சனி எங்கிருந்தால் மரண பயம் உண்டாகும் தெரியுமா?

By: Staff
Subscribe to Boldsky

ராசியில் நமக்கு சனி பெயரைக்கேட்டாலே லேசாக நடுக்கம் ஏற்படும். அந்த அளவிற்கு நமக்கு கெடுதல் உண்டாகிடும். நம் ராசியில் சனியிருக்கக்கூடிய காலத்தில் வழக்கத்திற்கு மாறான அதீத துன்பும் விளையும் என்பதால் சனியென்றாலே அனைவரும் பயப்படுகிறார்கள்.

பொதுவாக சனீஸ்வரர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை இருப்பார். அப்படி நிகழக்கூடிய ஏழரை ஆண்டு சனிக்காலத்தில், சனீஸ்வரர் ஒரு ராசியிலிருந்து கடைசி ராசிக்கு போவதை விரய சனிக்காலம் என்றும் அதே போல முதல் ராசிக்கு போவதை ஜென்ம சனிக்காலம் என்று இரண்டாம் ராசிக்கு செல்வதை பாத சனி என்றும் கூறுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மங்கு சனி :

மங்கு சனி :

பிறந்து பதினைந்து முதல் இருபது வருடங்களுக்குள் வரக்கூடிய சனியை மங்கு சனி என்று சொல்வார்கள் அப்படியென்றால் அது முதல் சுற்று. அதாவது பிறந்து முதன் முதலாக உங்கள் ராசியில் சனி வந்திருந்தால் அதற்கு மங்கு சனி என்று பெயர். இந்த காலகட்டத்தில் அவ்வளவாக பாதிப்பு இருக்காது.

இரண்டாவது :

இரண்டாவது :

இரண்டாவதாக ஏற்படும் சனியை பொங்கு சனி என்பார்கள் இது அனேகமாக வாலிப பருவத்தில் நடுத்தர வயதில் ஏற்படக்கூடும் இதில் ஆரம்ப காலத்தில் சில கடுமைகளை சந்தித்தாலும் விடுபடும் காலத்தில் பெரும் செல்வத்தையும் , மகிழ்ச்சியினையும் அள்ளிக் கொடுக்கும்.

அறுபது வயதில் :

அறுபது வயதில் :

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய மூன்றாவது சனி தங்கு சனி எனப்படும் இது அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படும். இந்த காலத்தில் உங்களுக்கு ஆயுள் , இந்த காலத்தில் உடல் ரீதியிலான பிரச்சனைகளும், உறவு ரீதியிலான சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

ஆயுள் அனுக்கிரகம் இருந்தால் உங்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது.

மரணம் :

மரணம் :

பெரும்பாலும் இந்த நான்காவது சனி வருவது அபூர்வம் தான். அப்படி ஏற்பட்டால் அது மரணச்சனியாகத்தான் இருக்கும். அதோடு உங்களுடைய பூலோக வாழ்க்கை நிறைவு பெற்றிடும்.

இதைத் தவிர சனியின் தாக்கத்தைப் பொறுத்து கண்டகச் சனி,அர்த்தாஷ்டமச் சனி, அட்டமத்துச் சனி என நிறைய பெயர்களில் வழங்குவார்கள்.

ஒவ்வொரு ராசிக்கும்.

ஒவ்வொரு ராசிக்கும்.

ஒவ்வொருவருடைய முப்பது ஆண்டு கால வாழ்க்கையில் ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருக்கக்கூடும் . ஏழரைச் சனி என்பது ஒவ்வொரு ராசியின் முந்தைய ராசி மற்றும் பிந்தைய ராசியில் சனி சஞ்சரிக்கும் காலத்தைத் தான் குறிக்கிறார்கள் .

சனி இருக்கக்கூடிய ராசி, அந்த முந்தைய மற்றும் பிந்தைய என ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் சனி சஞ்சரிப்பார். அதைத் தான் நாம் ஏழரை சனி என்கிறோம்.

எந்த இடத்தில் :

எந்த இடத்தில் :

பொதுவாக 12,1,2 ஆகிய இடங்களில் சனி சஞ்சாரம் செய்யும் காலத்தினை தான் நாம் ஏழரைச் சனி என்போம். எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் போது அது அஷ்டமியென்று அழைக்கப்படும். நான்கில் இருந்தால் அது அர்த்தாஷ்டம சனி என்றும் ஏழாம் இடத்தில் இருந்தால் அதனை கண்ட சனி என்று சொல்வார்கள்.

சனி இரண்டாம் வீட்டிலிருந்தால் உங்களுக்கு பொருளாதார நெருக்கடி உண்டாகும், தொடர்ந்து குடும்பப் பிரச்சனையும் ஏற்படும். மூன்றாம் வீட்டிலிருந்தால் தைரியமாக பல்வேறு விஷயங்களில் இறங்குவீர்கள் இந்த காலத்தில் உங்களுக்கு அதிக பண வரவு இருக்கும். நான்காம் இடத்திலிருந்தால் கல்வி கற்பதில் சிக்கல்கள் உண்டாகும். ஐந்தாம் இடத்தில் இருந்தால் குழந்தை பாக்கியத்தில் சிக்கல் உண்டாகிடும்.

ஆறு முதல்.... :

ஆறு முதல்.... :

ஆறாம் இடத்தில் இருந்தால் எதிர்பாரத துணிச்சல் மேலோங்கும் இதனால் மிகவும் வலிமையானவர்களுடன் கூட எளிதாக போட்டிப் போட துணிவீர்கள்.ஏழாம் இடத்தில் இருந்தால் உங்களது திருமண வாழ்க்கை தடைபடும்.எட்டாம் இடத்தில் இருந்தால் உங்களுக்கு ஆயுள் கெட்டி என்றாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் எழக்கூடும். பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

ஒன்பது முதல்...

ஒன்பது முதல்...

ஒன்பதாம் இடத்தில் உங்களிடம் இழப்பு உண்டு, அதாவது பூர்வீக சொத்து இழப்பு உண்டு. பத்தாம் இடத்தில் இருந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் எதையும் ஜெயித்து வந்து விடலாம் என்று தோன்றிடும். இறுதி காலத்தில் சாப்பாட்டிற்கு கஷ்டப்படவேண்டிய சூழல் உருவாகிடும்.

பதினோராம் இடத்த்லிருந்தால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நிம்மதி பிறக்கும், பன்னிரெண்டாம் இடத்தில் இருந்தால் வீண் விரயம் மற்றும் கணவன் மனைவியிடையே பிரிவு ஆகியவை உண்டு.

தேவலோகம் :

தேவலோகம் :

எல்லாருக்கும் சனி குறித்த பயம் அதிகப்படியாக இருக்கிறது, இம்முறை சனியின் தாக்கம் எப்படியிருக்குமோ, அதன் விளைவுகளை நாம் எப்படி சந்திக்கப்போகிறோமோ என்ற பயம் எல்லாரிடத்திலும் இருக்கும்.

இது பூலோகத்தில் உள்ள மனிதர்களை மட்டுமல்ல தேவலோகத்தில் உள்ள தேவர்களையும் அச்சப்பட வைத்திருக்கிறது.

சனி யாரைத் தேடுகிறான் :

சனி யாரைத் தேடுகிறான் :

ஒரு முறை சனி தேவலோகத்திற்கு வேகமாக சென்றிருக்கிறார். அவரைப் பார்த்த தேவர்கள் எங்கே சனி தங்களை பிடித்துக் கொள்வாரோ என்று பயந்து ஓடி ஒளிந்து கொண்டார்களாம். ஆனால் சனி தேவலோகத்தையும் கடந்து தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்.

அங்கிருந்த தேவர்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம். அதோடு சனி எங்கு தான் செல்கிறார் என்று அவரை பின் தொடர்ந்திருக்கிறார்கள்.

ஆதிசிவன் :

ஆதிசிவன் :

தேவலோகத்தை கடந்து சென்று கொண்டிருந்த சனி இப்போது கைலாயத்திற்குள் நுழைந்துவிட்டார், பின்னால் வந்த தேவர்களுக்கு ஒரே அதிர்ச்சி என்ன செய்யப் போகிறாய்? அந்த பரமசிவனையா.... என்று அதிர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் வார்த்தைகளே வரவில்லை

பெருமாளே :

பெருமாளே :

சனியின் எண்ணத்தை சிவன் உணர்ந்து விட்டார். சனி தன்னைத்தான் பிடிக்க வருகிறார் என்பதை யூகித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று சுற்றும் முற்றும் பார்த்து யோசிக்கிறார் அப்போது அங்கிருக்கும் பெருமால் வழிகாட்டு ஒரு குகைக்குள் சென்று ஒளிந்து கொள்கிறார் அதோடு குகையின் வாசலும் மூடப்படுகிறது.

உள்ளேயே தியானத்தில் உட்கார்ந்து விடுகிறார் சிவன்.

சனீஸ்வரர் :

சனீஸ்வரர் :

குகையின் கதவு மூடப்பட்டிருப்பதால் சனியால் உள்ளே செல்ல முடியவில்லை வாசலிலேயே காத்திருந்தார் சில ஆண்டுகள் கழித்து தன்னுடைய தவத்தை முடித்துக் கொண்டு சிவபெருமான் வெளியே வந்தார்.

பார்த்தாயா? உன்னிடமிருந்து எப்படி தப்பினேன் என்று சிரித்துக் கொண்டே சிவபெருமான் கேட்க.... அதற்கு சனி, நீங்கள் என்றோ என் பிடியில் வந்துவிட்டீர்கள் அதனால் தான் இந்த ஏழரை ஆண்டுகளாக மனைவி மக்களைக் கூட பார்க்க முடியுமல் இந்த குகையில் அடைந்து கிடந்தீர்கள் என்றாராம்.

இதைக்கேட்டு வியந்த சிவன், கடவுள் என்று சொல்லி எனக்கு எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் உன் கடமையை சரிவரச் செய்ததற்காக இனி உன்னை சனீஸ்வரர் என்று என் பெயரையும் சேர்த்து அழைக்கட்டும் என்று ஆசிர்வதித்தாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Did you Know Name Story of Saniswarar

Did you Know Name Story of Saniswarar
Story first published: Thursday, February 15, 2018, 13:19 [IST]
Subscribe Newsletter