அதிர்ஷ்டம் கொட்டப்போகும் கும்ப ராசிக்காரர்கள்... யாருக்கு நஷ்டம் வரப்போகிறது?

வரலட்சுமி விரதமான இன்று 12 ராசிகளில் யாருடன் லட்சுமிதேவி வந்து குடியிருக்கப் போகிறார் என்று இங்கே பார்ப்போம்.

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள்.

daily horoscope 26.8.18

இன்றைக்கு வரலட்சுமி நோன்பு. அதனால் அதிர்ஷ்டம் யாருக்கு. நஷ்டத்தில் யார் இருப்பார் என்பது தான் மிக முக்கியம். அப்படி எந்தெந்த ராசிக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்களுடைய தொழிவை மேம்படுத்த உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களிடம் வேலை செய்பவர்கள் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். மனம் மற்றும் உடல் சோர்வுகள் நீங்கி, கொஞ்சம் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடைய ஆலோசனைகளைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய உத்தியோகத்தில் உங்களுக்கு மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். தொழில் சம்பந்தப்பட்ட புதுிய முயற்சினளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய பழைய பிரச்னைகளினால் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

உங்களுடைய குடும்பத்தில் சுப செயல்கள் செய்வதற்கான சூழல்கள் உருவாகும். உங்களுடைய எதிர்காலம் சம்பந்தப்பட்ட வேலைகளில் முயற்சி செய்வீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளால் தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்காமல் உண்டாகும் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய நிலைகள் உருவாகும். உங்களுடைய தடைகளையெல்லாம் தாண்டி வெற்றியை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

உங்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டம தினம். இன்று சந்திராஷ்டம தினம் என்பதனால் உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலுக்கு உங்களுக்கு நண்பர்களுடைய உதவிகள் கிடைக்கும். சின்ன சின்ன அலைச்சாலும் இருந்தாலும், அதற்குப் பிறகு உங்களுக்கு ஆதாயங்கள் கிடைக்கும். பாதியில் நின்று போன பழைய வேலைகளைக் கூட திரும்ப எடுத்து செய்து முடிப்பீர்கள். மனதுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

வேலை தேடும் முயற்சிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனங்களில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். அதனால் சின்ன சின்ன தடுமாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய பழைய கடன்களைத் திருப்பி அடைப்பதற்கான வழிகளும் அதற்கான ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் கூட்டாளிகளிடம் உண்டாகும் வீணான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

தொழில் ரீதியான பயணங்களினால் மனதுக்குள் மகிழ்ச்சி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் அதிக கவனம் தேவை. வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். கணவன் மற்றும் மனைவிக்கு நல்ல புரிதல் உண்டாகும். சமூகப் பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு கவனத்துடன் செயல்படுங்கள். அதன்மூலம் பல நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய உறவினர்களின் மூலமாக, பெரிய பெரிய நன்மைகள் உண்டாகும். உங்களுக்கு பொருளாதாரம் முன்னேற்றங்கள் உண்டாகும். அதன்மூலமாக, உங்களுக்கு இருந்து வந்த சின்ன சின்ன தடைகள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும். அக்கம் பக்கத்தினரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளுடைய வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். மேலதிகாரிகளிடம் உங்களுக்கு ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்னைகளும் தீரும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்து போகலாம். உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும் நாளாக இன்று இருக்கும். உங்களுடைய கோபம் நிறைந்த வார்த்தைகளை அடக்கி, கொஞ்சம் அமைதியாகச் செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

உத்தியோகத்தில் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் எல்லா வேலைகளையும் நீங்களே மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்திலும் உங்களுக்கு தகமான சூழல்களே உருவாகும். நிலுவையில் இருந்த பண வரவுகள் வசூலாகும். திடீர் செலவுகளும் உண்டாகலாம். நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் தீரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வட கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

உங்களுடைய உறவினர்களால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலமாக, உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பிரபலமானவர்களுடைய நட்பும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். மனம் கொஞ்சம் தெளிவு பெறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

நீங்கள் எதிர்பார்த்த கடனுதவிக்ள உங்களுக்குக் கிடைக்கும்இ உத்தியுாகததில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவீர்கள். சம்பள உயர்வு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். சின்ன சின்ன இன்னல்கள வந்தாலும் அதை எளிதாக சமாளித்து வெற்றி அடைவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இதயம் சம்பந்தப்பட்ட சின்ன சின்ன உபாதைகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்

மீனம்

வீட்டில் பிள்ளைகளிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பொத காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு நல்ல பலனைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, August 26, 2018, 7:00 [IST]
Desktop Bottom Promotion