குழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை! நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா?

Subscribe to Boldsky

இன்றைய கால இளம்பெற்றோருக்கு குழந்தையை பெற்றுக் கொள்வதை விட இன்னொரு முக்கியமான வேலை என்ன தெரியுமா? இதுவரை யாரும் வைக்காத பெயராக பார்த்து வித்யாசமாக தங்கள் குழந்தைக்கு வைக்க வேண்டும் என்பது.

கேட்பவரிடத்தில் குழந்தையின் பெயரைச் சொன்னதும்.... அப்டினா? புதுசா இருக்கே என்ன அர்த்தம் என்று வாயைப் பிளந்து கொண்டு கேட்க வேண்டும்... அது சிலருக்கு வாயிலேயே நுழையாது என்பது வேறு விஷயம். இப்படி தேடித் தேடி வைத்த பெயரில் அவர்கள் ஏதோ ஒன்று நினைத்து வைக்க அதன் அர்த்தம் வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டு அரசாங்கம் தடை செய்யும் அளவிற்கு பிரச்சனை பெரிதாகியிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

இங்கே சில குழந்தைகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பெயர்கள் அத்தனையும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு Pieandsauce என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் இது யாருக்கும் வித்யாசமாக படவில்லை. பல மாதங்கள் அந்த பெயரிலேயே இருந்தது. அதன் பிறகு அந்த பெயரை சற்று மெதுவாக படித்த போது pie and sauce என்று பிரித்து தனித்தனியாக அர்த்தம் வெளிப்பட இந்த பெயரை குழந்தைக்கு வைக்கக்கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தது.

#2

#2

நியூட்டெல்லா சுவைக்கு பலரும் அடிமை என்றே சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நியூட்டெல்லா அதிகம் பயன்படுத்துவதை விரும்புவார்கள். ப்ரெஞ்ச் தம்பதி ஒருவருக்கும் இதன் சுவை ரொம்பவும் பிடித்துவிட்டது போல.

தங்கள் குழந்தைக்கு நியூட்டெல்லா என்று பெயர் வைத்துவிட்டார்கள். விஷயம் அரசுக்கு தெரியவர குழந்தைக்கு எந்த உணவின் பெயரும் வைக்கக்கூடாது என்று சொல்லி குழந்தைக்கு அந்த பெயரை நீக்கி உத்திரவிட்டது.

#3

#3

talula does the hula from hawaii என்ன இதுவென்று ஆராயாதீர்கள். இது ஓர் குழந்தையின் பெயர். இந்த பெயரில் ஆல்பம் எல்லாம் கூட வெளியாகியிருக்கிறது. இந்த குழந்தைக்கு எட்டு வயதாகும் போது குழந்தையின் பெற்றோர் விவாகரத்து கேட்டு கோர்ட்டினை அணுகியிருக்கிறார்கள். அப்போது தான் இந்த குழந்தையின் பெயரே வெளியில் கசிந்திருக்கிறது.

பெற்றோருக்கு விவாகரத்து அளிப்பதற்கு முன்னால் குழந்தையின் இந்த பெயரை உடனே மாற்ற வேண்டும் என்று நீதிபதி உத்திரவிட்டார். பெயர் மாற்றப்பட்டு அந்த குழந்தை காப்பகத்தில் விடப்பட்டது.

#4

#4

இது குழந்தை அல்ல சற்றே வளர்ந்த குழந்தை விருப்பப்பட்டு தன்னுடைய பெயரை They என்று மாற்றிக் கொள்ள நினைத்தார். ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று யூட்டா. இங்கு தான் அந்த விசித்திர சம்பவம் நடந்திருக்கிறது.

தன் பெயரை தே என்று மாற்றிக் கொள்ளப்போவதாக அறிவிக்க அப்போதே அது வீணாக குழப்பதை ஏற்படுத்தும் அதனால் அந்த பெயர் வைக்கக்கூடாது என்று சொல்லி தடை விதித்தார்கள்.

#5

#5

ஐஸ்லாந்தில் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால் அந்த நாட்டின் வழக்கப்படி பெயரை அப்ளை செய்து பணம் கட்டி அரசாங்க அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். அரசாங்கம் அனுமதித்தால் மட்டுமே குழந்தைக்கு அந்த பெயரை சூட்ட முடியும்.

ஐஸ்லேந்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது மகள் மற்றும் மகனின் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்க முடியாமல் திண்டாடியிருக்கிறார்கள். காரணம், மகளின் பெயரான ஹாரியட் ஐஸ்லாந்த் கலாச்சாரத்தின் படி தடை செய்யப்பட்டது. ஹாரியட்டின் தம்பி Duncan இந்த பெயரில் எந்த பிரச்சனையும் இல்லாய். ஆனால் பெயரில் வந்திருக்கக்கூடிய சி என்ற எழுத்து ஐஸ்லாந்தில் பயன்படுத்த தடை என்பதால் இரண்டு பெயர்களும் பாஸ்போர்ட்டில் சேர்ப்பதில் சிக்கல் உண்டானது.

#6

#6

டென்மார்க் அரசாங்கம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாகவே இந்த விவகாரத்தை அணுகியிருக்கிறார்கள் பெற்றோர் பெயர் வைத்து பின்னர் இது வைக்ககூடாது என்று தடை செய்வதற்கு முன்னரே இந்த பெயரெல்லாம் நீங்கள் குழந்தைக்கு வைக்க கூடாது என்று சொல்லி முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

குழந்தைக்கு பெயர் வைப்பது மட்டுமல்ல செல்லமாகவோ அல்லது கோபமாக கூட நீங்கள் அந்தப் பட்டியலில் இருக்கக்கூடிய பெயர்களை குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.

டென்மார்க் நாட்டிலும் அங்கே ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் லிஸ்டிலிருந்து தான் குழந்தைகளுக்கு பெயர்களை தேர்ந்தெடுக்க முடியும். நம்முடைய க்ரியேட்டிவிட்டி எல்லாம் அங்கே வேலைக்கு ஆகாது.

அந்த பட்டியலில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கும். அதிலிருந்து ஒரு பெயரை குழந்தைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

#7

#7

கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் இந்த பெயரை நாம் எல்லாருமே சர்வ சாதரணமாக கேள்விப்படுவோம். அப்படியென்ன பெயர் என்று யோசிக்கிறீர்களா? சேண்டா க்ளாஸ்....

ஒஹியோ மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பெயரை சேண்ட்டா ராபர்ட் க்ளாஸ் என்று தன் பெயரை மாற்றிக் கொள்ள விரும்புவதாக விண்ணப்பித்தார். விஷயம் நீதிமன்றத்திற்கு சென்றது. இதனை விசாரித்த நீதிபதிகள். குழந்தைகள் மத்தியில் சேண்டா க்ளாஸ் குறித்த புரிதல் முற்றிலுமாக மாறிட வாய்ப்புண்டு. அதனால் இந்த பெயரை தனி நபர் வைத்துக் கொள்ளவும், உரிமை கொண்டாடவும் அனுமதிக்க முடியாது என்று சொல்லி தடை விதித்து விட்டார்கள்.

#8

#8

இது அர்த்தத்தால் வந்த வினை. மலேசியாவை சேர்ந்த தம்பதிகள் எதோ இரண்டு பெயர்களை பிய்த்து ஓட்ட வைக்க குழந்தைக்கு Chow Tow என்ற பெயர் வந்து விட்டது. முதலில் யோசிக்காமல் அதையே வைத்துவிட்டார்கள்

அதன் பிறகு தான் இந்த பெயரின் அர்த்தம் நாற்றம் பிடித்த தலை என்று தெரிந்திருக்கிறது. இதையறிந்து கோர்ட் இந்த பெயரை வைக்க தடை விதித்து விட்டது.

#9

#9

சீனா பெயரில் சிம்பல்களோ அல்லது எண்களோ வருவதை அனுமதிப்பதில்லை. இன்றைக்கு சமூகவலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகிறவர்களுக்கு @ என்ற சிம்பலின் அவசியம் குறித்து அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஒவர் நைட்டில் ஒபாமா ஆகிட வேண்டும் என்று நினைத்தார்களோ என்னமோ குழந்தைக்கு இந்த சிம்பலை பெயராக வைக்க நினைத்தார்கள். இந்த சிம்பலை சீன மொழியில் ஐ டா என்று அழைப்பார்களாம். அதை வைக்க சீன அரசாங்கம் அதெல்லாம் வைக்கக்கூடாது என்று சொல்லி தடை விதித்து விட்டார்களாம்.

#10

#10

இத்தாலியை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது இரண்டு குழந்தைகளு அவர்களின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக பெயர் வைத்து விட்டார்கள். அதாவது முதல் குழந்தை பிறந்தது வெள்ளிக்கிழமை என்பதால் வெள்ளிக்கிழமை என்று அர்த்தம் தரக்கூடிய Venerdi என்று வைத்துவிட்டார்கள். சமூகத்தில் குழந்தை கேலிக்கும் கொண்டலுக்கும் ஆளாக நேரிடும் என்று சொல்லி கோர்ட் இந்த பெயருக்கு தடை விதித்துவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Government Ban Baby Names Around the world

  Government Ban Baby Names Around the world
  Story first published: Saturday, May 19, 2018, 16:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more