Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
நடனமாடி சிரித்து கொத்து கொத்தாய் மரணித்த மக்கள்!
மாதக்கணக்கில் நடனமாடி இறந்த மக்கள் வரலாற்றில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு
என்னவென்றே தெரியாத நோய்கள் தாக்கி அதிகப்படியான மக்கள் உயிரிழப்பது தொடர்ந்திருக்கிறது. திடீரென்று தொற்றுநோய் போல காய்ச்சல் பரவி கொத்து கொத்தாக செத்து விழுந்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் கூட இதற்கு அஞ்சினார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுமார் 644 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில் இருக்கும் ஏச்சன் என்ற ஊரில் விசித்திரமான முறையில் நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு விஷக்காய்ச்சல் பரவி எல்லாம் இறக்கவில்லை அவர்கள் எல்லாரும் நடனமாடிக் கொண்டே இறந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வினை 'டான்சிங் பிளேக்' என்று குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றில் நிகழ்ந்த இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கருத்துக்கள் உலாவி வருகிறது.

#1
நாமெல்லாம் மகிழ்ச்சியான தருணங்கள், கொண்டாட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்த நடனமாடுவோம். ஆனால் இந்த நடனமே அதிகரித்து உயிரிழப்பு ஏற்படுகிறது என்றால் சாதாரண விஷயம் கிடையாது. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் மறக்கடிக்கப்பட்ட பிளேக் நோய் என்கிறார்கள். அதோடு எதற்காக மக்கள் அப்படி நடனமாடினார்கள். தங்களால் கட்டுப்படுத்த முடியாது நடனமாடி மரணிக்கும் வரை அங்கே என்ன நிகழ்ந்தது என்று இப்போது பார்க்கலாம்.
இன்று வரை மக்கள் விடாமல் நடனமாடியதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

#2
நடனம் என்றால் நீங்கள் நினைப்பது போல ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ ஆடுவதல்ல இவர்கள் மாதக்கணக்கில் நடனமாடியிருக்கிறார்கள். தங்களை அறியாமல் மயங்கி விழுந்தால் தான் உண்டு. இல்லையென்றால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருந்திருக்கிறார்கள். நடனமாடுவதை விட சிலருக்கு சில விசித்திர பழக்கங்களும் ஏற்பட்டதாம்.
விலங்கைப் போல நாலு காலில் நடப்பது, விசித்திரமான குரலில் ஊளையிடுவது என தொடர்ந்திருக்கிறது.

#3
அப்போதிருந்த ஆட்சியாளர்கள் இந்த மக்களை கடுமையாக சித்திரவதை செய்திருக்கிறார்களாம். மக்களை அடித்து நிர்வாணமாக்கி தெருக்களில் நடக்கவிட்டிருக்கிறார்கள். தெருக்களில் உறவு வைத்துக் கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டார்களாம்.
கடுமையான அசைவுகளுடன் நடனமாடி கீழே விழுவதினால் அவர்களின் விலா எலும்பு எல்லாம் ஒடிந்திருக்கிறது.

#4
7 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரை இந்த விஷயம் தொடர்ந்திருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் நடைப்பெற்ற மரணங்களிலேயே மிகவும் அதிகபட்ச மக்கள் மரணித்தது தான் இன்றும் டான்சிங் பிளேக் என்று விமர்சிக்கப்படுகிறது.
ஜூன் 24 ஆம் தேதி 1374 ஆம் ஆண்டு ரோமன் ஆட்சி நடந்து கொண்டிருந்த ஏச்சன் என்ற ஊரில் நிகழ்ந்த நிகழ்வினைத் தான்.

#5
இதன் பிறகு இங்கிருந்து மெல்ல ஜெர்மனி மற்றும் இத்தாலிக்கும் பரவி சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு குறித்து சொல்லும் போது முதலில் ஒரேயொரு பெண் எழுந்து நடனமாடினாள் மெல்ல அது எல்லாருக்கும் பரவி ஒவ்வொருவராக எழுந்து நடனமாட ஆரம்பித்து விட்டார்கள் என்கிறார்கள்.
இந்த சம்பவம் நிகழ்ந்தது ஜூலை மாதம் 1518 ஆம் ஆண்டு. அந்த ஊரில் விளைந்த கோதுமையில் இந்த வைரஸ் தொற்று இருந்தது. அதைச் சாப்பிட்ட மக்களுக்கு இது பரவியது என்றும். கடல் வழியாக வந்து சென்றவர்களின் மூலமாக பரவியிருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

#6
ஃப்ரவ் ட்ரோபியா என்ற பெண்மணி திடிரென்று கைகால்களை வெட்டி ஆக்ரோசமாக நடனமாட ஆரம்பித்தார். பெரிய சத்தமோ, இசையோ,குரலோ எதுவும் கேட்கவில்லை இயல்பாக வழக்கம்போலத்தான் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஆக்ரோசமாக நடனமாட ஆரம்பித்தார்.
கட்டுப்படுத்த முடியாத வகையில் மிகவும் தீவிரமாக ஆடினார். ஆரம்பத்தில் அவளை கட்டுப்படுத்த நினைத்தவர்கள் சளைத்துப் போய் அப்படியே விட்டார்கள். ஃப்ரவும் விடாமல் ஆடிக் கொண்டிருந்தார். பின் மெல்ல பார்த்தால் அங்கிருந்த நான்கைந்து பேர் மெல்ல கை கால்களை அசைத்து நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வாரத்தின் முடிவில் சுமார் முப்பது பேர் வரை இப்படி நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இரவு பகலாக நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

#7
ஃப்ரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்போர்க் என்னும் இடத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த நகரத்தில் வாழ்ந்த நானூறு மக்கள் வரையில் நடனமாட ஆரம்பித்திருந்தார்கள்.தொடந்து நடனமாடிய நிலையில் ஒவ்வொருவராக செத்து விழுந்திருக்கிறார்கள்.
மூச்சுத்திண்றல், மாரடைப்பு, வலிப்பு ஆகியவையே அவர்களின் மரணத்திற்கான காரணியாக சொல்லப்படுகிறது.

#8
இசையே இல்லாமல் இப்படி நடனமாடுகிறவர்களை கட்டுப்படுத்த மெல்லிய இசையை பரப்பிவிட்டால் அந்த இசைக்கு ஏற்ப நடனமும் குறையும் என்ற எண்ணத்தில் அந்த டவுனுக்கு ஒரு பேண்டு குழு அழைக்கப்பட்டு இசை நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால் அங்கே அவர்கள் எதிர்பார்த்தைவிட வினோதமாக மேலும் சிலர் நடனமாட ஆரம்பித்தார்களாம். ஜூலை மாதத்தில் துவங்கிய இந்த நடனம் செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்திருக்கிறது.

#9
1374 முதல் 1518 வரை இந்த டான்சிங் பிளேக் தாக்கம் இருந்திருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் நடனமாடுகிற ஒரு உருவத்தைதான் கடவுளாக வழிபட்டிருக்கிறார்கள் என்றும் அந்த கடவுளே இப்படி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இது தவிர கண்டுபிடிக்கப்படாத ஒரு நோய் பரவியது என்றும் கூறப்படுகிறது. தனக்கு விருப்பமின்றி தான் அதாவது தங்களால் கட்டுப்படுத்த முடியாமல் தான் இப்படி விசித்திரமாக நடனமாடினார்கள் என்பதற்கு சில சான்றுகள் சொல்லப்படுகிறது.
அவர்கள் வலியால் கத்தினார்கள், உதவி கேட்டு அலறினார்கள், மன்னித்துவிடும்படி கெஞ்சினார்கள். விருப்பத்துடன் நடனமாடுகிறவர்கள் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் தானே....

#10
இதேபோல 1962 ஆம் ஆண்டு டான்சானியாவின் கசாசா என்ற கிராமத்தில் திடீரென்று இப்படி சிரிக்கும் வியாதி வந்தது, சிரிப்பது வியாதியா? வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் தானே.... என்று யோசிக்கவேண்டாம்.
மேலே நாம் பார்த்த நடனமாடி இறந்தவர்களைப் போல இவர்கள் சிரித்து சிரித்தே வாழ்நாளை முடித்திருக்கிறார்கள்.

#11
ஜனவரி 30,1962 ஆம் ஆண்டு கசாசாவின் பள்ளி மாணவி ஒருவருக்கு இப்படி இடைவிடாமல் தொடர்ந்து சிரித்து இதனை ஆரம்பித்து வைத்திருக்கிறார். தொடர்ந்து வகுப்பறையில் அருகில் உட்கார்ந்திருந்த அடுத்த மூன்று சிறுமிகள் சிரிக்க ஆரம்பித்தார்கள். இப்படியே மெல்ல அந்த பள்ளி முழுவதும் இந்த சிரிப்பு நோய் பரவியிருக்கிறது. 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 159 மாணவர்களில் 95 மாணவர்கள் இப்படியான சிரிப்பு நோயால் பாதிக்கப்பட்டார்கள்.
சிலர் சிரிப்பதும், அழுவதும் தொடர்ந்திருக்கிறது இப்படியே சிலர் சில மணி நேரங்களில் பிழைத்துக் கொண்டார்கள் இன்னும் சிலருக்கோ பதினைந்து நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்திருக்கிறது.

#12
இந்த மாணவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்ல அங்கிருப்பவர்களுக்கு பரவ என மெல்ல பரவி கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த சிரிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஊரில் இருந்த பதினான்கு பள்ளிகளும் மூடப்பட்டது.
இது அதீத மன அழுத்தத்தினால் ஏற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த விவாகரம் வெளியே தெரிந்து ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications