பலரும் அறியாத பிரிட்டிஷ் அரச குடும்ப திருமண விழா இரகசியங்கள் மற்றும் உண்மைகள்!

பலரும் அறியாத பிரிட்டிஷ் அரச குடும்ப திருமண விழா இரகசியங்கள் மற்றும் உண்மைகள்!

By John

பிரிட்டிஷ் அரசு குடும்ப திருமணம் என்றாலே இங்கிலாந்து பெரும் விழா கோலமாக தான் இருக்கும். இளவரசரின் மணப்பெண் யார் என்ற கேள்வி எழுவதில் இருந்து, அவரை குறித்து அறிந்துக் கொள்வது, பின்னணி என்ன, எங்கே இருந்தவர், என்ன படித்தவர் என தேடி, தேடி படித்து அறிந்துக் கொள்வார்கள்.

அந்த ஜோடி கருத்தரிப்பதில் இருந்து குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு என்ன பெயர் என்பது வரை அந்த ஜோடியின் பெயர் அடிக்கடி வைரலாக அடிப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.

Facts About British Royal Weddings!

Image Source: Youtube

ராயல் குடும்ப திருமணம் மிக விமர்சையாக நடக்கும். உலக நாடுகளில் இருந்து பெரும் பிரபலங்கள், அரசு அதிகாரிகள், பிரதமர்கள் எல்லாம் வருகை தருவார்கள். ஆடம்பரமாக இருக்கும் என்று நாம் அறிவோம். ஆனால், அதற்கு பின்னணியில் நிறைய இரகசியங்களும், உண்மைகளும் குவிந்துக் கிடக்கின்றன.

அவர்கள் ஏன் வெள்ளை ஆடை தான் உடுத்த வேண்டும் என்பதில் இருந்து ஏன் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள் என்பது வரை ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கும் பின்னால் ஒரு உண்மை, ஒரு வரலாறு இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை ஆடை!

வெள்ளை ஆடை!

பிரிட்டிஷ் அரச குடும்ப திருமணங்களில் மணப்பெண் வெள்ளை நிற உடை உடுத்துவது பாரம்பரியமாக காணப்பட்டு வருகிறது. ஆனால், வெள்ளை உடை தான் உடுத்த வேண்டும் என்ற நிலை, 1840ம் ஆண்டு ஆல்பர்டை ராணி விக்டோரியா திருமணம் செய்துக் கொண்ட பிறகு தான் கட்டாய வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இராணி விக்டோரியாவின் திருமணத்திற்கு பிறகு தான் வெள்ளை நிற திருமண உடையானது பிரபலமானது மற்றும் பாரம்பரிய வழக்கமாக பின்பற்ற துவங்கப்பட்டது.

கேக்!

கேக்!

அரச குடும்ப திருமணத்தில் பெரும் பங்கு வகிக்கும் மற்றொரு வழக்கம் கேக். திருமணம் முடிந்தவுடன் சந்தோசமாக புதுமண தம்பதி கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால், அந்த கேக்கின் மேல் பகுதியில் மணப்பெண், மணமகன் உருவ தோற்றம் கொண்ட பொம்மைகள் இடம்பெறுவது அறிமுகமானது விக்டோரியா - ஆல்பர்ட் திருமண வைபவத்தின் போது தான். ஏறத்தாழ ஒன்பது அடி உயரம் கொண்ட, இரண்டு அடுக்க கேக்கின் மேல் பகுதியில் புதுமண தம்பதி பொம்மைகள் அலங்கரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ரேடியோ!

ரேடியோ!

அரச குடும்ப திருமணம் என்றாலே இங்கிலாந்து விழா கோலம் கொண்டிருக்கும். அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்படும். மணமக்களை வாழ்த்த கூட்டம், கூட்டமாக மக்கள் அரண்மனைக்கு வெளியே காத்திருப்பார்கள். முதன் முறையாக இளவரசி எலிசபெத் மற்றும் பிலிப் மவுண்ட்பேட்டன் திருமணத்தை தான் ரேடியோவில் ஒலிபரப்பு செய்தனர். நவம்பர் 20ம் தேதி, 1947ம் ஆண்டு நடந்த இந்த திருமண செய்தி ஒளிபரப்பை 200 மில்லியன் மக்களுக்கும் மேல் கேட்டிருந்தனர்.

பரிசுகள்!

பரிசுகள்!

எலிசபெத் - பிலிப் திருமணத்தின் போது, ஏறத்தாழ 2,500க்கும் மேற்ப்பட்ட விலை உயர்ந்த பரிசுகளும், 10,000க்கும் மேற்ப்பட்ட வாழ்த்து கடிதங்களும் உலகெங்கிலும் இருந்து வந்து குவிந்தனவாம்.

தொலைக்காட்சி!

தொலைக்காட்சி!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் அரசு குடும்ப திருமணம் இளவரசி மார்கரெட் உடையது. இவர் இராணி எலிசபெத்தின் சகோதரி. இவர் ஆண்டனி ஆர்ம்ஸ்ட்ராங் ஜோன்ஸ் எனும் புகைப்படக் கலைஞரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமண நிகழ்வினை பிபிசி செய்தி நிறுவனம் ஒளிபரப்பியது. இதை உலகெங்கிலும் இருக்கும் 300 மில்லியன் மக்கள் கண்டு ரசித்தனர்.

ஒதுக்கினர்!

ஒதுக்கினர்!

இளவரசி மார்கரெட் உடைய திருமணத்தில் ஐரோப்பிய நாடுகளின் அரச குடும்பங்கள் பெரிதும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. காரணம், ஒரு இளவரசி எப்படி ஒரு சாதாரண புகைப்படக் கலைஞரை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறினர். இந்த விழாவில் பங்கெடுத்துக் கொண்ட ஒரே பிரிட்டிஷ் அரசு குடும்பத்தை சாராத ஐரோப்பிய நாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த நபர் குயின் இங்க்ரிட் ஆப் டென்மார் அவர்கள் தான்.

டயானா!

டயானா!

டயானா - சார்லஸ் திருமணம் ஜூலை 29ம் நாள் 1981ம் ஆண்டு செயிண்ட் பவுல் கதீட்ரல் சர்ச்சில் நடந்தது. இங்கே 3,500க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர். மேலும், 74 நாடுகளை சேர்ந்த 750 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர்.

உடை!

உடை!

தன் திருமண வைபவத்திற்கு டயானா 25 அடி நீளம் Foot Train கொண்ட உடையை உடுத்தி இருந்தார். பிரிட்டிஷ் அரச குடும்ப திருமணத்தில் ராயல் மணப்பெண் அணிந்த மிக நீளமான உடை டயானா உடுத்தி இருந்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சலசலப்பு!

சலசலப்பு!

பிரிட்டிஷ் அரசு இளவரசி, ராணி கடைப்பிடிக்க வேண்டியவை என ஒரு புத்தகம் இருக்கிறது. ஆனால், அதை கடைபிடிக்காமல் இருந்தவர் டயானா தான். மேலும், திருமணத்தின் போது, சார்லசை தவறான பெயர் கொண்டு அழைத்து இருந்தார். இது, சற்று சலசலப்பை உண்டாக்கியது.

வில்லியம்ஸ்!

வில்லியம்ஸ்!

பிரிட்டிஷ் ராயல் திருமணங்கள் பெரும் பொருட் செலவில் நடக்கின்றன. ஏறத்தாழ 34 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறது. இதில் 32 மில்லியன் டாலர் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மட்டும் செலவு செய்கிறார்கள். பிரின்ஸ் வில்லியம்ஸ் மற்றும் கேட் மிடில்டன் திருமணத்தின் செலவு இது. மேலும், கேட் மிடில்டனின் உடை மட்டும் 4,34,000 டாலர்களாம்.

ஸ்பெஷல் கேக்!

ஸ்பெஷல் கேக்!

வில்லியம் மற்றும் கேட் தங்கள் திருமணத்தின் போது வெட்டிய கேக்கின் விலை 80,000 டாலர்கள். இந்த கேக்கில் பல விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தன. மேலும், பாரம்பரிய கேக்கின் வடிவமைப்பை தவிர்த்து தனக்கு பிடித்தமான Frozen Chocolate Biscuits கேக்கை வடிவமைக்க கூறினாராம் வில்லியம்ஸ்.

மரம்!

மரம்!

தற்செயலாக வில்லியம்ஸ் மற்றும் கேட்ன் திருமணம் ஏப்ரல் 29ம் நாள் 2011ம் ஆண்டு Arbor day எனப்படும் மரம் நட்டு கொண்டாடும் தினத்தில் அமைந்தது. ஆகவே, புதுமண தம்பதி தங்கள் திருமண நாளில் Maple வகை மரத்தினை நட்டு கொண்டாடினார்கள். இந்த மரங்கள் வேல்ஸ்ல் பிரின்ஸ் சார்லஸ் வீட்டில் நடப்பட்டன.

பொது விடுமுறை!

பொது விடுமுறை!

நாம் மேல குறிப்பிட்டிருந்ததை போலவே, அரசு குடும்ப திருமண விழா நாள் இங்கிலாந்தில் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகின்றன. டயானா - சார்ல்ஸ் மற்றும் வில்லியம்ஸ் - கேட் திருமணத்தின் போது பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேகன் - ஹேரி திருமண நாள் மட்டும் பிரிட்ஸ்ல் விடுமுறை நாளாக அறிவிக்கப்படவில்லை.

வயதான மணப்பெண்!

வயதான மணப்பெண்!

பிரிட்டிஷ் அரச குடும்ப திருமணங்களில் மிகவும் வயதான ராயல் மணப்பெண் மேகன் மார்கல் தான். இளவரசர் ஹேரியை திருமணம் செய்துக் கொண்ட போது, மேகன் மார்கல்க்கு வயது 36.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, November 8, 2018, 12:23 [IST]
Desktop Bottom Promotion