Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
உங்க ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டான இன்று எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?
daily horoscope 14.4.18, 14.4.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் இன்று தமிழ்ப்புத்தாண்டான சித்திரை ஒன்றாம் நாள். இந்த விளம்பி வருடத்தின் முதல் நாள் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக ஆரம்பிக்கப் போகிறது என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எல்லோரிடத்திலுமே இருக்குமல்லவா? வாருங்கள்... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமையப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்று புதிய முயற்சிகள் நிறைவேறும். கார் வாங்கும் யோகம் வரும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். விவசாயிகளுக்கு புத்துணர்வான காலமாகும். அரசியல்வாதிகளும் அதிக தொண்டர்களை அடைவர். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொட்டதெல்லாம் துலங்கும் காலம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்
இன்று திட்டமிட்டபடி எல்லா செயல்களும் நிறைவேறும். ஆனால், செயல்களை நிதானமாக செய்யுங்கள். ரியல் எஸ்டேட் துறையினர் ஒப்பந்தங்களை முடித்து விடுவது நல்லது. கடும் முயற்சிகளின் பேரில் வேலை கிடைக்கும். அரசு வழி உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத பதவிகள், வாகன வசதிகளுடன் கிடைக்கப் பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்
பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்க்ள். குழந்தைகளை அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப்பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரையில் இன்றைக்கு சொத்து பற்றிய விஷயங்களையோ கொடுக்கல் வாங்கலையோ தள்ளி வைப்பது சிக்கலில் இருந்து காப்பாற்றும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்
இன்று பொருளாதார முன்னேற்றம் பெருகும். அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆரோக்ய அற்புதமாக இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் அன்றாட வாழ்வில் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். ஆனால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை தளர்ந்து போகாதீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்
இன்று உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை, உங்கள் மேல் அதிகாரி ஒப்படைப்பார். சக ஊழியர்களால் இதுவரையில் ஏற்பட்டு வந்த பிரச்னைகள் நீங்கும். பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும். புகழின் உச்சிக்கு உங்களை இட்டுச் செல்லும். ஆனால் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டியது உங்களுடைய பொறுப்பு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி
நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

துலாம்
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் நாளாக அமையும். அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், சற்று தள்ளிநின்று பழகுவதே சிறந்தது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு
வழக்கு விவகாரங்களில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். கல்வியில் திடீர் திருப்பம் உண்டாகும். இடமாற்றம் கிடைக்கும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது எதிரிகளை நீங்கள் ஜெயிப்பதற்கு நேரத்தை சரியான வழியில் செலவிட்டு முறையாக திட்டமிட வேண்டிய காலம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்
உடன் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். அது சில மனஸ்தாபங்களைத் தவிர்க்கும்.யாரையும் நம்பி ப்ளாங் செக் கொடுத்தல் கூடாது. உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரணையாக செல்லவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்
நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள் சிலர் உங்களுக்குள் வீண் வம்பு சண்டையை ஏற்படுத்தக் கூடும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மீனம்
மனைவிக்கு கர்ப்ப சிதைவு போன்ற கடுமையான வயிற்று உபாதைகள் வரக்கூடும். ஆன்மிகத்தில் மனம் முழு ஈடுபாடு கொள்ளும் நாள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் என சுபச் செலவுகள் அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட இதுவரை தள்ளிப்போன காரியங்கள் முழுமையடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5



Click it and Unblock the Notifications











