For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பணியிடங்களில் ஆண்கள் செய்யும் தாங்க முடியாத லோலாய்கள் - கேலிப் புகைப்படத் தொகுப்பு!

  |

  இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக ஆயுள் கொண்டு வாழ்கிறார்கள். இதற்கான காரணம் என்று காணும் போது, சர்க்கரை வியாதியில் இருந்து புற்றுநோய் வரை ஆண்கள் பெண்களை விட அதிகளவில் பாதிக்கப்படுவது ஒரு காரணமாக இருக்கிறது. முக்கியமாக புகை, மது, போதை போன்ற பழக்கங்களால் ஆண்கள் மிகையாக பாதிக்கப்படுகிறார்கள்.

  இப்படியான காரணங்களால் தான் ஆண்கள் அதிகளவில் உயிரிழக்க வாய்ப்புகள் அதிகமாகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? சாலை விபத்துக்களில் கூட அதிகம் உயிரிழப்பது ஆண்கள் தான். சாலை விபத்துக்கள் என்று மட்டுமல்ல.. இந்த கேலி புகைப்படத் தொகுப்பில்..., பணியிடங்களில் ஆண்கள் செய்யும் சில சாகச வேலைகளை எல்லாம் பார்த்தால்... நிச்சயம் ஆண்களை விட பெண்கள் ஏன் அதிக ஆயுள் கொண்டிருக்கிறார்கள் என்பது சட்டென புரிந்துவிடும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  கார சுத்தம் பண்றதுக்கு வாட்டர் ப்ரெஷர் பைப் கொடுத்தா... ஏதோ அயர்ன் மேன் கணக்கா தம்பி ஷோ காமிச்சிட்டு இருந்தாப்புல... ரிசல்ட்...! இதோ தொபக்கடீர்னு விழுந்துக் கிடக்குறாப்புல. நமக்கு என்ன வருமோ அத தான் பண்ணனும். படாத இடத்துல அடிப்பட்டு எசகபிசக ஏதாவது ஆயிட்டா அம்மான்னா வருமா, அப்பான்னா வருமா?

  #2

  #2

  பாக்குறது கிளாஸ் ப்லோவர் (Glassblower) வேலை அத யாரும் தப்பு சொல்லல. ஆனா, நெருப்புல உருக்குன கிளாச வெச்சு ஸ்கிப்பிங் விளையாட்டு விளையாடுறது தான் தப்பு. அதாவது தண்ணி தான்.... இது நெருப்பு... பொசுக்கிடும்...!

  #3

  #3

  அடிப்படையிலேயே ஆம்பளைங்க சோம்பேறின்னு தினமும் வீட்டுல சொல்லிக் காமிச்சிட்டே இருப்பாங்க... ஐ மீன் எங்க வீட்டுல மட்டும் இல்ல.. எல்லாருடையே வீட்டுலையும் கூட அப்படிதான்னு நினைக்கிறேன். இதுல இப்படி எல்லாம் வீரதீர சாகசம் தேவையா? ஜன்னல் உடைஞ்சா கூட பரவாயில்ல. காரு பொழந்துடுச்சுன்னா என்ன பண்ணுவீங்க மிஸ்டர்!

  #4

  #4

  கொண்டு போற போர்டுல மட்டும் தான் பாதுகாப்பு இருக்கு. அதான் ஊருக்கு மட்டும் தான் உபதேசம்ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே... அப்படி இருக்கு இவரு பண்ற காரியம். பெரும்பாலும் நம்மாளுங்க பண்ற தவறு இதுதான். காசு மிச்சம் பண்றேன்னு சாகச வேலையில இறங்கிடுவாங்க.

  #5

  #5

  இதோ! இவரு அதுக்கும் மேல... பெரும்பாலான பிளம்பர், ஏசி மெக்கானிக் பண்ற வேலை எல்லா பார்க்கும் போது உசுரு போயிடும்.. அவங்களுக்கு இல்ல பார்க்குற நமக்கு. எப்படி தான்... அந்தரத்துல இப்படி ஜிம்னாஸ்டிக் பண்றாங்களோ தெரியல. ஒரு பக்கம் அவங்க வாழ்க்கையே அப்படி தான்னு சொன்னாலும். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காதுன்னு நினைக்கிறப்ப தான் பயமா இருக்கு.

  #6

  #6

  கரக்டு! நீங்க என்ன சொன்னீங்க... தலையில ஹெல்மட் மாட்டனும் அவ்வளவு தான. அத எப்படி மாட்டனும்ன்னு யாரும் சொல்லலியே... கொண்டைக்கு ஹெல்மட் மாட்டுனதே தப்பு.. இதுல கீழ விழாம இருக்க லாக் வேற.

  #7

  #7

  இவங்க இன்டர்நெட்ல வைரல் ஆகணும்னு ஒரு முடிவோட தான் இப்படி பண்றாங்களா? இல்ல நிஜமாவே இவங்க எல்லாம் வெகுளித்தனமா... இதெல்லாம் யூஸ் ஆவாத ஐடியான்னு புரியாம இப்படி பண்றாங்களா... ஆனாலும் இவர பாராட்டனும்.. தன்னோட பொண்ணுக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து, தன் உயிரை பத்து கவலைபடாம இருக்காப்புல... அதாங்க... பொண்ணுக எல்லாம் அப்பா தான் ஹீரோன்னு பெருமையா சொல்றாங்க.

  #8

  #8

  வேலைக்கு நடுவுல சின்ன தூக்கம் போடுறது சுறுசுறுப்பா வேலைப் பார்க்க உதவும்ன்னு சில ஆய்வறிக்கைகள் மூலமாவே நாம் படிச்சது தான். ஆனாலும், இப்படி எல்லாம் ரெஸ்ட் எடுக்கிறது ரொம்ப ரிஸ்க்குங்க தோழரே... பெரிய, பெரிய கட்டிடங்கள்ல வேலை பார்க்குறவங்க... ஏசி மெக்கானிக்.. இவங்கள எல்லாம் சில சமயம் பார்க்கும் போது சூப்பர் ஹீரோ மாதிரி தான் தோணும். நமக்கு அல்லு விடுற வேலை எல்லாம் இவங்க செம்ம தில்லா பண்ணுவாங்க. ஆனாலும், இந்த அளவுக்கு தில்லு கூடாது.

  #9

  #9

  ஸ்மார்ட் வர்க் பண்றாங்களாம். மெக்ஸிகோ நாட்டுல... சாலையோர பாதைக்கு பெயிண்ட் பண்ண போனவங்க பண்ண வேலைய பாருங்க...

  #10

  #10

  அடடே பெயிண்ட் படிக்கிற வேலை கூட கஷ்டம் தான்லன்னு வருத்தப்படாதீங்க. இந்த பயலுக பண்ணிக்கிட்டு இருக்கிறது Graffitiனு சொல்லுவாங்கல அப்படியான ஒன்னு.

  அதாவது, நம்ம ஊருல நல்லா இருக்குற வெள்ளை சுவத்துல கட்சி காரங்க பயன்படுத்திக்கிற மாதிரி, இவங்க தங்களுக்கு பிடிக்காத கேங், கட்சி, ஆளுங்க பத்தி ஏதாவது ஆவேசமா எழுதி பெயிண்ட் பண்ணிட்டு ஓடிடுவாங்க.

  #11

  #11

  இது இன்னுமொரு ஸ்மார்ட் வர்க். திறமையானது தான் ஒத்துக்குவோம். அதுக்குன்னு... இப்படி எல்லாமா பண்ணனும். கொஞ்சம் மிஸ் ஆனாலும் வண்டிக்கு மட்டுமா பாதிப்பு ஏற்படும்...

  #12

  #12

  அடடே! இது நம்ம தர்மாக்கோல் வகையிரா போலயே. அந்த மாஸ்க் ஒன்னு தான் வாங்கி மாட்டிக்கிறது... சின்னப்புள்ளத்தனமா விளையாட்டு அட்டைப்பெட்டிய எல்லாமா எடுத்து மாட்டிக்கிட்டு வரது. இது நீங்க வேணாலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு சொல்லிக்கலாம். ஆனா, எங்கள பொறுத்த வரைக்கும் கோமாளித்தனம்னு தான் சொல்லுவோம்.

  #13

  #13

  கூட இருநூறு ரூபா கொடுத்திருந்தா... கடைக்காரனே டிவிய வூட்டுக்கு கொண்டு வந்த டெலிவரி பண்ணியிருப்பான். ஆனாலும், இம்புட்டு கஞ்சத்தனம் கூடாதுப்பு. எங்க ஊரு ஸ்கூட்டியவிட குட்டியா இருக்கு நீ ஓட்டிட்டு வர வண்டி. அதுல நீ ஏறி ஒட்டுறதே பெரிய தப்பு. இதுல இம்மாபெரிய டிவிய தூக்கிட்டு வரது ரொம்ப பெரிய தப்பு.

  #14

  #14

  இயற்கையா, இயற்கையா விட்டுடுங்கப்பா சாமி. மலை மேல வீடு கட்டுறது, காட்டுக்குள்ள தியான மண்டபம் கட்டுறது. அப்பறம் யானை வருதுன்னு எலக்ட்ரிக் ஷாக் வெச்சு கொல்லுறது. அதோட வீட்ட ஆக்கிரமிப்பு பண்ணிட்டு, அதையே கொல்றது எவ்வளவு பெரிய மொள்ளமாரித்தனம்! என்னமோ.. இதோ இப்படி எல்லாம் வழி யாரு கேட்டா.. அப்பறம் மழை வந்திச்சு.. பாறை சறுக்கிடிச்சு.. மக்கள் இறந்துட்டாங்கன்னு நியூஸ் போட்டு அனுதாபம் தெரிவிக்க வேண்டியது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Funny Photos: Reasons Why Women Live Longer Than Men!

  Funny Photos: Reasons Why Women Live Longer Than Men!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more