இப்டி ஒரு உருவத்த யாரும் பாத்திருக்கவே முடியாது!

Posted By:
Subscribe to Boldsky

இந்த செல்ஃபி யுகத்தில் படத்தை க்ளிக் செய்த அடுத்த நிமிடம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து எத்தனை லைக்ஸ், ஹார்ட்,வாவ் என கவுண்ட் செய்ய துவங்கிடுவோம். நம் கூட்டதிலேயே ஒருவர் விலை உயர்ந்த செல்போன் அல்லது டிஜிட்டல் கேமெரா வைத்திருக்கிறார் என்றால் சொல்லவே வேண்டாம்.

நான் அங்க பாக்குற மாதிரி நிக்கிறேன் நீ அப்டியே கேண்டிட் எடுத்துரு என்று எத்தனை வாய்ஸ் கேட்கும்.... அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்டவையும், திட்டமிடப்படாமல் எதார்த்தமாக க்ளிக் செய்யப்பட்ட போட்டோக்களை ஆற அமர உட்கார்ந்து உற்று நோக்கும் போது தான் அதிலிருக்கும் ஓட்டை உடசல்கள் எல்லாம் தெரியும்.

இருந்தா என்ன? அதான் போட்டோ எடிட்டிங் இருக்கிறதே என்று ஆறுதல் படுபவர்களுக்காக.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஜேம்ஸ் ஃப்ரைட்மேன் என்பவர் போட்டோஷாப்பில் கிள்ளாடி... தன்னுடைய சமூகவலைதளம் ஊடாக தன்னிடம் எடிட் செய்து தரச்சொல்லி கொடுக்கப்படுகிற போட்டோக்களை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ்.கேலியும் கிண்டலும் கலந்து ஜேம்ஸ் செய்கிற போட்டோ எடிட்டிங்கிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். அவற்றில் சில சாம்பிள்களை பார்க்கலாமா?

அவர் கேட்டதற்கும் மிஸ்டர் ஜேம்ஸ் எடிட் செய்து கொடுத்ததையும் பாருங்க.... இதே போல இனி எப்டியெல்லாம் விளையாடியிருக்காரு பாருங்க

#2

#2

போட்டோல எதையெல்லாம் நோட் பண்றாங்கன்னு பாருங்களேன்.... அதுவும் அவங்களோட எதிர்ப்பார்ப்பு ஒவ்வொண்ணும் தமிழ் சினிமாவையே மிஞ்சிடும் போல. நான் கார்னர்ல உக்காந்திருக்கேன்,அத மாத்திடுங்க அப்பறம் எங்களுக்கு முன்னாடி அங்க இங்கன்னு சிலர் இருக்காங்க ஆனா நாங்க கண்டுக்காம எங்க வேலைய பாத்திட்டு இருக்குற மாதிரி கேட்க அதற்கு ஜேம்ஸின் பக்கா எடிட்டிங்...

#3

#3

ஒரு கட்டத்துக்கு மேல பிறந்த நாள் வருதுன்னாலே கடுப்பாவோம்.... வயசாகிட்டே போதே என்ற கவலை எல்லாருக்கும் குறிப்பிட்ட வயதுக்கு மேல ஏற்படும். அதே போல இவருக்கு என்ன சோகமோ பாஸ் ஹே ஜேமி.... (செல்லப்பேர் வச்சுகூப்பிட்டா செம்மையா செய்வாருன்னு நினச்சுட்டாரு போல) என்னைய கொஞ்சம் இளமையா காட்டுங்கன்னு சொல்ல அதுக்கு ஜேம்ஸ் ரொம்ம்ம்ம்ம்பபப...... இளமைய காட்டீட்டாரு!!

#4

#4

எடிட்டிங்ல என்ன எல்லாம் கேக்குறதுன்னு ஒரு விவஸ்த்த இல்லையாம்மா, அதான் ஜேம்ஸ் பாஸ் வெள்ளத்துணிய எடுத்து மூடிட்டாரு.... செம்ம ஐடியால்ல

#5

#5

செல்ஃபி எடுக்குறப்ப பல நேரங்கள் இந்தப் பிரச்சன வரும், நான் செல்ஃபி எடுக்கமாட்டேன், என் மூஞ்சி தான் பெருசாத்தெரியும், நேக்கா கடைசி போய் கேஸுவலா நிக்கிறவங்கள இனிமே பிடிச்சு மொதோ நிக்கவச்சிருங்க.

இங்கயும் ஒரு பொண்ணு என் மூஞ்சி ரொம்ப பெருசா தெரியுது, என் பாய் பிரண்ட் மூஞ்சிய விட என் மூஞ்சி சிறிசா தெரியணும்னு சொல்ல, சும்மா உக்காந்திருந்த பாய்பிரண்ட்ட துவம்சம் பண்ணிட்டாரு.

#6

#6

இந்த முகம் அந்த உடலோட சேரப்போகிறது என்று வடிவேலு சொன்ன லாஜிக்கை அப்ளை செய்ய பாத்திருக்கிறார் தம்பி. அதை ஜேம்ஸ் தன் பாணியில் கிண்டலடித்து எடிட் செய்துவிட்டிருக்கிறார்.

#7

#7

அம்புட்டுதான் வேல முடிஞ்சது. என் ஆளு கால அகட்டி நிக்கிறாப்டி அத கொஞ்சம் க்ளோஸ் பண்ணி கொடுத்திருங்கன்னு ஒரு ரெக்வஸ்ட். இது என்ன ரெயில்வே கேட்டாம்மா க்ளோஸ் தான பண்ணனும் பண்ணியாச்சு பண்ணியாச்சு என்று கடுப்பில் உருவான ஐடியா

#8

#8

அடடா... அடடடா..... நடு வீட்ல பெட்ரூம்ல உக்காந்து போட்டோ எடுத்து கொடுப்பாங்களாம், அத பறக்கும் கம்பிளில அம்மணி கடலுக்கு மேல மிதக்குற மாதிரி எடிட் செய்யணுமாம்.... கடலுக்கு மேல இப்போ எப்டி பறப்பன்னு பாரு என்று சொல்லாமல் சொன்ன ஜேம்ஸின் பதிலடி.

#9

#9

இவர் எல்லாம் ஷவரப் பாத்தாலே தலைய துவட்டுற க்ரூப் போல.... ரொம்ப ஜாக்கிறதையா நல்லா தூரமா நின்னு போட்டோ எடுத்துட்டு அப்பறம் வந்து, அந்தா தெரியுது பாருங்க வாட்டர் ஃபால்ஸ் அத கொஞ்ச கிட்ட கொண்டு வந்திருங்கன்னு எதோ டீக்கடையில டீ ஆர்டர் கொடுக்குற மாதிரி சொல்றாய்ங்க... சும்மா விடுவாரா வச்சு செஞ்சுட்டாருல

#10

#10

நண்பனுக்காக பரிஞ்சு பேசப்போய் இப்டி சிக்கிடாரே பயபுள்ள. கீழ கிடக்குற என் ஃபிரண்டு கொஞ்ச அசக்கபிசக்க கிடக்குறான் அத கொஞ்சம் மாத்தி கொடுங்கன்னு கேக்க அத கண்ணு காத மூக்கு எல்லாம் வச்சு ஒரு ஸ்டோரி ரெடி பண்ணிட்டாரு நம்ம ஜேம்ஸ்.

#11

#11

இனி குழந்தைங்க கிட்ட ஸ்வீட் சாப்பிடாத, டெய்லி டூ டைம்ஸ் பிரஷ் பண்ணு இல்லன்னா பல்லு விழுந்துரும் அசிங்கமா இருக்கும்னு மிரட்டாதீங்க.... அதான் ஜேம்ஸ் அங்கிள் இருக்காருல்ல பீ ஹேப்பி

#12

#12

போச்சா... போச்சா... மொத்தமும் போச்சா.... நாங்க ரெண்டு பேரும் ஒரே பையன லவ் பண்றோம், இந்த ஃபோட்டோவ அவனுக்கு அனுப்பனும், அதனால என்னைய ரொம்ப அழகாவும், கருப்பு ஷூ போட்டிருக்க பொண்ண கொஞ்சம் அசிங்கமாவும் எடிட் செய்ங்களேன்னு கேட்ருக்கு ஒரு பொண்ணு,

பொண்ணோட இங்கிலீஸ்ல தான் கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகிட்டாரு ஜேம்ஸ்

#13

#13

எப்போ போட்டோ பிடிச்சாலும் இதே தொல்ல, கண்ண கண்ண மூடிக்கிறா.... தயவு செஞ்சு என் பொண்டாட்டி கண்ண தொறந்து கொடுங்கன்னு கேக்க நல்லா தொறந்துட்டாரு பாருங்க

#14

#14

ஆத்தி பாக்கவே ரொம்ப பயமா இருக்கே.... கொஞ்சம் அகலமா தேங்கி நிக்கிற தண்ணீல போட்டிங் போய்ட்டு எதோ உயிர் பொழச்சு வந்த மாதிரி சீன் போடணும்னு நினச்சா இப்டித்தான்.

இதுவும் ஆபத்தான தண்ணீ தான்.... என்று ஜேம்ஸின் ட்ரோல் துடுப்புல நூடுல்ஸ சொருகினாரு பாருங்க அங்க நிக்கிறாரு ஜேம்ஸ்.

#16

#16

கனவு லட்சியம்னு வாய்ச்சவடால் விட்டுட்டிருந்தா இப்டித்தான், இந்தம்மா சொகுசா வூட்டு சோஃபால உக்காந்துட்டு போஸ் கொடுக்க அத போட்டோஷாப்ல விண்வெளில இருக்குற மாதிரி எடிட் செஞ்சு கொடுக்க சொல்லிருக்காங்க.

ஸ்பேஸ்ன்னு சொன்னதும் நமக்கெல்லாம் விண்வெளி நியாபகத்துக்கு வரும், ஆனா ஜேம்ஸுக்கு எந்த ஸ்பேஸ் நியாபகத்துக்கு வந்திருக்கு பாருங்க.

#17

#17

எடிட் பண்ண போட்டோவ காமிச்சு எல்லார்ட்டயும் கெத்து காட்டலாம்னு நினச்சிட்டு இருந்திருக்காரு.. ஜேம்ஸு சும்மா விடுவாரா உன் பக்கத்துல தான உக்காரணும், உக்கார வச்சிடலாம்னு கிச்சுன்னு உக்கார வச்சிட்டாரு பாருங்க

#18

#18

கொஞ்சம் வூட்டா, வந்து வீடு தொடச்சு கொடு, பெயிண்ட் அடிச்சு கொடுன்னு கேப்பீங்க போலயே போட்டோ எடுக்கும் போது கண்ணாடி கொஞ்சம் தூசியா இருக்கு அத பளபளான்னு ஆக்கி கொடுங்க பாப்போம்னு கேக்க.... அத நீங்களே செய்யலாமே பாஸ்னு கைல ஜேம்ஸ் என்ன கொடுத்திருக்காரு பாருங்க....

#19

#19

உசிரோட விளையாடுறதே எல்லாருக்கும் வேலையாப்போச்சு, ட்ராக்ல நானு, பின்னாடி ட்ரெயினு செம்ம ஸ்பீடா வருது, தப்பிக்க வழியே இல்ல நானும் தெறிச்சு ஓடறேன், ட்ரைன் நெருங்கவே முடியலயே அவ்ளோ ஸ்பீடு.... என்று கதையளந்து கொண்டிருந்த போது நெசமாவா எங்க போட்டோ காமின்னு சொன்னா காட்டுற மாதிரி ஒரு போட்டோ வேணும்னு புள்ள கேட்ருக்கு. அதுக்கு ஜேம்ஸ் வச்சு செஞ்ச மொமண்ட் தான் இது.

#20

#20

அதானா.... வந்த இடத்துல வந்த வேலைய மட்டும் பாருங்க மக்கா.... என் கையில இருக்குற போன் எடுத்துருங்க ப்ளீஸ்ன்னு தம்பி கெஞ்ச.... கையில போன் இருந்தா தான செல்ஃபி எடுப்ப? என்று நியாயமாக செய்திருக்கும் போட்டோஷாப்

#21

#21

ஒல்லியா இருக்குற என்னோட ஐப்ரோ புஸுபுஸுன்னு செஞ்சுதாங்கன்னு கேக்க, முன்னால் அமெரிக்க அதிபர் புஷ்ஷையே ஐப்ரோல இறக்கிட்டாரு தம்பி

#22

#22

தாடியோட வில்லனா தெரியுற மூஞ்சி,க்ளீன் சேவ் பண்ணா இப்டித்தான் பாப்பா மாதிரி ஆகிடும். வீட்டுக்காரர கொஞ்சம் ஷேவ் பண்ணி வுடுன்னு சொல்ல பண்ணியாச்சு பண்ணியாச்சுன்னு அசால்ட் காண்பித்திருக்கிறார் ஜேம்ஸ் அண்ணாத்த

#23

#23

நீ எதோ பெரிய வித்தக்காரன்னு பேசிக்கிறாங்க எங்க என்னோட போட்டோல உருப்படியா எதாவது செஞ்சு கொடுன்னு கேக்க ஜேம்ஸ் அசரலயே.... கச்சிதமா போடோஷாப் மூளை வொர்க் பண்ணிச்சா இல்லையான்னு செக் பண்ணிக்கங்க

#24

#24

மூஞ்சி மட்டும் நானுங்க மத்தப்படி சட்டையெல்லாம் நம்மளோடது இல்லைங்கன்னு கேக்குறவங்கட்ட பூரா சொல்லிட்டே இருக்காராம் இந்த தம்பி.... ப்ரொஃபைல் படமா வைக்கப்போறேன், இந்த மூணு பேர்ல நான் தான் இந்த ப்ரோஃபைலுக்கு சொந்தக்காரன்னு தெரியுற மாதிரி எதவது செஞ்சு கொடுங்க ப்ளூ சட்டப்பையன் தான் நானு என்று சொல்ல உன்னைய அடையாளம் தெரியணும் அவ்ளோ தான.... என்று வேலை காட்டிய போது...

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Funny Photoshop Images

Funny Photoshop Images