For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேங் வார், நடிகையுடன் உறவு, துபாயில் ராஜ்ஜியம்... தாவூத் நிழலுலக தாதாவாக உருவான கதை!

ஹெட் கான்ஸ்டபிள் மகனாக பிறந்து, நிழலுலக தாதாவாக வளர்ந்த தாவூத் இப்ராஹீம் பற்றிய திடுக்கிடும் உண்மை

By Staff
|

இந்தியாவின் பெயர்போன கொள்ளைக்கூட்ட தலைவன், தீவிரவாதி. 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின் இருந்த மாஸ்டர் மைண்ட். பிறந்தது மும்பையை சேர்ந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிளுக்கு மகனாக. ஆனால், வளர்ந்ததோ திருட்டுப் பயலாக.

மும்பையின் டோங்ரி என்ற பகுதியில் வளர்ந்தவர் தாவூத். ஆரம்பத்தில் சின்ன, சின்ன வேலைகளை செய்து வந்தான். பிறகு கார் ரிப்பேர் செய்வது, ரிக்ஷா ஓட்டுவது போன்ற வேலைகளை செய்தான். பதின் வயதினிலே திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட துவங்கினான். ஹாஜி மஸ்தான் மற்றும் கரீம் லாலா கூட்டத்தில் இணைந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட துவங்கினான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொள்ளை கும்பல்!

கொள்ளை கும்பல்!

ஒரு கட்டத்தில் ஹாஜி மஸ்தான் கூட்டத்தில் இருந்து வெளியேறிய தாவூத் இப்ராஹீம் டி-கம்பெனி என்ற பெயரில் தனக்கான கூட்டத்தை உருவாக்கி கொண்டான்.

1970களில் டி-கம்பெனி மிகவும் பிரபலமானதாக இயங்கி வந்தது. ஹவாலா, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், ஆயுதங்கள் கடத்தல் என 25 உலக நாடுகளில் ஏகபோகமாக நிழலுலக பிஸ்னஸ் செய்து வந்தான் தாவூத்.

மோஸ்ட் வாண்டட்!

மோஸ்ட் வாண்டட்!

1993ம் ஆண்டு மும்பையில் இவன் தலைமையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகே தேசம் முழுதும் அறியப்பட்ட நபராக மாறினான் தாவூத் இப்ராஹீம். அப்போது தான் இவனை சர்வதேச குற்றவாளியாக இந்தியாவும், அமெரிக்காவும் அறிவித்தன.

தாவூத் இப்போது பாகிஸ்தான் கராச்சியில் தங்கி இருப்பதாக அறியப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிகவும் தேடப்பட்டும் தீவிரவாதியாக உருவெடுத்துள்ளான் தாவூத். தேசிய புலனாய்வு அமைப்பு இவனை நீண்ட காலமாக பிடிக்க முயற்சி செய்து வருகிறது.

பிறப்பு!

பிறப்பு!

தாவூத் பிறந்தது டிசம்பர் 27, 1955ல். இவனது பூர்வீகம் மகாராஸ்டிரா, ரத்னகிரி என்ற பகுதியில் இருக்கும் கேத் எனும் சிறிய டவுன் பகுதி. இவனது அப்பா இப்ராஹீம் காஸ்கர் மும்பை போலீஸ் துறையில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர். இவனது அம்மா அமினா ஹவுஸ் வைஃப்பாக இருந்து வந்தார்.

ரத்னகிரியில் இருந்து இவனது குடும்பம் மும்பையில் இருந்த டோங்ரி என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தாவூத். ஆனால், இவனது கனவுகள் மிகவும் பெரியவை. சிறு வயதில் இருந்தே படிப்பில் பெரிதாக நாட்டம் இல்லாத இவன் பள்ளியில் இருந்து டிராப் அவுட்டானான்.

இளம் வயதில் இருந்து தானாக சம்பாதிக்க ஆரம்பித்தான். மெக்கானிக் வேலை, ரிக்ஷா ஓட்டுவது என பல வேலை செய்து சம்பாதித்தான். ஆனால், அவை எல்லாம் தாவூத்தின் கனவுகளை எட்டிப்பிடிக்க போதவில்லை.

போலி வியாபாரம்!

போலி வியாபாரம்!

பதின் வயதில் சின்ன, சின்ன குற்றங்கள் செய்ய துவங்கினான். கூட்டநெரிசல் மிகுந்த மார்கெட்களை டார்கெட் செய்து திருட ஆரம்பித்தான். மேலும், மார்கெட்களில் போலியான பொருட்ளை, போலியான பரிசு பட்டியலுடன் விற்க துவங்கினான். இவன் மீது பல வழக்குகள் பதிவாக துவங்கியது.

பதின் வயதின் இறுதி கட்டத்தில் கரீன் ளால் மற்றும் ஹாஜி மஸ்தான் கூட்டத்தில் இணைந்து பணியாற்றி வந்தான் தாவூத். ஒரு கட்டத்தில் நிழலுலக தாதாவாக உருவாக வேண்டும் என்ற ஆசை தாவூத் இப்ராஹீம் மனதில் ஆழமாக பதிந்தது. ஒரு கட்டத்தில் ஹாஜி மஸ்தான் மற்றும் பதான் கூட்டத்திற்கு நடுவே பெரிய சண்டை நடந்தது. மும்பை கண்ட பெரிய கேங் வார் என்று கூறப்படும் அளவிற்கு அந்த சண்டை இருந்தது.

தாதா!

தாதா!

சண்டையின் முடிவில் தாவூத் அனைவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்த காலக்கட்டத்தில் தான் ஹாஜி மஸ்தான் இந்திய அரசியலில் நுழைந்தார். தாவூத் இப்ராஹீம் மும்பையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். அந்த சமயத்தில் தான் தாவூதின் டி-கம்பெனி உதயமானது.

மும்பையில் இருந்து துபாய்க்கு ஷிப்ட்டான தாவூத் அங்கிருந்தே தனது தொழிலை இயக்க துவங்கினான். ஹவாலா, போதை பொருள், ஆயுதங்கள் கடத்தல் என தனது தொழிலை விரிவாக்கினான் தாவூத். 1983 -1988க்கு இடைப்பட்ட காலத்தில் மும்பையின் அனைத்து பெரிய கொள்ளை குழுக்களை அழித்தான் தாவூத். இதனால் மும்பையின் நிரந்திர நிழலுலக தாதாவாக உருவெடுத்தான் தாவூத்.

துபாய் வாழ்க்கை!

துபாய் வாழ்க்கை!

துபாயில் லோக்கல் ஷேக்குகளின் உதவியோடு அங்கும் தனது அதிகாரத்தை நிலைப்படுத்தி கொண்டான் தாவூத். துபாயின் பெரும் கொள்ளைக் கூட்ட தலைவர்களில் ஒருவனாக மாறினான். மக்களை அச்சத்தில் வைத்திருப்பது மிகவும் விரும்பினான் தாவூத்.

டைகர் மேனன் உட்பட சிலரின் உதவியோடு மும்பையில் தொடர்ந்து கொள்ளை மற்றும் கடத்தல் வேலைகளை செய்து வந்தான். மார்ச் 12, 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் முதன்மை குற்றவாளியாக தாவூத் கருதப்படுகிறான்.

இந்த சம்பாவித செயலால் 257 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகே இந்திய அரசாங்கம் இவனை மோஸ்ட் வாண்டட் கிரிமினல் என அறிவித்தது. அப்போது தாவூத்திற்கு ஒசாமா பின் லேடனுடன் தொடர்பு இருந்ததாகவும் அறியப்பட்டது. இதனால் அமெரிக்கா தாவூத்தை சர்வதேச குற்றவாளியாக அறிவித்தது.

கராச்சியில் தஞ்சம்!

கராச்சியில் தஞ்சம்!

டைம்ஸ் நவ்வில் வெளியான செய்தியின் மூலம் தாவூத் பாகிஸ்தான் கராச்சியில் பதுங்கி இருப்பதாகவும். பாகிஸ்தான் அரசு இவனுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. பாகிஸ்தானில் தாவூத் ஒன்பது முகவரி மற்றும் மூன்று பாஸ்போர்ட் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

பல பாலிவுட் நட்சத்திரங்கள் தாவூத் உடன் தொடர்பில் இருப்பதாக அறியப்படுகிறது. 1980 -90களில் சில தயாரிப்பாளர்கள் தாவூத்திடம் இருந்து படம் தயாரிக்க பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. மந்தாகினி எனும் இந்தி சினிமா நாயகியுடன் தாவூத் உறவில் இருந்ததாகவும் அறியப்படுகிறது.

கிரிக்கெட்!

கிரிக்கெட்!

தாவூத் கிரிக்கெட் சூதாட்டங்களில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 1986ல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியின் போது அப்போதைய இந்திய கேப்டன் கபில் தேவிடம் தாவூத் டிரெஸ்ஸிங் அறைக்கு வந்து விலை பேசியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தாவூத் உள்ளே வந்து பேச ஆரம்பித்த மறுநொடியே கபில் திட்டு விரட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தாவூத் இப்ராஹீம் மெஹ்ஜபீன் சாயிக் என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டான். இவனுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். இவனது ஒரு மகளை பாக்சிதான் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியானந் திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு மகளை பாகிஸ்தான் - அமெரிக்க தொழிலதிபரான மெஹ்ரீன் என்பவர் திருமணம் செய்து கொண்டார்.

மொயின் இப்ராஹீம் எனும் தாவூத்தின் ஒரே மகன் தாவூத்துடனான ராஜ வாழ்கையில் இணைந்து வாழ மறுத்து சென்ற ஆண்டு ஆன்மீகத்தில் இணைந்துவிட்டதால் தாவூத் மன அழுத்தம் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Under World Don Dawood Ibrahim!

Dawood Ibrahim is a notorious Indian gangster and a designated terrorist, who is the mastermind of the 1993 Mumbai serial bomb blasts. Born to a constable of ‘Mumbai Police,’ he grew up in Dongri, Mumbai
Desktop Bottom Promotion