For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகையே திரும்பி பார்க்க வைத்த முன்னோடி கிராமம்!

குப்பையே இல்லாத நகரமாக பெயர் எடுத்திருக்கும் உலகின் முதல் நகரம்

|

குப்பைகளை அகற்றுவதே இங்கே மிக சிக்கலான ஒர் விஷயமாக இருக்கிறது. நமக்கெல்லாம் குப்பையை எடுத்துப் போடக்கூட பொறுமையிருக்காது ஆனால் அந்த குப்பையினால் தான் நாளை உலகமே அழியப் போகிறது என்பதை இன்னமும் உணராமல் இருக்கிறோம் என்பது தான் வேதனை.

ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது கமிகட்சு என்ற கிராமம். சமீபத்தில் மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். ட்ராஷ் ஃப்ரீ சிட்டி என்ற பெருமையை பெற்றிருக்கிறது இந்த கிராமம். அதாவது உலகிலேயே முதன் முறையாக குப்பைகளே இல்லாத மக்கள் வாழும் பகுதி இது தான்.

இந்த புகழை அடைவதற்கு அந்த கிராமத்தின் ஒவ்வொரு மக்களும் தங்களது பங்களிப்பை மிகச் சிரத்தையாக செய்திருக்கிறார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரிவுகள் :

பிரிவுகள் :

நம்மைப் போல மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு வகையை மட்டும் பிரித்து குப்பையினைப் போடவில்லை மாறாக அவர்கள் 34 வகையாக பிரித்து குப்பைகளை தனித்தனியாக சேகரித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாரையும் போல குப்பைகளை மொத்தமாக சேர்த்து எரித்து விடுவதையே வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள்.

Image Courtesy

2003 :

2003 :

இப்படி தொடர்ந்து எரிப்பதினால் சுற்றுப்புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதை உணர்ந்தார்கள். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர்,காற்று,உணவு என எல்லாமே மாசடைந்து போவதை உணர்ந்தவர்கள் 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் இந்த முடிவை எடுக்கிறார்கள்.

Image Courtesy

ஜீரோ வேஸ்ட் :

ஜீரோ வேஸ்ட் :

குப்பை உருவாதை தடுக்க வேண்டும், பின் அதனை தரம் பிரித்து மீண்டும் பயன்படுத்த வழி செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இப்படித்தான் திட்டமிட்டார்கள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் குப்பைகளை 34 வகைகளாக பிரித்தார்கள்.

Image Courtesy

 சோதனை :

சோதனை :

ஸ்டீல், க்ளாஸ்,கேன், அலுமினியம், துணி, ப்ளாஸ்டிக்,பேப்பர் என மிகவும் பார்த்து பார்த்து பிரிந்திருந்தார்கள். அவற்றையெல்லாம் சேகரித்து ப்ராசசிங் செண்டருக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். பின்னர் அங்கே குப்பை எல்லாம் சரியான பிரிவில் தான் போடப்பட்டிருக்கிறதா என்று சோதனையிடப்படுகிறது.

Image Courtesy

மாற்றிக் கொள்ளுங்கள் :

மாற்றிக் கொள்ளுங்கள் :

அங்கே பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே பயன்படுத்தியவற்றில் சிறிய ஓவியங்கள் அல்லது சில மாற்றங்களை செய்து பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வைத்திருக்கிறார்கள்.

ஆடைகளை கிழித்து குழந்தைகளுக்கான ஆடைகளாகவும், பொம்மைகளாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். இங்கிருக்கும் பொருட்களை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இங்கே உங்கள் வீட்டின் பயனற்றது என்று நினைத்தப் பொருட்களை இங்கே கொண்டு வந்து வைக்கலாம்.

Image Courtesy

 80 சதவீதம் :

80 சதவீதம் :

இன்றைக்கு அவர்கள் பயன்படுத்துவதில் எண்பது சதவீதத்திற்கும் மேல் குப்பைகளை சுழற்சி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைத் தான். இன்னும் தொடரும் பட்சத்தில் 100 சதவீதம் வந்து விடும் என்கிறார் இந்த வேஸ்ட் அகாடெமியின் அலுவலர்.

Image Courtesy

வாழ்க்கை முறை :

வாழ்க்கை முறை :

இந்த முறையினால் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையே மாறியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களையே மீளுருவாக்கம் செய்வதினால் விலை குறைவாகவே பல பொருட்களை வாங்குகிறார்கள்.

அதோடு அதனை வேஸ்டாக்கக்கூடாது என்பதற்காகவே வாங்கிய பொருட்களை பாதுகாக்கிறார்கள். தேவைக்கு அதிகமாகவோ அல்லது வெறும் அலங்காரத்திற்காக என்று சொல்லியோ தேவையற்ற பொருட்களை வாங்கி அவர்கள் குவிப்பதில்லை.

Image Courtesy

அறிக்கை :

அறிக்கை :

2015 ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் மூன்று பவுண்ட் குப்பைகள் கொட்டப்படுகிறது. இது தொடர்ந்து சேர்ந்து கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் குப்பைகள் தான் மலை போல குவிந்திருக்கும் என்கிறார்கள்.

Image Courtesy

 இவர்களைப் போல :

இவர்களைப் போல :

கமிகாட்சு கிராமத்தினைப் பார்த்து தற்போது ஒவ்வொருவராக குப்பை இல்லாத நகரத்தை வடிவமைக்க முன் வந்திருக்கிறார்கள். சன் டியாகோ,கலிஃபோர்னியா 2030 ஆம் ஆண்டிற்குள் 75 சதவீத குப்பைகளை மறு பயன்பாட்டிற்கு கொண்டு வந்திடுவோம் என்கிறார்கள். அடுத்த 15 ஆண்டுகளில் குப்பைகள் இல்லாத நகரமாக்குவோம் என்று சூளுரைத்திருக்கிறார்கள் நியூ யார்க் மக்கள்.

Image Courtesy

 குப்பை வண்டி :

குப்பை வண்டி :

நம் தெருவிற்கு வரும் குப்பை வண்டியில் குப்பையை கொட்ட சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு தெருமுக்கில் மலையென குவித்து விடுவோம். மூக்கை மூடிக் கொண்டு நாற்றம் குடலைப் பிரட்ட அதையே கடந்து சென்று வருவதை சாகசமாக செய்து கொண்டிருப்போம்.

ஆனால் இங்கே தனியாக குப்பை வண்டி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.

Image Courtesy

எல்லாரின் பங்களிப்பு :

எல்லாரின் பங்களிப்பு :

இது எதோ தனிப்பட்ட ஒரு நபரின் முயற்சியோ அல்லது சிலரது சுயலாபத்திற்காக்வோ இதனை நாங்கள் செய்யவில்லை. உங்களது எதிர்காலத்திற்காக, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் இதனை நாங்கள் செய்கிறோம்.

அதனல இதில் உங்களுடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று சொல்லி அவரவர் தங்கள் வீடுகளில் இருக்கும் குப்பைகளை தினமும் இங்கே குப்பைகளை ப்ராசஸ் செய்திடும் செண்டர்களுக்கு கொண்டு வந்து போட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மக்களும் அப்படியே செய்கிறார்கள்.

Image Courtesy

கடைகள் :

கடைகள் :

அங்கே மக்கள் மத்தியில் ஏன் எல்லாருக்குமே இந்த குப்பைகளை மறு பயன்பாடு செய்வது என்பது விருப்பமான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது, அதோடு குப்பைகளை சுழற்சி முறையில் பயன்படுத்துவதை அவர்கள் வரவேற்கவும் செய்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

First Zero waste city in the world

First Zero waste city in the world
Story first published: Thursday, March 29, 2018, 17:43 [IST]
Desktop Bottom Promotion