Latest Updates
-
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம்
இன்னைக்கு உங்களுக்கு இதுதாங்க நடக்கும்... உங்க ராசி அப்படி தான் சொல்லுது...
daily horoscope 12.3.18, 12.3.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
தொழிலில் இழந்த பொருள்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

ரிஷபம்
தாய்வழி உறவினர்களுடன் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கடல்வழி பயணங்களால் லாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

மிதுனம்
தைரியம் மற்றும் நிதானத்துடன் மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது எச்சரிக்கை வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

கடகம்
பேச்சுக்களால் லாபம் அடைவீர்கள். புதிய உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். சம வயதினரிடம் அனுசரித்துச் செல்லவும். மனைவியிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்

சிம்மம்
புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகளால் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்

கன்னி
தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். மனைகளால் சுப விரயம் உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 2
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

துலாம்
கடல்வழி பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வழக்குகளில் எண்ணிய எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

விருச்சிகம்
கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

தனுசு
பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தூர தேசப் பயணங்களால் இதுவரை ஏற்பட்ட அலைச்சல்கள் குறையும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். முயற்சிகளால் சேமிப்புகள் உயரும். வாக்குறுதிகளைக் காப்பாற்றியதால் புகழ் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

மகரம்
செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்தில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். புனித யாத்திரைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 4
அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

கும்பம்
வெளியூர் வேலைவாய்ப்புகள் எண்ணிய பலனைத் தரும். பெரியோர்களின் ஆதரவினால் பூர்விகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். உயர் அதிகாரிகளின் நட்பு கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இழந்த பொருள்களை மீட்பதற்கான பண உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - இளம் சிவப்பு

மீனம்
இடையூறுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். இறை பணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். சொத்து சேர்க்கை உண்டாகும். பணிகளில் மந்த தன்மையால் சாதகமற்ற சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை



Click it and Unblock the Notifications