Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி? -
இந்த 4 ராசி பெண்கள் உலகின் சிறந்த அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோடைக்கால சரும பிரச்சனைகளை தடுக்கணுமா? அப்ப தேனை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா திருமணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போனி கபூரின் அதிரடி விளக்கம்! -
உங்க கிட்னி ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க -
2 ஆண்டுகள் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
கனவில் தோன்றும் விஷயங்கள் உண்மையில் நடக்குமா? அவற்றின் அர்த்தம் என்ன? கனவைப் பற்றிய ஒரு அலசல்!
கனவு என்பது மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவால் நிகழ்த்தப்படுவது என்று அறிவியல் கூறுகிறது; முன்னோர் கூறிய சாஸ்திரங்களும் கூட இதை உண்மை என்றே கூறுகின்றன. கனவில் நடக்கும் விஷயங்கள் உறக்கத்தில் இருந்து எழுந்த
தூங்கும் நேரத்தில், அதுவும் ஆழ்ந்த உறக்கத்தின் போது மனம் அல்லது மூளையில் ஏற்படும் நினைவலைகளே கனவுகள் என்று அறியப்படுகின்றன. விழித்திருக்கும் போது, காணப்படும் கனவுகளை டே ட்ரீம் அதாவது பகற்கனவு என்போம்; 'இப்படியெல்லாம் நடந்தால் எப்படியிருக்கும்' என்று மனம் ஆசைப்படும் விஷயங்களை ஒரு படமாக ஓட்டி பார்ப்பது தான் இந்த பகற்கனவு.

கனவு என்பது மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவால் நிகழ்த்தப்படுவது என்று அறிவியல் கூறுகிறது; முன்னோர் கூறிய சாஸ்திரங்களும் கூட இதை உண்மை என்றே கூறுகின்றன. கனவில் நடக்கும் விஷயங்கள் உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன் சிலருக்கு நினைவிருக்கும், பலருக்கு நினைவிருக்காது. ஆனால், கனவில் பல நல்ல விஷயங்களும் அதற்கு சம பங்கான கேடுவிளைவிக்கும் விஷயங்களும் தோன்றலாம். இந்த மாதிரியான கனவுகள் தோன்றுவதற்கு என்ன காரணம் மற்றும் ஏன் தோன்றுகின்றன என்று ஆராய்ந்து அறிந்தால், அதற்கேற்றவாறு நலத்தை பெறவும், கெட்டதை தடுக்கவும் நம்மால் முயற்சி எடுக்க இயலும்.
அந்த வகையில் கனவுகளில் நடக்கும் விஷயங்கள் ஏன் தோன்றுகின்றன மற்றும் அவற்றின் அர்த்தங்கள் என்ன என்பது குறித்த விரிவான அலசலை இங்கு படித்தறிவோம்.

கனவின் வகைகள்
கனவில் இரண்டு வகைகள் உள்ளன; ஒன்று உங்கள் உடல் மற்றும் மன எண்ணங்கள் அடிப்படையில் தோன்றக்கூடியவை. மற்றொன்று உங்கள் பூர்வ ஜென்ம அல்லது உங்கள் ஆத்மாவின் ஆசை மற்றும் எண்ணங்களை உங்களுடன் இணைக்கக்கூடியவை. இதில் முதல் வகை கனவுகள், உங்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த நடவடிக்கைகளை, ஆசைகளை எடுத்துரைக்கும். இரண்டாம் வகையோ, பூர்வ ஜென்ம ஆசை அதாவது நிறைவேறா ஆசை மற்றும் பழி, ஆன்மாவின் இலட்சியம் போன்ற எண்ணங்களை உங்கள் மனதில் ஆழமாக பதியவைத்து அதை நிறைவேற்ற துடிக்கும்; இந்த ஜென்மத்திலும் முடியவில்லை என்றால் அடுத்த ஜென்மத்திற்கு அந்த ஆசைகளை கடத்தும்.

ஆங்கில எழுத்து S
அனைத்து விதமான கனவுகளையும் ஒரே பதிப்பில் பிரதிபலிக்க இயலாது என்பதால், எழுத்துக்களின் அடிப்படையில், கனவில் ஏற்படும் ஒவ்வொரு பொருளுக்குமான அர்த்தத்தை இங்கு பார்க்கலாம். இப்பொழுது இந்த பதிப்பில் ஆங்கில எழுத்து S-ல் தொடங்கக்கூடிய வார்த்தைகள் அதாவது பொருட்களின் பெயர்கள் உங்கள் கனவுகளில் தோன்றி இருந்தால், அதற்கான அர்த்தங்கள் என்னென்ன என்று கண்டறியலாம்.

செய்ல்ஸ் - Sails:
புறப்படுவது அல்லது பயணம் செய்வது போன்ற கனவு தோன்றினால், நீங்கள் புறப்பட்டு அல்லது பயணப்பட்டு போய் முடிக்க வேண்டிய காரியம் ஏதோ ஒன்று இருக்கிறது, அதை முடிக்கும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது என்று பொருள். அதற்கான சக்தி உங்களுக்குள் இருப்பதால் தான் இந்த நினைவு உங்களுக்குள் எழுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்; உங்கள் வாழ்வில் பயணப்பட வேண்டிய முக்கிய விஷயம் ஏதேனும் உண்டா என்று சிந்தித்து பார்க்கவும்.

மண் - Sand:
மண்ணின் பிம்பம் உங்கள் கனவினில் அடிக்கடி தோன்றினால், நீங்கள் நிலைத்தன்மை இன்றி வாழ்வில் வந்து வருவதாக பொருள். அதிலும் எந்தவித பாதுகாப்பு உணர்வும் உங்கள் மனதில் இல்லை என்றும் பொருள் கொள்ளலாம். நீங்கள் எந்தவொரு வேலையையும் நிலைத்தன்மையுடன் செய்யாது விட்டிருந்தாள், உங்கள் எண்ணங்கள் அவ்வகையில் சிந்திப்பதை இருந்தால், இது உங்கள் கனவுகளில் ஏற்படும்.

பள்ளி - School:
பள்ளி என்பது பலருக்கும் அடிக்கடி கனவில் தோன்றும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பள்ளியின் படங்களோ அல்லது பள்ளி சார்ந்த கனவுகள் உங்கள் மனதில் தோன்றினால், வாழ்வில் உங்களின் கற்றல் இன்னும் முடிவடையவில்லை என்று பொருள். நீங்கள் கற்று முடிக்க வேண்டிய பல விஷயங்கள் மிச்சம் உள்ளன என்று உணர்த்துவதற்காக இது உங்கள் கனவில் ஏற்படுகிறது.

கத்தரிக்கோல் - Scissors:
கத்தரிக்கோல் உங்கள் கனவில் தோன்றினால், அது குடும்பத்தில் அல்லது உறவில் ஏற்படுகின்ற அல்லது ஏற்படப்போகிற பிளவினை குறிக்கும். மேலும் உங்கள் தொழிலில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை, இலாபம் கிட்டாததை இது குறிக்கும். கத்தரிக்கோல் உங்கள் கனவினில் தோன்றினால், அது நீங்கள் விழிப்படைய வேண்டிய நேரம் என்று உணருங்கள்; கஷ்டங்களை எப்படி தடுப்பது, மீறி நடந்தாலும் அவற்றை எப்படி சமாளிப்பது என்று திட்டமிட்டு கொள்ளுங்கள்.

தேள் - Scorpion மற்றும் நாகங்கள் -Serpents:
உங்கள் கனவினில் தேளின் உருவங்கள் தோன்றினால், அது உங்களுடன் இருக்கும் போலியான நண்பர்களை குறிக்கிறது. அதுவும் உங்கள் வாழ்வில் அழிவை ஏற்படுத்தி, அதள பாதாளத்தில் உங்களை தள்ளத்துடிக்கும் துரோகி உங்களுடன் உள்ளான் என்பதை குறிக்கும். இது உங்கள் கனவில் தோன்றினால், உடன் பழகும் நண்பர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.
நாகங்கள் கனவில் தோன்றுவது எதிர்காலத்தில் நடக்கப்போகும் அழிவை அல்லது ஏமாற்றங்களை முன்கூட்டியே தெரியப்படுத்துவதற்காக என்று உணருங்கள் தோழர்களே!

தற்கொலை - Suicide:
தற்கொலை செய்வது போன்ற அல்லது தற்கொலை செய்தவர்களை நீங்கள் கனவினில் கண்டால், ஏதோ ஒன்று உங்கள் வாழ்க்கையை வலுக்கட்டாயமாக, உங்கள் விருப்பமின்றி முடிக்க வருகிறது என்று பொருள். அது எதுவாயினும் இருக்கலாம்; உங்களுக்கு பிடிக்காத பெண் மனைவியாக வருவது, பிடிக்காத வேலையில் அமர்வது என இது போன்ற விஷயங்கள் எதுவாயினும் இருக்கலாம்.

வாள் - Sword:
உங்கள் கனவில் வாள் தோன்றினால், அது உங்களை வாழ வைக்க போகிறதுஎன்று பொருள். அதாவது கனவில் வாள் தோன்றுவது மிகப்பெரிய பேரும் புகழும் பெறப்போவது, சமுதாயத்தில் மிகமுக்கிய அந்தஸ்து கிடைக்கபோவதை குறிக்கிறது. எனவே, உங்கள் கனவில் வாள் தோன்றினால், மகிழ்ச்சி கொள்ளுங்கள்; பரிசை பெற உங்களின் கடின உழைப்பை காட்டுங்கள், அது வெற்றியை விரைவில் உங்களிடம் சேர்க்கும்.

நீச்சல் - Swimming:
நீச்சல் அடிப்பது போன்ற பிம்பம் உங்கள் கனவினில் தோன்றினால், அது உங்கள் வாழ்க்கையின் போராட்டங்களை அதாவது வாழ்வில் நீங்கள் போரடிக்க கொண்டிருப்பதை குறிக்கும் அல்லது போராட்டம் ஏற்படபோவதை காட்டுகிறது. இதை நீங்கள் கனவினில் பார்க்க நேர்ந்தால், உங்கள் மனதை சோதனையான காலகட்டத்தை, போராட்ட களத்தை எதிர்கொள்ளும் வகையில் தயார் செய்து கொள்ளுங்கள். ஆனால், கண்டிப்பாக இந்த சோதனைகளுக்கு பின் வெற்றியே உங்கள் வசம் வந்து சேரும்; இதை மனதில் கொண்டு சோர்வடையாது பணியாற்ற தொடங்குங்கள்.



Click it and Unblock the Notifications