 2018, 10:53 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more