Latest Updates
-
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
வழுக்கை விழுவதற்கும் உங்கள் ஜாதகத்துக்கும் தொடர்பு உண்டா? என்ன பரிகாரம்?
இங்கே உங்களுடைய ராசிக்கு உரிய முடி கொட்டும் பிரச்னையும் அதற்குரிய தீர்வுகளும் ஆராயப்பட்டுள்ளன.
வேத விஞ்ஞானத்தின் படி சூரியன் சந்திரன் உட்பட ஒவ்வொரு கிரகமும் கடவுளின் ஆணைப்படி மனித வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் நவகிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நவகிரகங்கள் நம் சக்தி ஓட்டத்திலும், அதிர்வுகளிலும் கூட ஆதிக்கம் செலுத்துகின்றன. சூரியன் சந்திரன் உட்பட்ட ஒன்பது கிரகங்கள் நம் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதோடு அவற்றின் ஆழமான தாக்கத்தை நம் உடல், மனம் மற்றும் ஆத்மா மீது ஏற்படுத்துகின்றன.

கிரகங்களும் அவற்றின் ஆதிக்கமும்
புதனும் சுக்கிரனும் குறிப்பாக ஒருவரின் காதல், அழகு, மற்றும் ஆற்றலை பிரதிபலிக்கின்றன. நாம் மற்றவரோடு பழகுவது, நம் பழக்கவழக்கங்கள், ஆளுமை, உடல் மொழி போன்றவற்றையும் நவகிரகங்களே நிர்ணயிக்கின்றன என்பதை அறிவோம். ஆனால் நம் கூந்தல் வளர்ச்சிக்குக் கூட புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன் போன்றோர் காரணமாகின்றனர் தெரியுமா?

ஜோதிடமும் கிரகங்களும்
நம் உடலின் ஒவ்வொரு பகுதியும் கிரகங்களை மிகவும் ஆழமாக பிரதிபலிக்கின்றன. இந்த கிரகங்கள் பலவீனமாக இருந்தால் அது கூந்தல் வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஜோதிடம் அதிகப்படியான முடி இழப்பு, வழுக்கை, உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி ஆகியவற்றுக்கு கிரகங்களின் பாதிப்பே காரணம் என்கிறது.

கிரகங்களும் தலை முடியும்
உடல்நல வல்லுநர்கள் சரிவிகித உணவு எடுத்துக்கொள்ளுதல், தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், தயிர் மற்றும் யோகர்ட், தேங்காய் எண்ணெய் கொண்டு தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து பராமரித்தல் போன்றவற்றை பரிந்துரைத்தாலும், முடி பாதிப்பிற்கான காரணத்தை அறிந்து ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொள்ள ஜோதிடம் உதவுகிறது.

தீர்வுகள்
இங்கே உள்ள படங்களின் தொகுப்பு முடி பிரச்சனைக்கான காரணங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும் உங்களுக்கு விளக்கும். தொடர்ந்து படியுங்கள்

முடி வலுவிழத்தல்
சுக்கிரனும், சந்திரனும் சேர்ந்து வலுவிழந்து இருந்தால் உங்கள் தலை முடி மெல்லியதாக இருக்கும், இதனால் எதிர்பார்க்கும் வளர்ச்சி கிடைக்காது. சிவனுக்கு பாலும், அரிசியும் கொடுப்பது ஒரு பரிகாரம். மேலும் நீங்கள் உங்கள் உணவில் பால் தயிர் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆயுர்வேத குறிப்பு
தலைக்குக் குளிக்கும் முன் யோகர்ட் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவ வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகே இதை செய்ய வேண்டும். புளிப்பான உணவையோ, புளிப்பான பழங்களையோ சாப்பிடக்கூடாது. இது சுக்கிரனை பலவீனப்படுத்தும்.

வழுக்கை
ஜோதிடத்தின்படி பலவீனமான புதனும், சூரியனும் உடலில் வளரும் முடியை பாதிக்கின்றன. சக்தி வாய்ந்த குருவின் பலத்தால் மட்டுமே இத்தகைய பாதிப்பை நீக்க முடியும். ஆனால் அப்படி இல்லை என்றால் நீங்கள் சூரியனுக்கு நீர் வழங்கி, அசைவம் மற்றும் மதுவைத் தவிர்த்தால் புதனும் சூரியனும் வலுப்பெறும்.
ஆயுர்வேத குறிப்பு:
கொத்தமல்லி விதையை (தனியா) பொடியாக்கி ஒரு மேசைக்கரண்டி மஞ்சள் தூளுடன் கலந்து பசை போலாக்கி தலையில் தடவி இரவு முழுதும் அப்படியே வைத்திருந்து காலையில் தலையை அலச வேண்டும். இதை வாரம் இருமுறை செய்யலாம்.

முடி உதிர்தல்
ஜோதிடத்தின் படி பலவீனமான சுக்கிரன் முடிப் பிரச்சினைகள், மன அழுத்தம், அதனால் முடி உதிர்வு போன்றவற்றிற்கு காரணமாகிறது. இதற்குப் பரிகாரம் கோவில்களுக்கும், தேவையானவர்களுக்கும் அரிசி மற்றும் பால் தானம் செய்வதே.
ஆயுர்வேத குறிப்பு:
ஒரு தாமிரக் கிண்ணத்தில் தயிரை வைத்து மூன்று நாட்கள் கழித்து அதைத் தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும்.

பொடுகு
பொடுகுத் தொல்லை மிகவும் கவலையடையச் செய்யும் பிரச்சனை. மேலும் அது ஒரு தோல் பிரச்சனை மற்றும் தலை முடியின் வேரில் ஏற்படும் ஒரு பிரச்சினை. இது பலவீனமான புதனால் ஏற்படுகிறது. ஜோதிடம் இதற்குப் பரிகாரமாக ஒரு இரும்பு வளையத்தை சுண்டு விரலில் அணிந்து கொண்டு, ஒரு மஞ்சள் கயிற்றை புதன் தோறும் வலது கை மணிக்கட்டில் கட்டிக் கொள்ளும் போது புதன் வலுப் பெறுவதாக சொல்கிறது.
ஆயுர்வேத குறிப்பு:
உங்களால் முடிந்த போதெல்லாம் தலைக்குக் குளிப்பதற்கு முன் வினிகரை நீரில் கலந்து குளிக்க வேண்டும். தொடர்ந்து ஆலிவ் எண்ணெயால் தலையை மசாஜ் செய்ய வேண்டும்.



Click it and Unblock the Notifications
