For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  'நம்ம சாதி விந்தினை தான் பிறர் அதிகம் விரும்புகிறார்கள்...' - வைரலாக பரவும் போஸ்ட்!

  |

  இன்னுமா சாதி, மத, இன பிரச்சனை இருக்கிறது என்று தமிழகத்தில் யாராலும் கேட்க இயலாது. சாதி சார்ந்து வசைப்பாடும் தேசியக் கட்சி செயலாளர் ஒருவர். டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு கலாச்சாரங்களை, பலதரப்பட்ட மக்களுடன் நட்புபாராட்டி பழகும் இந்த நூற்றாண்டில் இனம் சார்ந்து மேடைகளில் கொடிய வார்த்தைகள் பயன்படுத்தி பேசும் அரசியல்வாதி ஒருவர்.

  Facebook Viral Post: Casteism Praised Messenger Conversation Leaked!

  All Image Source: Facebook / Instagram Screenshot

  இவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு, இவர்கள் பேச்சை எல்லாம் நாள்தோறும் கேட்டுக் கொண்டு தமிழகத்தில் சாதி மத, இன பிரச்சனைகள் இல்லை என யாரால் கூற இயலும்.

  சமீபத்தில், ஓரிரு நாட்களாக இன்ஸ்டாகிராம் சாட்டிங்கில் ஒருவர் தன் சாதியை தூக்கிப் பிடித்து பேசிய சாட்டிங் ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது, யார்? எப்போது? பதிவிட்டது எங்கே இருந்து இது பரவ துவங்கியது போன்ற தகவல்கள் சரிவர அறியப்படவில்லை.

  இன்ஸ்டாகிராம் சாட்டில் வேறொரு நபரிடம், பிராமிணர்கள் யார்? அவர்கள் விந்துக்கு விந்து சேமிப்பி வங்கியில் இருக்கும் கிராக்கி என்ன? அவர்கள் வரலாறு என்ன? என்று அவர் கூறியவாறு இங்கே ஸ்க்ரீன்ஷாட் புகைப்படங்களுடன்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  விந்து!

  விந்து!

  "நம்ம இனத்தை சேர்ந்தவர்கள் உயரமாகவும், வெள்ளையாகவும் இருப்பார்கள். நாம் பிராமிணர்கள். இந்திய சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் இனம் நம்முடையது. அதனால், விந்து சேமிப்பு வங்கிகளில் நமது விந்துக்கு அதிக கிராக்கி உண்டு. நிறைய பேர் பிராமின விந்துக்களை தான் வேண்டி அணுகுகிறார்கள். அதைவிடு, நான் நமது கலாச்சாரத்தை பற்றி மேலும் கூறுகிறேன்."

  பூணூல்!

  பூணூல்!

  "பிராமின லுக்கில் நான் (என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாசாட்டில் அனுப்பி இருக்கிறார்.) பூணூல் அணியும் ஒரே இனத்தினர் நாம் தான். அதிலும் ஆண்கள் மட்டும் தான் அணிய வேண்டும். உலகில் இருக்கும் அனைத்து பிராமினர்களும் இதை கட்டாயம் அணிய வேண்டும் சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது இதை காதுகளில் மாட்டிக் கொள்ள வேண்டும்."

  Most Read:விந்து அணுக்களை பெண்ணின் உடலுக்குள் செலுத்தாது, கலவி கொள்வது எப்படி?

  கடவுளுக்கு நிகர்...

  கடவுளுக்கு நிகர்...

  "இந்த பூணூல் அணிந்துக் கொள்வதன் மூலமாக, அவர் பிராமின சமூகத்தை சேர்ந்தவர் என்பது அறியப்படுகிறது. மேலும், இதனால் அவர்கள் (நாம்) மதிப்புடையவர்களாக திகழ்கிறோம். பண்டையக் காலத்தில் மக்கள் நம் காலை தொட்டு வணங்குவார்கள்.

  இந்து மதத்தில் மக்கள், நம்மை (பிராமிணர்களை) கடவுளுக்கு அடுத்தவர்களாக கருதுகிறார்கள். இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட சமூக தலித். அவர்கள் தீண்டத்தகாதவர்கள். நாம் அவர்கள் கைகளில் இருந்து உணவு வாங்கி உண்ணக் கூடாது, அவர்களை தொடவே கூடாது."

  உயர் சாதி!

  உயர் சாதி!

  "பண்டையக் காலங்களில் நாம் சாப்பிடும் போது, அவர்கள் குரல் கேட்டால் கூட, சாப்பிடும் உணவை வீசிவிடுவார்கள். இப்போது அந்த அளவிற்கு இல்லை என்றாலும், இன்னும் சில கிராமப்புறங்களில் இது வழக்கத்தில் இருக்கிறது. இந்து மதம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதை தான் சாதி அமைப்பு என்று கூறுகிறார்கள். நாம் (பிராமிணர்கள்) உயர் சாதி மக்கள். இது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது."

  ஐரோப்பிய மரபணு!

  ஐரோப்பிய மரபணு!

  "நம் மூதாதையர்கள் கோவில்களில் பூசாரிகளாகவும், படித்த பண்டிதர்களாகவும், ஜோதிடர்களாகவும், வீரர்களாகவும் இருந்தனர். நம்மிடம் ஐரோப்பிய மரபணுக்களும் இருக்கிறது. அதனால் தான் நாம் கொஞ்சம் வெள்ளையாக இருக்கிறோம்..." இப்படியாக முடிகிறது சமீபமாக வைரலாக சமூக தளத்தில் பகிரப்பட்டு வரும் அந்த இன்ஸ்டாகிராம் சாட்டிங் போஸ்ட்.

  Most Read:பிகினியில் கலக்கிய தென்னிந்தியா நடிகைகள்... அன்று முதல் இன்று வரை...!

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Facebook Viral Post: Casteism Praised Messenger Conversation Leaked!

  Facebook Viral Post: Casteism Praised Messenger Conversation Leaked!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more