பிப்ரவரி 17- இன்றைய ராசி பலன்!

Posted By: Staff
Subscribe to Boldsky

புதிய நாள் பிறந்திருக்கிறது. பிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் சனிக்கிழமையான இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எங்களது வாழ்த்துக்கள். பொதுவாக எல்லாருக்குமே தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நினைவு கூர்வது பிடிக்கும். பல நேரங்களில் அன்னிச்சையாகவே இந்த செயல் நடந்திடும்.

எல்லா நேரங்களில் சிறந்த விஷயம் மட்டுமே நினைவுக்கு வரும் என்று சொல்ல முடியாது. அதோடு நம் கற்பனை வளத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்? வீணாக எதையாவது ஒன்றை கற்பனை செய்து கொண்டு அதைப் பற்றியே யோசித்து வீணாக மனம் புண்படும்படி ஆகிடும். இதனால் உங்களுடைய அன்றாட பணிகள் பெருமளவு பாதிக்கபடும். அதிகப்படியான சோர்வுடன் காணப்படுவீர்கள்.

 Feburary 17 Rasi Palan

இந்த ஒரு விஷயத்தை புரிந்து கொண்டால் இனி அப்படிப்பட்ட சோர்வு இருக்காது, இந்த வாழ்க்கை என்பது ஒரு பயணம் போல,நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். இறுதி இடமான மரணம் அல்லது உங்களது வாழ்க்கை லட்சியமான இலக்கினை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். அவ்வப்போது உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள , செய்த தவறுகளை நினைவு கூற, கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்க்கலாமே தவிர இப்படியெல்லாமா நான் வந்திருக்கிறேன் என்று வருத்தப்பட்டால்..... விபத்து தான் ஏற்படும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் :

மேஷம் :

இன்றைக்கு உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்திருக்கும், நண்பர்களால் சில தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தொழிலில் நீங்கள் செய்த மாற்றத்தின் பலனை உணர ஆரம்பிப்பீர்கள். தொழில் ரீதியாகவோ அல்லது வாழ்க்கை தொடர்பாகவோ உங்களின் அனுபவம் பிறருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் உண்டு.

இல்லறத்தில் அமைதியுண்டு. சூரிய பகவானை வணங்கினால் நல்லது நடக்கும்.

ரிஷபம் :

ரிஷபம் :

சற்று சுமாரான நாளாகத்தான் இருக்கும். எதிர்ப்பார்ப்பில்லாமல் நீங்கள் செய்த உதவிகள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படும். இதனால் மன வருத்தத்துடன் இன்றைய பொழுது கடந்திடும். செய்யும் வேலையில் சற்று கவனமாக இருந்திடுங்கள். வாக்குவாதத்தின் போது சொற்கள் பயன்படுத்துவதில் கவனம் தேவை.

உங்களது இருப்பை உணர்ந்தவர்கள், இடைவேளியை உடைத்துக் கொண்டு மீண்டும் உங்களுடன் உறவு கொண்டாட வருவர். சுவாமி ஐய்யப்பனை நினைத்து தியானித்தால் நல்லது.

மிதுனம் :

மிதுனம் :

எண்ணியவை எல்லாம் ஈடேறும் ஆற்றல் கொண்ட தினம் இன்று. மனதில் உள்ள சஞ்சலத்தினால் காலையிலிருந்து மதியம் வரை சற்று சோர்வாக காணப்பட்டாலும் அதன் பிறகு உற்சாகம் கொள்வீர்கள். தொழில் ரீதியாக உங்களுடன் போட்டியிட்டவர்கள் சுமூக உறவினை கடைபிடிப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல மதிப்பை பெறுவீர்கள்.

உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை உணரக்கூடிய சந்தர்ப்பம் இன்று வாய்த்திடும். மாலையில் காலபைரவரை வணங்குங்கள்.

கடகம் :

கடகம் :

குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள் குறிப்பாக குழந்தைகள். இன்று வீண் விரயம் உண்டு, மறதியால் அவதிப்படுவீர்கள். இன்று உங்கள் மீது மதிப்பு கொண்ட ஒருவரால் மனம் நெகிழ்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சுமூக போக்கினை நிலைநாட்ட உங்களது பங்களிப்பு அதிகமாக இருக்கும்.

நீண்ட நாள் எதிர்ப்பார்த்து காத்திருந்த வாய்ப்பு இன்று உங்களுக்கு ஏற்படும். அதனை சரியான முறையில் பயன்படுத்த திருமாலை வணங்கினால் நல்லது.

சிம்மம் :

சிம்மம் :

வீட்டிற்கு தேவையான பொருட்கள் இன்று வந்து சேரும், நினைத்த நேரத்தில் பண உதவி கிடைத்திடும். விலையுயர்ந்த பொருட்கள், குறிப்பாக மங்களப் பொருட்களை கவனமாக கையாள வேண்டும். தாயுடன் விரோதம் கொள்ள வேண்டாம்.

வியாபாரத்டிஹ்ல் இன்று எதிர்ப்பார்த்த லாபம் கிடைப்பது சிரமம். மஹாலட்சுமியை வணங்குவதால் இன்றைய பொழுதை இனிமையாக்கலாம்.

கன்னி :

கன்னி :

இன்றைக்கு உங்களுக்கு வீண் அலைச்சல் உண்டு, மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள் உடன் பிறப்புக்களால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உங்களை அங்கீகரித்து பாராட்டுவார்கள். காலையில் சோர்வுடன் காணப்படுவீர்கள். நெருப்பில் கவனமாக இருந்திடுங்கள். நண்பர்களின் உதவி பெறுவதில் கவனம் தேவை.

பொருளாதார வளர்ச்சியில் உங்களுடைய வியாபாரம் மந்த நிலையிலேயே இருக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினாள் நல்லது.

துலாம் :

துலாம் :

உடல் உபாதையினால் அவதிப்படுவீர்கள். பணத்தை கையாளும் போது கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணையால் உற்சாகம் கொள்ளும் நாளிது. வியாபாரத்தில் எதிர்பாராத மகிழ்ச்சி கிட்டும். மன அமைதிக்காக மூச்சுப்பயிற்சி செய்யத் துவங்குங்கள். உங்களிடம் கடன் பெற்றவர்களிடமிருந்து சிறிய தொகை கிடைக்க வாய்ப்புண்டு,

ஆஞ்சிநேயரை வழிபடுவதால் உடல் பலம் பெறும்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

உங்களது இயலாமையை நினைத்து வருத்துப்படுவீர்கள். வீண் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம். உங்களது சிந்தனையால் இன்று பாராட்டப்படுவீர்கள். குழந்தைகளினால் மகிழ்ச்சி பிறக்கும். அன்றாடம் கடைபிடிக்கும் ஏதேனும் ஒரு பழக்கத்தை இன்று மறப்பீர்கள். வீஷப்பூச்சிக்களினால் இன்று உங்களுக்கு ஆபத்து நேரலாம்.

இரவு நேரங்களில் தனியாக பயணிப்பதை தவிர்த்திடுங்கள். துர்க்கையம்மனை வழிபடுவதால் நல்ல வழி பிறக்கும்.

தனுசு :

தனுசு :

உங்களது தேவையறிந்து உதவி செய்ய முன்வருவார்கள் மறுக்காது ஏற்றுக்கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு ஆன்மீக சிந்தனை மேலோங்கும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புண்டு. இன்று உங்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். பரமசிவனை வணங்குவதால் மேன்மை கிடைக்கும்.

மகரம் :

மகரம் :

பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் நாட்டம் கொள்வீர்கள் அலுவலக வேலையாக தொலைதூர பயணம் மேற்கொள்ளலாம். தந்தையின் உடல் நலனில் சற்று முன்னேற்றம் உண்டு, குழந்தைக்காக இன்று கூடுதல் அலைச்சல் உண்டு. மறதியினால் நண்பர்கள் மத்தியில் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.

வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்கனவே பேசி வைத்திருந்த ஆர்டர்கள் கைநழுவ வாய்ப்புண்டு. நடராஜரை வழிபட்டால் நல்லது.

கும்பம் :

கும்பம் :

பிறந்தகத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்க்கும். காதல் விவகாரத்தில் தலை காட்ட வேண்டும். இன்று செல்வம் அதிகரிக்கும். நான்குச்சக்கர வாகன யோகம் உண்டு.செரிமானம் தொடர்பான சிக்கல் இன்று உங்களை பாடாய்படுத்தும் . வியாபாரிகளுக்கு பண வரவு உண்டு. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டு.

குடும்பத்துடன் முருகன் கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

மீனம் :

மீனம் :

வீண் கோபம் கொள்ளும் நாளாக இது உங்களுக்கு அமைந்திருக்கும். வீண் பேச்சினால் இன்று உங்களுக்கு தொல்லை உண்டு. திடீர் செலவுகளால் திணறிப்போவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு நிகழலாம். வெளியிடங்களில் உணவுகளை தவிர்ப்பத்து நல்லது.கண்ணெரிச்சல் பிரச்சனை ஏற்படும்.

கருடாழ்வாரை வணங்குவதால் நன்மை பிறக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Feburary 17 Rasi Palan

Feburary 17 Rasi Palan
Story first published: Saturday, February 17, 2018, 6:30 [IST]