For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வடகொரியா,தென் கொரியா பகைக்கு காரணம் யார் தெரியுமா?

|

சமீபத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியா அதிபர்கள் சந்தித்துக் கொண்டது வரலாற்று நிகழ்வாக பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முதலாக இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துக் கொண்ட அந்த நிகழ்வை உலகமே வியந்து பார்த்தது. இந்த பகை எப்போது ஆரம்பித்தது என்று தெரியுமா?

north korea

கொரியா ஆரம்ப காலங்களில் இப்போது இருப்பதைப் போன்று வடகொரியா என்றோ தென்கொரியா என்றோ இருக்கவில்லை. ஒரே நாடாகத்தான் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் கொரியா இரண்டாக பிரிந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதன் ஆரம்ப விதை அதற்கும் முன்னாலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. அந்த வரலாற்று நிகழ்வினை குறித்து இப்போது பார்க்கலாம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1392 ஆம் ஆண்டு முதல் :

1392 ஆம் ஆண்டு முதல் :

Image Courtesy

ஐந்தாம் நூற்றாண்டு துவக்கத்திலிருந்து கொரிய தீபகற்பத்தை ஜோசன் என்ற மன்னர் வம்சம் ஆண்டு வந்தார்கள். ஜோசனுக்கு முன்னால் 400 ஆண்டுகளாக கோரியோ வம்சம் ஆண்டு வந்தது. கோரியோ வம்சத்தினருக்கும் ஜோசன் வம்சத்தினருக்கும் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போதே யி சியோங் கை என்னும் அரசு அதிகாரி தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு ஆட்சிக்கு வருகிறார். ஜோசன் வம்சத்தினரால் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்கமுடியவில்லை இதற்கு முக்கிய காரணம் அண்டை நாடுகளான சீனா மற்றும் ஜப்பானிடமிருந்து வந்த நெருக்கடிகள்

பத்தொன்பதாம் ஆண்டின் முடிவில் ஜோசன் ஆட்சி முற்றிலுமாக வெளியேறியிருந்தது. இந்த நேரத்தில் சீனாவும் ஜப்பானும் தங்கள் ஆதிக்கத்தை கொரியாவில் செலுத்த நினைத்தார்கள். கொரியாவை கைப்பற்றும் நோக்கத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் போர் நடந்தது.இதைத் தான் முதலாம் சீனோ-ஜப்பானீஸ் வார் என்கிறார்கள் இதில் சீனா தோற்க, கொரியா ஜப்பான் வசம் சென்றது.

1910 முதல் :

1910 முதல் :

Image Courtesy

கொரிய மன்னர் தன்னுடைய அதிகாரங்களை எல்லாம் ஜப்பானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அதை மறுத்து தன்னால் முடியாது என்று சொல்லி தூது அனுப்புகிறார்.

இதனால் கோபமடைந்த ஜப்பான் முதல் பத்தாண்டுகள் கடுமையான ராணுவ ஆட்சியை புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட கொரியாவில் கடைபிடிக்கிறார்கள். 1919 ஆம் ஆண்டு புரட்சி வெடிக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

1945 ஆம் ஆண்டு :

1945 ஆம் ஆண்டு :

Image Courtesy

இந்த நிக்ழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே உள்நாட்டில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்க, தங்கள் கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வருகிறார் ஜப்பான் மன்னர். அதன் படி கொரிய தீப கற்பத்தை ஒரு தொழில் நகரமாக மாற்ற முடிவு செய்கிறார். ஜப்பான் பொருளாதாரத்திற்கு கொரியாவை பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டப்படுகிறது.

1930களில் விஷயம் வேறு விதமாக கொரிய மக்களை தாக்கியது. சலுகைகள் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் அடிமையாக்கப்பட்டிருப்பதை அப்போது அவர்கள் உணரவேயில்லை. அதிகாரமிக்க எல்லா இடங்களிலும் ஜப்பானியர்களே இருந்தார்கள். மெல்ல மெல்ல ஜப்பான் பெயரை சூட்டிக் கொள்வது வாடிக்கையானது.கொரிய மக்களின் பண்பாடு,கலாச்சாரம் ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வந்தது. 1940களில் பிறந்த குழந்தைகளுக்கு கொரிய மொழி கூட மறந்து போனது. எல்லாரும் சர்வ சாதரணமாக ஜப்பானிய மொழியை பேச ஆரம்பித்திருந்தார்கள்.

இரண்டாம் உலகப் போர் :

இரண்டாம் உலகப் போர் :

Image Courtesy

இந்த சமயத்தில் தான் இரண்டாம் உலகப்போர் நடைப்பெற்றது. இதில் ஜப்பான் தோல்வியடைந்தது. ஜப்பானின் பல நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமித்திருந்தது. போரின் இறுதி நாட்களில் சோவியத் யூனியன் சீனாவிற்கு அருகில் இருக்கக்கூடிய ஜப்பான் பகுதியை கைப்பற்றிக் கொண்டது.

ஏற்கனவே ஜப்பான் நாட்டினரால் தொழில் நகரமாக்கப்பட்ட கொரியா மீது சோவியத் யூனியனுக்கு ஒரு கண் இருந்தது. இப்போது அமெரிக்காவும் கொரியா தங்களுக்கு வேண்டும் என்றார்கள். நீண்ட விவாதத்திற்கு பிறகு இரு நாடுகளும் கொரியாவை இரண்டாக பிரித்து எடுத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டு :

1948 ஆம் ஆண்டு :

Image Courtesy

முதலில் கொரிய நாடு தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொண்டாலும் கொரியாவை ஆட்சி செய்ய ஒரே அரசாங்கம் தான் நியமிக்கப்படும் என்றார்கள். ஆனால் அது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. இதற்கு முன்பு வரை கொரியாவில் மன்னராட்சி தான் இருந்தமையால் புதிய அரசியல் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு எந்த விழிப்புணர்வும் இருக்கவில்லை.

அதோடு மன்னராட்சி தங்களுக்கு வேண்டாம் என்பதில் மட்டும் தெளிவாய் இருந்தார்கள். அதனால் அமெரிக்கா கம்யூனிஸத்தை எதிர்க்கும் சிங்க்மேன் ரீ என்பவரை தான் எடுத்துக் கொண்ட கொரியாவிற்கு அதிபராக்கியது, சோவியத் யூனியன் ஆக்கிரமித்த பகுதியில், சோவியத் ரெட் ஆர்மியின் மேஜர் இரண்டாம் கிம் சங் நியமிக்கப்பட்டார். பின்னாலிருந்த அமெரிக்காவும் சோவியத் யூனியனும் பிரிக்கப்பட்ட கொரியா மக்களுக்கு இடையில் சுமூக உறவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள். இந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த கொரிய அதிபர்கள் முழு கொரியாவும் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாட ஆரம்பித்தார்கள்.

சீனா :

சீனா :

Image Courtesy

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் சீனா அமைதியாக இருக்கவில்லை. சீனாவில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய கட்சி என இரண்டாக பிரிந்தது. இருவருக்கும் பொதுவான எதிரியாக கப்பான் இருந்தது, இந்த நேரத்தில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோவியத் யூனியனும் தேசிய கட்சிக்கு அமெரிக்காவும் ஆதரவளித்தார்கள்.

இதில் தேசிய கட்சி தோற்றது. சீன கம்யூனிச புரட்சி என்று பெயர் பெற்றது அந்த போர். அமெரிக்காவின் உதவியோடு தேசிய கட்சியினர் தைவானுக்கு புறப்பட்டனர். இது சீனாவில் இருக்கிற இரு பிரிவுகளுக்கு மட்டுமல்ல இரண்டு கொரிய நாட்டிற்கும் பகைமையை அதிகப்படுத்தியது.

வடகொரியா தென் கொரியா :

வடகொரியா தென் கொரியா :

Image Courtesy

சீனாவில் அதிகாரத்துடன் வலம் வந்த மாவோவிடம் இரண்டாம் கிம் சங் உதவி கோரினார். இரண்டாக பிரிக்கப்பட்ட கொரியாவை ஒன்றிணைக்க உங்கள் உதவி வேண்டும் என்றார். சீனாவின் உதவியுடன் கொரியன் போர் துவங்கியது. முடிவில் கொரியாவின் பல பகுதிகளை இவர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். கொரியா போர் நிறைவடைந்ததும் அங்கிருக்கும் அமெரிக்கர்களை விரட்டுவதற்காக சீனா தங்கள் ராணுவத்தை அனுப்பியது

சீனாவையும் அவர்களின் நிழலில் நின்ற வடகொரியாவையும் முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்கா முப்பதுக்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை வீசியது. அதோடு கதிரியக்கம் நிரம்பிய கோபால்ட்டை சீனா மற்றும் கொரிய எல்லையில் வீசியது. இதனால் வடகொரியா மேலும் முன்னேறி வரவிடக்கூடாது என்பது அவர்களின் எண்ணம்.

சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் :

சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் :

Image Courtesy

கொரிய போர் என்பது மாறி இப்போது பின்னால் ஆதரவளித்துக் கொண்டிருக்கிற சீனாவுக்கும் அமெரிக்காவிற்கு போர் என்ற நிலை உருவானது. இருவரும் மாறி மாறி தங்களின் ராணுவ பலத்தை நிரூபித்துக் கொண்டேயிருந்தார்கள். ஒரு வழியாக ஜூலை மாதம் 27 ஆம் தேதி 1953 ஆம் ஆண்டு போர் முடிவுக்கான ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். இதன் படி இரண்டு கொரிய நாட்டிற்கும் இடையில் புதிய எல்லை வகுக்கப்பட்டது. அவை தான் இன்றளவும் எல்லைகளாக இருக்கிறது.

போர் நிறுத்தப்பட்டாலும் அந்த பகையுணர்வு இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து கொண்டே சென்றது. கொரியாவைத் தாண்டி இந்தப் பகை ஆதரவளித்த நாடுகளுக்கும் இடையிலும் வளர்ந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Did You Know How Korea Will Split Into Two Countries

Did You Know How Korea Will Split Into Two Countries
Story first published: Saturday, May 26, 2018, 13:21 [IST]
Desktop Bottom Promotion