For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிறையா மீம்ல இந்த பொண்ண நீங்க பாத்திருக்கலாம். ஆனா, இந்த பொண்ணுக்கு இன்னொரு முகமும் இருக்கு!

By Staff
|

பெரும்பாலும், அடிக்கடி மீம்ஸ்ல பயன்படுத்தப்படுற டெம்ப்ளேட்ல இதுவும் ஒன்னு. ஒரு காதல் ஜோடி.. பையனும், பொண்ணும் நடந்து வராங்க.. அப்ப திடீர்ன்னு வேற ஒரு செம்ம பிகர் க்ராஸ் ஆக அந்த பையன் லவ்வர் கூட இருக்குறத மறந்து அந்த பொண்ண திரும்பு லுக் விடுறான். இத நோட்டீஸ் பண்ண காதலி... காதலான ஒரு மாதிரியா பார்த்து லுக்குவிடுறா. இது தான் இந்த போட்டோல நாம பார்க்குற காட்சி.

Distracted boyfriends partner is stunned by phone and computer screens

Image Source: Stock Images

நிறையா பேர், இந்த போட்டோ ஏதோ ஆங்கில படத்தோட காட்சி, ஆங்கில இசை ஆல்பத்தின் ஸ்க்ரீன்ஷாட் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில இதுவொரு ஸ்டாக் இமேஜ். அதாவது., காசுக் கொடுத்து, விளம்பரம், கமர்ஷியல் விஷயங்குக்கு பயன்படுத்திக்கிற இமேஜ். வெளிநாடுகள்ல ஸ்டாக் இமேஜ் போட்டோகிராபி ரொம்ப பிரபலம். சமீப காலமா நம்ம ஊர்லயும் இது கொஞ்சம், கொஞ்சமா பிரபலம் ஆகிட்டு வருது.

சரி, அந்த பையன் கூட ஷாக் ஆகுற மாதிரி ரியாக்ஷன் கொடுக்குற அந்த பொண்ணோட இன்னொரு முகம் காமிக்கிறதா சொன்னீங்களே.. அது எங்கன்னு கேட்கறீங்களா.. இதோ நீங்களே பாருங்களேன்... அந்த இன்னொரு முகத்த...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

காதலன் வேற பொண்ண பார்த்தா மட்டும் இல்லைங்க.. இந்த பொண்ணு எடுத்து எடுத்தாலும் ஷாக் ஆவாங்க போல.. இதோ ப்ளூட்டோ ஹெட்செட் மாட்டிக்கிட்டு ஏதோ பாட்டுக் கேட்டுக்கிட்டே மொபைல் ஸ்க்ரீன் பார்த்துட்டு எப்படி வாய பொளந்த வாக்குல ஷாக் ஆகுறாங்கன்னு பாருங்க...

#2

அப்படி என்ன தெரிகிறது அங்கேன்னு புலிகேசி எட்டி பார்க்குற மாதிரி தோணுதா... இந்த ஸ்டாக் இமேஜ் போட்டோஸ் எடுக்குறது பெருசு இல்ல.. அத நம்புற மாதிரி எடுக்கணும். சிலர் எல்லாம் என்னத்த எடுக்குறோம்ன்னு தெரியாம எடுப்பாங்க. கொஞ்ச நாளுக்கு முன்ன இப்படி தான் சயிண்டிஸ்ட் எல்லாம் சேர்ந்து ஸ்டாக் இமேஜ்ல காமிக்கிறது மாதிரி எல்லாம் நாங்க வர்க் பண்ண மாட்டோம். அத பார்த்தா எங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருதுன்னு ட்விட்டர்ல ட்ரெண்ட் ஆகுற மாதிரி போஸ்ட் போட்டாங்க. இதெல்லாம் பார்த்தா ஐஞ்சு ரூபாய் கொடுத்த ஐம்பது ஆயிரத்துக்கு நடிக்கிற மாதிரி இல்ல.

#3

ஏன்மா.. அட்லீஸ்ட் அந்த வாய திறக்குரத ஆச்சும் கொஞ்சம் குறைக்கலாம். இந்த நாடகத்துல நடிக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் கூட பிசுரே இல்லாம... எத்தன தடவ நடிச்சாலும் ஆதே ரியாக்ஷன் கொடுப்பாங்களாம். அப்படி இருக்கு இந்த புள்ளயோட நடிப்பு. கண்ணு, இமை, வாய் அளவுன்னு பர்பெக்ட்டா எல்லா போட்டோவுலயும் பாருங்க ஒரே மாதிரி இருக்கா?

#4

அடப்பாவத்த... இதென்னடா இந்த பொண்ணு தான் இப்படின்னு பார்த்தா பாவம் குடும்பம், ஃபிரெண்ட்ஸ்ன்னு எல்லாருமே இப்படி தான் இருப்பாங்க போல. சிலர் கூட ரொம்ப நெருங்கி பழகுனா அவங்கள மாதிரியே நாமளும் பேசுவோம், ரியாக்ட் பண்ணுவோம் இல்லையா? அந்த மாதிரி இதுவும் தொத்து நோய் போல... இவங்கள எல்லாம் எந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறது...

#5

ஒன்னே ஒன்னு சொல்லிக்க விரும்புறேன்.. ஷாக் ஆகுறது எல்லாம் கூட ஒகே. சிலர் பிக்னிக் போகும்போது கூட லேப்டாப் தூக்கிட்டு சுத்துவாங்க தான் ஒத்துக்குறேன். அதுக்குன்னு ஸ்ட்ரெயிட்னிங் பண்ண அதே ஹேர் ஸ்டைல், அதுவும் புல் தரையில கூட படுத்துட்டு அதே ஷாக் ரியாக்ஷன் கொடுக்குது பாருங்க அந்த பொண்ணு... நிஜமாவே வேற லெவல்.

#6

ஏன்மா எல்லா பக்கமும் இப்படி வாய பொளந்து ஷாக் ஆனா, எங்கூரு பசங்க வேற மாதிரி நெனச்சுக்குவாங்க...வாயி ஒரு சைடா இழுத்துக்கிச்சோ... உன் லேப்டால் பார்த்து ஷாக்கான ஒரு லாஜிக் இருக்கு உன் பிரெண்ட் லேப்டாப் பார்த்து ஏன்மா ஷாக் ஆவுற.. கண்ணாடிய திருப்புனா வண்டி எப்படி ஓடும் ஜீவா....

#7

எர்னி ஸ்மித்ங்கிற ஒரு நபர், இந்த ஸ்டாக் இமேஜ் கலக்ஷன் முக்கியமா... இந்த ஷாக்கம்மா ஸ்டாக் இமேஜ் கலக்ஷன் ஒட்டுமொத்தமா தேடி எடுத்து ட்விட்டர்ல போட்டு செம்மையா ட்ரெண்ட் ஆக்கிவ்விட்டுருக்காரு. ஆமா, ஒருவேளை இந்த போட்டோவ, இந்த கலாய் எல்லாம் அந்த பொண்ணே ட்விட்டர்ல பார்த்தா என்ன ஆகும். அந்த பொண்ணு எந்த ஊரு, பெயரு என்னன்னு கூட யாருக்கும் தெரியாது.

#8

யாருப்பா அந்த போட்டோ கிராபர். இப்ப எல்லாம் கல்யாண போட்டோ எடுக்குறவங்க கூட மரத்துல வவ்வாலு மாதிரி தொங்கி டிசைன், டிசைனா போட்டோ எடுக்குறாங்க. ஆனால், இந்த பய ஸ்டாக் இமேஜ் போட்டோஸ் கூட ஒரே ரியாக்ஷன்ல அதுவும் அதே பொண்ண வெச்சு எடுத்துருக்காரு. சரி! என்னத்தன்னு சொல்ல... எடுத்தாச்சு, வித்தாச்சு காசு பார்த்தாச்சு அம்புட்டு தான். ட்விட்டர்ல ட்ரெண்ட் ஆனதால நாமலும் அத ஒரு கதையா எழுதியாச்சு....! கதம்! கதம்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Distracted boyfriend's partner is stunned by phone and computer screens

The Distracted Boyfriend meme, based on a stock photograph of a man looking on at another woman while his partner watches in disgust, has been a phenomenon. There's now another backstory to the woman's life.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more