Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி
ஒரு தடவைக்கு ரெண்டு தடவ உத்து பாருங்க... இல்லாட்டி தப்பு தப்பா தான் தெரியும்!
உத்து பார்த்தா தான் உண்மை அகப்படும், இல்லாட்டி தப்பு தப்பா தான் தெரியும்!
இந்த வகையிலான படங்களின் நீங்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் ஆங்காங்கே.. அவ்வப்போது பரவுவதை பார்த்திருக்கலாம்... இன்ஸ்டாகிராமில் டபிள் கிளிக் செய்யிங்க... படம் மாறும்னும்.... ஃபேஸ்புக்ல கமண்ட் பண்ணுங்க படத்துல இருக்க உண்மை தெரியும்ன்னு சொல்லி நம்மள கிறுக்கு பயலாக்க ஒரு கூட்டமே இருக்கு.

சிலர்... அட... இதெல்லாம் நான் எல்.கே.ஜி படிக்கும் போதே பார்த்துட்டேன்னு... சிலருக்கு இது புதுசாவும் இருக்கலாம். ஆனா, நிச்சயம்... இந்த படங்கள்ல பரிசா எதுவும் இல்லைங்கிறது தான் உண்மை.
ஆனாலும்... இந்த போட்டோஸ் எல்லாம்... டக்குன்னு பார்த்தா... என்னடா ஏதோ வித்தியாசமா இருக்குன்னு யோசிக்க வைக்கும். ரெண்டாவது தடவ பார்த்தா தான்... அட இது தான் மேட்டரான்னு புரிய வைக்கும்.

ச்சீ... ச்சீ...!
அட என்னடா... இது இந்த அங்கிள்... வயசான காலத்துல பூப்போட்ட பிகினி போட்டுக்கிட்டு பீச் பக்கமா வந்திருக்காரு... கூட பொண்டாட்டி வேற இருக்காங்க... இதெல்லாம் பார்த்து ஒன்னும் சொல்ல மாட்டாங்களா...ன்னு.... படத்த முதவாட்டி பார்த்ததும் சில எண்ணங்கள் தோன்றலாம்...
ஆனால், கொஞ்சம் நல்லா உத்து பார்த்தா தான் தெரியும்.. அந்த அங்கிளுக்கு பின்னாடி வேற ஒரு பொண்ணு குனிஞ்சு நின்னிக்கிட்டு இருக்காங்க.

ஷாக் ஆகாதிங்க!
இதென்னடா ஏதோ அவதார், நார்னியா படத்துல பார்க்குற மாதிரி பாதி விலங்கு, பாதி மனுஷியா இருக்குன்னு ஷாக் ஆகாதிங்க. நிஜமாவே அங்க இருக்கிறது முழு வரிக்குதிரை, முழு பொண்ணு தான்.
ஆனா, அந்த பொண்ணு போட்டிருக்குற ப்ளூ கலர் கோர்ட்டும், இந்த பக்கமா இருந்து போட்டோ எடுத்த அந்த நபரோட கோணமும் தான்.. ஏதோ ஃபேண்டசி மூவி கேரக்டர் மாதிரி இந்த பொண்ணு காண்பிக்கிது.

அசுர வளர்ச்சி...
பொதுவாவே... ஒரு வகுப்புல இயல்புக்கு மீறின வளர்சியில சில குழந்தைகள் இருக்க தான் செய்யும். ஆனால், கை கூடவா இம்புட்டு நீளமா வளரும்ன்னு யோசிக்கிறீங்களா... நிச்சயாமா எந்த ஒரு குழந்தைக்கும் கை இவ்வளவு நீளமா வளராது... அடுத்தடுத்து பக்கத்துல இருக்க குழந்தைங்க கையும், அந்த ஒசந்த பொண்ணோட கையும் ஒன்னோட ஒன்னு இணைஞ்ச மாதிரி தெரியுது அம்புட்டு தானுங்க.

ஃபேமிலி கலாட்டா...
என்னடா இது ஆளு முகம் நாற்பது வயசு மாதிரி இருக்கு, ஆனா காலு மட்டும் பத்து, பதினஞ்சு வயசு ஆளோட காலு மாதிரி இருக்குன்னு வியக்க தேவையே இல்லை... நிஜமாலே அந்த முகம் நாற்பது வயசு ஆளோடது தான். அந்த காலும் பதினஞ்சு வயசு நபரோடது தான். நல்லா உத்து பார்த்தீங்கன்னா அந்த அப்பா காரர் அந்த பக்கமா குத்த வெச்சு உட்கார்ந்துட்டு இருக்கிறது தெளிவா தெரியும்.

கன்ஃபியூஸ்
இதென்னடா உடம்ப விட முகம் பெருசா இருக்கும்... அதுவும் முகம் ஆம்பளை மாதிரியும், உடம்பு செக்ஸியான பொண்ணு மாதிரியும் இருக்கேன்னு சந்தேகமா இருக்கா... இந்த புகைப்படம் பலருக்கு நல்லாவே பரிச்சயமா இருக்கணும். காலம், காலமா இப்படி கன்ஃபியூஸ் பண்ற மாதிரியான படங்களுக்கு இது தான் மூதாதையர் வகை. நல்லா பாருங்க... அந்த பையன் நாற்காலியில உட்கார்ந்துட்டு இருக்கான். அவனோட காதலி தான் பின்னாடி இருந்து அவனோட கழுத்த கட்டிப்பிடிச்சு நின்னிக்கிட்டு இருக்காங்க.

இன்னொரு ஜோடி
மீண்டும் அதே மாதிரியான ரகளை தான்... ஒரு இளம் ஜோடி... பாது உடம்பு ஆம்பளை மாதிரியும், மீது உடம்பு பொண்ணு மாதிரியும் இருக்கா... திடீர்ன்னு பார்த்தா அந்த பொண்ணு தான் இந்த ஆம்பளைய தூக்கிட்டு போகுற மாதிர் தெரியும். ஆனா, உண்மையில... அந்த ஆம்பளை தான்... கஷ்டப்பட்டு தன்னோட துணைய தூக்கிட்டு போறாப்புல.

எங்க போயிருக்கும்?
இது கொஞ்சம் கஷ்டமான போட்டோ தான், அந்த அம்மாவோட கை எங்க இருக்குன்னு கண்டுப்பிடிக்கிறது ரொம்பவே கஷ்டம். அதுக்கு முக்கிய காரணம் இந்த கேமரா கோணமும், அந்த அம்மாவோட கை, கால் நிறம் ஒரே மாதிரி இருக்கிறதும் தான். கை, கால் இணைந்து இருக்க மாதிரி தெரியலாம்... சிலர் கை எங்கடா போச்சுன்னு கூட யோசிக்கலாம். உண்மையில அந்தம்மா குனிஞ்சு தன்னோட கால கையாள சொரிஞ்சுட்டு இருக்காங்க அம்புட்டு தான்..

மொட்டை பாஸ்!
எவ்வளோ பெரிய தலைன்னு ஷாக் ஆகிறீங்களா... தன்னோட ஆசை மகன் கிட்ட குனிஞ்சு ஏதோ சொல்லிட்டு இருக்காரு அந்த அப்பா.
ஆனா, என்ன அவரோட தலையில இருக்க கிரவுண்டு தான் பையன் தலைய முழுசா மறைச்சிடுச்சு. ரெண்டு பேரோட நிறம் ஒரே மாதிரி இருக்கிறதுனால தலை கொஞ்சம் ஏடாகூடமா பெருசா தெரியுது.

இம்புட்டு எப்படி?
பசங்களுக்கு தாடின்னா ரொம்ப பிடிக்கும். நோ ஷேவ் நவம்பர் மட்டுமில்லாம... வருஷம் முழுக்க ஸ்டைலா தாடி வளர்த்துட்டு திரியிறாங்க. இந்த போட்டோ பார்த்தா சிலருக்கு எப்படி டா இவ்வளோ தாடி வளரும். நமக்கு ஆயிசுக்கும் இம்புட்டு வளராதேன்னு சந்தேகம் வரலாம். நிஜமாவே இம்புட்டு தாடி வளர்க்கணும்ன்னா ஆயுசுக்கும் ஷேவிங் பண்ணாம தான் இருக்கனும்.
உண்மையில... அவரோட காதலி திரும்பி நின்னு கட்டிபிடிச்சிட்டு இருக்காங்க. ரெண்டு பேரோட ஹேர் கலரின், டீ-ஷர்ட் கலர் ஒரே மாதிரி இருக்கிறதுனால தான் டக்குன்னு பார்த்தா வேற மாதிரி தெரியுது.. தாடிய பார்க்காம கொஞ்சம் கீழ பார்த்திருந்தா... இத நீங்க உடனே கண்டுப்பிடிச்சிருப்பீங்க... ஹிஹிஹி!

அழகா இருக்கேன்ல...
ஒரு படத்துல வடிவேலு... லேடீஸ் கெட்டப்புல... உன்னவிட நான் கொஞ்சம் அழகா இருக்கேன்லன்னு சொல்லுவாரு. அதே போல தான் இருக்கு அந்த புள்ளைய பார்த்து நம்ம பய கொடுக்குற லுக்கு.
ஆனா, உண்மை என்னன்னா... ரெண்டு பக்கம் தெரியிறதும் அந்த பொண்ணோட கால்கள் தான். கரக்டான டைமிங்ல போட்டோ எடுத்தனால... கண்ணாடி ரிப்லெக்ஷன்ல வேற மாதிரி தெரியுது அம்புட்டு தான்.

சூரிய குளியல்!
நோ, நோ... நோ! உடனே டர்ட்டியா யோசிக்க கூடாது... முன்னாடி ஒரு குழந்தை பயல் விளையாடிட்டு இருக்கான்... பின்னாடி வேற ஒரு பொண்ணு சன் பாத்... அதாங்க சூரிய குளியல் எடுத்துட்டு இருக்காங்க. ஷாக்க குறைங்க...!
All Image Source: mic



Click it and Unblock the Notifications