Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
பொருட்களின் மேல் தீராக் காதல் ! ஆப்ஜெக்ட் செக்ஸுவாலிட்டி பற்றி தெரியுமா?
பொருட்களின் மீது தீராக் காதல் கொண்டிருப்பவர்கள் அவர்களையே திருமணமும் செய்திருக்கிறார்கள் அவர்கள் யார் அவர்கள் ஏன் பொருட்களை தங்கள் இணையாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது குறித்த விரிவான தகவல்கள்
காதல் எப்போது எங்கிருந்து துவங்கும் என்றே சொல்ல முடியாது அது ஆரம்பித்த கணத்திலிருந்து அதன் பிறகு நடக்கிற ஒவ்வொரு விஷயங்களுமே நம் நாட்களை பசுமையாக்கக்கூடியவை. ஆண் பெண் இடையே காதல் வரும் என்பதைத் தாண்டி தற்போது ஆண் ஆணுக்கும் பெண் பெண்ணுக்குமிடையில் காதல் மலர்வதையும் இன்று சகஜமாகி வருகிறது.
இந்நிலையில் இவற்றையெல்லாம் தாண்டி மனிதர்களுக்கு இடையில் மட்டுமல்ல மனிதனுக்கு பொருளுக்கும் இடையிலும் கூட காதல் வரும் என்கிறார்கள். ஆம் உயிருள்ள மனிதனுக்கும் உயிரற்ற பொருளுக்கும் இடையிலும் காதல் வருகிறதாம். இதுவரை பலரும் தங்களுக்கு பிடித்தமான பொருளை திருமணமே செய்திருக்கிறார்கள்.
முதலில் இந்த ஆப்ஜெக்ட் செக்ஸுவாலிட்டி என்றால் என்ன யாரெல்லாம் என்ன மாதிரியான பொருளை தங்களின் இணையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது ஆகியவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

ஆப்ஜெக்ட் :
உயிருற்ற ஒரு பொருளின் மீது அளவிட முடியாத ஆசையும்,ஈர்ப்பும் உண்டாகும். அந்த பொருளை எப்போதுமே நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றிடும் அந்த பொருளிடம் மனரீதியாக நீங்கள் நெருக்கமாக உணர்வீர்கள்.
அது குறிப்பிட்ட பொருள் என்றில்லாமல் எந்த பொருளின் மீதும் காதல் வரலாம். அந்த பொருளுடன் நீங்கள் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அதாவது அதனுடன் நீங்கள் எமோஷனலாக கனெக்ட் ஆகியிருப்பீர்கள்.

இவர்கள் யார் :
இப்படி பொருட்களின் மீது தங்களுக்கு தீரா காதல் கொண்டிருப்பவர்களை objectophilia அல்லது object-sexuals என்று கூறுகிறார்கள். அதாவது paraphilia எனப்படக்கூடிய விசித்திரமான ஈர்ப்பினை கொண்டிருப்பவர்கள்.
இது குறித்து டாக்டர் ஏமி மார்ஷ் என்பவர் ஒரு ஆய்வு செய்தார். அதில் இந்த மக்கள் தாங்கள் நேசிக்கும் பொருட்களுக்கும் உணர்வு, மனம்,அறிவு எல்லாம் இருப்பதாகவே உணர்கிறார்கள். இதைத் தவிர இப்படி பொருட்களின் மீது அளவுகடந்த ஈர்ப்பு வருவதற்கு என்ன காரண என்று இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.
இப்படி சில பொருட்களின் மீது தீரா ஆர்வம் கொண்டு அந்த பொருளையே திருமணம் செய்தவர்கள் பற்றிய ஒரு தொகுப்பு

ரோலர் கோஸ்டர் :
பென்சல்வேனியாவைச் சேர்ந்த வுல்ஃப் என்ற பெண் தன்னுடைய பெயருக்கு பின்னால் வீபர் என்ற பெயரை சேர்த்திருக்கிறார். இவர் ரோலர் கோஸ்டரை திருமணம் செய்திருக்கிறார். ஒரு வருடத்தில் பத்து முறையாவது அந்த ரோலர் கோஸ்டர் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடுவாராம். அதில் சுமார் 160 கி.மீ வரை பயணித்திருக்கிறார்.
பெண்கள் தங்கள் கணவரை நேசிப்பது போல நான் இந்த ரோலர் கோஸ்டரை நேசிக்கிறேன். முதன் முதலாக எனக்கு பதிமூன்று வயதான போது இதில் ஏறினேன் அப்போதிருந்து மனதளவிலும், உடலளவிலும் இதனோடு நெருக்கமாகிவிட்டேன்.

லிபர்டி சிலை :
இங்கிலாந்தை சேர்ந்த அமண்டா வொயிட்டேக்கருக்கு நியூயார்க்கில் இருக்கிற லிபர்டி சிலை மீது காதலாம். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட முறை லிபர்டி சிலையை பார்ப்பதற்கென்றே நியூயார்க் சென்றிருக்கிறார். லிபர்டி சிலைக்கு லிப்பி என்ற செல்லப்பெயர் வைத்திருக்கிறார்.
லிப்பிக்காக கவிதைகளை எழுதி அதை அந்த சிலை முன்பு வாசித்து காட்டுவாராம். சிலையை பின்புறமாக கட்டிக் கொண்டு நீண்ட நேரம் அழுவாராம். இவரது செய்கையை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் வினோதமாக பார்ப்பார்களாம்.அதே வடிவத்தில் தன் வீட்டிலேயே பல சிலைகளை செய்து வைத்திருக்கிறார் அமண்டா.

ஓக் மரம் :
வால் தெராக்ஸ் என்ற பெண்மணி ஓக் மரத்தை அதிகமாக நேசிக்கிறாராம். ஒவ்வொரு வருடமும் இந்த மரத்தை பார்க்க பிரிட்டனுக்குச் செல்கிறார். முதன் முதலாக ஹேம்ஸ்ஃபையரில் இருக்கிற ஓர் காட்டில் தான் இந்த மரத்தை பார்த்திருக்கிறார்.
ஏனோ தெரியவில்லை இந்த மரத்தை பார்த்ததுமே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இது எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என் மனதுடன் இந்த ஓக் மரம் பேசுவதாக உணர்கிறேன். இந்த மரத்தை பார்க்கும் போது கணவர் ஜானும் உடனிருந்தார் முதன் முதலாக பார்த்த போது என்னிடத்தில் கேமரா இல்லை. கணவரும் இவரை மரத்தின் காதலி என்று கிண்டல் செய்வாராம்.

கார் :
சுமார் ஐம்பது வருடங்களாக இந்த காதல் நீடிக்கிறது என்கிறார் எட்வேர்டு ஸ்மித். இவருக்கு இருக்கும் குறைபாட்டினை mechaphile என்று அழைக்கிறார்கள். இவர்களுக்கு ரயில்,கார்,பஸ்,விமானம்,பைக்,என ஆட்டோமொபைல் பொருட்களில் ஈர்ப்பு அதிகமாக உண்டாகும்.
ஸ்மித்துக்கு வோல்க்ஸ்வேகன் கார் வகைகளில் ஒன்றான வெனிலா என்ற கார் மீது தான் தீராத ஈர்ப்பு உண்டாகியிருக்கிறது. அந்த காரை தொடும் போதெல்லாம் தனக்கு கூடுதலான எனர்ஜி கிடைப்பது போல உணர்ந்திருக்கிறார்.அந்த காருக்கு சின்ன உராய்வு ஏற்பட்டால் கூட மனதளவில் மிகவும் நொருங்கிவிடுகிறாராம்.

தலையணை :
தென் கொரியாவைச் சேர்ந்த லீ ஜின் ஜியூ என்பவர் பெரிய அளவிலான தலையனை பொம்மையை திருமணம் செய்திருக்கிறார். அனிமேஷன் டிவி தொடரில் வந்த நடிகையான லிரிக்கல் நனோஹா என்பவரை மிகவும் பிடித்துவிட்டதாம் அவரைப் போலவே இந்த தலையணை பொம்மையை உருவாக்கி திருமணம் செய்திருக்கிறார் லீ.

லேப்டாப் :
சைக்காலஜி மாணவியாக இருந்த போதிருந்தே தனக்கு இந்த லேப்டாப் மீது காதல் வந்திருக்கிறது. தானும் தான் நேசிக்கும் கணினியும் ஆண் என்றும் தாங்கள் இருவருமே ஹோமோ செக்ஸுவாலிட்டியை கடைபிடிப்பதாக சொல்கிறார்.

ரயில் :
ஜோஸ்யாம் என்பவர் ஸ்டீம் ரயில் இன்ஜின் மீது காதல் கொண்டிருக்கிறார். தனக்கு பன்னிரெண்டு வயதான போது இந்த காதலை உணர்ந்திருக்கிறார் ஜோஸ்யாம்.

இரட்டை கோபுரம் :
பெர்லினைச் சேர்ந்த சேண்டி என்பவர்க்கு நியூயார்க்கில் இருக்கக்கூடிய இரட்டை கோபுரத்தின் மீது தீராத காதல். அவருக்கு எட்டு வயதாகும் போதிருந்தே இந்த காதல் துவங்கிவிட்டதாம். தற்போது அலுமினியித்தில் அதே போன்ற டவர் செய்து வீட்டில் வைத்திருக்கிறார்.
காதல் என்றால் இது போன்ற பொருட்களிடத்தில் தான் வரும் மனிதர்களிடம் எல்லாம் ஒரு நாளும் காதல் கொள்ளமாட்டேன் என்கிறார் சேண்டி.

பெர்லின் சுவர் :
1979 ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த ஈஜா என்ற பெண் தன்னுடைய நீண்ட நாள் காதலனான பெர்லின் வாலை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அப்போது அதனை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை இருந்தும் தன் காதல் குறித்து மிகவும் உறுதியாக இருந்த ஈஜா தன் பெயருக்கு பின்னால் பெர்லினர் மவுவர் என்பதை சேர்த்துக்கொண்டார். பெர்லின் சுவற்றை ஜெர்மனியில் இப்படித்தான் அழைப்பார்களாம்.
1989 ஆம் ஆண்டு அந்த சுவர் இடிக்கப்பட்ட போது என் கணவரை சிதைக்கிறீர்கள் என்று குரல் கொடுத்தர ஈஜா.

ஈஃபில் டவர் :
வில்வித்தை வீராங்கனையான எரிக்கா ஈஃபில் டவர் மீது தீராக காதல் கொண்டு அதனையே திருமணம் செய்கிறார். ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எரிக்காவின் அம்மாவே இந்த முடிவிற்காக அவரை விட்டு பிரிந்து சென்று விடுகிறார்.
வில்வித்தை போட்டியில் பங்கேற்க எரிக்காவிற்கு ஸ்பான்சர் செய்வதவர்கள் எல்லாம் பின்வாங்குகிறார்கள். யார் எதிர்த்தாலும் எரிக்காவிற்கு ஈஃபில் மீதான காதல் குறையவில்லை தன் பெயருடன் எரிக்கா ஈஃபில் என்று சேர்த்துக்கொண்டிருக்கிறார்.



Click it and Unblock the Notifications