போட்டோ எடுக்குறது கூட தெரியுமா இந்த மனுஷன் செய்ற வேலையப் பாருங்க!

இத தப்புன்னு புரிய வைக்க முடியாம திணற்றவங்ககிட்ட இந்த படங்கள காமிங்க கிறுக்குத்தனமா செஞ்ச சில மிஸ்டேக்ஸ் தொகுப்பு

நம்மள சுத்தி சில அறிவாளி க்ரூப் இருக்கும் ஈஸியா வேலைய முடிக்கிறேன், லாஜிக்கா யோசிக்கிறேன்னு சொல்லி படு மொக்கையான ஐடியாஸ் சொல்வாங்க.... அது சரி வராது, செட் ஆகாதுன்னு புரிய வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும்.

பல நேரங்கள்ல சரி உன் இஷ்டப்படியே பண்ணுன்னு கடைசிவரை காத்திருந்து நொந்து நூடுல்ஸ் ஆகுற நிலைமை கூட ஏற்படலாம். அப்டி நொந்து நூடுல்ஸ் ஆனவங்க எடுத்த சில படங்களலத்தான் இப்போ பாக்கப்போறீங்க. நமக்கு பாக்க சிரிப்பா இருந்தாலும் சிரிச்சுட்டே அந்த மனுஷங்களோட கஷ்டப்பட்ட நல்லவங்களுக்காக ஒரு நிமிட சிரிப்பஞ்சலி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 #1

#1

பூட்டிட்டு சாவிய எங்காவது வச்சிட்டு தேடுறது தான் நம்மளோட ஃபுல் டைம் ஜாப். அதனாலயோ என்னவோ ஆட்டோமேட்டிக் லாக் வந்துச்சு. அம்மணி சாவிய தொலைக்கவே கூடாதுனு முடிவு எடுத்துட்டு பண்ண லாஜிக்க பாருங்க. சாவி ரெண்டையும் உள்ள வச்சு ஆட்டோமேட்டிக் லாக் ப்ரஸ் பண்ணிட்டாங்க. நல்ல வேல சோதனை முயற்சியா தான் இது நடந்திருக்கு.....

#2

#2

ரூம் க்ளீன் பண்றேன்னு உட்கார்ந்துட்டு அப்படியே பழைய நினைவுகள்ல மூழ்கிறது இல்லன்ன தூங்கிடறது. இப்டி இருக்க நம்மள வச்சு ஒரு வீட்ட காலி பண்ணனும் எவ்ளோ நாளாகும்.... சரி கதைக்கு வருவோம் இது ட்ராக்டா,பைக்கா, தெரியல ஆனா ரெண்டும் கலந்த கலவையா இருக்கு. vஅழில ப்ரேக்டவுன் ஆக அத இன்னொரு வண்டி, ஓப்பன் ஜீப்ல வச்சு தூக்கிட்டு போக பாத்திருக்காங்க. நல்ல விஷயம் தானே.... வண்டி ப்ரேக் டவுன் ஆனா இப்டித்தான் போணும் என்று யோசிக்கிறதுக்கு முன்னாடி இன்னொரு விஷயத்தை கேட்டிருங்க.... ஜீப்ப ஸ்டார்ட் பண்ணா ஒரு இன்ச் கூட நகரவே மாட்டீங்கிதாம்.

ஏத்துன வண்டி அவ்ளோ வெயிட்டெல்லாம் இல்ல வச்சு கட்டியிருக்குறது அப்பிடி....

#3

#3

இதைப்பார்த்துட்டு யாரும் வீட்ல ட்ரை எல்லாம் பண்ணக்கூடாது.... அவசரமா கிளம்பும் போது தான் அம்மணிக்கு தெரியுது கார் டயர்ல காத்தே இல்லன்னு.... இப்ப என்ன காத்து அடிக்கணும் அவ்ளோ தானன்னு தீ அணைப்பான கொண்டு வந்து ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டு இருக்க... நல்ல அதுக்குள்ள வெடிச்சு சிதறியிருப்ப பக்கின்னு கூட்டிட்டு போய்ட்டாங்களாம்

#4

#4

இதே நிலைமை தான் நமக்கும். ரூபாய் நோட்டெல்லாம் கலர் கலரா மாத்தினதோட இல்லாம சைஸும் மாத்திட்டனால அதோட மதிப்பு நம்ம மைண்ட்ல ஏத்திகிறதுக்கே ரொம்ப நாள் ஆச்சு. கலர் கலரா பாக்கும் போதே எதோ கலர் பேப்பர சுருட்டி நம்ம பாக்கெட்டுக்குள்ள வச்சிருக்கிற ஃபீல் தான் வருது.

குழந்தைங்க விளையாடுறதுக்காகவும் அவங்க கிட்ட சேமிப்பு பழக்கத்த அதிகப்படுத்தணும்னு அறிமுகப்படுத்தினது தான் பிக்கி பேங்க் அந்த கேம்ல யூஸ் பண்ற ஒரு ரூபாய் நோட்ட கடையில கொடுத்து பாப்பா சாக்லெட் வாங்கியிருக்கு அதையும் கடைக்காரர் உண்மையான பணம்னு நினச்சு வாங்கிட்டாராம்! பணத்த பேங்க்ல கொடுக்கும் போது தான் இந்த விஷயமே தெரிஞ்சிருக்கு அது உண்மையான பேங்க் பிக்கி பேங்க் இல்ல....

#5

#5

அவசரத்துக்கு போட்டாலும் ஒரு நியாயம் வேணாமா? சோளத்த இப்டி மூட்ட மூட்டையா நிரப்பிட்டு மேல வெங்காயம்னு எழுதி வச்சா எங்க நிலைமை எல்லாம் என்ன ஆகுறது.... இந்நேரத்துக்கு ஒரு க்ரூப் கிளம்பியிருக்குமே வெளிநாட்டில் செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வெங்காயம்.

இதில் அதிக விஷம் கலந்திருக்கிறது. யாரும் தப்பித்தவிர கூட சாப்பிட வேண்டாம். உங்க ஷேர் ஒரு உயிர காப்பாத்தும் ப்ளீஸ் ஃபிரண்டஸ் தயவு செஞ்சு சேர் பண்ணுங்க....

#6

#6

டிசைன்ர பேர்ல என்னென்னவோ செஞ்சு நம்மல முட்டாள் ஆக்குறதே இவங்க வேலையா போச்சு... சாரு ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சுட்டு கைகழுவ இந்தப்பக்கம் வந்திருக்காரு அங்க பேஸினுக்கு பக்கத்துல இந்த சாக்லேட் இருந்திருக்கு அடடே.... எவ்ளோ கலைநயலம் இத்துணூண்டு சைஸ்ல டிஃபரண்டா இருக்கேன்னு ஒரு கடி கடிச்சிட்டாரு.... கடிச்ச பிறகு அது கேக்கோ சாக்லேட்டோ இல்ல பார்சோப்னு தெரிஞ்சிருக்கு. சோனமுத்தா போச்சா!...

#7

#7

சர்ப்ரைஸ்ன்ற பேர்ல வழக்கமான விஷயத்த செய்ய நம்மளும் ஹே.... வாவ்ன்னு மொக்கையான ஷாக்கிங் ரியாக்‌ஷன் கொடுப்போம் பாருங்க.... அம்மணி சர்ப்ரைஸா யாருக்கோ பெரிய சைஸ் கப்போர்ட வாங்கிருக்கு அத ரிப்பன் எல்லாம் கட்டச் சொல்லி பேக் கூட பண்ணிருச்சு பாவம் அந்த கப்போர்ட் சைஸுக்கு கார் மட்டுந்தாங்க இல்ல மத்தப்பட்ட ஐ எம் க்ளவருங்க!

#8

#8

நீங்களே இப்டி பண்ணா எப்டி பாஸ்.... டோர் லாக் சுவத்துப்பக்கம் வச்சிட்டா எப்டி லாக் பண்ணுவாங்க? ரூமுக்குள்ள போய் கதவ லேசா சாத்தினாலே.... உள்ள எதுக்கு போற கதவு எதுக்கு பூட்றன்னு ஆயிரம் கேள்வி கேக்குறவங்க வீட்ல எல்லாம் இந்த கதவ மாட்டிவிட்டிருங்க தலைவா? பேரண்ட்ஸ் கிட்ட நல்ல பேரையும் ஸ்டூண்ட்ஸ் கிட்ட கெட்ட பேரையும் சம்பாதிக்கலாம்.

#9

#9

ஹேய்.... இத நம்மளும் செஞ்சிருப்போம் தான... புதுசா வாங்கிட்டு வந்த எல்லாத்தையும் பிரிச்சுப்பாக்குறேன்னு இப்டி எசகு பிசகா கட் பண்ணி வசமா வாங்கியிருப்போம். இந்த கிஃப்ட் பிரிக்கிறப்பையும் இப்டித்தான்.

எதுக்கு இந்த ஷாக்கு ஷாக்க குறைச்சா எல்லாம் சரியாப்போகும். இப்ப பாரு காசு தண்டம் தான.

#10

#10

எதையும் ப்ளான் பண்ணாம பண்ணா இப்டித்தான்.... இப்ப என்ன பண்ண போறீங்க சார்.... சீக்கிரம் ஒருமுடிவுக்கு வாங்க நாங்களும் வேல வெட்டிக்கு போணுமா இல்லையா?

AllImage Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, June 23, 2018, 15:19 [IST]
Desktop Bottom Promotion