Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
12 ராசிக்காரர்களில் இன்றைய சொதப்பல் மன்னன் யார் தெரியுமா?
உங்களுடைய ராசிப்படி உங்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று இங்கு கணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும்.

அதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
இன்று உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். திறமைகள் வெளிப்படுவதற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பணியில் திருப்தியான சூழல் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எண்ணங்களில் தெளிவு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தனவரவுகள் மேம்படும். விரைவில் முடியும் காரியங்கள் கூட தாமதமாகும். ஆம். இன்றைய சொதப்பல் மன்னன் நீங்களே தான். குழப்பமான சூழ்நிலை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்
எதிர்காலப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வீர்கள். தொழில் தொடர்புடைய செயல்களை முடிக்க கால தாமதமாகும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கை மேலோங்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

சிம்மம்
பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் தேவையற்ற எண்ணங்கள் உண்டாகும். செய்யும் பணியில் சிலரின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் இலைச்சல்களால் சோர்வு ஏற்படும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.

கன்னி
எதிர்பாராத சுப செலவுகள் உண்டாகும். எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகலாம். தொழிலில் தனவரவுகள் தாமதப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வாகனங்களுக்கான பராமரிப்பு செலவுகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கப் போகிறது.

துலாம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தாய்வழி உறவினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். புத்திரர்கள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான தன உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை உயர் அதிகாரிகளிடம் அதிகரிக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு
வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். எடுத்த செயலை முடிப்பதில் இழுபறி நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வாக்குவாதங்களால் லாபம் உண்டாகும். நட்பு வட்டம் அதிகரிக்கும். தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்மாமன் உறவுகளால் சுப செய்திகள் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். நிர்வாகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில்ல் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
மனைகளால் லாபம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் லாபம் உண்டாகும். எந்தவொரு செயலிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
உடல்நலத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலில் மாற்றங்கள் செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கிளிப்பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications