For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி பரிதாபங்கள் மீம்ஸ் - நீங்களும் இதெல்லாம் கடந்து வந்திருக்கலாம்...!

|

தீபாவளி, Festival of Lightsனு சொல்லி இப்ப உலகமே கொண்டாடுற பண்டிகையா மாறியிருக்கு. ஐரோப்பிய ஊடகமான மிரர்'ங்கிற இணையத்தளம், தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும்னு ஒரு கட்டுரை எழுதுறாங்க. அதுல, நாம என்னவெல்லாம் பண்ணுவோம், எப்படி எல்லாம் கொண்டாடுவோம், யாரெல்லாம், எந்த நாட்டுல எல்லாம் கொண்டாடுவாங்கன்னு எல்லாமே கவர் பண்ணி இருக்காங்க.

Diwali Paridhabangal Funny Memes Collection

All Image Source and Courtesy: Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

இப்ப வளர்ந்து வர ஜெனரேஷன் கிட்ட ஒரு நல்ல விஷயம் கத்துக்க முடியுது. அவங்க மத்தியில பெருசா ஜாதி, மத வேறுபாடு இல்ல. எல்லாத்தையும் லைட் ஹார்ட்டடா எடுத்துக்குறாங்க. கொண்டாட்டம், பண்டிகைன்னு வந்துட்டா, அது வேற்று மாநில கொண்டாட்டமா, வேறு இனத்தவர் பண்டிகையானு எல்லாம் பார்க்காம ஜாலியா எல்லாரும் சேர்ந்து கொண்டாடுறாங்க. இது சமூகத்துல வளர்ந்து வர ஒரு நல்ல மாற்றமா காணப்படுது.

இப்பவே அங்கங்க தெருவுக்குள்ள சில்வண்டுகள் டப்பு, டுப்புன்னு அங்கொன்னும், இங்கொன்னுமா பட்டாசு கொளுத்த ஆரம்பிச்சுட்டாங்க. எப்படியும் பலர் இந்நேரத்துக்கு தீபாவளி ஷாப்பிங்கும் தொடங்கி இருப்பீங்க. பெரும்பாலும் தமிழ் நாட்டுல புத்தாடை உடுத்தி கொண்டாடுற பண்டிகைனா அது தீபாவளி தான். பொங்கலுக்கு கூட சிலர் புத்தாடை உடுத்துவாங்க. சிலர் நார்மலா தான் கொண்டாடுவாங்க.

தீபாவளினு சொன்னாலே நமக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வரும், வீட்டுல அம்மா சமைக்கிற பலகாரம், புத்தாடை பட்டாசு, அத்தை, மாமா, சித்தப்பா, பெரியாப்பா வீடு தேடி வந்து கொடுக்குற பண்டிகை பணம். இது எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்திருப்போம். இதெல்லாத்தையும் ஒரு சின்ன டைம் டிராவல் பண்ணி மீம்ஸ்ல ஒரு தடவ சுத்தி பார்த்துட்டு வருவோமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

முன்னெல்லாம் முன்னூறு ரூபாய்க்கு வாங்கினாலே ஒரு பை நிறையா பட்டாசு கிடைக்கும். இப்ப மூவாயிரம் ரூபாய்க்கு வாங்கினாலும் பாதி பை கூட நிறைய மாட்டேங்குது.

#2

#2

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

மிடில் கிளாஸ்ல வாழ்ந்த, வாழ்ந்து வர பலரும் இப்படி ஒரு தீபாவளிய கடந்து வந்திருக்க வாய்ப்பிருக்கு.

#3

#3

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

டெடிகேட்டட் டூ பூந்தி லட்டு லவ்வர்ஸ். ரவா லட்டு லவ்வர்ஸ் மன்னிச்சுக்குங்க...

#4

#4

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

போனஸ் பரிதாபங்கள், அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் தீபாவளி போனஸ் என்பது ஒரு கானல் நீர் என்று. அது வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது.

#5

#5

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

இப்படி பல சில்வண்டுகள தீபாவளி நாட்கள்ல நாம பார்க்க முடியும். நிம்மதியா வண்டி ஓட்ட விடுமாட்டாங்க.

#6

#6

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

இப்ப ஐநூறு எல்லாம் சகஜமா கிடைக்கலாம். 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரியும் நூறு ரூபாய் கிடைக்கிறதே பெரும் கஷ்டம் என்று.

#7

#7

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

அப்படியே நூறு, ஐநூறுனு கிடைச்சாலும் மறுநாளே அது காணாம போயிடும்... இதோ! இப்படி...

#8

#8

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

எம்புட்டு பலகாரம் சுட்டு வெச்சாலும், வீட்டுக்குள்ள இருக்க ஒரு Foodie மொத்தத்தையும் காலி பண்ணிடும். பெரும்பாலும் அந்த Foodie அண்ணன் இல்ல தங்கச்சியா தான் இருக்கும்.

#9

#9

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

டெடிகேட்டட் டூ திடீர் சமூக ஆர்வலர்கள், சுற்று சூழல் பாதுகாவலர்கள்...

#10

#10

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

கண்டிப்பா... ஐநூறு ரூபாய் பஸ் டிக்கெட் செலவு பண்ணீங்கன்னா கூடை, கூடையா பட்டாசு வாங்கிட்டு வரலாம்.. பேசாமா இந்த தடவ இத நீங்க ட்ரை பண்ணி பாருங்களேன்...

நான் பாட்டாசு வாங்குறதே ஐநூறு ரூபாய்க்கு தான்னு சொன்னா.. சாரி! உங்களுக்கு டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் அப்ளை ஆகுது!

#11

#11

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

தட் மிடில் கிளாஸ் மாதவன் அப்பா கூட பட்டாசு வாங்க போனா முதல் கேள்வியே இதுவா தான் இருக்கும். நாம அப்பா ஆகும் போதுதான்.. அட நம்ம அப்பாவ எம்புட்டு கொடுமை படுத்தியிருக்கோம்னு தெரியும். அப்பாக்கள் நிஜமாவே பாவப்பட்ட ஜென்மங்கள். அதிலயும் இந்த தீபாவளி காலங்கள்ல.

#12

#12

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

கங்கா நீர்னு சொல்லி சில பத்திரிக்கை, மாத இதழ் காரங்க எல்லாம் ஸ்பெஷல் எடிஷன் விப்பாங்க. அது கங்கா நீரா, இல்லையான்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ணாம, அத ரெண்டு சொட்டு ஊத்தி குளிச்சா தான் பட்டாசு மேல கைய வைக்க விடுவேன்னு அம்மா சுட, சுட மிரட்டுவாங்க.

#13

#13

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

ஆங்க்ரி பேர்ட் பக்கத்து வீட்டு அங்கிள்... நிம்மதியா ஒரு வெடி வெடிக்க விடமாட்டார். இதுல குப்பை எங்க வீட்டு பக்கமா வருதுன்னு ரிப்போர்ட் பண்ணுவார். அவங்களும் கொண்டாட மாட்டாங்க. நம்மளையும் கொண்டாட விடமாட்டாங்க.

#14

#14

Image Source and Courtesy : Bengaluru Tamizhan - BeTa Memes / Facebook

தட் சாப்ட் அங்கிள்... திட்டுனா எங்க திரும்ப அதிகமா வெடி வெடிப்பானோன்னு... நாசூக்க வந்து கேட்டுட்டு போவாரு...

என்ன பண்ண வருஷத்துல ஒருநாள் தானேன்னு பெரிய மனசோட... காதுல பஞ்சு வெச்சுக்கிட்டு உட்கார்ந்துப்பார்... மனுஷன்! பெரிய மனுஷன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali Paridhabangal Funny Memes Collection

Here we have shown some funny memes on diwali paridhabangal. Lets take look on it.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more