பிப்ரவரி 13 ஆம் தேதிக்கான ராசி பலன்கள்!

By: Staff
Subscribe to Boldsky

உங்களுடைய நாளை இன்று துவங்குவதற்கு முன்னால் உங்களின் ராசிப்படி இன்றைய தினம் உங்களுக்கு எப்படியிருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் மேஷ ராசி கொண்டவர்களுக்கு இன்றை நாள் மிகச்சிறப்பான நாளாக உங்களுக்கு அமைந்திடும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும். உங்களின் மூத்த உடன் பிறப்புகளால் சுபச் செலவுகள் ஏற்படும். பூர்விக சொத்துக்கள், வியாபாரம் ஆகியவற்றினால் உங்களுக்கு லாபம் கிட்டும். நீங்கள் செய்யும் செயல்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். மாறாக சரிக்கு சரி பதிலடி கொடுக்க வேண்டாம்.

Feb 13 Rasi palan

இன்று உங்களுக்கு வெள்ளை அதிர்ஷ்ட நிறமாகவும், அதிர்ஷ்ட எண் இரண்டாகவும் இருக்கிறது. அசுவினி நட்சத்திரம் கொண்டவர்களுக்கு இன்று மேன்மை தரக்கூடிய நாளாக இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உங்களது பணியில் பாராட்டு அல்லது லாபம் கிடைக்கக்கூடும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உங்களுடைய மதிப்பு அதிகரிக்கக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரிஷபம் :

ரிஷபம் :

நீண்ட காலமாக எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் இன்று நடக்கக்கூடும். நெருங்கிய நட்பிடமிருந்து கிடைக்கக்கூடிய பண உதவியினால் இழந்த பொருட்களை மீட்பீர்கள். இன்றைக்கு நிறைய பயணம், அதாவது அலைச்சல் இருக்கும். இன்றைக்கு உங்களது அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட எண் ஒன்று மற்றும் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

கிருத்திகை நட்சத்திரம் கொண்டவர்களுக்கு இன்று அனுகூலமான நாளாகும், ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று நீங்கள் துவங்கிய வேலை வெற்றியடையும். மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று இன்பமயமான நாளாக அமைந்திடும்.

மிதுனம் :

மிதுனம் :

இன்று புனித இடங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள், அல்லது பயணம் மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். இன்று உங்களுக்கு சந்திராஷ்டம் இருப்பதினால் உங்களது வியாபாரத்தில் நடுத்தரமான விற்பனையே இருக்கும். நீங்கள் எதிர்ப்பார்த்த உதவி கிடைக்க தாமதப்படலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரம் கொண்டவர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று தங்களது வேலைகளில் மிகவும் சோர்வுடன் காணப்படுவர், புனர்பூசம் நட்சத்திரம் கொண்டவர்களுக்கு காலம் தாழ்ந்த உதவி கிடைக்கப்பெறும்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை தென் மேற்கு,அதிர்ஷ்ட எண் ஐந்து, அதிர்ஷ்ட நிறம் பச்சை

கடகம் :

கடகம் :

அலுவலகத்தில், அல்லது நீங்கள் பணி செய்யக்கூடிய வீடு அல்லாத பிற இடங்களில் உடன் இருப்போரால் தொல்லை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு, அதனால் தேவையற்ற விவாதங்களை வளர்க்காமல் பொறுத்தும், அனுசரித்தும் செல்ல வேண்டும்.குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்தியை கொடுப்பர். மகிழ்வான அந்த செய்தி உங்களுடைய இந்த நாளை முழுமையாக்கும்.

அறிமுகமில்லாத, புதிய நபர்களிடத்தில் பேசுவதையோ வாக்குவாதத்தில் ஈடுபடுவதையோ தவிர்க்கவும்.

புனர்பூசம் நட்சத்திரம் கொண்டவர்கள் இன்றைக்கு கண்டிப்பாக வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பூசம் நட்சத்திரக்காரர்கள் இன்று உங்களது ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள், ஆயில்யம் நட்சத்திரம் கொண்டவர்களுக்கு சுப செய்திகள் வரும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட எண் இரண்டு மற்றும் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

 சிம்மம் :

சிம்மம் :

நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள்.அவர்களது அனுகூலமான ஆதரவினால் இன்று உற்சாகம் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் சுற்றத்தாரிடம் அன்னியோன்னியத்தை கடைபிடிப்பர்.

கன்னி :

கன்னி :

பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளில் முழு கவனத்துடன் ஈடுபடுவது அவசியமானது. சின்ன சின்ன உடற் பிணி வந்து போகலாம் . வியாபாரம் தொடர்பான கடனுதவி உங்களுக்கு கிடைத்திடும். நண்பர்களுடன் சேர்ந்து வீண் செலவுகள் செய்ய நேரிடும்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் இன்று வீண் விவாதங்களை தவிர்க்கவும், அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு மருத்துவ அணுகூலம் உண்டு. சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று இன்பமயமான நாள்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட எண் ஏழு, மற்றும் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்

துலாம் :

துலாம் :

உங்களுக்கான ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்குவதில் இன்றைக்கு உங்களுக்கு சுபச் செலவுகள் உண்டாகிடும். இன்று பங்கு பெறப்போகும் போட்டியில் உங்களுக்கு வெற்றி கிட்ட அதிக வாய்ப்புகள் உண்டு.

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பினால் இன்று வீட்டில் அமைதி நிலவிடும்.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் சிறந்த பலனளிக்கும். ஸ்வாதி நட்சத்திரக்காரர்களுக்கு பல நாளாக எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒரு விஷயம் நடந்தேறும். விசாகம் நட்சதிரம் கொண்டவர்களுக்கு தகுந்த நேரத்தில் பிறரது உதவி கிடைத்திடும்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட எண் எட்டு மற்றும் அதிர்ஷ்ட நிறம் கருப்பு

விருச்சிகம் :

விருச்சிகம் :

இன்று உங்களது தாயின் உடல் நலத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள். சுயதொழில் செய்ய நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் சிறந்த பலனைக் கொடுத்திடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பினால் தொழிலில் இன்று நல்ல லாபம் பார்க்கலாம்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியடையும், அனுஷம் நட்சத்திரக்காரகர்களுக்கு இன்று செலவு அதிகம். குறிப்பாக ஆடை விஷயத்தில். கேட்டை நட்சத்திரக்கார்களுக்கு இன்று சாதகமான நாளாகும்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட எண் நான்கு மற்றும் அதிர்ஷ்ட நிறம் ஊதா.

தனுஷு :

தனுஷு :

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். தேவையற்ற, உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் விதண்டாவாதமாக இறங்க வேண்டாம். சுய தொழில் செய்பவர்கள் உங்களது நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்திடுங்கள்.

மூலம் நட்சத்திரக்கார்கள் இன்று நீங்கள் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைத்திடும்.

பூராடம் நட்சத்திரக்கார்களுக்கு இன்று நீங்கள் துவங்கிய விஷயம் வெற்றியடையும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று மகான்களின் தரிசனம் கிட்டும்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட எண் மூன்று மற்றும் அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள்.

 மகரம் :

மகரம் :

வெளியில் சொல்லியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் சந்தர்ப்பம் இன்று கிடைத்திடும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வதில் கவனமாக இருங்கள். அதே போல இன்றைக்கு உங்களுடைய வேலையில் சில சறுக்கல்களை சந்திக்க நேரிடலாம்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு புதிய நட்பு கிடைக்கும் வாய்ப்புண்டு,திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று உங்களது வேலையில் அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியம், அவிட்டம் நட்சத்திரக்கார்கள் எந்த விதமான விஷயத்தை நினைத்தும் கவலைப் படமால் மன அமைதியுடன் இருப்பார்கள்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட எண் ஆறு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

கும்பம் :

கும்பம் :

சுய தொழில் செய்யும் உங்களுக்கு நல்ல விருத்தி கிடைத்திடும். வேலை பார்க்கும் இடத்தில் உங்களது மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே உறவு பலப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் உங்களிடத்தில் வந்து நட்பு பாராட்டுவர். நன்கொடைகள் கொடுப்பீர்கள்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை மேலோங்கும், சதயம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கு இன்று புதிய நட்புகள் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு ஆன்மீக செலவுகள் உண்டாகும்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட எண் 1 மற்றும் அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு.

மீனம் :

மீனம் :

இன்று உங்களுக்கு நல்ல சேதி கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழல் இன்று உண்டு . இன்று உங்களது உடல் நலனில் அக்கறை கொண்டு கவனமாக இருப்பது அவசியமாகும்.உங்களது பணிச்சூழலினால் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்வான நாளாக இருக்கும். உத்திரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு கிடைத்திடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியம்.

இன்று உங்களது அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட எண் ஆறு, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Feb 13 Rasi palan

Feb 13 Rasi palan
Subscribe Newsletter